Tuesday, November 30, 2010

மிதுன ராசி குருப் பெயர்ச்சி பலன்கள்

மிதுன இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்


உங்களைப் பற்றி:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே!நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களது ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நல்ல பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் தந்த குருபகவான் இனி கர்பஸ்தானத்தில் இருந்து sஎன்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஒரு வருட காலத்தில் எதையும் படபடவென்று செய்தீர்களே, இனி அது போன்ற அவசரம் கூடவே கூடாது. மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள். நல்லது. தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். மொத்தத்தில் உங்களை நீங்கள் புரிந்து கொள்ள இந்த குருப் பெயர்ச்சி உதவும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மிருகசீரிஷம் 3, 4: புதிய பாதைகளில் பயணப்பட போகிறீகள் என்பதை உணருங்கள். சின்ன சின்ன தடைகள் வந்தாலும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்களாக மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள். புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.

திருவாதிரை: எப்பேர்ப்பட்ட நண்பர்களுடனும் கருத்துமோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. எந்த டாக்குமெண்ட் என்றாலும் கையெழுத்து போடும் முன் யோசனை செய்யவும். சோம்பலைத் தவிர்க்கப் பாருங்கள். தொழில், வியாபாரம், உத்தியோதத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் மனதைரியமும், வலிமையும் தங்களுக்கு உண்டு என்பதனை உணருங்கள். சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால் நன்மை நாடி வரும்.

புனர்பூசம் 1, 2, 3 : பணி செய்யும் இடத்தினிம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். விமர்சனங்கள் கூடவே கூடாது. வேலைப்பளு கூடினாலும் தங்களுக்கு இது நல்ல அனுபவமாக அமையும். எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என ஆதங்கப்படவேண்டாம், அது நல்லதற்கே என நினையுங்கள். எதிலும் எங்கும் முன்கோபம் கூடவே கூடாது. இராம நாம ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மிதுனம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது, ஷண்முக கவசம் சொல்வது
ரிஷபம் மிதுனம் 65/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம் மிதுனம் 50/100 கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
கடகம் மிதுனம் 60/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது.
ஸிம்ஹம் மிதுனம் 50/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி மிதுனம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மிதுனம் 60/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது
விருச்சிகம் மிதுனம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் மிதுனம் 60/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது
மகரம் மிதுனம் 60/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் மிதுனம் 55/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது.
மீனம் மிதுனம் 50/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது.
லக்னமே தெரியாது மிதுனம் 50/100 குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மிதுன இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மிதுன இராசியில் பிறந்து தனுர் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மிதுன இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது. மேலும் மகான்களை வழிபடவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மிருகசீரிஷம் - 3,4 ம் பாதங்கள் திருவாதிரை புனர்பூசம் - 1,2,3ம் பாதங்கள்
இராசி மிதுனம் மிதுனம் மிதுனம்
இராசியாதிபதி புதன் புதன் புதன்
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் சந்த்ரன் பரமசிவன் அதிதி
கணம் தேவகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது
மிருகம் சாரைப் பாம்பு பெண் நாய் பெண் பூனை
பக்ஷி கோழி அண்டில் அன்னம்
விருக்ஷம் கருங்காலி செங்கருங் மூங்கில்
இரஜ்ஜு சிரோ ரஜ்ஜு கண்ட உதர ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் சித்திரை, அவிட்டம் திருவோணம் உத்திராடம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு வடக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

1 comment:

ராம ராஜ்யம் said...

தங்களின் படைப்புக்களை இதில் வெளியிடுங்கள்


http://tamil.forumta.net/index.htm