Tuesday, December 16, 2014

சனிப் பெயர்ச்சி ஸ்பெஷல்

சனிப்பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.
ராசி    சனியின் நிலை:
மேஷம்    அஷ்டமத்து சனி      
ரிஷபம் 
   கண்டச்சனி      
மிதுனம்    ரண ருண சனி      
கடகம்    பஞ்சம சனி      
சிம்மம்    அர்த்தாஷ்டம சனி      
கன்னி    தைரிய வீர்ய சனி      
துலாம்    வாக்கு சனி அல்லது பாத சனி      
விருச்சிகம்    ஜென்ம சனி      
தனுசு    விரைய சனி அல்லது சிரசு சனி      
மகரம்    லாபச்சனி      
கும்பம்    கர்ம சனி      
மீனம்    பாக்கிய சனி   உங்கள் ஜாதகத்திற்கான பிரத்யேக பலன்கள்மேஷம்:
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அசுபதி: சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக  இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள்,  முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.
பரணி : இடையூறுகள் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை  வணங்கினால் எதிலும் சக்ஸஸ்தான்.
கார்த்திகை - 1 : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். சூரிய பகவானை மனதில் நினைத்துக்  கொண்டே இருந்தால் மனதிடம் அதிகரிக்கும். 
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை சனீஸ்வரருக்கு எள்  எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.  செவ்வாய்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு  அர்ப்பணிக்கவும்.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம்:நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
கார்த்திகை 4 : உங்களுக்கு ஏற்றத்தையும், பொலிவையும் கொடுக்கும் காலமிது. வெளியூர் பயணங்களால் அனுகூல்யம்  உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில்  தரிசனம் செய்து வாருங்கள்.


ரோகினி : ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு  தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல  வாழ்வில் இனிதே நடக்கும்.

மிருகசீரிடம் 1 - 2 : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை  சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். ஸ்ரீமுருகனை ஆராதனம் செய்தால் எல்லா நலமும்  கிடைக்கும்.


பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை  சுண்டல் செய்து வழங்கவும்.  வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள்  கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிதுனம்:
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


மிருகசீரிடம் 3 - 4: உங்களுக்கு நல்ல பலன்கள், நல்ல முறையில் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம், வழக்கு  வியாஜ்ஜியங்களில் வெற்றி என நற்பயன்கள் வந்து சேரும் காலமிது. தாய்தந்தையரை வணங்கி எந்த காரியங்களையும்  ஆரம்பியுங்கள், வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

திருவாதிரை: உத்தியோகத்தில் பதவிஉயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் ஆதரவு, மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவு என  நல்ல பலன்கள் ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ  மஹாலக்ஷிமி காயத்ரி சொல்லி, வணங்கிவிட்டு காரியங்களை ஆரம்பியுங்கள்.

புனர்பூசம் 1 - 2 -3: நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழையுங்கள், அது ஒன்றே உங்களது பலம். அரசாங்க அனுகூல்யம்  கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை அணிகலன்கள் சேரும். ஆதிதயஹ்ருதயம் சொல்லுங்கள்.  ஆதித்யனின் அருளால் அனைத்தும் நடக்கும்.


பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற  ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள்,  அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`கடகம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


புனர்பூசம் 4: உடல்நலம் சிறப்பாக இருந்துவரும். புதிய மனை, வீடு, வாகனம் அமையும். வழக்கு வியாஜ்ஜியங்களில்  வெற்றி கிடைக்கும். உறவினர், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து முயற்சி மேற்கொண்டால்  கல்வியில் சாதனை பெற முடியும். ஸ்ரீ மஹாலக்ஷிமி அஷ்டகம் சொல்லி தினப்பொழுதை ஆரம்பித்தால் எதிலும்  வெற்றிதான்.

பூசம்: தொழில், கூட்டுவியாபாரம், உத்தியோகம் ஆகியவைகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு செயலையும்  மனமகிழ்ச்சியோடும் சிறு புன்முறுவலோடும் முயற்சியோடு ஆரம்பியுங்கள். அதற்கான பலன் உங்கள் கைகளில் வரும்.  புதிய் தொழில், வீடு, வாகனம், மனை ஆகியவை உங்களுகு அமையும் பொன்னான காலமிது. ஸ்ரீ துர்க்கா, லக்ஷிமி,  ஸ்ரஸ்வதி ஆகியோரின் காயத்ரி மந்த்ரங்களை பாராயணம் செய்யுங்கள், அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

ஆயில்யம்: புதிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் சனிப்பெயர்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் சற்று இறங்கி  வந்து வாழ்க்கைத்துணையுடனும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அனுசரித்துப் போனீர்களானால் சிறப்பாக  இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல  சொல்லொன்னாத் துயரமும் அகன்று விடும்.

பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று  நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.  எலுமிச்சம் பழ சாரை பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம்  செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மகம்: புதிய பாதைகளில் செல்லும்போது சோதனைகள் வந்தாலும் முயற்சி செய்தால் சாதனைகளாக மாற்றலாம்.  மருத்துவச் செலவுகள் பயமுறுத்தலாம், எனவே சின்னப் பிரச்சினையானாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது  நல்லது. தாங்களாக மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள். புருஷ  ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.

பூரம்: எந்த டாக்குமெண்ட் என்றாலும் கையெழுத்து போடும் முன் யோசனை செய்யவும். சோம்பலைத் தவிர்க்கப்  பாருங்கள். தொழில், வியாபாரம், உத்தியோதத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் மனதைரியமும்,  வலிமையும் தங்களுக்கு உண்டு என்பதனை உணருங்கள். சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால் நன்மை  நாடி வரும்.
உத்திரம் 1ம் பாதம்: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. வேலைப்பளு  கூடினாலும் தங்களுக்கு இது நல்ல அனுபவமாக அமையும். எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என  ஆதங்கப்படவேண்டாம், அது நல்லதற்கே என நினையுங்கள். எதிலும் எங்கும் முன்கோபம் கூடவே கூடாது. இராம நாம  ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம்  செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன்  உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம்  செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி  நடக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திரம் 2 - 3 - 4ம் பாதங்கள்: சொத்துக்களில் மூலம் செலவுகள் நேரலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை  ஏற்பட்டாலும் உங்கள் கருத்து ஏற்கப்படும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும்போது தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று  செய்யவும். சூடு, நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். எச்சரிக்கை. குரு பகவானை நினைத்து எதையும்  ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.
ஹஸ்தம்: உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நிலையிருந்து மாற்றம் வந்துவிட்டது.  வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து போங்கள். பணப்பற்றாக்குறை இன்றி இருக்க சியாமளா தண்டகம் படியுங்கள்.

சித்திரை 1 - 2ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இடமாற்றம், பணிஉயர்வு உண்டு. எதிர்பாராத செலவினம் ஏற்படலாம்.  கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.  வெண்ணையை ஆஞ்சநேயருக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப்  பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம்:


நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

சித்திரை 3 - 4ம் பாதங்கள்: உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைகளைத்தாண்டி  வெற்றிகளைக் குவிப்பீர்கள். கல்வியில் மந்தமான சூழ்நிலை விலகி நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் தொழிலில்  சிறக்க ஸ்ரீ கணபதியை வணங்குங்கள்.

ஸ்வாதி: உங்களுக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த  கசப்புணர்ச்ச்சி நீங்கும். வரவேண்டிய கடன்பாக்கி வந்துசேரும். காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.  ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்கி எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.


விசாகம் 1 - 2 - 3ம் பாதங்கள்: உங்கள் சகோதர சகோதரிகளின் உறவு பலமாகும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். நீண்ட  நாட்களாக உள்ள திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். ஸ்ரீஆதித்யஹ்ருதயம் சொல்ல சொல்ல தடைகள்  விலகி நன்மை பிறக்கும்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி  வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.  சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.
------------------------------------------------------------------


விருச்சிகம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


விசாகம், 4ம் பாதம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. எந்த வேலையிலும் முழுமுயற்சி  தேவை. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு  ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும்.

அனுஷம்: தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். மனதில் புதிய  உற்சாகமும் எழுச்சியும் பிறக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் உறவு மேம்படும். கூடிய விரைவில் எதிர்பார்த்த  திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும்.

கேட்டை: கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் யோகம்  மெதுவாக கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி  கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.  நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும். செவ்வாய்தோறும்  செவ்வரளிமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள்.


----------------------------------------------------------------------------தனுசு:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


மூலம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் வரலாம். முடிந்தவரை கடன்  வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன்  வழிபாடு நன்மையைத் தரும்.

பூராடம்: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள்.  வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல்  வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

உத்திராடம் 1ம் பாதம்: உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த  காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால்  நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும்.


பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.  கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.   சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து   வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம்  அதிகரிக்கும்.

------------------------------------------------------------------
மகரம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


உத்திராடம் 2 - 3 - 4ம் பாதம்: தொழிலில் அதீத முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில்  உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாராக்கடன்கள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம்  அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும்.

திருவோணம்: சில காலங்களாக இருந்த சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் அபிவிருத்தி, லாபம்  கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே  நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

அவிட்டம் 1 - 2ம் பாதங்கள்: தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். தைரியமும் தன்னம்பிக்கை  சுடர்விடும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல  வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள்  தேடிவரும்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால்  தேங்காய் விளக்கு போடவும்.  சனிக்கிழமைதோறும் சிவன் கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு பிச்சிப் பூவை  அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும்.

------------------------------------------------------
கும்பம்

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:


அவிட்டம் 3 - 4: எதிலும் அவசரம் இருக்கும். எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம்  ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஹனுமனை  வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

ஸதயம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும்.  பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை  வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி 1 - 2 - 3: உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை.  உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை  இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.


பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு மரிக்கொழுந்துவை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை  படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மீனம்:

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : உடல்நலம் உற்சாகமாக இருக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேகமும், விவேகமும்  அவசியமாகும். குடுமுறவில் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமானை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.
உத்திரட்டாதி: ஆடை, ஆபரணம், அசையாசொத்து சேரும். உங்களுடைய வட்டாரம் பெரிதாகும். நண்பர்களால் அதிக  நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணுவை  வணங்குங்கள், நன்மைகள் பல கிடைக்கும்.

ரேவதி: வியாபாரம் பெருகும். மிகவும் தைரியமாக உபதொழில் ஒன்றும் ஆரம்பிப்பீர்கள். உத்தியோக ரீதியாக அயல்நாடு  செல்ல வேண்டி வரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம்  வரவும். வியாழக்கிழமைதோறும் சாமந்தி மலரை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் தடைகளெல்லாம் விலகி  நன்மைகள் ஏற்படும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருப்பாவை தொடர் - பாகம் 1

திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்
 
 
 
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
 
நன்றி: தினமலர்