Friday, June 25, 2010

உழைப்பின் சிகரம்

நன்றி: தினமலர்.

எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? (பாகம் - 01)

கேள்வி: எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி. (பாகம் - 01)

பதில்: முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும் கடைச்சரக்கல்ல. அது புனிதமானது.

சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி.திரு.ஜான் அவர்களுக்கு மட்டுமல்ல, ஏகப்பட்ட பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. ”ஐயா எனது பெயர் எண் கணித படி சரியாக உள்ளதா? இல்லை மாற்றம் செய்ய வேண்டுமா? எந்த எண்ணில் எனது பெயர் இருக்க வேண்டும்?” போன்ற கேள்விகள் பல அனுதினமும் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் பேரை மாற்றினாலோ, நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு உங்கள் பெயரை மாற்றி அமைப்பதனாலோ எதுவும் மாறிவிடப்போவதில்லை. ஜோதிடத்தில் எதையுமே மாற்ற இயலாது. மேலும் நம் அனைவருக்குமே நமது பெற்றோர்களும் நமது முன்னோர்களும்தான் முதல் கடவுள். அப்படியிருக்க அவர்கள் வைத்த பெயரை யாரோ ஒருவர் சொன்னதற்காக நீங்கள் பெயரை மாற்றலாமா? இதில் தினமும் 200 தடவை, 500 தடவை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் சொன்னார் “சார், நான் எனது பெயரை R.S.SHANKAR என்பதை R.S.R.SHANKAR என்று மாற்றி விட்டேன். அதற்கு 3000 ரூபாய் பீஸ் வாங்கி விட்டார் அந்த ஜோஸ்யர். ஆனால் எனக்கு எதுவுமே மாறவில்லை’ என்றார். நான் அவரை மிகவும் கடிந்து கொண்டேன். எங்காவது நாம் போய் ஏமாந்து விட்டு வந்து ஐயய்யோ இந்த ஜோதிடம் பொய் என்று சொல்கிறோம்.

தொடரும்....

ஆனி, ஆடி மாதங்களில் வீடு குடி போகலாமா?

கேள்வி: ஆனி, ஆடி மாதங்களில் வீடு குடி போகலாமா?

-திரு.அகிலன், மும்பை

-திரு.வசந்த், காரைக்குடி

-திருமதி.லலிதாம்பிகை, மதுரை.

பதில்: வாடகை வீடாக இருந்தால் தாராளமாக செல்லலாம். சொந்த வீடாக இருந்தாலும் செல்லலாம். சிலர் செல்ல மாட்டர். அதாவது பெரியோர்கள், ஆனி-ஆடி-புரட்டாசி-மார்கழி-மாசி-பங்குனி தவிர மற்ற மாதங்களில் குடி போகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு ஏதாவது அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் ஜோதிடத்தில் விளக்கம் கிடைக்கவில்லை. நமது தமிழ்நாட்டின் முதன்மையான ஜோதிட புத்தகமான பெரிய வருஷாதி நூலில் கூட விளக்கம் கொடுக்கப்படவில்லை. எனவே ஜோதிடத்தில் இதற்கு விளக்கம் இல்லை என்றே பொருள் கொள்ளலாம். அப்படி பார்த்தால் ஆனி, மாசி, பங்குனி மாதங்களில் விவாஹம் செய்கின்றனர். அதுவும் செய்யக்கூடாதே? ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்கின்றனர். அது செய்யலாமா? இதற்கு பரிகரமெல்லாம் செய்ய வேண்டியதுமில்லை.

இதற்கு மேலும் பயப்படுகிறவர்கள் வாடகைக்கு கிடைத்த வீட்டிற்கு செல்லுங்கள். ஆவணி மாதம் பால் காய்ச்சி கொள்ளுங்கள். நானே அவர்களுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுகிறேன்.

[குறிப்பு: நானே சென்னையில் புதிய வாடகை வீட்டிற்கு பங்குனியில்தான் குடியேறினேன். 3 வருடங்கள் வரை அந்த வீட்டினில் இருந்தேன்.]

இன்றைய பஞ்சாங்கம் - Today's Almanac - 25-06-2010

In Tamil - பஞ்சாங்கம் - 25-06-2010

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

ஆனி மாஸம் 11ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 25 2010

அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :

சதுர்த்தசி மாலை மணி 05.15 வரை பின் பௌர்ணமி

நக்ஷத்திரம் :

கேட்டை நக்ஷத்ரம் இரவு மணி 09.38 வரை பின் மூலம்

யோகம் :

சுபம் யோகம் நாழி 25.21

கரணம் :

வணிஜை கரணம் நாழி 28.08

சூரிய உதயம் :

காலை மணி 6.04

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.35

அஹசு :

நாழிகை 31.18

லக்ன இருப்பு :

மிதுனம் - நாழி 03.38 (காலை மணி 07.27 வரை)

இராகு காலம் :

காலை 10.34 முதல் 12.04 வரை

எமகண்டம் :

மதியம் 03.04 முதல் 04.34 வரை


வியா o சூரி புத கே
o

இன்றைய கிரஹநிலை

சுக்
o செ
ரா o o சனி


-------------------------------------------------

In English - Almanac

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Aani Month - Date - 11 - English Date: 25th June 2010

Ayanam : Utharayanam
Rithu : Kreeshma Rithu
Day : Friday
Thithi :

Chadurdasi till evening 05.15 after Pournami (Full Moon)

Nakshatram :

Kettai(Jyeshta) Till 09.38 P.M. after Moolam

Yogam :

Subham Yogam Till Nazhigai 25.21

Karanam :

Vanijai Karnam Till Nazhigai 28.08

Sun Rise :

Morning 06.04

Sun Set :

Evening 06.35

Ahasu :

Nazhigai 31.18

Remainder Lagnam: :

Mithunam - Nazhigai 03.38 (Till 07.27 Am)

Rahu Kaalam :

10.34 Am to 12.04 Noon

Emagandam :

03.04 Pm to 04.34 Pm

Ju o Sun Mer Kethu
o

Planetery Position

Ven
o Mars
Raghu o o Sat


-------------------------------------

இன்றைய நாளின் சிறப்பு:-

[1] பௌர்ணமி பூஜை

[2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கார்த்திகை, உரோஹினி

[3] திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருத்தேர், இராஜபாளையம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மயூரநாதஸ்வாமி திருத்தேர் உத்ஸவம்.

[4] ஸ்ரீ ஸத்யநாராயண விரதம், பூஜை

----------------------------------------

Thursday, June 24, 2010

கொஞ்சம் பழைய பதிவு - ஸ்ரீ காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால் ஏதேனும் ஆபத்து உண்டா?

ஸ்ரீ காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால் ஏதேனும் ஆபத்து உண்டா?


எந்த ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் கோவில் ராஜகோபுரமோ, கோவில் விமானமோ, மதில் சுவரோ இடிந்து விழுந்தால் நாட்டிற்கு ஆபத்து, நாட்டின் அரசுக்கு ஆபத்து, நாட்டை ஆள்பவருக்கு ஆபத்து, நாட்டிலுள்ள மக்களுக்கு ஆபத்து என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் சம்பவம் வெறும் சம்பவம்தான். யாரும் பயப்பட வேண்டாம். மேலும் சில ராசிக்காரர்களுக்கு ( மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் ) இதனால் ஆபத்து என்றெல்லாம் புரளியை சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. யாரும் இதை நம்ப வேண்டாம். அந்த ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு பல காரணாதிகள் உண்டு. உதாரணமாக அந்த ராஜகோபுரம் களி மண்ணைக் கொண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இல்லை இல்லை எங்களுக்கு பயமாக இருக்கிறது என்பவர்கள் அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள். வீட்டில் நெய் தீபம் ஏற்றுங்கள். அவ்வளவு போதும். மேலதிக விபரங்களுக்கு எனக்கு மெயில் செய்யலாம்.

ஜோதிட குறிப்புகள் - லக்னம் Vs இராசி:(பாகம் - 02)

லக்னம் Vs இராசி:(பாகம் - 02)

தாம்பரம் திரு.M.E.Rajah அவர்கள் தனிமடலில் “ஐயா, லக்னம் என்றால் என்ன? நானும் பல வலைத்தளங்களில் தேடிப் பார்த்து விட்டேன், கிடைக்கவில்லை, கிடைத்ததும் புரியவில்லை, கொஞ்சம் விளக்க முடியுமா” என்று கேட்டிருந்தார். அவர் மட்டுமல்ல நிரம்ப பேர் என்னிடம் கேட்டிருந்தனர்.

