Tuesday, December 18, 2012

திருப்பாவை - 3ம் பாசுரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்

(விழுப்புரம் மாவட்டம்)  உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

Monday, December 17, 2012

திருப்பாவை - 2ம் பாசுரம் (17.12.2012 அன்று தினமணி நாளிதழில் வெளியாகும் பாசுர விளக்கம்)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உற்ஸவம்

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றுமான ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உறஸ்வம் நடைபெறுகிறது.

Monday, December 10, 2012

கார்த்திகை கடைசி சோமவாரம் - சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

சங்கரனுக்கு சங்காபிஷேகம்
![இன்று கார்த்திகை கடைசி சோமவாரம்]
By - சிவ.அ. விஜய்பெரியசுவாமி


இன்றைய பஞ்சாங்கம் - 10.12.2012

திங்கட்கிழமை

10
Monday, December 10, 2012

ராகு காலம்: 7.30-9.00
எம கண்டம்: 10.30-12.00
நல்ல நேரம்: காலை 9.15-10.15 மாலை 4.45-5.45
இன்றைய ராசிபலன்

மேஷம்:சாந்தம்
ரிஷபம்:போட்டி
மிதுனம்:ஆர்வம்
கடகம்:கவலை
சிம்மம்:தடங்கல்
கன்னி:சலனம்
துலாம்:பகை
விருச்சிகம்:ஆக்கம்
தனுசு:பரிசு
மகரம்:பயம்
கும்பம்:தெளிவு
மீனம்:உதவி
பஞ்சாங்கம்...

நந்தன வருடம் கார்த்திகை 25; அமிர்த யோகம் 43.37க்கு மேல் மரணயோகம். கரணம் 9.00-10.30; சூரிய உதயம் 6.17 விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 1 விநாடி 3; சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
துவாதசி 38.29 (PM 9.41) சுவாதி 43.37 (PM 11.44)
குளிகை: 1.30-3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடாணை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். சுபமுகூர்த்த தினம்.

Saturday, December 8, 2012

நாளைய உழவாரப் பணி

நாளை 9.12.12. அன்று திருச்சக்தி முற்றம் பெரியநாயகி உடனூறை சிவக்கொழுந்தீஸ் ­வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி நடைபெற இருக்கின்றது. தொடர்புக்கு சிவமிகு.ராஜேஷ் ஐயா 9940205930, 8754478855 சிவமிகு.சரவணன் ஐயா 9444304980

சிவன் கோவில்களில் டிசம்பர் 19ல் ஆருத்ரா தரிசனம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.19-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.சுப்ரபாத சேவை டிக்கெட்: கூடுதலாக விற்க முடிவு


திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் இனிமேல் இணையதளம் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறினார்.பாண்டமங்கலம் கால பைரவருக்கு சிறப்பு லட்சார்ச்சனை

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள மகா கால பைரவருக்கு வியாழக்கிழமை இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Thursday, December 6, 2012

திருப்பதி திருமலையில் சொர்க்க வாசல் 2 நாள் திறந்திருக்கும்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் 2 நாள்களுக்கு திறந்திருக்கும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தலவிருட்சம் காட்டும் 9 கோபுரங்கள்

திருவண்ணாமலைய்ல் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களையும் ஒருங்கே தரிசிக்க முடியுமா?முடியும்.  இத்திருகோவிலின் தலவிருட்சம் “மகிழம்”. இந்த கோவிலில் உள்ள மரத்தின் அருகில் நின்று கொண்டு வெளியில் பார்த்தால் கோவிலின் ஒன்பது கோபுரங்களும் தரிசித்து அப்பனம்மையின் அருளைப் பெற முடியும்.


இன்றைய ராசிபலன் - 06.12.2012

இன்றைய நாள் மிக நல்ல நாள் - இன்றைய ராசிபலன் - 06.12.2012

மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பதிமூன்று

மீனம்:

எவரிடமும் முடிந்தவரை சிக்கிக் கொள்ளாமல் விலகிக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே எந்த பிரச்சனைகளையும் சந்திப்பதற்கு முன் மிகுந்த யோசனைகளை செய்து முடிவெடுத்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தைரியவீர்ய மூன்றாமிடத்தில் கேதுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தனவாக்குகுடும்ப ஸ்தான இரண்டாமிடத்திற்கும், ராகு ஆயுள்ஸ்தான எட்டாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

Wednesday, December 5, 2012

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -பாகம் பதிமூன்று

கும்பம்:

