Friday, June 25, 2010

ஆனி, ஆடி மாதங்களில் வீடு குடி போகலாமா?

கேள்வி: ஆனி, ஆடி மாதங்களில் வீடு குடி போகலாமா?

-திரு.அகிலன், மும்பை

-திரு.வசந்த், காரைக்குடி

-திருமதி.லலிதாம்பிகை, மதுரை.

பதில்: வாடகை வீடாக இருந்தால் தாராளமாக செல்லலாம். சொந்த வீடாக இருந்தாலும் செல்லலாம். சிலர் செல்ல மாட்டர். அதாவது பெரியோர்கள், ஆனி-ஆடி-புரட்டாசி-மார்கழி-மாசி-பங்குனி தவிர மற்ற மாதங்களில் குடி போகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு ஏதாவது அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் ஜோதிடத்தில் விளக்கம் கிடைக்கவில்லை. நமது தமிழ்நாட்டின் முதன்மையான ஜோதிட புத்தகமான பெரிய வருஷாதி நூலில் கூட விளக்கம் கொடுக்கப்படவில்லை. எனவே ஜோதிடத்தில் இதற்கு விளக்கம் இல்லை என்றே பொருள் கொள்ளலாம். அப்படி பார்த்தால் ஆனி, மாசி, பங்குனி மாதங்களில் விவாஹம் செய்கின்றனர். அதுவும் செய்யக்கூடாதே? ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்கின்றனர். அது செய்யலாமா? இதற்கு பரிகரமெல்லாம் செய்ய வேண்டியதுமில்லை.

இதற்கு மேலும் பயப்படுகிறவர்கள் வாடகைக்கு கிடைத்த வீட்டிற்கு செல்லுங்கள். ஆவணி மாதம் பால் காய்ச்சி கொள்ளுங்கள். நானே அவர்களுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுகிறேன்.

[குறிப்பு: நானே சென்னையில் புதிய வாடகை வீட்டிற்கு பங்குனியில்தான் குடியேறினேன். 3 வருடங்கள் வரை அந்த வீட்டினில் இருந்தேன்.]

1 comment:

RJ Dyena said...

நன்றி உங்கள் பதிவு எனக்கு ஒரு தீர்வை பெற்று தந்துள்ளது...நானும் பங்குனியில் வீடு குடி புக உள்ளேன்... அதுபற்றி தேடிய போது உங்கள் பதிவை வாசிக்க நேரிட்டது..

நன்றி

டயானா
wisdomblabla.blogspot.com