Tuesday, March 15, 2011

அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு

சிங்கப்பூரில் இருக்கும் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். எனக்கு சிங்கப்பூர் வருவதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அது விடயமாக சில சந்தேகங்கள் வருகிறது. சிங்கையில் இருக்கும் நண்பர்கள் எனக்கு தனிமடலிடுங்கள். நான் எனது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறேன்.

நன்றி.

Saturday, March 12, 2011

இந்தியாவா தென்னாப்பிரிக்காவா?

இந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு.
இதற்குண்டான Parameters:
இந்திய அணியின் தலைவர் - திரு.தோணியின் ஜாதகம்
தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் - திரு.ஸ்மித் ஜாதகம்


 


போட்டி நடைபெறும் நாளன்றைய டாஸ் போடும் நேர ஜாதகம்


 
(எதற்காக அணித்தலைவர் ஜாதகத்தை எடுத்திருக்கிறேன் என்றால் முற்காலத்திலிருந்தே போரின் போது அந்த படையின் தளபதியின் ஜாதகத்தை வைத்துதான் ஆராய்ச்சி செய்வர். ஆதாரம்: மஹாபாரதம்)
நமது தோணிக்கு ராகு திசையில் புதன் புக்தி. திரு.ஸ்மித்துக்குசந்திர திசையில் ராகு புக்தி. போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்குரிய லக்னம் கடகம்.
தோணியின் லக்னாதிபதி புதன். ஸ்மித்தில் லக்னாதிபதி சுக்கிரன். இன்றைய போட்டி ஆரம்பிக்கும் நேர ஜாதகத்தில் தோணி, ஸ்மித் லக்னாதிபதிகள் லக்னத்திற்கு முறையே 9ம் இடத்திலும், 7ம் இடத்திலும் உள்ளனர்(பாவக சக்கரத்திலும்). இருவருடைய ஜாதகத்திலுமே இருவரின் பாதகஸ்தானாதிபதிகள் கெட்ட இடத்தினில் அமர்ந்திருக்கின்றனர்.
போட்டி நடைபெறும் ஜாதகத்திலும் பாதகஸ்தானாதிபதி சுக்கிரன். அவர் ஸ்மித் ஜாதகத்தின் லக்னாதிபதி ஆவார். ஸ்மித் ஜாதகத்தை பொறுத்தவரை முடிவு அவருக்கு எப்போதுமே சாதகமாக இருக்காது. இது போல் பலவிதமான ஆராய்ச்சிகளின் முடிவில் எடுத்த முடிவு.
இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா?
தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இன்று போட்டி டையில் முடிய வாய்ப்பில்லை.
சதவீதக் கணக்கு: இந்தியா: 60%. தென்னாப்பிரிக்கா: 40%

Friday, March 11, 2011

இறந்தோருக்கு அஞ்சலி

இரங்கல் பிரார்த்தனை

அனைவருக்கும் வணக்கம். 


“புனரபி ஜனனம் புனரபி மரணம்” - ஆதிசங்கரர்


ஜப்பானில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பல பேர் உயிரிழந்தார்கள். அவர்களது ஆத்மா சாந்தியடைய சனிக்கிழமை காலை 8 மணிக்கு(IST) நாம் அனைவரும் நமது இடத்திலிருந்தே 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.

நன்றி.

இறைவன் கண் விழிக்கட்டும்....இறந்தோருக்கு அஞ்சலி

கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானைத் தாக்கிய
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இலட்சம் மக்கள்
தங்கள் வீடுகளையும் குழந்தைகளையும் பிரிந்து தவிக்கின்றனர் இவர்களுக்காக
கூகுள் உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது,

ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக
Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை உருவாக்கிக்
கொடுத்துள்ளது,   இந்தப் பக்கம் உருவான கடந்த 2 மணி நேரத்திற்குள் 1200
பேர் தங்கள் உற்றார், உறவினரைத் தேடிக் கண்டு பிடித்துள்ளனர்.

தேவையானோர் இதைப் பயன் கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க
இறைவனைப்
பிரார்த்திப்போம்.

இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en

ஆபத்துக் காலத்தில் கூகிள்  செய்யும் இந்த உதவி பாராட்டுக்குரியது .

http://winmani.wordpress.com/2011/03/11/japan-tsunami-2011/

Tuesday, March 8, 2011

அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய இலவச ஜோதிட ஆலோசனைகள் பகுதிக்கு கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அனைவருக்கும் மிகவும் நன்றி. மேலும் மின்னஞ்சல்கள் அனுப்பிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நான் மின்னஞ்சலில் பதில் அளிப்பேன் என்று எழுதியிருந்தேன். எனக்கு மிகுந்த பணிச்சுமை இருந்ததினால் மேலும் அந்த பணியை செய்ய இயலவில்லை. மேலும் நான் எனது ஆதிகுரு ப்ரும்மஸ்ரீ குப்பு ஜோஸ்யர் அவர்களின் பெயரில் இணையதளம் ஆரம்பிக்கும் வேலையிலும் இருந்துவிட்டதினால் என்னால் அவர்களுக்கு உதவிகள் செய்ய முடியாமல் போயிற்று. ஆனாலும் மின்னஞ்சல் அனுப்பிய அன்பர்களுக்காக அந்த சேவையை நீட்டித்து இருக்கிறேன். அவர்களுடைய தகவல்களை சேர்த்து புதிய டேட்டாபேஸ் உருவாக்கியுள்ளேன். அவர்களுக்கு என்று ஒரு புதிய எண்ணும் தரப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் எனக்கு தனிமட அனுப்பினால் என்னுடைய இலவச ஜோதிட ஆலோசனை அலைபேசி எண் தரப்படும் .அந்த எண் தினமும் இரவு 8.30 முதல் 11.30 வரை மட்டுமே இயங்கும். மேலும் சென்னையிலும் பெங்களூருவிலும் இலவசமாக ஜோதிடம் சொல்வதற்கு இடங்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தலாம். ஒவ்வொரு மாதம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த சேவை அளிக்கலாம் என்று இருக்கிறேன். அதன் பற்றிய அறிவிப்பு பின்னர் அளிக்கிறேன். மறவாதீர் அன்பர்களே எனக்கு தனிமடல் அனுப்பியவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்.

skype ID: rameshramky06

Monday, March 7, 2011

மருந்தீசுவரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ விழா

திருவான்மியூர் : திருவான்மியூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனாய மருந்தீசுவரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, சிறப்பு பூஜைகளுடன் நாளை (செவ்வாய் கிழமை) துவங்குகிறது.திருவான்மியூரில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் உடனாய மருந்தீசுவரர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா மார்ச் 8ம் தேதி, செவ்வாய் கிழமை துவங்குகிறது.ஊர் எல்லை காவல் தெய்வமான செல்லியம்மன் மற்றும் விநாயகர் சுவாமிகளின் வீதி உலா முதல் இரண்டு நாட்கள் நடைபெறும். பின்னர், 10ம் தேதி, தியாகராஜ சுவாமியின் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் துவங்கும் இந்த விழாவில், தியாகராஜ சுவாமிகள், திருபவனி பார்த்தசாரதிக்கு அருளல், சந்திரனுக்கு அருளல், ராமபிரானுக்கு அருளல், இந்திரனுக்கு அருளல் போன்றவைகள் நடைபெறவுள்ளன. கோவில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், "இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் தியாகராஜ சுவாமிகள் திருத்தேரில் மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.இந்த விழா இம்மாதம் 20ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் நிறைவடைகிறது. சுவாமி வீதி உலாவின் போது ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெரும். விழா நாட்களில், திருக்கோவிலின் திறந்தவெளி கலையரங்கில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை, நாட்டியம் போன்றவைகள் நடைபெறும்' என்றார்.

Friday, March 4, 2011

திருப்புவனம் சவுந்திரநாயகி

திருப்புவனம், புண்ணிய தலங்களில் பிரதானமானது. ஆன்மிக உலகில் காசி, ராமேஸ்வரத்தை சிறப்பாக குறிப்பிடுவர். அந்த வரிசையில் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி கோயிலும் அடங்கும். இங்கு வழிபட்டால், காசியை விட வீசம் அளவு புண்ணியம் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, மோட்ச விளக்கு ஏற்றுவது பிரசித்தம். பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம், தேரோட்டம் சிறப்புற நடக்கும். சிவகங்கை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.பிணி தீர்ப்பாய் அம்மா சிவனுக்கு விழா எடுக்கும் முன் காவல் தெய்வமான எல்லை அம்மன், மாரியம்மனுக்கு உற்சவம் எடுப்பது வழக்கம். பிணிகள் அண்டாமல் மக்களை காத்திடவும், நல்ல மழைபொழிந்திடவும் மாரியம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது. உற்சவம் ரேணுகாதேவி முத்துமாரியம்மன், எல்லை தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாசி மாதத்தில் 10 நாள் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கும். ஒன்பதாம் நாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மறுநாள் விழா நிறைவுபெறும். பிறகு புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி கோயிலில் உற்சவம் துவங்கும்.

