Monday, December 14, 2020

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

 

 


முக்கிய அறிவிப்பு:



 முக்கிய அறிவிப்பு:
சார்வரி வருஷம் கார்த்திகை மாதம் 29ம் தேதி (14.12.2020) திங்கட்கிழமை - அமாவாஸ்யை திதி - கேட்டை நக்ஷத்ரத்தில் சூர்ய க்ரஹணம் சம்பவிக்கிறது. இது தமிழ்நாட்டிலும் - இந்தியாவின் எந்த பகுதியிலும் தெரியாது. எனவே சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com


Friday, November 20, 2020

கேள்விகளுக்கு நேரலையில் பதில்

 திருமணத்தடை - தொழில் மாற்றம் ஏற்றம் - குழந்தை ப்ராப்தி - வீடு மனை - வழக்கு - வெளிநாட்டு வாய்ப்பு...

போன்ற கேள்விகளுக்கு நேரலையில் பதில்...

நாள்: 21.11.2020 - சனிக்கிழமை காலை 10.30 - 12.30

Link: ஆதன் ஆன்மிகம் - youtube channel



Monday, November 9, 2020

குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இப்பவும் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் இந்த வருடமும் நிகழ இறைவன் அருள் புரிந்திருக்கிறார்.

வரும் ஞாயிறன்று காலை 9 மணி முதல் குருப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியான ஜாதகம் சாதகமே நிகழ்ச்சி Online மூலமாக நடைபெற இருக்கிறது. 




 

 

நன்றி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com


Tuesday, November 3, 2020

Thursday, October 29, 2020

Monday, October 5, 2020

வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......

 கடந்த 1ம் திகதி ராகு கேது பெயர்ச்சி - 3ம் திகதி அன்று உடல்நலத்தில் சிறு பிரச்சனை ஆரம்பித்தது. அதன் பின் ஓய்வு தேவை என மருத்துவர்களின் அறிவுறுத்தலில் பெயரில் இன்னமும் கூட ஓய்வில்தான் உள்ளோம். இன்னும் சிற்சில தினங்களில் மீண்டும் நமது வழமையான பணிகளை ஆரம்பிப்போம்.




அநேகம் பேர் எமக்காக காத்திருக்கிறார்கள் - இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என தெரியவில்லை
வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

Sunday, August 23, 2020

ஜாதகம் சாதகமே - ஜோதிட கேள்வி பதில் நிகழ்ச்சி - பகுதி 05

 ஜாதகம் சாதகமே 


ஜோதிட கேள்வி பதில் நிகழ்ச்சி


பகுதி 05


நாள்: 30 08 2020; நேரம்: காலை 10.00 மணி (இந்திய நேரம்)


Link: https://www.facebook.com/ramakrishnan.josiyar


Friday, August 14, 2020

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை:

 ஆடி வெள்ளி சிறப்பு பூஜை:


மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பூஜை. ஆடி வெள்ளி பூஜை. அதுவும் ஒரு நகைக்கடையில். எந்த ஒரு பூஜை முடிந்த பின்னும் ப்ரஸ்ணம் பார்ப்பது நமது வழக்கம். அதே போல் இன்றும் பூஜை முடிந்தவுடன் ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம்: கன்னி.


உபய லக்னம் - பெண் லக்னம். தொழில் ஸ்தானம் வலிமை. தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள். சந்திரன் + சுக்கிரன் + ராகு என கூட்டணி. மிகப் பெரிய தொழில் முன்னேற்றம் ஏற்படும்.



பூஜை முடிந்தவுடன் நிமித்தம்:

பூஜை 7.20க்கு முடிந்தவுடன் தம்பதி சமேதராக ஒரு அம்மா வந்திருந்தார். அதுவும் இவ்வளவு காலையிலேயே. வந்து வெள்ளி வாங்கினார், அம்மாவின் பெயர் கலைச்செல்வி. சரியான நிமித்தம். 600 ரூபாய்க்கு பில் தொகை வந்திருந்தது. மிக்க மகிழ்ச்சி.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 7845 11 9542

Email: ramjothidar@gmail.com

இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 14 08 2020 - வெள்ளிக்கிழமை

 இந்த நாள் நன்மைகள் நடைபெறும் நாள்: 14 08 2020 - வெள்ளிக்கிழமை



Saturday, July 11, 2020

12 07 2020 - கிரக பாதசாரம்:

ஆனி 28
ஞாயிற்றுக்கிழமை
12 07 2020

க்ரமம்: வாக்கியம்

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 2ம் பாதம் - பகை
சந்திரன் -  மீனம் - நட்பு
செவ்வாய் - உத்திரட்டாதி 4ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு

Friday, July 10, 2020

11 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 27
சனிக்கிழமை
11 07 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 2ம் பாதம் - பகை
சந்திரன் -  மீனம் - நட்பு
செவ்வாய் - உத்திரட்டாதி 4ம் பாதம் - பகை
புதன் - திருவாதிரை 1ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு

Thursday, July 9, 2020

இந்த நாள் இனிய நாள்: 10 07 2020 - வெள்ளிக்கிழமை

இந்த நாள் இனிய நாள்: 10 07 2020 - வெள்ளிக்கிழமை



10 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 26
வெள்ளிக்கிழமை
10 07 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 2ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




குறிப்பு: 
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு

பேச்சியம்மன்: இது பலரின் குல தெய்வம்.

பேச்சியம்மன்:
இது பலரின் குல தெய்வம்.

ஒரு ப்ரஸ்ணத்தில் மிக முக்கியமானது குலதெய்வ கிருபை இருக்கிறதா? என்பதை பார்ப்பதுதான்.

சில ஜோதிடர்கள் ஜாதகத்தை பார்த்தே உங்கள் குலதெய்வம் இதுதான் என சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்ல முடியும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது. 

சரி விஷயத்திற்கு வருவோம்.



குலதெய்வ விஷயங்களில் மிக முக்கியமாக கருத்துரைப்பது உத்தமம். தெரியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வது உத்தமோத்தமம். ஒருவருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றால்  குலதெய்வ விஷயங்களில் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஜோதிடர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முக்கியமாக நீங்கள் உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்களாக இருந்தால் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஜோதிடரை முதலில் அணுகி உங்கள் குடும்பத்தின் முன்னோர்களை சொல்லி என்ன குலதெய்வம் என்பதை கண்டுபிடியுங்கள். 

அதன் பின் டீவி பிரபலம் - பத்திரிகை பிரபலம் - அகில உலக பிரபலம் ஆகியோரை அணுகுங்கள். முக்கியமாக அடுத்த மாநிலங்களில் இருக்கும் ஜோதிடரை அணுகாதீர்கள். 

ஏனென்றால் பேச்சியம்மன் என எடுத்துக் கொண்டாலே 16 வகையான பேச்சியம்மன் தமிழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி பேச்சியம்மன் சொல்லியிருக்கிறார்கள். தனித்தனி வழிபாடு வேறு உண்டு. மந்திரங்கள் தனித்தனி உண்டு. படையல் வேறு வேறு. எனவே புரிந்து கொள்ளுங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

எமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அறிவுரை.

மிக முக்கியமான பதிவு:
எமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அறிவுரை.

ஜோதிடராகிய நாம் ஜோதிடம் சொல்வதுடன் நின்று கொள்வது நன்மை தரும், எமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும். 



உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லி நானே யாருக்கும் பரிகாரம் செய்து கொடுக்கக்கூடாது. கோவில் ஆகமங்கள் தெரிந்தால் அதில் மூக்கை நுழைக்க வேண்டும், அல்லது வாய் திறக்காமல் இருக்க வேண்டும். சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி நன்கு தெரிந்தால் அடுத்தவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மந்திரங்கள் பற்றி ஆய்வு செய்து வைத்திருந்தால் அதைப் பற்றி பேச வேண்டும். வைத்தியம் கற்றிருந்தால் மற்றவர்களுக்கு இதை இதை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். யோகாசனம் பற்றி நன்கு தெரிந்தபின் அதை மற்றவருக்கு பயன்படுத்த சொல்ல வேண்டும். எந்த ஜோதிடனும் எல்லாம் தெரிந்த மேதாவி கிடையாது என்பதை நாம்(நான்) உணர வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothdiar@gmail.com

Wednesday, July 8, 2020

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 09 07 2020 - வியாழக்கிழமை

இன்றைய நாள் நலம் தரும் நாள் - 09 07 2020 - வியாழக்கிழமை



09 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 25
வியாழக்கிழமை
09 07 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் – நட்பு





குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு

பயம் வேண்டாம் - தைரியம் அவசியம்.

பயம் வேண்டாம் - தைரியம் அவசியம்.


கொரோனா ஒரு பக்கம் வாட்டி வதைக்க - இந்த வருடம் 2015 போன்று மழை வந்து சென்னை அழியும் என புதுசாக கிளம்பியிருக்கிறார்கள். சொன்னவர்கள் யாரென்று பார்த்தால் புது வருடம் பிறந்த போது மழை குறைவாக இருக்கும் என்று சொன்னவர்கள். அனைத்து வகையான உயிர்களும் பாதிக்கப்படும் என்று வேறு சொன்னார்கள். இப்போது மழை பெய்து சென்னை அழியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னொருவர் என்னவென்றால் 2021ல் இதை விட பெரிய வியாதி வந்து அனைத்து மக்களும் மடிவார்கள் என்கிறார். அனைத்து மக்களும் மடிந்து இவர் மட்டும் வாழ்வார் போல.



முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சார்வரி வருஷமும் சரி அடுத்து வரக்கூடிய பிலவ வருஷமும் சரி - வருஷம் பிறக்கும் நேரம் சனியினுடைய ஆதிக்கம் இருப்பதால் மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம், அவ்வளவே. ஆனாலும் கடவுளுடைய கிருபையால் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் மீண்டெழும். இது வரலாறு.

வரலாறு மீண்டும் திரும்பும். அனைவரும் அவரவர் கடமையை சரி வரச் செய்வோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Tuesday, July 7, 2020

இந்த நாள் மாற்றம் வந்து சேரும் நாள் - 08 07 2020 - புதன்கிழமை

இந்த நாள் மாற்றம் வந்து சேரும் நாள் - 08 07 2020 - புதன்கிழமை



08 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 24
புதன்கிழமை
08 07 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 4ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் – நட்பு


இன்றைய நாள் நலம் பெறும் நாள்: 07 07 2020 - செவ்வாய்கிழமை

இன்றைய நாள் நலம் பெறும் நாள்: 07 07 2020 - செவ்வாய்கிழமை


Monday, July 6, 2020

முடிந்தவரை நன்மையே செய்வோம். நல்லதே நடக்கும்.

ஒரு முறை அல்ல நூறு முறை அல்ல ஆயிரம் முறை பதிவிட்டாச்சு. ஆனாலும் சிலருக்கு இன்னும் ஐயம் தீரவில்லை.

காலை ஒரு அம்மா அழைத்திருந்தார். அவர் கூறியதாவது “ஐயா எமது பெண் பூசம் நக்ஷத்ரம். வயது 27. வாக்கிய ரீதியாக இனி கண்டகச்சனி டிசம்பரில் ஆரம்பிக்க இருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு அது நடக்கும். அதற்கடுத்து அஷ்டமத்து சனி. அது மூன்று வருடத்திற்கு நடக்கும். எனவே இன்னும் 6 வருடத்திற்குப் பிறகு திருமணம் பார்க்க ஒரு ஜோதிடர் வலியுறுத்தியிருக்கிறார்” என்றார்கள்.



மறுபடியும் மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம். சனி பகவான் ஜீவாதார பிரச்சனைகளில் கை வைக்க மாட்டார். அதாவது கல்வி - திருமணம் - வேலை வாய்ப்பு - குழந்தை - வீடு மனை போன்ற விஷயங்களில் கை வைக்க மாட்டார். வாக்கு - நோய் இரு விஷயங்களில் சில பிரச்சனைகள் வரலாம். அதுவும் அவரால் அல்ல, நமது பிராப்தத்தால். மேலும் சுத்தி சுத்தி பார்த்தால் - சனி - ராகு - கேது - குரு ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது. இதில் குரு பார்வை வந்தாச்சா என தனிக் கேள்வி வேறு உண்டு. 

பொருத்தம் என எடுத்து கொண்டால் இருவரது ஜாதகத்தையும் சேர்த்து ஆராய வேண்டும். தனித்தனியாக ஆராய வேண்டும். 

விதி மதி கதி என ஆராயணும். 2ம் அதிபதி - 5ம் அதிபதி - 9ம் அதிபதி - 7ம் அதிபதி - 11ம் இடம் என அவ்ளோ இருக்கு. Simpleஆ பொருத்தம் இப்போ எல்லாரும் Softwareல் பார்த்து விடுகிறார்கள். இதற்கு தனி பதிவு போடுகிறோம்.

முடிந்தவரை நன்மையே செய்வோம். நல்லதே நடக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

இதில் எதை பார்த்தாலும் பரிகாரம் செய்வது போல்தான் வரும்

உலகத்தில் எந்த ஒரு குழந்தை பிறந்தாலும் கீழ் காணும் விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்.

வருடம்
அயனம்
ரிது
மாதம்
பக்ஷம்
திதி
கிழமை
நக்ஷத்ரம்
யோகம் 
கரணம்
லக்னம்
லக்ன பாதசாரம்
ராசி



கரிநாளா?
ராகு காலமா?
எமகண்டமா?

நக்ஷத்ரயோகம் என்ன?

பஞ்சபக்ஷியில் எது?
பிறக்கும் போது அதன் நிலை என்ன?

தசை புத்தி
பாவம் (Bhavam)

12 அதிபதிகளின் நிலை
12 அதிபதிபதிகளின் சாரம்
கிரக இருப்புகள்
கிரக சேர்க்கைகள்
கிரக பார்வைகள்

இதில் எதை பார்த்தாலும் பரிகாரம் செய்வது போல்தான் வரும். 

வாழ்நாள் முழுவதும் பரிகாரமே செய்து கொண்டிருந்தால் எப்போது வாழ்வது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Sunday, July 5, 2020

இன்றைய நாள் தொழிலில் ஏற்றம் காணும் நாள் - 06 07 2020 - திங்கட்கிழமை

இன்றைய நாள் தொழிலில் ஏற்றம் காணும் நாள் - 06 07 2020 - திங்கட்கிழமை



06 07 2020 கிரக பாதசாரம்:

ஆனி 22
திங்கட்கிழமை
06 07 2020

கிரக பாதசாரம்:
சூரியன் - புனர்பூசம் 1ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - பகை
புதன் - மிருகசீரிஷம் 3ம் பாதம் - ஆட்சி
குரு - உத்திராடம் 2ம் பாதம் - நீச்சம்
சுக்ரன் - ரோஹிணி 3ம் பாதம் - ஆட்சி
சனி - உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு - மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
கேது - மூலம் 2ம் பாதம் - நட்பு




குறிப்பு:
இஃது ஜோதிடர்களுக்கான பதிவு.

இன்றைய நாள் இனிமையான நாள்: 05 07 2020 - ஞாயிற்றுக்கிழமை

இன்றைய நாள் இனிமையான நாள்: 05 07 2020 - ஞாயிற்றுக்கிழமை


Saturday, July 4, 2020

முக்கியமான வேண்டுகோள்:

முக்கியமான வேண்டுகோள்:

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும்.

எக்காரணம் கொண்டு அதை விட்டுக் கொடுக்காதீர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பத்தின் சடங்கு சம்பிரதாயங்களில் தலையிட விடாதீர்கள். 

நமது பெற்றோரை விட - தாத்தா பாட்டியை விட நமது சம்பிரதாயத்தை தெரிந்தவர்கள் யாரும் இல்லை. 




குலதெய்வம் - கிராம தெய்வம் - முன்னோர்கள் வழிபாட்டினை உங்கள் முன்னோர்கள் எப்படி கடைபிடித்தார்களோ அதை தவற விடாமல் கடைபிடிக்கவும். தயவுசெய்து பெற்றோர்கள் - தாத்தா பாட்டியை விட்டுக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்வார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Friday, July 3, 2020

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

சார்வரி வருஷம் - உத்தராயணம் - க்ரீஷ்ம ரிது - ஆனி மாதம் 21ம் தேதி (05.07.2020) - ஞாயிற்றுக்கிழமை - பௌர்ணமி திதி - பூராட நக்ஷத்ரம் - அன்று சந்திர கிரகணம் சம்பவிக்கிறது.

இது தமிழ்நாட்டிலோ - இந்தியாவின் எந்த பகுதியிலும் தெரியாது.

எனவே இந்தியாவில் இருப்பவர்கள் சாந்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Perungulam Ramakrishnan Josiyar
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com


இந்த நாள் கடமைகளை நிறைவேற்றும் நாள்: 03 07 2020 - வெள்ளிக்கிழமை

இந்த நாள் கடமைகளை நிறைவேற்றும் நாள்: 03 07 2020 - வெள்ளிக்கிழமை