அடுத்தவரின் மனதை எளிதில் அறிந்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நிறைகளை எந்த அளவிற்கு காண்பீர்களோ அதே போன்று குறைகளையும் கண்டு கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி சுகஸ்தான நான்காமிடத்தில் கேதுவும், தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தைரியவீரிய ஸ்தான மூன்றாமிடதிற்கும், ராகு பாக்கியஸ்தான ஒன்பதாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் 12

மகரம்:

எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் எதிலும்  தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி பஞ்சமபூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தில் கேதுவும், லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து அருளாட்சி கொடுத்தார்கள். இனி கேது சுகஸ்தான நான்காமிடத்திற்கும், ராகு கர்மஜீவனஸ்தான பாத்தாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

சிவப்பொருள் கண்காட்சி


Monday, December 3, 2012

ராகு கேது பெயர்ச்சி - பாகம் பதினொன்று

ஆண்டவரின் கிருபையால் மிக அருமையாக நடைபெற்றது ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பரிகாரம் மற்றும் ஹோமம்.

படங்களுடன் விரைவில் அப்டேட் செய்கிறோம். மீதியுள்ள பலன்களையும் அப்டேட் செய்கிறோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Saturday, December 1, 2012

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பத்து

தனுசு:

எதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் அங்கிங்கு சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது.

இதுவரை உங்களது ராசிப்படி ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தில் கேதுவும், விரையஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து பலன்கள் கொடுத்தார்கள். இனி கேது பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தான ஐந்தாமிடதிற்கும், ராகு லாபஸ்தான பதினொன்றுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

Friday, November 30, 2012

80000 ஹிட்ஸ் அளித்த சொந்தங்கள்

அன்பின் சொந்தங்களே 

அனைவருக்கும் எங்களது அன்பின் வணக்கங்கள்.

தற்போது இந்திய நேரம் 2.18pm , இதுவரை நமது பிளாக்கிற்கு 80000 ஹிட்ஸ் வந்துள்ளது. மிகவும் சந்தோஷம். 

எல்லாம் ஸ்ரீகுப்பு ஜோஸ்யரின் ஆசீர்வாதங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.  

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பாகம் ஒன்பது


விருச்சிகம்:

”தேளானைப் போற்றிக் கொள்” என்பதற்கேற்ப யாரும் உங்களை சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் தீண்டிவிடுவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் ராகுவும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தில் கேதுவும் வீற்றிருந்தார்கள். இனி கேது ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும், ராகு விரையஸ்தான பன்னிரெண்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் எட்டு

துலாம்:

அனைவருக்கும் சமநீதியை வழங்கும் துலாம் ராசி அன்பர்களே உங்களின் மனதில் பட்ட காரியங்களை மிகத்தெளிவாக அடுத்தவரிடம் வெளிப்படுத்தும் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தனவாக்குக் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகுவும், ஆயுள்ஸ்தானமான எட்டாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இருந்தார்கள். இனி கேது களத்திரஸ்தானமான 7ம் இடத்திற்கும், ராகு ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஏழு


கன்னி:

பிறரிடம் நல்அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே உங்களின் மென்மையான குணத்தால் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவீர்கள். மேலும் அனைவரையும் சீக்கிரமாகவே நம்பும் வெள்ளைமனம் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தைரிய வீர்ய ஸ்தானமான மூன்றாமிடத்தில் ராகுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இருந்தார்கள். இனி கேது ஆயுள்ஸ்தானமான 8ம் இடத்திற்கும், ராகு தனவாக்கு குடும்பஸ்தானமான 2ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஆறு

சிம்மம்:

தன்னம்பிக்கையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிகாட்டி என்பதை மற்றவர்களுக்கு தங்களது செயலால் உணர்த்தும் சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள்.எந்த வேலை செய்தாலும் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தில் கேதுவும்,  சுகஸ்தானமான 4ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது பாக்கியஸ்தானமான 9ம் இடத்திற்கும், ராகு தைரியவீர்யஸ்தானமான 3ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஐந்து

கடகம்:

எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்லும் கடக ராசி வாசகர்களே நீங்கள் எப்போதும் அன்புக்கு கட்டுப்பட்டுவர்கள். தன் குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தில் கேதுவும்,  பூர்வபுண்ணியஸ்தானமான 5ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது ஜீவனஸ்தானமான 10ம் இடத்திற்கும், ராகு சுகஸ்தானமான 4ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

மிதுனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் நான்கு


மிதுனம்:

