Friday, November 30, 2012

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பாகம் ஒன்பது


விருச்சிகம்:

”தேளானைப் போற்றிக் கொள்” என்பதற்கேற்ப யாரும் உங்களை சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் தீண்டிவிடுவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் ராகுவும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தில் கேதுவும் வீற்றிருந்தார்கள். இனி கேது ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும், ராகு விரையஸ்தான பன்னிரெண்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரகங்களின் பார்வை:
ராகு தனவாக்குக்குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தையும், ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தையும், லாபஸ்தானமான  பதினொன்றாம் இடத்தையும் பார்க்கிறார். கேது சுகஸ்தான நான்காமிடத்தையும், ஆயுள்ஸ்தானமான எட்டாமிடத்தையும், விரையஸ்தானமான பன்னிரெண்டாமிடத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம். நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். கணிணி, பொறியியல் மற்றும் விவசாயம் பயில்வோர் சிறப்பான பலனைக் காணலாம். விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் படித்தாலும் அதில் முழுகவனத்துடன் படியுங்கள். வெற்றிகள் கிட்டும். அடுத்த கல்வியாண்டில் பிரச்சனைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். வியாபாரிகளுக்கு  புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும்.வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும். அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.  மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். விவசாயிகளுக்கு பருத்தி, கரும்பு, சோளம், நெல், கோதுமை மற்றும் பூ வகைகள் ஆகியவற்றில் நல்ல வருவாய் கிடைக்கும். புது சொத்துக்கள் வாங்கலாம். பயிர்களுக்கு பராமரிப்பு அதிகரிக்கும். ஆனால் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். சிலர் அதிக உழைப்பு காரணமாக உடல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பீர். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டினில் இருந்து நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விரும்பியது கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும். தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். நல்ல வருமானம் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை நரம்பு மற்றும் சம்பந்தமான தொல்லைகள் இருக்கும். தாய் மற்றும் வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் சிறப்பு கவனம் தேவை. பிள்ளைகளின் உடல்நலனில் அதிகமான அக்கறை செலுத்த வேண்டிவரும். தூரத்து உறவினர் வகையில் இருந்து ஏதேனும் கெட்ட செய்தி வரலாம்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் கோவிலில் உள்ள முருகனுக்கு நெய் விளக்கு போட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்யுங்கள். ஸ்ரீநரசிம்மர் ஸ்தலங்கள் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: திருப்புகழ் பாராயணம்,  கந்தகுரு கவசம் பாராயணம் செய்வதும் நலம்.லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம்இராசிபலன்கள்பரிகாரம்
மேஷம்விருச்சிகம்70%கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம்விருச்சிகம்65%ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம்விருச்சிகம்60%விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம்விருச்சிகம்65%ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம்விருச்சிகம்60%ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னிவிருச்சிகம்60%விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முருகனை வழிபடுவது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்விருச்சிகம்55%கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம்விருச்சிகம்75%திருப்புகழ் பாராயணம்,  கந்தகுரு கவசம் பாராயணம் செய்வதும் நலம்.
தனுர்விருச்சிகம்70%அபிராமி அந்தாதி சொல்லுங்கள்
மகரம்விருச்சிகம்65%குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம்விருச்சிகம்65%லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம்விருச்சிகம்60%தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாதுவிருச்சிகம்75%திருப்புகழ் பாராயணம்,  கந்தகுரு கவசம் பாராயணம் செய்வதும் நலம்.
குறிப்பு:[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் விருச்சிகம் இராசி என்பவர்கள் திருப்புகழ் பாராயணம்,  கந்தகுரு கவசம் பாராயணம் செய்வதும் நலம்..

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

*நக்ஷத்திரங்கள்
பலன்கள்விசாகம் - 4 ம் பாதம்அனுஷம்கேட்டை
இராசிவிருச்சிகம்விருச்சிகம்விருச்சிகம்
இராசியாதிபதிசெவ்வாய்செவ்வாய்செவ்வாய்
நக்ஷத்திர அதிபதிவியாழன்சனி புதன்
அதிதேவதைகள்இந்திரன், அக்னிமித்திரன்இந்திரன்
கணம்இராக்ஷஸ் கணம்தேவகணம்இராக்ஷஸ் கணம்
நாடிபார்ஸுவ - இடதுமத்யபார்ஸுவ - வலது
மிருகம்பெண் புலிபெண் மான்ஆண் மான்
பக்ஷிசெவ்வாக்சாதகம்சக்கிரவா
விருக்ஷம்விளாமகிழ்பிராய்
இரஜ்ஜுவயிறுதொடைபாதம்
வேதை நக்ஷத்ரம்கார்த்திகைபரணிஅசுவதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள்1, 3, 4, 6, 7, 91, 2, 3, 6, 7, 91, 3, 5, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள்கிழக்கு, வடக்குகிழக்கு, தெற்குகிழக்கு
குறிப்பு:அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.


No comments: