கேள்வி: கரிநாள் என்றால் என்ன?
பதில்: தமிழ் வருடத்தில் மாதங்களில் வரும் சில நாட்களை கரிநாட்கள் என்பர்.
கேள்வி: அவற்றின் முக்கியம் என்ன?
பதில்: அதாவது அந்த நாட்களில் நல்லவை அனைத்தையும் ஒதுக்கி வைக்க சொல்கிறார்கள்.
கேள்வி: எந்தெந்த நாட்கள் கரிநாட்கள் என்று அழைக்கப்படுகிறது?
பதில்:
சித்திரை | 6, 15 | கார்த்திகை | முதல் சோமவாரம், 1, 10, 17 |
வைகாசி | 7, 16 ,17 | மார்கழி | 6, 9, 11 |
ஆனி | 1, 6 | தை | 1, 2, 3, 11, ,17 |
ஆடி | 9, 10, 20 | மாசி | 15, 16, 17 |
ஆவணி | 2, 9, 28 | பங்குனி | 6, 15, 19 |
ஐப்பசி | 6 | ||
சிலர் கார்த்திகை முதல் சோமவாரம் நீக்கி ஐப்பசி 22 எனக் கொள்வர். |
மேற்சொன்ன நாட்கள் கரிநாளாகும்.
கேள்வி: கரிநாட்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
என் வரையில் இங்கு தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.
அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு:
இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்
சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே
மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.
என்னைப் பொறுத்தவரை கரிநாள் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
அதே போல் திதி சூன்யம், விஷ சூன்யம் என்றெல்லாம் சில நாட்கள் உள்ளன. அந்த நாட்களிலும் நல்லவைகள் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். என் வரையில் அந்த நாட்களிலும் செய்யலாம்.
2 comments:
அருமையான குறிப்பு.
அதே போல் திதி சூன்யம், விஷ சூன்யம் என்றெல்லாம் சில நாட்கள் உள்ளன. அந்த நாட்களிலும் நல்லவைகள் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். என் வரையில் அந்த நாட்களிலும் செய்யலாம்//அதற்கான காரணம் தெரியாததால் செய்யலாம் என்கிறீர்களா..அல்லது உங்கள் அனுபவத்தில் அவை பாதிப்பதில்லை என சொல்கிறீர்களா..என விளக்க முடியுமா?
Post a Comment