Sunday, July 27, 2014

டாஸ்மாக் - தாலி

நேற்று இரவு கிட்டத்தட்ட மணி 10.15 இருக்கும்.

இடம்: அம்பத்தூர் - வானகரம் ரோடு

நான் வானகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன்.

எதிரில் ஒரு ஆட்டோ, அதன் பின் 2 வீலரில் ஒரு குடும்பம் (3 வயது குழந்தையுடன்), அதன் பின் விபத்து ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட பல்சர் வாகனத்தில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார்கள்.

பல்சர் எகிறி முன் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மீது மோத, அந்த வாகனம் ஆட்டோவின் மீது விழ ஆட்டோ கவிழ்ந்து விழுந்தது. பல்சர் மற்றும் அந்த இரு சக்கர வாகனங்களும் கிட்டத்தட்ட 20 அடிகள் உரசியே விழுந்தது. அந்த குடும்பத்தை சார்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைக்கு அடி. கணவருக்கு செக் பண்ணினேன், இடது கால் முட்டி விலகியிருந்தது, அவரால் நிற்க முடியவில்லை, மனைவிக்கு இடது பக்கம் உள்ள சேலை முழுவதும் கிழந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. நல்லவேளை குழந்தைக்கு ஏதும் ஆகவில்லை.

உடனடியாக போலீசுக்கும், 108க்கும் போன் செய்து வரவழைத்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு யாரும் வரவில்லை. அதன்பின் கூட்டம் கூடியது. பார்த்தால் ஆட்டோகாரரும், பல்சர் நபரும் நல்ல டாஸ்மாக் குடிமகன்கள்.

டேய் டாஸ்மாக், இன்னும் எத்தனை பேர் தாலிய அறுக்கப்போறீங்களோ?

Tuesday, July 15, 2014

ஆடி மாத ஜோதிட ஆன்மீகக் குறிப்புகள்
ஆடி மாத சிறப்பு:

அம்மனுக்கு உரிய மாதம் ஆடி மாதம். பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும். 


ஜோதிடப்படி கடகம் ராசிக்கு அதிபதி சந்திரன், சந்திரனுடைய அதிதேவதை அம்மன். இப்படிப்பட்ட கடக ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆடி மாதமாகும். அதனால்தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.---------------------------------------------------------ஆடி மாத குறிப்புகள்


தமிழ் தேதி
ஆங்கில தேதி
குறிப்புகள்
1
17-07-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
5
21-07-14
ஆடி க்ருத்திகை
6
22-07-14
க்ருஷ்ணபக்ஷ சர்வ ஏகாதசி
8
24-07-14
க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம்
10
26-07-14
ஆடி மாச சர்வ அமவாஸ்யை
14
30-07-14
சுக்லபக்ஷ சதூர்த்தி, ஆடிப்பூரம்
16
01-08-14
சுக்லபக்ஷ ஷஷ்டி
17
02-08-14
ஷஷ்டி வ்ரதம்
18
03-08-14
ஆடிப்பெருக்கு
19
04-08-14
குரு உதயம்
22
07-08-14
சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி
23
08-08-14
சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம், வ்ரலஷ்மீ வ்ரதம்
25
10-08-14
பௌர்ணமி, ச்ரவண வ்ரதம்
26
11-08-14
காயத்ரி ஜபம்
28
13-08-14
க்ருஷ்ணபக்ஷ மஹா சதூர்த்தி
30
15-08-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
31
16-08-14
ஷஷ்டி வ்ரதம்


கிரஹ பாதசார விபரங்கள்:


சூர்யன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
20/7
4
மா.           4.39
பூசம் – 1
23/7
7
மறு. கா      4.52
பூசம்- 2
27/7
11
மா.           5.06
பூசம் – 3
30/7
14
மறு. கா      5.19
பூசம் - 4
3/8
18
மா.           5.21
ஆயில்யம் – 1
6/8
21
மறு. கா      5.07
ஆயில்யம் – 2
10/8
25
மா.           4.54
ஆயில்யம் – 3
13/8
28
மறு. கா     4.26
ஆயில்யம் – 4
சந்திரன்
2014
ஆடி
ம. நி
ராசி
19/7
3
 கா. 9.40
மேஷம்
21/7
5
மா. 3.22
ரிஷபம்
23/7
7
இ. 11.31
மிதுனம்
26/7
10
கா. 9.57
கடகம்
28/7
12
இ. 9.38
சிம்மம்
31/7
15
கா. 8.53
கன்னி
2/8
17
மா. 6.18
துலாம்
4/8
19
இ. 1.16
வ்ருச்சிகம்
6/8
21
மறு. கா. 6.00
தனுசு
9/8
24
கா. 9.06
மகரம்
11/8
26
ப. 11.29
கும்பம்
13/8
28
ப. 2.02
மீனம்
15/8
30
மா. 5.39
மேஷம்

