Wednesday, February 22, 2012

ஆறாம் வீடு சிறப்பு தொகுப்பு

ஆறில் இருக்கும் கிரகங்கள்

ஆறாம் வீடு (பாவம்) ரண ருண ரோகஸ்தானம் எனப்படும். தாய்மாமன் பற்றியும் இந்த வீடு உணர்த்தும். கீழா விழுதல், தடைகள், சறுக்கல், சண்டைகள், மனநோய், சிறைவாசம் முதலியவை பற்றியும் இந்த இடத்திலிருந்து அறிய முடியும்.

நல்ல அமசங்களைப் பொறுத்தவரை லாபம், பணி செய்தல் இரண்டையுங்கூட இந்த இடத்திலிருந்த நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் நலல்து. ஆனால் லக்னாதிபதியை விட ஆறாம் வீட்டதிபதி பலம் பெற்றிருப்பது நல்லதல்ல.
லக்னம் என்பது ‘தான்’ ஆறாம் வீடு என்பது ‘பகைவன்’.  இதிலிருந்து ஓர் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். தன் பகைவனை காட்டிலும் தான் பலமாக இருந்தால்தானே பகைவனை முறியடிக்கவும், வெற்றி காணவும் முடியும். ஆறாம் வீட்டதிபதி வலுத்து லக்னேசன் வலுவிழந்து இருந்தால் பகவரிடம் தோற்று அவரது அடிமையாகவும் நிலைகூட ஜாதகருக்கு ஏற்படலாம். அதே போல் நோய் சுமையை தாங்கும் சக்தியை கூட ஜாதகர் இழக்கக்கூடும். அதே வேளையில் லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியை காட்டிலும் ஆற்றல் பெற்றிருந்தால் ஜாதகருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து காணப்படும். ஆறாம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுப பார்வை பெற்றிருந்து லக்னாதிபதியும் வலுப்பெற்று இருந்தால் ஜாதகருக்கு நோயற்ற சுக வாழ்வு அமையும். ஆனால் ஆறாம் வீட்டு அதிபதியுடன் பாபக்கிரஹங்கள் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆறாம் வீட்டு அதிபதி மறைந்திருந்தாலோ அஸ்தங்கம் ஆனாலோ ஜாதகருக்கு பகைவரை வெல்லும் பராக்கிரமம் ஏற்படும்.

முதலில் ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகங்களைப் பற்றிய விளக்கங்களைப் பார்போம். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.


6-ல் சூரியன்:
ஜாதகருக்கு பலமுண்டாகும். பகைவரால் அச்சம் உண்டாகும். ஆனால் பகைவரை வெல்லும் ஆற்ற்ல் ஏற்பட்டுவிடும். உயர்வாழ்வு அமையும். செல்வம் சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகமாகும். கௌரவமான பதவி, அரசு அந்தஸ்து கிடைக்கும். மனைவியின் நலம் சிற்சில நேரங்களில் பாதிக்கப்படும். கடுஞ்செலவு ஏற்படக்கூடும்.

6-ல் சந்திரன்:
ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாவார்கள். வயிற்றிவலி காரணமாக உபாதைகள் ஏற்படலாம். பலவீனமான சந்திரன் என்றால் மற்றவகளின் சொற்களுக்கு அடிபணிய வேண்டி வரும். இந்த நிலையில் உள்ள ஜாதக்ருக்கு பொருத்தமான ஊழியர்கள் அமைவார்கள். இளமையில் ஜாதகருக்கும் சந்தோஷம் உண்டாகும். பலமான சந்திரன் என்றால் ஜாதகருக்குப் பெருமை, புகழ், பெருந்தன்மை, சுகவாழ்வு எல்லாம் அமைய வாய்ப்புண்டு.

6-ல் செவ்வாய்:
ஜாதகருக்கு சரீர பலம் ஏற்படும். பகைவரை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.  சிற்றின்ப இச்சை அதிகமாக இருக்கும். ஜீரணசக்தி சரியாக இருக்கும். புகழ் பொருள் சேரும். கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணம் நிரைய செலவாகும். உச்சம் அல்லது ஆட்சி செவ்வாய் என்றால் ஜாதகரை செவ்வாய் உயர்த்துவார். உத்தியோகம் முறையாக பார்த்து ஜீவனம் செய்வார்கள்.

6-ல் புதன்:
ஜாதகருக்கு பொதுவில் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் வாதப்பிரதிவாதங்கள் சச்சரவுகளுக்கு இடமுண்டு. பேச்சு கூர்மையானதாக இருக்கும். சோம்போறித்தனம் உண்டு. சரீர நோய் உண்டு. க்ஷயம் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பலமுள்ள புதனாக இருந்தால் 6ல் இருப்பது நன்மையே. இந்த நன்மை முழுமையாக கிடைப்பதற்கு சுபகிரஹங்களின் பார்வை அவசியம். பலன் பெற்ற புதனால் ஒருவர் தொழிலதிபர் ஆவதற்கு கூட வழியுண்டு.


தொடரும்.....

No comments: