Wednesday, February 20, 2019

பஞ்சாங்க ஸ்ரவணம் - 21 02 2019 - வியாழன்

விளம்பி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
21 February 2019
மாசி - 09
வியாழக்கிழமைதுவிதியை மாலை 5.40  மணி வரை பின்னர் திருதியை
பூரம் காலை 7.57 உத்தரம் மறு நாள் காலை 6.32 மணி வரை பின் ஹஸ்தம்
சித்த யோகம்
துருதி நாமயோகம்
தைதுலம் கரணம்

அஹஸ்: 29.19
தியாஜ்ஜியம்: 20.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1  
கும்ப லக்ன இருப்பு (நா.வி) - 3.07
சூர்ய உதயம் - 6.36
சூர்ய அஸ்தமனம் - 6.20

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
குடந்தை சக்ரபாணி விடாயாற்று உற்ஸவம்
திருச்செந்தூர் சுவாமி அம்பாள் கேடயச்சப்பரத்தில் பவனி
திருவள்ளுவநாயனார் குரு பூஜை
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: சதயம்

கிரகம் - பாத சாரம் -  நிலை
சூரியன் - சதயம் 1ம் பாதம் - நட்பு
சந்திரன் - சிம்மம் - நட்பு
செவ்வாய் - அஷ்வினி 4ம் பாதம் - ஆட்சி
புதன் - சதயம் 4ம் பாதம் - பகை
குரு - கேட்டை 4ம் பாதம் - பகை
சுக்கிரன் பூராடம் 4ம் பாதம் - நட்பு
சனி - பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு - புனர்பூசம் 3ம் பாதம் - பகை
கேது - உத்தராடம் 1ம் பாதம் - நட்பு

Friday, February 8, 2019

பஞ்சாங்க ஸ்ரவணம் - 08 02 2019 - வெள்ளிக்கிழமை

பஞ்சாங்க ஸ்ரவணம் - 08 02 2019 - வெள்ளிக்கிழமை

விளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
08 February 2019
தை - 25
வெள்ளிக்கிழமை

திருதியை காலை 9.01  மணி வரை பின்னர் சதுர்த்தி
பூரட்டாதி பகல் 1.48 மணி வரை பின் உத்தரட்டாதி
சித்த யோகம்
சிவம் நாமயோகம்
கரசை கரணம்

அஹஸ்: 29.02
தியாஜ்ஜியம்: 43.41
நேத்ரம்: 0
ஜீவன்:  1/2
மகர லக்ன இருப்பு (நா.வி) - 0.49
சூர்ய உதயம் - 6.39
சூர்ய அஸ்தமனம் - 6.16

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
சதுர்த்தி விரதம்.
திருமொச்சூர் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.
களாக்காடு சக்தி வாகீஸ்வரர் தெப்போற்ஸவ விழா.
மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - அவிட்டம் 1ம் பாதம் - - பகை
சந்திரன் - - கும்பம் - - பகை
செவ்வாய் - - அஷ்வினி 2ம் பாதம் - - ஆட்சி
புதன் - - சதயம்  2ம் பாதம் - - பகை
குரு - - கேட்டை 3ம் பாதம் - - பகை
சுக்கிரன் - - மூலம் 3ம் பாதம் - - நட்பு
சனி - - பூராடம் 1ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., முடித்தவர்.


சிறுவயதிலேயே காஞ்சி மஹா பெரியவரால் பாலஜோதிடர் என்று அழைக்கப்பட்டவர். எண்ணற்ற குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பவர். பத்திரிகைகள், இணையதளங்கள், பண்பலை வானொலி போன்றவற்றில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.


Email: ramjothidar@gmail.com web: www.kuppuastro.com Mobile:+91 7845119542

Thursday, February 7, 2019

தியாகப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் - நாகை சௌந்தர்ராஜன்

மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க, தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் - பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து 1952ம் ஆண்டு ஸ்ரீசத்குரு கான நிலையம் என்று தொடங்கினார் மிருதங்க வித்வான் நாகை.சௌந்தர்ராஜன். கடந்த ஆண்டு வரை தானே இருந்து ஆண்டுதோறும் தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவமும் நடத்தி வந்தார். தியாகராஜரின் மீதும் இசையின் மீதும் அளவில்லா பற்று கொண்ட அவர் சில மாதங்களுக்கு முன் பரமபதம் அடைந்தார்.

 
நாகை சௌந்தர்ராஜன்


தகப்பனார் வரைந்து கொடுத்த படம்
65 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் ஆராதனை உற்சவம் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்பார். இந்த உற்சவத்தில் பிரதான ஆராதனை இவரது தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான்.

இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது.

இந்த ஆண்டு பிப்ரவரி 09 மற்றும் பிப்ரவரி 10 என இரண்டு நாட்கள் நடக்கிறது. மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் அமைந்திருக்கும் பாண்டியன் ஹாலில் விமரிசையாக நடக்க இருக்கிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்தியவர். இவரது பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன், பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம், திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.

துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார், ம்யூசிக் அகாடெமி, கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.


மேலும் விபரங்களுக்கு:
9840870446 / 9791165507
Email: srisadgurugananilayam@gmail.com

Friday, February 1, 2019

பிப்ரவரி மாத சந்திராஷ்டம தினங்கள் - நக்ஷத்ர வாரியாக

பிப்ரவரி மாத சந்திராஷ்டம தினங்கள் - நக்ஷத்ர வாரியாக1-Feb-19 - ரோஹிணி, மிருகசீரிஷம்
2-Feb-19 - மிருகசீரிஷம், திருவாதிரை
3-Feb-19 - புனர்பூசம்
4-Feb-19 - பூசம்
5-Feb-19 - ஆயில்யம்
6-Feb-19 - மகம்
7-Feb-19 - மகம், பூரம்
8-Feb-19 - பூரம், உத்திரம்
9-Feb-19 - உத்திரம், ஹஸ்தம்
10-Feb-19 - ஹஸ்தம், சித்திரை
11-Feb-19 - சித்திரை, சுவாதி
12-Feb-19 - சுவாதி, விசாகம்
13-Feb-19 - விசாகம், அனுஷம்
14-Feb-19 - அனுஷம், கேட்டை
15-Feb-19 - கேட்டை, மூலம்
16-Feb-19 - மூலம், பூராடம்
17-Feb-19 - பூராடம், உத்திராடம்
18-Feb-19 - உத்திராடம், திருவோணம்
19-Feb-19 - திருவோணம்
20-Feb-19 - அவிட்டம்
21-Feb-19 - சதயம்
22-Feb-19 - பூரட்டாதி
23-Feb-19 - உத்திரட்டாதி
24-Feb-19 - ரேவதி
25-Feb-19 - அசுபதி
26-Feb-19 - பரணி
27-Feb-19 - கார்த்திகை
28-Feb-19 - ரோகிணி