Tuesday, October 29, 2013

இட்லிவடை - 10 வருடம்

கடந்த 10 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது எங்கள் நண்பர் இட்லிவடை பிளாக்கைப் பற்றி எடுத்துரைத்தார். அன்று முதல் இன்று வரை தினமும் இட்லிவடை பிளாக்கை நாம் பார்க்காமல் இருந்தது இல்லை.


 


ஆனால் ஒன்று இட்லிவடை பிளாக்கைத் தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்குத் தெரியும். இப்போது எழுதுபவர் இட்லிவடை இல்லையென்று.

ஒரு முகமூடி போட்டுக் கொண்டதன் விளைவு, இட்லிவடையை கடைசி வரை பார்க்க இயல்வில்லை.

பா.ரா, பத்ரி போன்ற பலரிடம் நீங்கள்தான் இட்லிவடையா? என கேட்ட காலமுண்டு.

எஸ்.வி.சேகர் பிரச்சனை, திடிரென்று இட்லிவடை ஐடியை ஹேக் செய்தது, எங்களது முதல் ராசிபலன் வெளியானது, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் கருத்துகணிப்பு, இலக்கியம் சார்ந்த விடயங்கள், அரசியல், நாட்டு நடப்புகள் போன்ற பலவிதமான சரமான பதிவுகளை மறக்க இயலாது.


10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்.


குறிப்பு: எம்மை பிளாக் எழுத தூண்டியவர்கள், 2 நபர்கள்.
[1] இட்லிவடை - முகமூடி அணிந்த பிளாக்கர்
[2] நிலாரசிகன்  - எம் பள்ளித் தோழர்

வேண்டுகோள்:
[1] முதலில் உங்கள் பழைய இலை படத்தையேப் போடவும்.
[2] தினமும் ஒரு பதிவு போடவும்.
[3] பழைய காரசாரம் வேண்டும்.

Link: http://idlyvadai.blogspot.in/2013/10/blog-post_2982.html

இந்த லிங்கைப் போட்டால் மட்டும்தான் பேனர் வருகிறது. மற்றபடி வெறுமனே (http://idlyvadai.blogspot.in/) என போட்டால் ராகுலும் மன்மோகனும் வருகிறார்கள்.

Monday, October 21, 2013

நலம் தரும் நவம்பர் மாதம்


 
  • நவம்பர் மாத பொது ராசி பலன்கள்
  • 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பிரத்யேக சந்திராஷ்டம தினங்கள்
  • ஆன்மீகக் குறிப்புகள்
  • சுபமுகூர்த்த தினங்கள்
  • கிரஹங்களின் பாதசாரம்
  • தீபாவளி கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?
  • இந்த மாத திருக்கோவில் 
 போன்ற பல தகவல்கள் 25-10-2013 வெள்ளிக்கிழமை அன்று எமது Blogல் காணத்தவறாதீர்கள்.

Sunday, October 20, 2013

இந்த வாரம் இப்படித்தான் - 20-10-2013 - 26-10-2013 - 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பிரத்யேக பலன்கள் (பொது)




அஸ்வினி:
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த வாரம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தேவையற்ற மன சஞ்சலம் வரலாம். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.




பரணி:
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.


கார்த்திகை:
எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  மேலிடம் ஆதரவு கிடைத்தாலும் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  இடமாற்றத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  தடைதாமதம் உண்டாகலாம். எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.


ரோகினி:
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான  பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். ராசிநாதனின் சஞ்சாரம் பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.


மிருகசீரிஷம்:
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். 


திருவாதிரை:
திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம்  காணப்படும். புதிய முயற்சிகளை  தள்ளி போடுவதும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது. வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.



புனர்பூசம்:
பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடித்துக் கொள்வீர்கள். இந்தவாரம்  பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். 


பூசம்:
மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.


ஆயில்யம்:
வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  தொழிலில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். உபதொழிலில் மிகவும் கவனமாக இருப்பதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.






மகம்:
நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 




பூரம்:
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. 
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. 





உத்திரம்:
கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். 



ஹஸ்தம்:
எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். கருமமே கண்ணாக இருப்பீர்கள். நீங்கள் எல்லோராலேயும்  நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்தவாரம் முன்புதடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.




சித்திரை:
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும்  இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.





ஸ்வாதி:
தடைபட்ட சுபகாரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.  திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இந்த வாரம் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  




விசாகம்:
எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.




அனுஷம்:
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.  மூதலீடு செய்வதற்கு முன் கவனமாக ஆலோசனைகள் செய்வது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.



கேட்டை:
தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். சொத்து சம்பந்தாமாக எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.



மூலம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.



பூராடம்:
நீண்டநாட்களாக இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். அனைவரும் நல்லமுறையில் உங்களுடன் பழகுவார்கள். உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். 





உத்திராடம்:
இந்தவாரம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள்  சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.




திருவோணம்:
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  தொழிலில் முன்னேற்றம் காண கூடுதல் ஆலோசனை செய்வது நல்லது. 



அவிட்டம்:
சுபகாரியங்களில் இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும். நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த வாரம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.



சதயம்:
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வார இறுதியில் உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். 




பூரட்டாதி:
பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.



உத்திரட்டாதி:
எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.  திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். 



ரேவதி:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். 

Saturday, October 12, 2013

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

அறிவிப்பு

அன்பின் சொந்தங்களுக்கு,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

நாம் 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் ஐப்பசி மாத பொது பலன்கள் கொடுத்துள்ளதால், இவ்வாரத்திற்கான பொது ராசி பலன்கள் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த வாரம் வழமை போல் இந்த வாரம் இப்படித்தான் பகுதி வெளிவரும்.


என்றும் ஆசிகளுடன்,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

நவராத்திரி வழிபாட்டு முறை ஒன்பதாம் நாள் - தொடர் 10

நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்


திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்        வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
        மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
        இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
         கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  


[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :


[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

Friday, October 11, 2013

முருகன் செய்திகள் - பாகம் 01

நம் அனைவருக்கும் தெரிந்தது ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில்.






அத்தலத்தின் சிறப்புகள்:
  • இத்திருக்கோவில் சுமார் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது. 
  •  சித்தர்களுள் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்திய்டைந்த திருத்தலம்.
  •  ஸ்ரீஅருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்று முருகப்பெருமானால் படிக்காசு வழங்கப் பெற்ற திருத்தலம்.
  •  ஸ்ரீபாலன் தேவராய ஸ்வாமிகளால், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் 
  •  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே பொங்கி வழியும் மாமாங்க சுணை அமைந்துள்ள திருத்தலம் 
  •  வளர்பிறை சஷ்டி திருநாளில் விரதம் கடைபிடிப்போர் குழந்தைப்பேறு பெற்று வரும் திருத்தலம் 
  •  மூலவர் தினசரி அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு வரும் சிறப்பு பெற்ற திருத்தலம் 
  •  மூலவர் செவ்வாயாக அமைந்து மூலவரை சுற்றி நவக்கிரகங்கள் எட்டு நவக்கிரஹகங்களும் அழகிய தேவ கோஷ்டத்தில் பாங்குடன் அமைந்திருக்கும் திருத்தலம் 
  •  ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா தேவியர் இருவரும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு தனிக்கோவிலாக வீற்றிருப்பது வேரெங்கும் காண முடியாதது.

நவராத்திரி வழிபாட்டு முறை எட்டாம் நாள் - தொடர் 9

நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்


அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி



 




உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்


குணம்    குரூரம் (சத்ருக்களை )


சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
       காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
       சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
       நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :


[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

நவராத்திரி வழிபாட்டு முறை ஏழாம் நாள் - தொடர் 8

நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்




அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி


உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி


நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை 6 – 7.30


மலர்    முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கல்யாணி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பரணி, பூரம், பூராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே


[2] மூல மந்திரம்:  ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :


[3] காயத்ரி:  ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!

Thursday, October 10, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் - தொடர் 7


நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்


அம்பாள் கௌமாரி


உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.


