Wednesday, November 7, 2012

இன்று நல்ல நாள் - 07.11.2012

இன்று நல்ல நாள் - 07.11.2012

 

 நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 22ம் தேதி - நவம்பர் 07 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
புதன்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) அஷ்டமி மதியம் 2.03 வரை பின் நவமி
நக்ஷத்ரம்: ஆயில்யம் மாலை 7.08 வரை பின் மகம்
யோகம்: சுப்ரம் 28.22 வரை
கரணம்: கௌலவம் நாழிகை 19.23
சூரிய உதயம்: காலை மணி 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 06.46
இராகு காலம்: மதியம் 12.10 முதல் 1.40 வரை
எமகண்டம்: காலை 7.40 முதல் 9.10 வரை
குளிகை: காலை 10.40 முதல் 12.10 வரை
சூலம்: வடக்கு - வடகிழக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.10 - 10.40, மாலை 4.40 - 6.10
[2] கீழ்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்பாள் ரதோத்ஸவம் மாலை சிவபூஜை செய்து அருள்பாலித்தல். தோளுக்கினியானில் பவனி. இரவு ஸப்தாவரணம்
[4] அலப்பியம் திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் உற்ஸவம் ஆரம்பம்
[5] இன்று காலை அஷ்டமியில் காலபைரவருக்கு பூஜை செய்தல் நன்மை பயக்கும். சொல்ல வேண்டிய மந்திரம்: ”ஓம் கம் பீம் கம் சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ!”

-------------------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - விசாகம் 1
சந்திரன் - கடகம்
செவ்வாய் - மூலம் 1
புதன் - ஸ்வாதி 4 (வ)
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - ஹஸ்தம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

பஞ்சாங்கம் கணிப்பு:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
 
 
மேஷம்: பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்: புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர்.


மிதுனம்:  வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம்.  


கடகம்: உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம்.


சிம்மம்: உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

கன்னி: உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.


துலாம்: வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.


விருச்சிகம்:  இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.


தனுசு: இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும்.

மகரம்: அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.    


கும்பம்: ணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

     
மீனம்: புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

No comments: