நலம் தரும் நவம்பர் மாதம்:
சுபமுகூர்த்த நாட்கள்:
திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், உபநயனம், கிரகப்பிரவேசம், பூமி பூஜை, சுபபூஜைகள் செய்வதற்கு
Nov தமிழ் கிழமை திதி நக்ஷத்ரம் நேரம் லக்னம்
1 ஐப் - 15 வெள்ளி திரயோதசி ஹஸ்தம் காலை 6 – 7.30 விருச்சிகம்
1 15 வெள்ளி திரயோதசி ஹஸ்தம் காலை 9 -10.30 தனுசு
7 21 வியாழன் சதுர்த்தி மூலம் காலை 9 -10.30 தனுசு*
14 28 வியாழன் துவாதசி உத்திரட்டாதி காலை 9 -10.30 மகரம்*
15 29 வெள்ளி திரயோதசி ரேவதி காலை 6 – 7.30 விருச்சிகம்*
15 29 வெள்ளி திரயோதசி ரேவதி காலை 9 -10.30 மகரம்*
20 கார் – 4 புதன் திரிதியை மிருகசீ காலை 6 – 7.30 விருச்சிகம்
22 6 வெள்ளி பஞ்சமி புனர்பூசம் காலை 6 -7.30 விருச்சிகம்
22 6 வெள்ளி பஞ்சமி புனர்பூசம் காலை 9 -10.30 மகரம்
28 12 வியாழன் தசமி ஹஸ்தம் காலை 9 -10.30 மகரம்
29 13 வெள்ளி ஏகாதசி ஹஸ்தம் காலை 6 -7.30 விருச்சிகம்
29 13 வெள்ளி ஏகாதசி ஹஸ்தம் காலை 9 -10.30 மகரம்
*- இக்குறியிட்டவை வளர்பிறை என்று அறியவும்
ஆன்மீகக் குறிப்புகள்
|
|
தேதி
|
விசேஷம்
|
1
|
பிரதோஷம், மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி,
|
2
|
தீபாவளி, போதயன அமாவாசை
|
3
|
அமாவாசை, கேதார கௌரி விரதம், லக்ஷ்மி குபேர பூஜை
|
4
|
சந்திர தரிசனம்
|
6
|
கரிநாள்
|
7
|
சுபமுகூர்த்த நாள்
|
8
|
சூரசம்ஹாரம், சஷ்டி விரதம்
|
9
|
திருவோண விரதம்
|
13
|
ஏகாதசி விரதம்
|
14
|
சுபமுகூர்த்த நாள், சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி, யாக்ஞவல்ய ஜெயந்தி
|
15
|
சுபமுகூர்த்த நாள், பிரதோஷம்
|
16
|
திரேதயுகாந்தம், விஷ்ணுபதி புண்யகாலம்
|
17
|
கரிநாள், பௌர்ணமி விரதம், கிருத்திகை விரதம்
|
20
|
சுபமுகூர்த்த நாள்
|
21
|
சங்கடஹர சதுர்த்தி
|
22
|
சுபமுகூர்த்த நாள்
|
23
|
சஷ்டி விரதம்
|
25
|
மஹாதேவாஷ்டமி, காலபைரவாஷ்டமி
|
26
|
கரிநாள்
|
27
|
சுபமுகூர்த்த நாள்
|
28
|
சுபமுகூர்த்த நாள்
|
29
|
சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி
|
30
|
சனிப்பிரதோஷம்
|
நாயன்மார் குருபூஜை, ஆழ்வாராதியர்கள் திருநக்ஷத்ரங்கள்
|
|
3
|
மெய்கண்ட தேவர்
|
5
|
பூசலார் நாயனார்
|
7
|
ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருமூலர் நாயனார், உத்தம நம்பிகள், பெரிய ஜீயர்,
ஸ்ரீமணவாள மாமுனிகள் 11-வது பட்டம்
|
8
|
சேனைமுதலியார், திருகுறுகைபிரான்பிள்ளான்
|
10
|
பொய்கைஆழ்வார், பிள்ளைலோகாச்சாரியார்
|
11
|
பூதத்தாழ்வார்
|
12
|
பேயாழ்வார், முதலியாழ்வார்
|
19
|
திருப்பாணாழ்வார்
|
25
|
31-வது பட்டம் அழகியசிங்கர்
|
27
|
மெய்ப்பொருள் நாயனார்
|
28
|
ஆனாய நாயனார்
|
நவம்பர்
மாத ராசிபலன்:
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
அனைவருக்கும் பாடுபடும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இந்த
மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன்
ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. ராசியாதிபதி 5ல்
சூரியன் வீட்டில் சேர்க்கை பெறுவது எந்த ஒரு
காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண்
வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும்.
வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண்
பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர
முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண்
வாக்குவாதங்களை
தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த
சொந்த வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய
தடை அகலும்.