லக்னம் என்றால் தாங்கள் பிறக்கும் போது கிழக்கு திசையில் எந்த ராசி நிற்கிறதோ அதுவே லக்னமாகும். விளக்கமாக பார்ப்போம்.

எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்ட டேபிளை பாருங்கள். இதன் மூலம் நாம் நமது பிறந்த தமிழ் மாதத்தை அறிய முடியும்.

மீனம்

பங்குனி

மேஷம்

சித்திரை

ரிஷபம்

வைகாசி

மிதுனம்

ஆனி

கும்பம்

மாசி

தமிழ்மாதமும் - ராசிகளும்

கடகம்

ஆடி

மகரம்

தை

ஸிம்ஹம்

ஆவணி

தனுசு

மார்கழி

விருச்சிகம்

கார்த்திகை

துலாம்

ஐப்பசி

கன்னி

புரட்டாசி

இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ”சூரி” என்று எந்த கட்டத்தில் போட்டிருக்கிறது என்று பாருங்கள்.

உதாரணமாக, கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். மேஷத்தில் சூரியன் போட்டிருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சித்திரை மாதம் பிறந்திருக்கிறார் என்று நாம் மேற்கண்ட டேபிளின் மூலம் நிர்ணயித்து விடலாம்.

o சூரி o o
o இராசி நிலை o
o o
o o o o

( தொடரும்....)

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் - 24-06-2010

முக்கிய அறிவிப்பு: ஒரு அன்பர் கேட்டிருந்தார். ஐயா தங்களது ஜோதிடக் குறிப்பை நான் எனது புத்தக பதிப்பில் போட்டுக் கொள்ளலாமா? என்று. அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்ல நினைப்பது, நீங்கள் தாராளமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். மக்கள் இதன்மூலம் விழிப்படைய வேண்டும் என்பதே எமது அவா.

[ என்ன ஐயா திடீர் திடீரென காணாமல் போய் விடுகிறீர்களே என ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். சொந்த விஷயமாக சொந்த ஊர் வரை செல்ல வேண்டி இருந்தது. புதிய பணியில் வேறு சேர்ந்தாகி விட்டது. அதனால் ஏற்படும் பணிச்சுமை வேறு. ஆதலால் எம்மால் எழுத இயலவில்லை. இனி இதுபோல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன் ]

In Tamil - பஞ்சாங்கம் - 24-06-2010

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

ஆனி மாஸம் 10ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 24 2010

அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :

திரயோதசி மாலை மணி 05.20 வரை பின் சதுர்த்தசி

நக்ஷத்திரம் :

அனுஷம் நக்ஷத்ரம் இரவு மணி 08.54 வரை பின் கேட்டை

யோகம் :

ஸாத்யம் யோகம் நாழி 27.57

கரணம் :

தைதுலம் கரணம் நாழி 28.19

சூரிய உதயம் :

காலை மணி 6.04

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.35

அஹசு :

நாழிகை 31.18

லக்ன இருப்பு :

மிதுனம் - நாழி 03.48 (காலை மணி 07.31 வரை)

இராகு காலம் :

மதியம் 01.34 முதல் 03.04 வரை

எமகண்டம் :

காலை 06.04 முதல் 07.34 வரை


வியா o சூரி புத கே
o

இன்றைய கிரஹநிலை

சுக்
o செ
ரா o o சனி


-------------------------------------------------

In English - Almanac

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Aani Month - Date - 10 - English Date: 24th June 2010

Ayanam : Utharayanam
Rithu : Kreeshma Rithu
Day : Thursday
Thithi :

Thrayodasi till evening 05.20 after Sukla sathurthdasi

Nakshatram :

Anusham Till Evening 08.54 after Kettai (Jyeshta)

Yogam :

Saathyam Yogam Till Nazhigai 27.57

Karanam :

Thaithulam Karnam Till Nazhigai 28.19

Sun Rise :

Morning 06.04

Sun Set :

Evening 06.35

Ahasu :

Nazhigai 31.18

Remainder Lagnam: :

Mithunam - Nazhigai 03.48 (Till 07.31 Am)

Rahu Kaalam :

01.34 Pm to 03.03 Pm

Emagandam :