திருப்புவனம் புதூர், நெல்முடிக்கரை, பழையூர், கோட்டை கிராமங்களுக்கு இந்த மாரியம்மன் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கொடியேற்றத்தின் போது, அக்னி சட்டி எடுப்போர் காப்புக்கட்டி விரதம் இருக்கின்றனர். அன்றிரவு கோயில் வளாகத்தில் அம்மன் பாடல்களை பாடி கும்மி அடித்து வேண்டுதல் செய்கின்றனர். தினமும், அம்மன் உற்சவராக வீதி உலா வந்து அருள்பாலிப்பர். வேண்டுதல் உடல்நலம் குன்றியோர், நலம் பெற வேண்டி அம்மனிடம் வேண்டுதல் செய்கின்றனர். நிவர்த்தியானால் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை, பாதத்துடன் நகர்வலம் வந்து காணிக்கை செலுத்துகின்றனர். சிறுவர்கள் கரும்புள்ளி, வெண்புள்ளி குத்தி வேப்பிலை அணிந்து கோயில் வளாகத்தில் உருண்டு (அங்க பிரதட்Œணம்) கொடுப்பர். குழந்தை பாக்கியம் இல்லாதோர், கரும்பு தொட்டில் கட்டி வேண்டுதல் செய்கின்றனர். பிறக்கும் பெண் குழந்தைக்கு, ரேணுகாதேவி என பெயரிட்டு நன்றி கடன் செலுத்துகின்றனர். திருமண தடை உள்ள கன்னிப் பெண்கள் உருண்டு கொடுத்து வேண்டினால், திருமணம் கைகூடும். பொங்கல், மாவிளக்கு கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்துவிட்டு, ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். விழாவை முன்னிட்டு பொதுநல அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பத்து நாள் விழாவும் மக்களின் ஒற்றுமையை வளர்ப்பதாக உள்ளது.

வேப்பிலை ஆடை கட்டுவது ஏன்?

ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். அவரது மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். விதி விளையாடியது. பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. ரேணுகாவின் உடல் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயினால் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்த அவள், வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சளைப் பூசிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். சிவபார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்பிகை ரேணுகாவின் முன்தோன்றி, தன் அம்சத்தை அவளுக்கு வணங்கி அருள்புரிந்தாள். அன்றுமுதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள். இதன் காரணமாகவே, வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு, மாரியம்மனை வேண்டும் வழக்கம் ஏற்பட்டது. நோயில் இருந்து விடுபட்டவர்கள் வேப்பிலை ஆடை கட்டியும், கூழிட்டும், அக்னி மிதித்தும் அம்பிகையை வழிபட்டு வருகின்றனர். அவளுக்கு பல தலங்களிலும் கோயில் கட்டினர். இத்தலங்களில் அம்மனுக்கு பல பெயர்கள் உண்டு.

மாரியாய் மாறிய முனிவரின் மனைவி

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர், யாகங்களை நடத்துவதில் வல்லவர். தினமும் யாக குண்டத்தில் அக்னி வளர்த்து தேவர்களை பூஜித்து வந்தார். இவருடைய மனைவி ரேணுகா. இவள் அம்பிகையின் அம்சமாக பூலோகத்தில் ரைவதன் என்பவரின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். ஜமதக்னி முனிவரைக் கணவராக அடைந்தாள். இந்த தம்பதியருக்கு தன்னுவன், அனுவன், விச்வாவசு, பரசுராமன் என்னும் நான்கு பிள்ளைகள். கடைசிப்பிள்ளை பரசுராமன் திருமாலின் அவதாரம் ஆவார்.ரேணுகா கற்புத்திறன் மிக்கவள். கணவனே தெய்வமென வாழும் பதிவிரதை. இந்த திறம் காரணமாக, ஆற்றுமணலில் குடம் செய்யும் வல்லமை பெற்றிருந்தாள். அவள் தினமும் நதியில் நீராடி, மணல் எடுத்து குடமாக வனைவாள். அதில் தண்ணீர் எடுத்து வந்து யாக
பணிகளுக்கு உதவுவாள். ஒருநாள், அவள் நதியில் நீராடிக்கொண்டிருந்த போது, வானில் வலம் வந்து கொண்டிருந்த கந்தர்வன் ஒருவனின் பிம்பத்தை தண்ணீரில் கண்டாள். இப்படியும் உலகில் ஆணழகர்கள் இருப்பார்களா? என கணநேரம் மனதில் நினைத்தாள். இதனால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கோ ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தார். கோபம் தலைக்கேறியது. தவறுக்குத் தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்தார். பிள்ளைகளை அழைத்து தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார். மற்ற பிள்ளைகள் மறுத்து விட்டனர். இளையமகன் பரசுராமன், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சொல்லுக்கேற்ப, அன்னையை வெட்டினார். ஜமதக்னி அவரைப் பாராட்டி, என்ன வரம் வேண்டும்? என்றார். தனது தாய் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும், என்றார். ஜமதக்னியும் அவ்வாறே செய்தார். கலியுகத்தில் மாரியம்மனாக எங்கும் வீற்றிருந்து மக்களுக்கு மழை வளம் தரவும், நோயற்ற வாழ்வளிக்கவும் வரம் தந்தார். மழைக்கு மாரி என்ற சொல் உண்டு. இந்தப் பெயரால் அவள் கருணை உள்ளம் கொண்ட மாரியம்மனாக எங்கும் வீற்றிருக்கிறாள்.

கண்ணனின் தங்கை

யமுனை நதிக்கரையில் இருந்த மதுராபுரியை கம்சன் அரசாண்டு வந்தான். அவனது தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் அழிவு ஏற்படும் என்று அசரீரி வாக்கு ஒலித்தது. இதனால், பயந்துபோன அவன் தங்கையையும், அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். திருமால் அவர்களது எட்டாவது புத்திரன் கண்ணனாக அவதரித்தார். அதே சமயத்தில், யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில், வசுதேவரின் நண்பர் நந்தகோபனின் மனைவி யசோதைக்கு மாயாதேவி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் திருமாலால் உருவாக்கப்பட்டவள். அப்போது வானத்தில் அசரீரி ஒலித்தது. வசுதேவரே! கண்ணனை கோகுலத்தில் உள்ள உன் நண்பர் நந்தகோபனிடம் பத்திரமாகச் சேர்த்துவிடு! என்றது. ஒரு கூடையில், கண்ணனை எடுத்துக் கொண்டு வசுதேவர் கோகுலம் சென்று நந்தகோபன் வீட்டில் விட்டார். மாயாதேவியை அதே கூடையில் வைத்து சிறைக்கு கொண்டு வந்தார். கம்சன் தன் தங்கைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிந்து, அதைக் கொல்ல சிறைக்கு வந்தான். பச்சிளங் குழந்தையை கையில் தூக்கிக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் பிடியிலிருந்து நழுவி மாயாசக்தி விண்ணை நோக்கிப் பறந்தாள். ஏ மூடனே! கம்சா! உன்னைக் கொல்லப் போகும் என் அண்ணன் கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாசக்தி! உலக உயிர்களை எல்லாம் காப்பதற்காகவே இப்பூமியில் அவதரித்திருக்கிறேன் என்று சூளுரைத்தாள். அந்த மாயா சக்தியே மாரி, காளி, பவானி, துர்க்கை என்று பல திருநாமங்களில் கோயிலில், அருட்காட்சி தருகிறாள்.


நன்றி: தினமலர்

Thursday, March 3, 2011

சிவராத்திரி பயணம் - ஹரிமணிகண்டன் -

Thank for my Guru to took me to SPHATIKA (CRYSTAL) LINGAM Veerampalem Shivalayam on 2011 Sivarathi day,


On 1st march 2011 I am in chennai Call came from our Sugar factory chagallu (rajahmundry) andhra pradesh come immediate you want create new report .i came here 2 march 2011 (sivarathi day) ,my friend Basker told about Veerampalem Siva temple , at 4.30 pm I and our EDP Manager Mr.Rao went to Finance GM ,explain about my work , I request Jeep go to Shiva temple at veerampalem village. It 1 ½ hrs journey to Veerampalem, Lot of crowed there, when we stand in queue it will take us about 3hrs, but my Guru help via Sugarcane grower he is supplying to our factory. He helps us to go through Special Gate.


Most of people unaware this temple, Five years old Shivalayam at very small Veerampalem Village, one of biggest Siva temple near Tadepalligudem (18 km) in West Godavari District ,Andhra pradesh. it is maintained by “Balatripura Sundari Trust” .


In this temple Siva is dancing at Kailash mountain stature at top Ganga Devi, Thousands of small lingam around that temple building , in side temple that have SPHATIKA (CRYSTAL) LINGAM, it height will be about 15 inch (1 feet) keep in side glass box in tight security , it will open 2 times Mahashivratri & Karthika Pournami in a year , Very nice to see it through my eyes and the main temple having big Shivalingam which coved by thousands of rudraksha mala ,it will open all days and also having big homa kundam, Big stature Sathya Sai Baba, Siva & Parvathi , under an Umbrella 8 face vinayagar and Gautama_Maharishi in pond.


Thank vssnrao10 Upload in youtube is running for 10 minutes :


Part1: http://www.youtube.com/watch?v=Xp9e_V6qNSc
Part2 : http://www.youtube.com/watch?v=QqQErBQT8to


And also I went to Oldest Siva temple at chagallu , they believed this temple build 500 years old, around Godavari District ,andhra pradesh. only temple having Very Big Nandi and small Siva lingam is about 15 inch ,inside this siva temple there is perumal & also having Saraswati in marble stone ,this is recently build by one of my friend Mr.Raja family members he is also working in EDP our Sugar factory . Only Saraswati temple around Godavari District ,Andhra Pradesh.


Regards
Harimanikandan.V
H/P :+91 9841267823
chamundihari@gmail.com
http://sadhanandaswamigal.blogspot.com
http://chamundihari.wordpress.com

புகைப்படங்கள்:-சிவராத்திரி பெருவிழா

மஹா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் சார்பில் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் ஸமேத ஸ்ரீ திருவழுதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக சிறப்பு அர்ச்ச்னை ஆராதனைகள் செய்யப்பட்டன.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள் ஒன்று கூடி லட்சார்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் அருணாசலேஸ்வரரை போற்றி இசை வழிபாடு நடத்தினர். 24ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில் வளாகம் முழுவதும் வண்ணம் கலந்த உப்புகளால் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Wednesday, March 2, 2011

சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் நடைதிறப்பு

மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 9ம் தேதி திறக்கப்படும். வரும் 19ம் தேதி நடை பெற உள்ள உத்திர நிகழ்ச்சிக்காக 10ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை மற்றும் உற்சவங்களுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதே போல், பங்குனி மாத பூஜைகளுக்காக வரும் 9ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார்.அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் ஏதுமிருக்காது. மறு நாள் (10ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். தொடர்ந்து பங்குனி உத்திர வைபவத்திற்காக கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடை பெறும்.
வரும் 19ம்தேதி பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.கோவிலில் சிறப்பு பூஜைகளான களபாபிஷேகம், படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். பங்குனி உத்திர வைபவம் மற்றும் மாத பூஜைகள் முடிவடைந்து 19ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.

kuppuastro.in துவக்க விழா

அன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம்.

எனது நீண்ண்ண்ண்ண்ட நாளைய விருப்பமான kuppuastro இணையதளம் கடந்த ஞாயிறன்று துவக்கப்பட்டது. ப்ரும்மஸ்ரீ குப்பு ஜோஸ்ரவர்கள் எனது முப்பாட்டனார் ஆவார்(அதாவது எனது தாத்தாவின் தகப்பனார்). அவரது பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அது இப்போதுதான் பகவானின் கிருபையால் துவக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். அதனுடைய Updates வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அமாவாசை முதல் செயல்பட துவங்கும்.

ஜோதிடர் தேதியூர்.ஸ்ரீ.ராமன் அவர்கள், ஸ்ரீ.வாஸன்(ஆசிரியர், பிராமின் டுடே) அவர்கள் முன்னிலையில் எனது இணையதளத்தை தொடங்கி வைத்தார்.


முதலில் காலஞ்செனற எனது வளர்ப்பு பெற்றோர்களுக்கும்(ப்ரும்மஸ்ரீ வெங்கிடாஜலம் & ப்ரும்மஸ்ரீ கோமதி அம்மாள்), பின் எனது பெற்றோர்களுக்கும் (ஸ்ரீ சுப்பிரமணியன் & ஸ்ரீமதி உமா) இந்த நேரத்தில் நமஸ்காரம் செய்கின்றேன். எனது ஆதிகுரு திரு.குப்பு ஜோஸ்ரவர்களுக்கும், கருங்குளம் ப்ரும்மஸ்ரீ அனந்தாச்சாரியார் அவர்களுக்கும், பொள்ளாச்சி ஸ்ரீ மோகன் அவர்களுக்கும், பாலக்காடு ஜோதிட விபூஷணம் ஸ்ரீ மஹாதேவய்யர் அவர்களுக்கும், அம்மன் அருள் வாக்கு சித்தர் ஸ்ரீ.குருநாதன்(அம்பி அப்பா) சித்தப்பா அவர்களுக்கும், வாழும் ஞானி ஸ்ரீ சுந்தராஜ சித்தப்பா அவர்களுக்கும் என்னுடைய பணிவான நமஸ்காரங்கள். இந்த இணையதளத்தை தொடங்கி வைத்த ஜோதிடர் தேதியூர்.ஸ்ரீ.ராமன் அவர்கள், ஸ்ரீ.வாஸன்(ஆசிரியர், பிராமின் டுடே)அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த இணையதளம் தொடங்குவதற்கு காரணமாக எனது நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

அவர்களில் சிலர்:
[1] ஸ்ரீ ரோமிங் ராமன் அவர்கள்
[2] ஸ்ரீ இட்லிவடை அவர்கள் (என்னை இணையத்தில் அறிமுகப்படுத்தியவர்)
[3] ஸ்ரீ நிலாரசிகன் (எனக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியவர்)
[4] ஸ்ரீ மதி விஜயராணி அவர்கள் (எனக்காக இணையத்தில் kuppuastro.in Domainஐ புக் செய்தவர்)
[5] எனது சகோதரர் ஸ்ரீ நாகராஜன் அவர்கள்
[6] எனது அண்ணா நாக்பூர் ஸ்ரீ தர்மபிரபாகர் அவர்கள்
[7] எனது இனிய நண்பர் ஸ்ரீ சுரேஷ்குமார் அவர்கள்
[8] ஸ்ரீ பாண்டுரங்கன் சுரேஷ், பிரமிட் பாண்டுரங்கா டிரஸ்ட், சென்னை
[9] எனது அன்புத்தங்கை சௌ.சார்மிலி அவர்கள்
[10] எனது தோழி சௌ.செல்வி அவர்கள்
[11] எனது அண்ணா வேளச்சேரி ஸ்ரீ. ஜா.ஸ்ரீனிவாசன் & ஸ்ரீ மதி தம்பதியினர்
[12] எனது அண்ணா திருவான்மியூர் ஸ்ரீ. ஸ்ரீதர் & ஸ்ரீமதி. இந்துமதி தம்பதியினர்
[13]  எனது அண்ணா அம்பத்தூர் ஸ்ரீ.வாசு அவர்கள்
[14] அன்பின் அம்மா ஸ்ரீமதி.ரத்னமாலா, கோயம்புத்தூர்


சில நண்பர்களது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவர்களுக்கும் எனது மனமர்ந்த நன்றி.

இந்த இணையத்தில் செய்ய திட்டமிட்டிருப்பவை:
[1] பஞ்சாங்கம்
[2] ராசிபலன்கள்
[3] திருமண பொருத்தம்
[4] நியுமராலஜி
[5] ஆன்மீக ஸ்தலங்கள் பற்றிய விபரங்கள், புகைப்படங்கள்
[6] ஆன்மீக பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள், பேட்டிகள், கட்டுரைகள்
[7] ஜோதிடத்தில், ஆன்மீகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை அகற்றுதல் பற்றிய கட்டுரைகள்
[8] எளிய பரிகார மந்திரங்கள் - ஒலி வடிவில்
[9] சேவைகள் பற்றிய விபரங்கள்

மற்றும் பல.....

நண்பர்களே என்னுடைய ஒரே வேண்டுகோள் தயவுகூர்ந்து தாங்கள் பயனடைந்தது மட்டுமல்லாமல் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அறிவிப்பு

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் வழக்கம் போல் சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது. அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை, குழந்தை Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம், புரட்டாசி சனிக்கிழமை துவாதச ஸகஸ்ரநாம பாராயணம், நவராத்திரி போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[4] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் 4 காலங்களிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[5] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

Tuesday, March 1, 2011

கிழக்கு மொட்டை மாடி

கிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்
மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி

மற்றைய விபரங்களுக்கு:- இங்கே சொடுக்கவும்

குறிப்பு: முதலில் லிங்க் கொடுக்காமல் செய்தியை போட்டு விட்டேன். இதை எனக்கு உணர்த்திய நண்பர் திரு.ரோமிங் ராமன் அவர்களுக்கு நன்றி.