குணம் சௌம்யம்


சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்


நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்


பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் செவ்வரளி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7

பாட வேண்டிய ராகம்
காவடி சிந்து


யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்


திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:


[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :


[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

Wednesday, October 9, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஐந்தாம் நாள் - தொடர் 6

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
 
 
 



அம்பாள்    மகேஷ்வரி


உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்


நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்:   அடானா


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி


திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
    போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :


[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

Tuesday, October 8, 2013

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது. 

திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும், ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. 


மேலும், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நாளை புதன்கிழமை 09-10-2013 அன்று மாலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, மாலை அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 


அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்


நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள் - தொடர் 5

நவராத்திரி வழிபாட்டு முறை - நான்காம் நாள்



அம்பாள்    வைஷ்ணவி


உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்


நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
       அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
       நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
       மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :


[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

Monday, October 7, 2013

இந்த வாரம் இப்படித்தான் - 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பலன்கள்

அசுபதி:
இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் செவ்வாய் மூலம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள்  விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வார இறுதியில் சூரியன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.



பரணி:
இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.  அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.



கார்த்திகை:
இந்த வாரம் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.


ரோகினி:
இந்த வாரம் பணவரத்து  கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.




மிருகசீரிஷம்:
தேவையான நிதியுதவி வார இறுதியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து  காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம்  அதிகரிக்கும்.



திருவாதிரை:
இந்த வாரம் வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை  அதிகரிக்கும்.
தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.


புனர்பூசம்:
இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான  நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று  தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி  தருவார். அரசு  மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.



பூசம்:
இந்த வாரம் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக  கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.



ஆயில்யம்:
இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான  செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது  நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.




மகம்:
இந்த வாரம் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். எதையும்  எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக  காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.

பூரம்:
இந்த வாரம் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.  வார இறுதியில் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன்  கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.


உத்திரம்:
இந்த வாரம் குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல்  ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.



ஹஸ்தம்:
இந்த வாரம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல்  இருப்பதும் நல்லது. பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

சித்திரை:
இந்த வாரம் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும்  லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை,  தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.


ஸ்வாதி:
இந்த வாரம் சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த  பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.



விசாகம்:
இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல்  உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.


அனுஷம்:
இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம்  தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம்  உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு  திறனும் அதிகரிக்கும்.



கேட்டை:
இந்த வாரம் எதைச்  செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு  உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும்.



மூலம்:
இந்த வாரம் போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள்  கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல்  மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.


பூராடம்:
இந்த் வாரம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம்  காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர  முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.


உத்திராடம்:
இந்த வாரம் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு  தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லா பிரச்சனைகளையும்  தீரும். எதிர்ப்புகள் அகலும். உங்களது நியாயமான திட்டங்களுக்கு மற்றவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.



திருவோணம்:
இந்த வாரம் அடுத்தவர்கள் தரும் மதிப்பை பெறுவீர்கள். ஆக்க பூர்வமான  யோசனைகளை செயல்படுத்தி  எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர்  செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.



அவிட்டம்:
இந்த வாரம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம்  காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.



ஸதயம்:
இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.  அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி  உண்டாகும்.


பூரட்டாதி:
இந்த வாரம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.



உத்திரட்டாதி:
இந்த வாரம் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள் .வாக்கு  வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய  வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.



ரேவதி:
இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

Sunday, October 6, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள் - தொடர் 4

நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்


அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)


உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.


குணம்:   சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்


நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30


மலர்:    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
    பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :


[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

Saturday, October 5, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள் - தொடர் 3


நவராத்திரி வழிபாட்டு முறை
இரண்டாம் நாள்


அம்பாள்

வராஹி


உருவ அமைப்பு
பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்
குணம்
குரூரம்
சிறப்பு
ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி
நெய்வேத்யம்
தயிர்சாதம், பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர்
முல்லை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்
9
பாட வேண்டிய ராகம்
கல்யாணி
யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்
திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்
திசை புத்தி நடப்பவர்கள்
சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்
லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்
தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்
சொல்ல வேண்டிய பாடல்:
[1]    துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
   பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
   கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
   அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!
[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:
[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!