06.04 Am to 07.34 Am

Ju o Sun Mer Kethu
o

Planetery Position

Ven
o Mars
Raghu o o Sat


-------------------------------------

இன்றைய நாளின் சிறப்பு:-

[1] பிரதோஷம்

[2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: பரணி, கார்த்திக

[3] ஸ்ரீ மந்நாதமுனியாழ்வாரின் திருநக்ஷத்ரம்

----------------------------------------

Sunday, June 6, 2010

ஜோதிட குறிப்புகள் - லக்னம் Vs இராசி:(பாகம் - 01)

லக்னம் Vs இராசி:(பாகம் - 01)

இன்றைய உலகில் வர்த்தகம் செய்வது எல்லா மட்டத்திலும், இடத்திலும் வந்து விட்டது. எதிலெல்லாம் வியாபாரம் செய்ய முடியுமோ அதிலெல்லாம் செய்கிறார்கள். எதையெல்லாம் கடவுள் மனிதனுக்கு தொண்டு செய்ய நினைத்தாரோ அதிலெல்லாம் வியாபாரம் புகுந்து விட்டது எனலாம். உதாரணமாக சித்த வைத்தியம், ஜோதிடம். அதிலும் ஜோதிடத்தில் மனதில் எதுவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாயிற்று. அது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் சொல்பவர்கள் ஆராய்வதில்லை. ஏதோ சொல்கிறோமா, காசை வாங்கினோமா என்று இருக்கிறார்கள். ஜோதிடத்தில் நவீன யுகத்தில் புதிதாக உள்ளது இந்த இராசிபலன் எழுதுவது. என்னிடம் கிட்டத்தட்ட 100 நபர்களுக்கு மேல் கேட்டாகிவிட்டது ”ஐயா, தாங்கள் பஞ்சாங்க குறிப்பு மட்டும் அனுப்பாமல் இந்த இராசிபலன்களும் எழுதலாமே!’ என்று. முதலில் ஒன்று தெளிவாக சொல்லி விடுகிறேன். இராசிபலன்கள் உங்களுக்கு 10% - 25% பலன்கள் தந்தால் பெரிது.

(தொடரும்....)

இன்றைய பஞ்சாங்கம் 06-06-2010

In Tamil - பஞ்சாங்கம் - 06-06-2010

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

வைகாசி மாஸம் 23ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 06 2010

அயணம் : உத்தராயணம்
ரிது : வஸந்த ரிது
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
திதி :

கிருஷ்ணபக்ஷ (தேய்பிறை) நவமி மாலை மணி 05.28 வரை பின் தசமி

நக்ஷத்திரம் :

நக்ஷத்ரம்: உத்திரட்டாதி நக்ஷத்ரம் (முழுவதும்)

யோகம் :

யோகம்: ப்ரீதி யோகம் நாழி 08.09

கரணம் :

கரணம்: கரஜி கரணம் நாழி 28.40

சூரிய உதயம் :

காலை மணி 6.03

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.31

அஹசு :

நாழிகை 31.11

லக்ன இருப்பு :

நாழி 01.23 (காலை மணி 06.33 வரை)

இராகு காலம் :

மாலை 04.33 முதல் 06.03 வரை

எமகண்டம் :

மதியம் 12.03 முதல் 01.33 வரை



வியா o புத சூரி சுக் கே
o

இன்றைய கிரஹநிலை

o
o செ
ரா o o சனி


In English - Almanac

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Vaikaasi Month - Date - 23 - English Date: 06rd June 2010

Ayanam : Utharayanam
Rithu : Vasantha Rithu
Day : Sunday
Thithi :

Krishna - Navami upto afternoon Time 05.28 after Dasami

Nakshatram :

Uthirattathi Nakshatram (Full)

Yogam :

Preeidhi Yogam Till Nazhigai 08.09

Karanam :

Vanijai Karnam Till Nazhigai 28.40

Sun Rise :

Morning 06.03

Sun Set :

Sun Set - Evening 06.27

Ahasu :

Ahasu - 31.11

Remainder Lagnam: :

Nazhigai 01.23 (Till 06.33 Am)

Rahu Kaalam :

Rahu Kaalam: 04.33 Am to 06.03 Noon

Emagandam :

Emagandam : 12.03 Pm to 01.33 Pm

Ju o Mer Sun Ven Kethu
o

Planetery Position

o
o Mars
Raghu o o Sat


-------------------------------------