சீரியசிந்தனையும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுனராசி அன்பர்களே யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று மூன்னேற வேண்டும் என துடிப்பவர்கள் நீங்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி அயனசயனபோக ஸ்தானத்தில் கேதுவும், 6ம் இடத்தில் ரணருணரோகஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது லாபஸ்தானமான 11ம் இடத்திற்கும், ராகு பூர்வபுண்ணியஸ்தானமான 5ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் மூன்று

ரிஷபம்:

பொறுமையாக நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பை செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் கேதுவும், 7ம் இடத்தில் களத்திரஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது அயனசயனபோகஸ்தானமான 12ம் இடத்திற்கும், ராகு ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 

மேஷம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் இரண்டு

மேஷம்:

எதற்கும் அஞ்சாத குணம் கொண்ட மேஷ ராசி வாசகர்களே, நீங்கள் மேன்மையுடனும், கீர்த்தியுடனும், புகழுடனும் விளங்குவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி 2ம் இடத்தில் கேதுவும், 8ம் இடத்தில் ராகுவும் இனி கேது ராசிக்கும், 7ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். 

Thursday, November 29, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஒன்று

அன்பின் சொந்தங்களுக்கு,

வணக்கம்.

அப்பப்பா....இந்த ராகு கேது பெயர்ச்சி வந்தாலும் வந்தது. எனக்கு நேரம் சரியில்லை போலும். இட்லிவடையில் ஒரு லிங்க் போட்டு ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமத்திற்கு இடுகை கொடுத்தால் அனைவரும் அதை பலன்களுக்கான லிங்க் என நினைத்து விட்டனர் போலும். 

Tuesday, November 20, 2012

Saturday, November 17, 2012

புரட்டாசி சனிக்கிழமை அர்ச்சனையில் கலந்து கொண்டோர்க்கு

அன்பின் ந்தங்க,வணக்கம்.

இந்த அறிவிப்பு ஏற்கனவே புரட்டாசி சனிக்கிழமைக்கு அர்ச்சனைக்கு காணிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கு மட்டும்.

முதலில் எங்களை மன்னிக்கவும். இன்றுதான் அதற்குண்டான பிரஸாதம் அனுப்பப்படுகிறது. இதன்பின் காலதாமதம் ஏதேனும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம்.

அவர்களுக்கு சிறப்பு சலுகைகளாக:

[1] நாளை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு  பிரஸாதம் அனுப்பப்படும்.

[2] அடுத்த மாதம் நாம் நடத்தி வைக்கும் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாகத்தில் அர்ச்சனைக்கும் ஹோமத்திற்கும் கலந்து கொள்ளும் வாய்ப்பு. முடியாதவர்களுக்கு நாம் செய்து பிரஸாதம் அனுப்பப்படும்.

[3] 2013 ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரஸாதம் அனுப்பப்படும்.

நன்றி.

நாளை சூரசம்ஹாரம்

நாளை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
இன்றைய ராசிபலன் - 17.11.2012

 இன்றைய ராசிபலன்  - 17.11.2012Thursday, November 15, 2012

சுவாமியே சரணம் ஐயப்பா...


கார்த்திகை மாத மண்டல பூஜையையொட்டி பக்தர்களை வரவேற்க தயாராகி வருகிறது கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயில்.ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய

ஓம் நமஸ்தே அஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய,


ராசிபலன் - 15.11.2012

ராசிபலன் - 15.11.2012

 

-------------------------------------------------------------------------

மேஷம்: குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அதே வேளையில் பொருள் விரையமும் வேலையில் பின்தங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

ரிஷபம்: எந்த பிரச்சனைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். அடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் சாதனைகள் செய்யலாம்.

மிதுனம்:  கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலம் போல் அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும்.  

கடகம்: சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும். 

சிம்மம்: காரிய அனுகூலம் கிடைக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். 

கன்னி: குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்.

துலாம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்:  பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான லாபம் கிடைக்கும்.

தனுசு: நன்மைகள் கிடைக்கும். பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். ஆனாலும் குரு 5ம் ஸ்தானத்தில் உலவுவதால் தெய்வ நம்பிக்கையில் அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.      

கும்பம்: உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பிந்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும்.
     
