Wednesday, February 22, 2012

மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

ஆறாம் வீடு சிறப்பு தொகுப்பு

ஆறில் இருக்கும் கிரகங்கள்

ஆறாம் வீடு (பாவம்) ரண ருண ரோகஸ்தானம் எனப்படும். தாய்மாமன் பற்றியும் இந்த வீடு உணர்த்தும். கீழா விழுதல், தடைகள், சறுக்கல், சண்டைகள், மனநோய், சிறைவாசம் முதலியவை பற்றியும் இந்த இடத்திலிருந்து அறிய முடியும்.

நல்ல அமசங்களைப் பொறுத்தவரை லாபம், பணி செய்தல் இரண்டையுங்கூட இந்த இடத்திலிருந்த நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் நலல்து. ஆனால் லக்னாதிபதியை விட ஆறாம் வீட்டதிபதி பலம் பெற்றிருப்பது நல்லதல்ல.
லக்னம் என்பது ‘தான்’ ஆறாம் வீடு என்பது ‘பகைவன்’.  இதிலிருந்து ஓர் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். தன் பகைவனை காட்டிலும் தான் பலமாக இருந்தால்தானே பகைவனை முறியடிக்கவும், வெற்றி காணவும் முடியும். ஆறாம் வீட்டதிபதி வலுத்து லக்னேசன் வலுவிழந்து இருந்தால் பகவரிடம் தோற்று அவரது அடிமையாகவும் நிலைகூட ஜாதகருக்கு ஏற்படலாம். அதே போல் நோய் சுமையை தாங்கும் சக்தியை கூட ஜாதகர் இழக்கக்கூடும். அதே வேளையில் லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியை காட்டிலும் ஆற்றல் பெற்றிருந்தால் ஜாதகருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து காணப்படும். ஆறாம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுப பார்வை பெற்றிருந்து லக்னாதிபதியும் வலுப்பெற்று இருந்தால் ஜாதகருக்கு நோயற்ற சுக வாழ்வு அமையும். ஆனால் ஆறாம் வீட்டு அதிபதியுடன் பாபக்கிரஹங்கள் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆறாம் வீட்டு அதிபதி மறைந்திருந்தாலோ அஸ்தங்கம் ஆனாலோ ஜாதகருக்கு பகைவரை வெல்லும் பராக்கிரமம் ஏற்படும்.

முதலில் ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகங்களைப் பற்றிய விளக்கங்களைப் பார்போம். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.


6-ல் சூரியன்:
ஜாதகருக்கு பலமுண்டாகும். பகைவரால் அச்சம் உண்டாகும். ஆனால் பகைவரை வெல்லும் ஆற்ற்ல் ஏற்பட்டுவிடும். உயர்வாழ்வு அமையும். செல்வம் சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகமாகும். கௌரவமான பதவி, அரசு அந்தஸ்து கிடைக்கும். மனைவியின் நலம் சிற்சில நேரங்களில் பாதிக்கப்படும். கடுஞ்செலவு ஏற்படக்கூடும்.

6-ல் சந்திரன்:
ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாவார்கள். வயிற்றிவலி காரணமாக உபாதைகள் ஏற்படலாம். பலவீனமான சந்திரன் என்றால் மற்றவகளின் சொற்களுக்கு அடிபணிய வேண்டி வரும். இந்த நிலையில் உள்ள ஜாதக்ருக்கு பொருத்தமான ஊழியர்கள் அமைவார்கள். இளமையில் ஜாதகருக்கும் சந்தோஷம் உண்டாகும். பலமான சந்திரன் என்றால் ஜாதகருக்குப் பெருமை, புகழ், பெருந்தன்மை, சுகவாழ்வு எல்லாம் அமைய வாய்ப்புண்டு.

6-ல் செவ்வாய்:
ஜாதகருக்கு சரீர பலம் ஏற்படும். பகைவரை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.  சிற்றின்ப இச்சை அதிகமாக இருக்கும். ஜீரணசக்தி சரியாக இருக்கும். புகழ் பொருள் சேரும். கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணம் நிரைய செலவாகும். உச்சம் அல்லது ஆட்சி செவ்வாய் என்றால் ஜாதகரை செவ்வாய் உயர்த்துவார். உத்தியோகம் முறையாக பார்த்து ஜீவனம் செய்வார்கள்.

6-ல் புதன்:
ஜாதகருக்கு பொதுவில் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் வாதப்பிரதிவாதங்கள் சச்சரவுகளுக்கு இடமுண்டு. பேச்சு கூர்மையானதாக இருக்கும். சோம்போறித்தனம் உண்டு. சரீர நோய் உண்டு. க்ஷயம் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பலமுள்ள புதனாக இருந்தால் 6ல் இருப்பது நன்மையே. இந்த நன்மை முழுமையாக கிடைப்பதற்கு சுபகிரஹங்களின் பார்வை அவசியம். பலன் பெற்ற புதனால் ஒருவர் தொழிலதிபர் ஆவதற்கு கூட வழியுண்டு.


தொடரும்.....

மீனம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) நட்புக்காக உதவிகள் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக நிலை உள்ளது. 12ம் தியதி புதன் உங்கள் ராசியிலிருந்து கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் குரு இரண்டில் அமர ராசியை செவ்வாய் பார்க்க குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குரைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். எனினும் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பது சிறிய அளவிலான குழப்பத்தை தரலாம். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.

பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 11, 12, 13

பரிகாரம்: சனீஸ்வரரை வலம் வாருங்கள். தினமும் சிவாலயத்திற்கு சென்று வாருங்கள். (வைணவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள்)

கும்பம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) எதிலும் முழுமையாக ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் புதன், மூன்றாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக இயக்கம் காணப்படுகிறது. 12ம் தியதி புதன் உங்கள் ராசிக்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசியிலிருந்து மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் சனி சுக்கிரன் வீட்டில் அமர அவரை யோககாரரான சுக்கிரன் பார்க்க மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. எனினும் ராசியில் சூரியன் இருப்பது உகந்த இடமல்ல. எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி புதன் இருக்க அவரை செவ்வாய் பார்ப்பதும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது. மூன்றாமிடத்தில் குரு இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். ஏழில் இருக்கும் செவ்வாயால் எதிரிகள் உங்கள் முன் அடங்குவர். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 09, 10, 11

பரிகாரம்: சனிபகவானுக்கு விளக்கு ஏற்றுவதும், ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மையைத் தரும்.

மகரம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) அடுத்தவரின் உணர்வுகளையும் உணரும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றில் புதன், நான்காமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி அஷ்டமாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றுக்கும் ஐந்துக்கும் ஏழுக்கும் உடையவர்கள் நான்கில் அமர ராசியாதிபதி பத்தில் இருக்க உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.  குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூர்யன் அமர அவரை செவ்வாய் பார்ப்பது சரியல்ல. குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து வந்து மறையும். எனினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு சந்திர யோகத்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் மீது தனி கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

வாகன வசதிகள் பெருகும். தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். மூன்றில் இருக்கும் புதனால் சகோதர சகோதரிகளிடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான பாராட்டுதல்கள் பரிசுகளை ஆகியவற்றைப் பெறுவீர்கள். லாபத்தில் இருக்கும் ராகுவினால் இயந்திரம் சம்பந்தமான வியாபாரத்தில் செல்வம் பெருகும்.

சிலருக்கு பரம்பரை தொழிலில் லாபம் கிடைக்கும். உலக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 07, 08, 09

பரிகாரம்: சூரிய ஆராதனையும், சுப்பிரமணிய ஆராதனையும் செய்யுங்கள்.

தனுசு: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிலும் தெய்வநம்பிக்கையுடன் போராடும் தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் சூரியன், நான்காமிடத்தில் புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். 12ம் தியதி சப்தம கர்மாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி பாகியஸ்தானாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதனின் பார்வை, தன குடும்பஸ்தானாதிபதியின் பார்வை என அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.

பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள்.

நான்குக்கு உடையவர் ஐந்தில் இருப்பதால் வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். ஐந்தில் குருவும், ஆறில் கேதுவும் இருப்பதால் பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள்.

கலைதுறையினர் அயல்நாடு செல்வார்கள். அரசியலில் நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். மாணவர்கள் போட்டிகளில் பரிசுகள் வாங்குவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 04, 05, 06

பரிகாரம்: அனுமனை வணங்குங்கள். ஷஷ்டி தோறும் குமரனை வணங்குங்கள்.

விருச்சிகம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

விருச்சிகம்:  ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் சூரியன் ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது. 12ம் தியதி  புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி கர்மாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்து ராசியைப் பார்க்கிறார். தனஸ்தானத்தை குரு பார்க்கிறார். எனவே தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

தன வாக்கு குடும்ப பூர்வ புண்ணியஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

ராசியாதிபதி பத்தில் இருப்பதால் தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தமாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 01, 02, 03

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் தரிசனம் செய்யுங்கள்.

துலாம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் புதன், ஏழாமிடத்தில் சந்திரன், குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலவுகின்றனர். 12ம் தியதி பாக்கிய விரையஸ்தானாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி லாபாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்று ஆறுக்கு உடைய துர்ஸ்தானாதிபதி குருவின் பார்வை ராசியில் ஏற்படுகிறது. எனினும் சுகஸ்தானாதிபதி ராசியில் இருப்பதாலும் ராசியாதிபதி சுக்கிரன் ஏழில் இருப்பதாலும் வரவுக்கு ஏற்றவாறு செலவுகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.  தனாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. எதிர்பார்த்திருந்த பண வரவுகள் தேடி வந்தடையும். ராகு கேதுவின் நிலையால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.

மூன்றாம் வீட்டிற்குடையவர் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் தவறக் கூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய தொல்லைகள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனம் தேவை.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 01

பரிகாரம்: திருமகளை ஆராதியுங்கள். முன்னோர்களை தினமும் வழிபடுங்கள்.

கன்னி: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கன்னி:  (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) உழைப்பினை உலகிற்கு சொல்லும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் சூரியன், ஏழில் ராசிநாதன் புதன், எட்டாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது. 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன விரையஸ்தானமும் சுகஸ்தானமும், குருவின் பார்வையைப் பெறுகின்றன. எனவே பொருள் வரவு நிறைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எனினும் குரு பார்வை இருப்பதால் உடனடியாக மறையும். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதாலும், மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் உடன் பிறந்தோரிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எனவே அவர்கலை அனுசரித்து செல்லுங்கள். சுற்றியிருப்பவர்கள் உங்கள் சொல்லை செயலாக்க உங்களுக்கு உதவி புரிவர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். குறுகிய பிரயாணமோ நீண்ட பிரயாணமோ எதுவாகினும் கவனமுடன் இருங்கள்.

பூமி யோகம் உண்டு. பழைய வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உதவிகள் வந்து சேரும். தாய் வழி ஆதரவு அதிகரிக்கும். வாகன் மாற்றம் செய்யும் சூழல் ஏற்படும். வாகனங்களை பிரயோகபடுத்தும் முன் சரி பார்த்து பின்னர் உபயோகப்படுத்தவும். இல்லம் தேடி வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்ரம் நிகழும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் பாராட்டும் பரிசும் பெறுவதற்கு ஏற்ற காலமிது.

சந்திராஷ்டம் தினங்கள்: இல்லை

பரிகாரம்: திருமாலை புதன் தோறும் வழிபடுங்கள். வராஹி தேவியை தரிசனம் செய்யுங்கள்.

சிம்மம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் ராசிநாதன் சூரியன், எட்டாமிடத்தில் புதன், ஒன்பாதமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் அமர்ந்துள்ளனர். 12ம் தியதி தன வாக்கு குடும்ப லாபாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி ராசிநாதன் சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் ஏழில் வீற்றிருக்க, ராசியை குரு பார்க்க தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். எட்டாமிடத்தில் உள்ள புதனாலும் ஒன்பதாமிடத்தில் உள்ள கிரக சேர்க்கையாலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

நான்காம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், ஒன்பாதமிடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதாலும் பெற்றோர்களின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் இடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பேசும் பேச்சில் இனிமையும் நளினமும் அதிகரிக்கும். வீர தீர விளையாட்டுகளில் பாராட்டப்படுவீர்கள். பயணங்களினால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்திருந்த வெளிநாடு பயணம் கைகூடி வரும். திருமணக் கனவுகள் நனவாகும்.

ஐந்திற்குரியவர் ஒன்பதில் இருப்பதினால் புகழ் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழக்குகளை சிலர் சந்திக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத்தை முன்னிட்டு சிலர் வெளிநாடு பயணம் செல்வர். புது முயற்சிகளில் வெற்றி பெற நண்பர்கள் உதவுவர்.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு திசை மாறிச் சென்ற வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசியலில் பொறுப்புகள் மாறும். மாணவர்களுக்க்கு படிப்பில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் திருமுருகனை வழிபடவும். தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.

கடகம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடைய கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய், நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் சூரியன், ஒன்பதாமிடத்தில் புதன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், சந்திரன், பன்னிரெண்டாமிடத்தில் கேது என கோள்களின் இயக்கம் நிலவுகிறது. 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி தன வாக்கு குடும்பாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானத்தில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.

விரையஸ்தானாதிபதி புதன் பாக்கியத்திஸ்தானத்தில் உலவுவதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. பத்தாமிடத்தில் நிகழும் கிரக சேர்க்கையினால் மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கையை வழிபடவும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

மிதுனம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் ராசிநாதன் புதன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், சந்திரன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லாமல் இருந்தாலும் சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. லாபஸ்தானத்தில் குரு சந்திர யோகம் உண்டாவதால் பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

ஆறாமிடத்து அதிபதியாகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து ஆறைப் பார்ப்பதாலும், ஆறாமிடத்தில் ராகு இருப்பதாலும் நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. ராசிநாதன் பத்தில் உலவுவதால் உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும். ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம்.

கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ மகாவிஷ்ணூவையும், கணபதியையும் வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் தாருங்கள்.

ரிஷபம் - மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
அனைவரையும் தனது நேர்மையால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் வியாழன், சந்திரன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 12ம் தியதி புதன் வக்ரமாகி பத்தாம் இடத்திற்கும், மார்ச் 14ம் தியதி பதினொன்றாம் ஸ்தானமாகிய லாபஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசியில் கேது இருப்பினும் சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும் காலமிது. உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும்.

நான்காமிடத்தை குரு பார்ப்பதாலும், நான்காம் வீட்டிற்குடையோன் நான்காம் வீட்டைப் பார்ப்பதாலும் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ சுதர்சனரை வழிபடுவது.

மேஷம் - மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம். உழைப்பால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் ராகு, எட்டில் ராகு, பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் புதனுமாக கிரக நாயகர்களின் சுழற்சி அமைந்துள்ளது. மார்ச் 12ம் தியதி 11ம் இடத்திற்கு வக்ரகதியில் புதனும், 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். ஐந்தில் அமைந்துள்ள செவ்வாயால் சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ஒன்றில் அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் பன்னிரெண்டில் உலவுவதால் இளைய சகோதரர் சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15

 பரிகாரம்: செவ்வாய்க் கிழமை தோறும் அம்பாளுக்கு இளநீர், பன்னீர் அபிஷேகங்கள் செய்யலாம். ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலுக்கு நல்லெண்ணை சமர்ப்பிக்கவும்.