Sunday, July 31, 2016

முக்கிய அறிவிப்பு:

முக்கிய அறிவிப்பு:
இப்போது நடக்கப் போகும் குருப் பெயர்ச்சி மேஷம் - கடகம் - துலாம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே நல்ல விஷயங்கள் நடக்கும். இது பொதுவான பலன்தான்.
ஓவ்வொருவருடைய ஜாதகருக்கும் தனித்தனி லக்னம் இருக்கும். அதன் மூலமாகவும் பலன் பார்க்க வேண்டும். அதே போல் திசா புத்தி மூலமும் பலன் பார்க்க வேண்டும். பொதுவாக ராசிபலன் சொல்பவர்கள் நான் உட்பட சொல்லும் ராசிபலன்கள் பொதுவானதே. அதனால் இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதகத்தின் மூலம் இந்த குருப் பெயர்ச்சி மாற்றம் எப்படி இருக்கும் என அருகிலிருக்கும் ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
எனக்கு போன் செய்யும் போதோ மெயில் அனுப்பும் போதோ பொதுவான பலன்களைக் கேட்க வேண்டாம். அப்படி கேட்டால் எனக்கு பலன் சொல்லத் தெரியாது. ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார் கும்ப ராசிக்காரர்களுக்கு மரணம் ஏற்படும் என்று. எப்படி இதையெல்லாம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் பலன் சொல்ல எனக்குத் தெரியாது.
அதே போன்று கிரகங்களை அவன் இவன் என்று சொல்லுபவர்கள் என்னைத் தயவுசெய்து தொடர்பு கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. கிரகங்களை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுபவர்கள் ஜோதிடத்திற்கு எதிரானவர்கள்.
நன்றி.

Friday, July 29, 2016

அசுபதி - பரணி - கார்த்திகை நக்ஷத்ரங்கள் - ஒரு பார்வை


*
நக்ஷத்திரங்கள்
பலன்கள்
அசுபதி
பரணி
கிருத்திகா - 1ம் பாதம்
இராசி
மேஷம்
மேஷம்
மேஷம்
இராசியாதிபதி
செவ்வாய்
செவ்வாய்
செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி
கேது
சுக்ரன்
சூரியன்
கணம்
தேவகணம்
மனுஷ்யகணம்
இராக்ஷஸகணம்
நாடி
பார்ஸுவ - வலது
மத்ய
ஸமான - இடது
மிருகம்
ஆண் குதிரை
யானை
ஆடு
பக்ஷி
இராஜாளி
காக்கை
மயில்
விருக்ஷம்
எட்டி
நெல்லி
அத்திமரம்
இரஜ்ஜு
பாத இரஜ்ஜு
தொடை
தொப்புள், வயிறு
வேதை நக்ஷத்ரம்
கேட்டை
அனுஷம்
விசாகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்
1, 2, 3, 9
2, 7, 5, 9
1, 2, 3, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள்
கிழக்கு
தெற்கு
கிழக்கு
குறிப்பு:
அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி யாகம்

குரு பெயர்ச்சி யாகம்
இடம்: காமாட்சி அம்மன் கோவில், அம்பத்தூர்
நாள்: 02-ஆகஸ்ட்-2016 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8.45 - 10.30 மணி வரை
தேவையான விபரங்கள்:
பெயர்:
நட்சத்திரம்:
ராசி:
அலைபேசி எண்:
முகவரி:
நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு: பிரசாதம் அனுப்பி வைக்க முகவரி அவசியம் தேவை. கட்டணம் அவரவர் விருப்பப்படி பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகொள்ள 9894674301 - ramjothidar@gmail.com

தினபலன் - 29.07.2016 வெள்ளிக்கிழமை

இன்றைய பலன் - 29 ஜூலை 2016

தினபலன் - 29.07.2016
வெள்ளிக்கிழமை


மேஷம்:
இன்று தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7


ரிஷபம்:
இன்று புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


மிதுனம்:
இன்று தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6


கடகம்:
இன்று தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


சிம்மம்:
இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


கன்னி:
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6


துலாம்:
இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9


விருச்சிகம்:
இன்று வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7


தனுசு:
இன்று பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனத்தெம்பு உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், ப்ரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


மகரம்:
இன்று வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். உங்கள் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மீக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9


கும்பம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9


மீனம்:
இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

பஞ்சாங்கம் - 29.07.2016 - வெள்ளிக்கிழமை

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம்14 ம் நாள்
இங்கிலீசு: 29-Jul-16
வெள்ளிக்கிழமை
தசமி பகல் 11.06மணி வரை பின் ஏகாதசி
க்ருத்திகை காலை 7.31 மணி வரை பின் ரோஹிணி
வ்ருத்தி நாமயோகம்
பத்ரை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 41.15
அகசு: 31.11
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: காலை 7.23 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.05

வெள்ளிக்கிழமை
ராகு காலம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 7.30 - 9.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி புறப்பாடு
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம்
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ணபக்ஷ ஏகாதசி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: சுவாதி

Monday, July 25, 2016

இன்றைய பலன் - 25 ஜூலை 2016

இன்றைய பலன் - 25 ஜூலை 2016

தினபலன்: 25.07.2016
திங்கட்கிழமை:


