மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 9ம் தேதி திறக்கப்படும். வரும் 19ம் தேதி நடை பெற உள்ள உத்திர நிகழ்ச்சிக்காக 10ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை மற்றும் உற்சவங்களுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதே போல், பங்குனி மாத பூஜைகளுக்காக வரும் 9ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார்.அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் ஏதுமிருக்காது. மறு நாள் (10ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். தொடர்ந்து பங்குனி உத்திர வைபவத்திற்காக கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடை பெறும்.
வரும் 19ம்தேதி பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.கோவிலில் சிறப்பு பூஜைகளான களபாபிஷேகம், படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். பங்குனி உத்திர வைபவம் மற்றும் மாத பூஜைகள் முடிவடைந்து 19ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.
No comments:
Post a Comment