லக்னம் Vs இராசி:(பாகம் - 02)
தாம்பரம் திரு.M.E.Rajah அவர்கள் தனிமடலில் “ஐயா, லக்னம் என்றால் என்ன? நானும் பல வலைத்தளங்களில் தேடிப் பார்த்து விட்டேன், கிடைக்கவில்லை, கிடைத்ததும் புரியவில்லை, கொஞ்சம் விளக்க முடியுமா” என்று கேட்டிருந்தார். அவர் மட்டுமல்ல நிரம்ப பேர் என்னிடம் கேட்டிருந்தனர்.லக்னம் என்றால் தாங்கள் பிறக்கும் போது கிழக்கு திசையில் எந்த ராசி நிற்கிறதோ அதுவே லக்னமாகும். விளக்கமாக பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்ட டேபிளை பாருங்கள். இதன் மூலம் நாம் நமது பிறந்த தமிழ் மாதத்தை அறிய முடியும்.
மீனம் பங்குனி | மேஷம் சித்திரை | ரிஷபம் வைகாசி | மிதுனம் ஆனி |
கும்பம் மாசி | தமிழ்மாதமும் - ராசிகளும் | கடகம் ஆடி | |
மகரம் தை | ஸிம்ஹம் ஆவணி | ||
தனுசு மார்கழி | விருச்சிகம் கார்த்திகை | துலாம் ஐப்பசி | கன்னி புரட்டாசி |
இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ”சூரி” என்று எந்த கட்டத்தில் போட்டிருக்கிறது என்று பாருங்கள்.
உதாரணமாக, கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். மேஷத்தில் சூரியன் போட்டிருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சித்திரை மாதம் பிறந்திருக்கிறார் என்று நாம் மேற்கண்ட டேபிளின் மூலம் நிர்ணயித்து விடலாம்.
o | சூரி | o | o |
o | இராசி நிலை | o | |
o | o | ||
o | o | o | o |
( தொடரும்....)
2 comments:
when will you continue next?
good
Post a Comment