செவ்வாய்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
20/7
4
இ. 11.37
சித்திரை – 4
26/7
10
இ. 1.06
சுவாதி – 1
1/8
16
மா. 6.04
சுவாதி – 2
6/8
21
மறு. கா. 3.48
சுவாதி – 3
12/8
27
ப 1.32
சுவாதி – 4
புதன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
17/7
1
இ. 7.01
புனர் பூசம் - 1
19/7
3
இ. 7.22
புனர் பூசம் - 2
21/7
5
மா. 6.07
புனர் பூசம் - 3
23/7
7
மா. 3.00
புனர் பூசம் - 4
25/7
9
ப.11.52
பூசம் – 1
27/7
11
கா. 8.44
பூசம்- 2
28/7
12
மறு. கா. 5.26
பூசம் – 3
30/7
14
இ. 1.22
பூசம் - 4
1/8
16
இ. 9.17
ஆயில்யம் – 1
3/8
18
மா. 5.12
ஆயில்யம் – 2
5/8
20
ப. 1.12
ஆயில்யம் – 3
7/8
22
கா. 8.44
ஆயில்யம் – 4
8/8
23
மறு. கா. 4.17
மகம் - 1
10/8
25
இ. 11.49
மகம் - 2
12/8
27
இ. 7.22
மகம் - 3
14/8
29
மா. 4.01
மகம் - 4
16/8
31
ப. 2.24
பூரம் - 1
குரு
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
28/7
12
இ. 12.15
பூசம் – 3
12/8
27
இ. 8.36
பூசம் - 4சுக்ரன்
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்
17/7
1
கா. 7.42
ம்ருகச்சீர் - 4
19/7
3
இ. 1.40
திருவா. - 1
22/7
6
இ. 7.39
திருவா. – 2
25/7
9
ப. 1.38
திருவா. – 3
28/7
12
கா. 7.37
திருவா. - 4
30/7
14
இ. 1.35
புனர் பூசம் - 1
2/8
17
இ. 7.33
புனர் பூசம் - 2
5/8
20
ப. 1.31
புனர் பூசம் - 3
8/8
23
கா. 7.29
புனர் பூசம் - 4
10/8
25
இ. 1.27
பூசம் – 1
13/8
28
இ. 7.25
பூசம் – 2
16/8
31
ப. 1.16
பூசம் – 3சனி
2014
ஆடி
ம. நி
நக்ஷ்த்ரம்-பாதம்

1
17.07
சுவாதி – 4

2
18.07
விசாகம் - 1ராகு - சித்திரை – 2
கேது – ரேவதி - 4

நாயன்மார் திருநக்ஷ்த்ரங்கள்

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
21/7
5
மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார்
25/07
9
கூற்றுவ நாயனார்
28/07
12
பெருமிழலை குறும்ப நாயனார்
03/08
18
ஸ்ரீசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சேரமான்மாபெருமாள் நாயனார்
16/08
31
கலியநாயனார், கோட்புலி நாயனார்

அடிவருள் ஏனையர்

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
09/08
24
பட்டினத்தார்


ஆழ்வார் ஆச்சாரியர்:

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
23/07
7
22வது பட்டம்
27/07
11
பிரதிவாதி பயங்கர மன்னன்  36வது பட்டம்
30/07
14
26வது பட்டம், கந்தாடை தோழப்பர் (ஸ்ரீஆண்டாள்)
01/08
16
பத்ரிநாராயணர்
03/08
18
பரத்வாஜ ஸ்ரீனிவாஸ ஜீயர், பக்ஷிராஜர் (பெரிய திருவடி), 25வது பட்டம்
09/08
24
ஸ்ரீஆளவந்தார், புண்டரீகாக்ஷர், 14வது பட்டம்
10/08
25
தேக்காழ்வார்


மத்வாச்சாரியார்:

ஆங்கிலம்
தமிழ்
திருநக்ஷத்ரம்
24/07
8
ஸ்ரீவிஜயேந்திரர்
02/08
17
சத்யவரதர்
12/08
27
ஸ்ரீராகவேந்திரர்


வாஸ்து பகவான் நித்திரை எழுதல்:
27-07-2014 – ஆடி 11 – ஞாயிறு – காலை 6.48  -  8.18 வரை
நல்ல நேரம்: காலை மணி 07.42 – 08.18க்குள்

கிரகநிலை:


ஆடி மாத ராசிபலன்கள்:

மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறும் மேஷராசியினரே இந்த மாதம் இறுதியில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். ஆறாமிடத்தில் உள்ள ராகு சஞ்சாரம் வயிறு கோளாறை ஏற்படுத்தும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். 

