Friday, November 9, 2012

இன்றைய நாள் நல்ல நாளே - 09.11.2012

இன்றைய நாள் நல்ல நாளே - 09.11.2012

 நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 24ம் தேதி - நவம்பர் 09 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
வெள்ளிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) தசமி மதியம் 1.16 வரை பின் ஏகாதசி
நக்ஷத்ரம்: பூரம் மாலை 7.46 வரை பின் உத்திரம்
யோகம்: சுப்ரம் 28.22 வரை
கரணம்: கௌலவம் நாழிகை 19.23
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 2.20
இராகு காலம்: காலை 10.40 முதல் 12.10 வரை
எமகண்டம்: மதியம் 3.10 முதல் 4.40 வரை
குளிகை: காலை 7.40 முதல் 9.10 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: அவிட்டம், ஸதயம்
குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.10 - 10.40, மாலை 4.40 - 6.10
[2] கீழ்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காக்ஷி
[4] கம்பை ஆற்றில் கதிர் குளித்தல் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம்
[5] வீரமாமுனிவர் பிறந்த நாள்
[6] இன்று ஆண்டாள் பாசுரங்களைப் பாடுவது நன்மையைத் தரும்

-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - விசாகம் 1 இரவு 10.34க்கு மேல் விசாகம் 2
சந்திரன் - சிம்மம்
செவ்வாய் - மூலம் 1
புதன் - ஸ்வாதி 4 (வ) இரவு 10.38க்கு மேல் ஸ்வாதி 3
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 3 இரவு 1.10க்குப் பின் ஹஸ்தம் 4
சனி - ஸ்வாதி 1
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

-------------------------------------------------------------------------

மேஷம்: குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும்.

ரிஷபம்: வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும். எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.


மிதுனம்:  யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது.  

கடகம்: பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம். 


சிம்மம்: வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பிய கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். 

கன்னி: வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும்.


துலாம்: வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும்.


விருச்சிகம்:  கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும்.


தனுசு: பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்: கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும்.      

கும்பம்: குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

     
மீனம்: தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும்.


---------------------------------------------------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில்
, கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: