Tuesday, November 30, 2010

ஸிம்ஹம் - குருப் பெயர்ச்சி பலன்கள்

உங்களைப் பற்றி:

"ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை ஏழாம் இடத்தினில் இருந்த குருபகவான் இனி உங்களது ஆயுள்ஸ்தானமான எட்டாம் இடத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.


எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம். குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலமிது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார் தாய்வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலமிது. மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும். பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. தந்தையாருடன் நல்ல உறவு நீடிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தரும் குருப்பெயர்ச்சியாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மகம்: உடல்நலம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் தேவை. அரசாங்க அனுகூலம் இருக்கும். தடைகள் இருந்தாலும் அதையும் தாண்டி வெற்றிகளைக் குவிப்பீர்கள். கல்வியில் மந்தமான சூழ்நிலை விலகி நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் தொழிலில் சிறக்க ஸ்ரீ கணபதியை வணங்குங்கள்.

பூரம்: வாழ்க்கைத்துணையுடன் கசப்புணர்ச்ச்சி ஏற்பட வாய்ப்பிருபப்தால் கவனம் தேவை. வரவேண்டிய கடன்பாக்கி வந்துசேரும். காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்கி எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.

உத்திரம் 1ம் பாதம் : புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக உள்ள திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். ஸ்ரீஆதித்யஹ்ருதயம் சொல்ல சொல்ல தடைகள் விலகி நன்மை பிறக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம்

இராசி

பலன்கள்

பரிகாரம்

மேஷம்

ஸிம்ஹம்

60/100

கந்த ஷஷ்டி கவசம் சொல்வது

ரிஷபம்

ஸிம்ஹம்

60/100

ஸ்ரீ நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது

மிதுனம்

ஸிம்ஹம்

55/100

கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்

கடகம்

ஸிம்ஹம்

70/100

ஸ்ரீ ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு

ஸிம்ஹம்

ஸிம்ஹம்

60/100

ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது

கன்னி

ஸிம்ஹம்

50/100

விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்

துலாம்

ஸிம்ஹம்

55/100

கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.

விருச்சிகம்

ஸிம்ஹம்

70/100

கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.

தனுர்

ஸிம்ஹம்

60/100

கணபதி அதர்வஷீர்ஷ உபநிஷத், துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.

மகரம்

ஸிம்ஹம்

60/100

கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.

கும்பம்

ஸிம்ஹம்

55/100

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.

மீனம்

ஸிம்ஹம்

60/100

தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.

லக்னமே தெரியாது

ஸிம்ஹம்

60/100

ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது

குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் ஸிம்ஹம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ஸிம்ஹ இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 70% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீ ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ஸிம்ஹ இராசி என்பவர்கள் ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வத பரிகாரமாகும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

*

நக்ஷத்திரங்கள்

பலன்கள்

மகம்

பூரம்

உத்திரம் 1ம் பாதம்

இராசி

ஸிம்ஹம்

ஸிம்ஹம்

ஸிம்ஹம்

இராசியாதிபதி

சூரியன்

சூரியன்

சூரியன்

நக்ஷத்திர அதிபதி

கேது

சுக்ரன்

சூரியன்

அதிதேவதைகள்

பித்ருக்கள்

அர்யமா

பகன்

கணம்

இராக்ஷஸ

மனுஷ்யகணம்

மனுஷய கணம்

நாடி

பார்ஸுவ - இடது

மத்ய

பார்ஸுவ - வலது

மிருகம்

ஆண் எலி

பெண் எலி

பசுமாடு

பக்ஷி

ஆண் கழுகு

பெண் கழுகு

கழுகு

விருக்ஷம்

ஆலமரம்.

புரசு

இலந்தை

இரஜ்ஜு

பாத ரஜ்ஜு

தொடை

தொப்புள்

வேதை நக்ஷத்ரம்

ரேவதி

உத்திரட்டாதி

பூரட்டாதி

அதிர்ஷ்டம் தரும் எண்கள்

1, 3, 4, 7, 9

1, 3, 4, 6, 7, 9

1, 3, 4, 5, 7, 9

அதிர்ஷ்டம் தரும் திசைகள்

கிழக்கு

கிழக்கு, வடக்கு

கிழக்கு

குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

2 comments:

Ravi kumar Karunanithi said...

thanks.

Jeyakumar said...

Good review. I am Simha Rassi with Simha Lagnam. My Josiya Guru always says that my 5th place is Suththam, So, no problem at any time. Whatever, I do will become success. Actually, that is true.