மீனம்: தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியுர்ர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

---------------------------------------------------------------------------

Wednesday, November 14, 2012

கந்த ஷஷ்டிக்கு சொல்ல வேண்டிய தமிழ் போற்றி

 
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நன்றி: வரகூரான்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது என்றால் யார்?
ராகு கேது வின் பணிகள் என்னென்ன?
அவர்கள் எவ்வாறு பயணம் செய்வார்கள்?
அவர்களின் பயோடேட்டா?
அவர்கள் எங்கிருந்து எங்கே மாறுகிறார்கள்?
பொதுப் பலன்கள் என்னென்ன?
லக்ன ரீதியான பலன்கள் என்னென்ன?
திசாபுக்தி ரீதியான பலன்கள் என்னென்ன?
களத்திரதோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் ராகு கேதுவால் ஏற்பட்டால் அதற்குண்டான சரியான பரிகாரம் என்ன?
திருநாகேஸ்வரம், திருப்பாம்புபுரம், ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்தும் கல்வி, திருமணம், சந்தாண பாக்கியம், வேலை, வெளிநாடு வாய்ப்பு போன்றவை தள்ளிப் போவது ஏன்?


இது போன்ற அனைத்து கேள்விகளுக்கு சரியான முறையில் அடுத்த சில நாட்களில் பலன்களும் கட்டுரைகளும் வெளிவரப்போகிறது.

காத்திருக்கவும்.

---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம், ஆன்மீகம்: http://kuppuastro.blogspot.com/
நவக்கிரங்கள்: http://nava-graham.blogspot.in/
ராகு கேது: http://rahukethupeyarchi.blogspot.in/

வேண்டுகோள்

கடந்த மூன்று நாட்களாக எங்களுக்கு காய்ச்சல். அதனால்தான் நமது பிளாக்கை அப்டேட் செய்ய இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

இன்று இரவு நவ்வம்பர் 15- 30க்குண்டான பலன்கள் அப்டேட் செய்யப்படும்.

நன்றி.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Thursday, November 8, 2012

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் - அப்டேட் பாகம் ஒன்று

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத் திருநாளன்று 20 லட்சம் பக்தர்கள் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நவீன முறையில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2010ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் உற்சவத்தின் போது மலையிலிந்ருந்து எடுக்கப்பட்ட நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை

Tuesday, November 6, 2012

பாடல்களில் வரும் சிறப்புச் சொற்கள் - பாகம் ஒன்று

கேள்வி: ”முத்தைத்தரு பத்தித் திருநகை”  - என்ற திருப்புகழ் பாடலில் வரும் “முப்பத்து மூவர்க்கத் தமரரும் அடிபேண” என்ற அடியில் பொதிந்துள்ள 33 பேர்கள் யாரென்று கூற முடியுமா?

பதில்:


திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருப்பதி திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் தெப்பக்குளம் - கடந்த வருட பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டது (பழைய படம்)

திருப்பதி வேங்கடவானன் சன்னதிக்கு 2 வாசல்கள் வைக்க ஆலோசனை

செய்தி: 

திருப்பதி ஏழுமலையான் கர்ப்பகிரகத்தில் இரண்டு வாசல்கள் வைக்க ஆலோசனை செய்துவருவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் சனிக்கிழமை தெரிவித்தார்கள். தரிசனம் செய்வதற்காக, கர்ப்பகிரகத்துக்கு முன் உள்ள குலசேகரபடியில் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் என இரண்டு வாசல்களை வைக்க ஆலோசனை செய்யப்படுகிறது. 

ஏழுமைகின் ஒன்றும் ராஜோபுரம் பொன்னாலான ாமை விமானும் கொடி மும் எனார்த்ாலே புண்ணியத்ை அருளும் ிருப்பி பம் (பழைய படம்)

அப்படி இரண்டு வாசல்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கும்போது, நாள்தோறும் குறைந்தபட்சம் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை  நிதானமாக தரிசிக்க ஏதுவாக அமையும். மேலும் இரு வாசல்கள் அமைப்பது தொடர்பாக வேதாகம பண்டிதர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

பதில்:


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் கந்தசஷ்டி திருவிழா 13–ந் தேதி தொடக்கம்

கந்தசஷ்டி திருவிழா 13–ந் தேதி தொடக்கம்

பின்னால் உயர்ந்து  தெரிவது முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தில் பதியின் ராஜகோபுரம்

Sunday, October 21, 2012

கந்தர் சஷ்டி விரதம் - பாகம் மூன்று

விரதம்:  

மனித உடம்பு என்பது ஒரு மரமானால் அதற்குப் பல ஆற்றல் தரும் வயிற்றுப் பகுதியே வேராகும் என்பர் சிலர். வயிறில்லாத மனிதன் இல்லை. 

இன்று - 22.10.2012

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் தினபலன்