மேஷம்:
இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9


ரிஷபம்:
இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


மிதுனம்:
இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


கடகம்:
இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7


சிம்மம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9


கன்னி:
இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் குருவின் இருப்பால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


துலாம்:
இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


விருச்சிகம்:
இன்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7


தனுசு:
இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


மகரம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


கும்பம்:
இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


மீனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

இன்றைய பஞ்சாங்கம் - 25.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம் 
தக்ஷிணாயனம் 
கிரீஷ்மருது 
ஆடிமாதம்10 ம் நாள் 
இங்கிலீசு: 25-Jul-16 
திங்கட்கிழமை 
ஷஷ்டி இரவு 8.41 மணி வரை பின் சப்தமி 
உத்திரட்டாதி பகல் 1.52மணி வரை பின் ரேவதி 
ஸூகர்மம் நாமயோகம் 
கரஜை கரணம் 
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம் 

தியாஜ்ஜியம்: 47.36 
அகசு: 31.15 
நேத்ரம்: 2 
ஜீவன்: 0 
கடக லக்ன இருப்பு: காலை 7.39 மணி வரை 
சூரிய உதயம்: காலை 6.04 

திங்கட்கிழமை 
ராகு காலம்: காலை 7.30 - 9.00 
குளிகை: மதியம் 1.30 - 3.00 
எமகண்டம்: காலை 10.30 - 12.00 
சூலம்: கிழக்கு 
பரிகாரம்: தயிர் 

குறிப்பு: 
இன்று மேல்நோக்கு நாள் 
கரிநாள் 
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல் 
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம் 
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ணபக்ஷ ஷஷ்டி 
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: மகம், பூரம் 

Sunday, July 24, 2016

ஏக தின லட்சார்ச்சனை பெருவிழா - குரு பெயர்ச்சி யாகம்

ஏக தின லட்சார்ச்சனை பெருவிழா
இடம்: காமாட்சி அம்மன் கோவில், அம்பத்தூர்
நாள்: 24-ஜூலை-2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை
7.00 மணிக்குப் பின் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
தேவையான விபரங்கள்:
பெயர்:
நட்சத்திரம்:
ராசி:
கோத்ரம்:
அலைபேசி எண்:
முகவரி:
நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குரு பெயர்ச்சி யாகம்
இடம்: காமாட்சி அம்மன் கோவில், அம்பத்தூர்
நாள்: 02-ஆகஸ்ட்-2016 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8.45 - 10.30 மணி வரை
தேவையான விபரங்கள்:
பெயர்:
நட்சத்திரம்:
ராசி:
அலைபேசி எண்:
முகவரி:
நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு: பிரசாதம் அனுப்பி வைக்க முகவரி அவசியம் தேவை. கட்டணம் அவரவர் விருப்பப்படி பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகொள்ள 9894674301 - ramjothidar@gmail.com

தினபலன்: 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை:

இன்றைய பலன் - 24 ஜூலை 2016

தினபலன்: 24.07.2016 
ஞாயிற்றுக்கிழமை:


மேஷம்:
இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


ரிஷபம்:
இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


மிதுனம்:
இன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7


கடகம்:
இன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும் நாள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


சிம்மம்:
இன்று கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


கன்னி:
இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


துலாம்:
இன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு. 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


விருச்சிகம்:
இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


தனுசு:
இன்று விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


மகரம்:
இன்று பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5


கும்பம்:
இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே நல்லவிதமான அனுகூலங்கள் உங்களை வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


மீனம்:
இன்று அகலக்கால் வைத்தால் அவதி நிச்சயம். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு உங்களை வந்து சேரும். எதிர்காலத்திற்குத் தேவையான உபயோகமுள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு நிலம் இருந்தால் அது வெற்றி பெறும் முகநிலை உருவாகும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

இன்றைய பஞ்சாங்கம் - 24.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம்9 ம் நாள்
இங்கிலீசு: 24-Jul-16
ஞாயிற்றுக்கிழமை
பஞ்சமி இரவு 10.55 மணி வரை பின் ஷஷ்டி
பூரட்டாதி மாலை 3.14 மணி வரை பின் உத்தரட்டாதி
சோபனம் நாமயோகம்
கௌலவ கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 45.34
அகசு: 31.16
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 7.43 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.04

ஞாயிற்றுக்கிழமை
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
குளிகை: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: மதியம் 12..00 - 1.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.
இன்று கண்ணூறு கழித்தல் நன்று
சூரிய வழிபாடு நன்று
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ணபக்ஷ பஞ்சமி
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: ஆயில்யம், மகம்

Thursday, July 21, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 22.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம்7 ம் நாள்
இங்கிலீசு: 22-Jul-16
வெள்ளிக்கிழமை
திருதீயை இரவு 2.40 மணி வரை பின் சதுர்த்தி
அவிட்டம் மாலை 5.10 மணி வரை பின் சதயம்
ஆயுஷ்மான் நாமயோகம்
வணிஜை கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 45.11
அகசு: 31.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 7.50 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.03

வெள்ளிக்கிழமை
ராகு காலம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 7.30 - 9.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளியப்பால் தங்கப் பல்லக்கில் பவனி
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமாள் கிளி வாகன சேவை
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ணபக்ஷ திருதியை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: புனர்பூசம், பூசம்