சந்திராஷ்டமம்: 19ம் தேதி (04-08-2014) திங்கள் இரவு 1.16 முதல் 22ம் தேதி (07-08-2014) வியாழன் அதிகாலை 5.59 வரை

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.


---------------------------------------------------------ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எல்லோரிடமும் அனுசரித்து பேசும் குணமுடைய ரிஷப ராசியினரே இந்த மாதம்  பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்:  ஆடி 22ம் தேதி (07-08-2014)  வியாழன் அதிகாலை 6.00 முதல் 26ம் தேதி (09-08-2014) சனி காலை 09.05 வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். 


---------------------------------------------------------
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் மிதுன ராசியினரே இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மாத மத்தியில் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு  மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

சந்திராஷ்டமம்:  ஆடி 24ம் தேதி (09-08-2014) சனி காலை 9.06 முதல் 26ம் தேதி (11.08.2014) திங்கள் பகல் 11.28 வரை

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.


---------------------------------------------------------
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய கடக ராசியினரே இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். 
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சந்திராஷ்டமம்:  ஆடி 26ம் தேதி (11.08.2014) திங்கள் பகல் 11.29 முதல் 28ம் தேதி (13.08.2014) புதன் பகல் 2.01 மணி வரை

பரிகாரம்:  திங்கள்தோறூம் அம்மனை நெய் விளக்கு ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.


---------------------------------------------------------
சிம்மம்
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண் செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 
மாணவர்களுக்கு  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

சந்திராஷ்டமம்:  ஆடி 28ம் தேதி (13.08.2014) புதன் பகல் 02.02 முதல்30ம் தேதி ()15.08.2014 வெள்ளி மாலை 5.38 வரை

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.


---------------------------------------------------------
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

தர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய கன்னி ராசியினரே, இந்த மாதம் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில்  சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்:  ஆடி 30 (15.08.2014) வெள்ளி 5.39 முதல் ஆவணி 1ம் தேதி 17.08.2014 ஞாயிறு இரவு 11.06 வரை

பரிகாரம்:  ஸ்ரீஐயப்பனை வணங்கிவர  எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.---------------------------------------------------------
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்பும் துலா ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். 
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்களுக்கு  எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்:  ஆடி 5ம் தேதி (21.07.2014) திங்கள் மாலை 03.22 முதல் 7ம் தேதி (23.07.2014) புதன் இரவு 11.30 வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறூம் அம்மனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.


---------------------------------------------------------
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும்.  சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில்  வெற்றி வாய்ப்பு உண்டாகும். 

சந்திராஷ்டமம்:   ஆடி 7ம் தேதி (23.07.2014)  புதன் இரவு 11.31 முதல் 10ம் தேதி (26.07.2014) சனி காலை 09.56 வரை

பரிகாரம்:  ஞாயிற்றுகிழமையில் மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். 


---------------------------------------------------------
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே இந்த மாதம் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம்.  பணவரத்து இருக்கும்.  பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். 

சந்திராஷ்டமம்:   ஆடி 10ம் தேதி (26.07.2014) சனி காலை 09.57 முதல் 12ம் தேதி (28.07.2014) திங்கள் இரவு 09.37 வரை

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவனை வணங்கி வர மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.


---------------------------------------------------------
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட மகரராசியினரே இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். மாத மத்தியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி  கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஆடி 12ம் தேதி (28.07.2014) திங்கள் இரவு 09.38 முதல் 15ம் தேதி (31.07.2014) வியாழன் காலை 08.52 வரை

பரிகாரம்:  விநாயகபெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.  


---------------------------------------------------------
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்லும் குணமுடைய கும்பராசியினரே, இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். 
பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். 
மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.  

சந்திராஷ்டமம்:  ஆடி 15ம் தேதி (31.07.2014) வியாழன் காலை 8.53 முதல் 17ம் தேதி (02.08.2014) சனி மாலை 06.17 வரை

பரிகாரம்:  சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுவதும் உடல் ஆரோக்கியத்தை தரும். குடும்ப பிரச்சனை தீரும்.---------------------------------------------------------
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய மீனராசியினரே, இந்த மாதம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். 
பெண்களுக்கு உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.  
மாணவர்களுக்கு  எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். 

சந்திராஷ்டமம்: ஆடி 17ம் தேதி (02.08.2014) சனி மாலை 06.18 முதல் 19ம் தேதி (04.08.2014) திங்கள் இரவு 1.15 வரை

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ---------------------------------------------------------