சந்திராஷ்டமம்: 5, 6
----------------------------------------
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
பிறருடைய தவறுகளை எளிதில் மன்னிக்கும் குணமுடைய ரிஷப
ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். ராசியாதிபதி சுக்ரன் செவ்வாய் வீட்டில் 7ல்
சஞ்சாரம் செய்வதால் வேளை தவறி
சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ரணருண ராசியின் மீது படிவதால் உடல்
ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த
சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான
வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க
வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த
பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 7, 8, 9
------------------------------------------
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
எந்த ஒரு பெரிய பிரச்சனைகளையும் அதை கவனமாக கையாண்டு சிறியதாக மாற்றி அதில் வெற்றி காணும் மிதுன
ராசிக்காரர்களே இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 5ல் சூரியன், சனி, ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும்.
கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு
சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்
மூலம் உதவியும் கிடைக்கும். வீடு
மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல
நேரிடலாம். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு
இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள்
தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி
உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில்
வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக
பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.
வாகனத்தை
ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட
இருப்பவர்களிடம்
எந்த விஷயத்தையும் சொல்லும் போது
கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது
மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற
விடாமல் இருப்பது
வெற்றிக்கு உதவும். சக
மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு லாபமான மாதமாக அமையும்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும்.
பொருளாதாரம் உயரும்.
சந்திராஷ்டமம்: 10, 11
------------------------------------------
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எதிலும் சிந்தித்தும் யோசித்தும் செயல்படும் கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள்
விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல
வகையான யோகங்கள் ஏற்படும்.
ராசிக்கு 2ல் செவ்வாயும், 4ம் இடத்தில் சூரியன், சனி, ராகு புதனும் சேர்ந்து சஞ்சரிக்கிறார்கள். உடல்
நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன
குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய
பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே
உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி
சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி
நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
------------------------------------------
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
அரசாங்கத்தின் மூலம் அனுகூலமும் அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமுடைய சிம்மராசியினரே இந்த மாதம் சின்ன விஷயத்துக்
கூட
கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரத்தை தரும். வேற்று மொழி
பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்
ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை
காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை
சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு
சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க
நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமான காணப்படுவீர்கள். கணவன்,
மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள். கலைத்துறையினருக்கு இந்த
மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
------------------------------------------
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
எந்த விஷயத்தையும் எந்த
நேரத்திலும் சோம்பலைத் தவிர்த்து தள்ளிப் போடாமல்
உடனே முடிவு காண
துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம்.
என்றோ செய்த ஒரு
வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம்.
கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி
எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த
இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.
பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 16, 17
------------------------------------------
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
எவரையும் தமது திறமையால் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே இந்த
மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்ரன்
ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்வது சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி
கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்
இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி
வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். வாழ்க்கை துணை
உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த
திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சூரியன் ராகு சஞ்சாரத்தால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும்.
உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: 18, 19, 20
------------------------------------------
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் விருச்சிக
ராசிக்காரர்களே இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர
எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு பத்தில் சூரியன் வீட்டில் இருந்து ராசியைப் பார்ப்பதால் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன்
தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது
மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய
வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு
ஒருவர் செய்த செயலுக்கு வீண்
பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன
வருத்தம் ஏற்பட்டு
நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக
வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு முன் பின்
யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற
கூடுதல் கவனம்
செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை
மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டமம்: 21, 22
------------------------------------------
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை
கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை.
கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்
ஏற்பட்டு நீங்கும். தனவாக்குஸ்தானாதிபதி சனி
உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் வார்த்தைக்கு வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை
செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம்
உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை
கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக
ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்
பழி ஏற்படலாம். கவனம் தேவை.
கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன்
கேட்டு படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர்
சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம்
சேரும்.
சந்திராஷ்டமம்: 23, 24
------------------------------------------
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன
உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த
மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். தொழில் ராசியில் சூரியன், புதன், ராசிநாதன் சனி,
ராகு சஞ்சாரம் செய்வதால் வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும்.
உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய
ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும்
ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம்
காரணமாக வெளியில் தங்க
நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும். கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது
மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்
தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 25, 26, 27
------------------------------------------
கும்பம் (அவிட்டம் 3, 4
பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
அனைத்து விதத்திலும் ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ராசியில் சஞ்சாரம் செய்யும் சுகபாக்கியாதிபதி சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். ஆனால் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் சூரியன், சனி, புதன், ராகு ஆகியோர் பயணங்களை ஏற்படுத்துவார்கள.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண
உதவி கிடைக்கும்.
பங்குதாரர்களிடம் இருந்து வந்த
கசப்புணர்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை
குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்
கிடைக்கும். கடினமாக
காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழி
உறவினர்களிடம் உறவு நல்ல
நிலையில் நீடிக்கும்.
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 28, 29
------------------------------------------
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன
ராசியினரே இந்த
மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். ராசிக்கு 4ல் ராசிநாதன் குரு
சஞ்சாரம் செய்வது எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி
கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே
திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து
கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு
கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.
கல்வியில் வெற்றி பெற
தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை
நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 3, 4, 30
------------------------------------------
கிரஹநிலை:
0
|
கேது
|
0
|
குரு
|
0
|
நவம் 3 – துலாம் புதன்
நவம் 17 – விருச்சி சூர்யன்
நவம் 28 – விருச்சி புதன்
|
0
|
|
0
|
செவ்
|
||
சுக்கி
|
0
|
சூரி சனி ராகு
|
புதன் (வக்ர)
|
கிரஹ பாதசாரம்
சூரியன்:
தேதி
|
சாரம்
|
1
|
ஸ்வாதி 3
|
3
|
ஸ்வாதி 4
|
6
|
விசாகம் 1
|
9
|
விசாகம் 2
|
13
|
விசாகம் 3
|
16
|
விசாகம் 4
|
19
|
அனுஷம் 1
|
23
|
அனுஷம் 2
|
27
|
அனுஷம் 3
|
30
|
அனுஷம் 4
|
சந்திரன் பாதசாரம்: ராசி மட்டும்
தேதி
|
ராசி
|
1
|
கன்னி
|
2
|
துலாம்
|
4
|
விருச்சிகம்
|
6
|
தனுசு
|
8
|
மகரம்
|
10
|
கும்பம்
|
12
|
மீனம்
|
15
|
மேஷம்
|
17
|
ரிஷபம்
|
19
|
மிதுனம்
|
22
|
கடகம்
|
24
|
சிம்மம்
|
27
|
கன்னி
|
29
|
துலாம்
|
செவ்வாய்:
தேதி
|
சாரம்
|
1
|
பூரம் 1
|
5
|
பூரம் 2
|
11
|
பூரம் 3
|
17
|
பூரம் 4
|
23
|
உத்திரம் 1
|
30
|
உத்திரம் 2
|
புதன்:
தேதி
|
சாரம்
|
3
|
சித்திரை 3
|
5
|
சித்திரை 4
|
8
|
ஸ்வாதி 1
|
11
|
ஸ்வாதி 2
|
17
|
ஸ்வாதி 3
|
19
|
ஸ்வாதி 4
|
22
|
விசாகம் 1
|
24
|
விசாகம் 2
|
26
|
விசாகம் 3
|
28
|
விசாகம் 4
|
30
|
அனுஷம் 1
|
குரு:
தேதி
|
சாரம்
|
9
|
புனர்பூசம் 3
|
13
|
வக்ரம் ஆரம்பம்
|
30
|
புனர்பூசம் 2
|
சுக்கிரன்:
தேதி
|
சாரம்
|
3
|
மூலம் 2
|
6
|
மூலம் 3
|
10
|
மூலம் 4
|
13
|
பூராடம் 1
|
17
|
பூராடம் 2
|
21
|
பூராடம் 3
|
25
|
பூராடம் 4
|
29
|
உத்திராடம் 1
|
சனி:
தேதி
|
சாரம்
|
6
|
கிழக்கே உதயம்
|
11
|
ஸ்வாதி 4
|
ராகு: ஸ்வாதி 2
கேது: அசுபதி 4
--------------------------------------
இந்த மாத திருத்தலம்:
காசி தெரியும், தென்காசி தெரியும்,
வேலூர் காசி தெரியுமா?
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பிராகாரத்தில்
உள்ள கங்கா தீர்த்தக் கிணற்றின் அருகில் கங்கா பாலாறு ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. பின்புறம்
பைரவர் சந்நதி கொண்டுள்ளார். காசி போன்றே சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர்
மூன்றையும் இங்கு தரிசிக்கலாம். எனவே இந்த சந்நதி வேலூர் காசி எனப்படுகிறது.
|
--------------------------------------
தீபாவளி - கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?
தீபாவளி
திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால்
எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது,
பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி.
அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக
வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால்
அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும்
அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான்.
ஆண்டுகள்
கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும்
கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்'
என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும்
பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும்,
பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா
தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால்
மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை
அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி
விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன்
மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.
நரகாசுரன்
இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம்,
""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும்
வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய்
குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி,
ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய
வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி,
அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி
பெற்றுத் தந்தாள்.
எப்போது?
சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை
முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை
முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப்
பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த
புண்ணியம் கிடைக்கும்.
குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு,
சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும்.
குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும்.
குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை
அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
1 comment:
பயனுள்ள பதிவு....
Post a Comment