Showing posts with label செப்டம்பர் 2018. Show all posts
Showing posts with label செப்டம்பர் 2018. Show all posts

Friday, August 31, 2018

செப்டம்பர் மாத ஒரு வரி பலன்கள்


செப்டம்பர் மாத ஒரு வரி பலன்கள்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
+ சுபகாரியங்கள் அதிகம் நடக்கும். தடைகளை தகர்ப்பீர்கள்.
- பண விஷயங்களில் அதிக கவனம் தேவை.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
-----------------------
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
+: மன தைரியம் அதிகரிக்கும்
-: வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
-----------------------
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
+: குடும்பத்தில் மகிழ்ச்சி, அதிக சம்பாத்தியம்
-: வாழ்க்கைதுணை - நண்பர்களிடம் வீண் மனக்கசப்பு
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

-----------------------

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
+: அதிக உழைப்பு - அதிக வருமானம்
-: மூன்றாம் மனிதர்களால் பிரச்சனை
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
-----------------------
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

+: எடுத்த காரியங்களில் வெற்றி
-: உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
-----------------------
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
+: வேலைப்பளு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி
-: வாகனம் பயன்படுத்தும் போது கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

-----------------------

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
+: நீண்ண்ண்ண்ட வருடங்களுக்குப் பிறகு நல்ல திருப்பம்
-: முதலீடுகளில் கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24
-----------------------
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

+: தன்னம்பிக்கை அதிகரிக்கும், 7ம் தேதிக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வேகம் பிறக்கும்
-: சுபச் செலவுகள்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
-----------------------
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

+: பண தன சேர்க்கை
-: அதிக வேளைப்பளு - ஓய்வின்மை
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
-----------------------


மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

+: சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறுதல்
-: அதிக முன்கோபம் வருதல்
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30
-----------------------
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

+: நான்கு கிரக பார்வையால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள்
-: உடல்நிலையில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
-----------------------
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

+: தொழில் உத்தியோகத்தில் மாற்றம்
-: எதிலும் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

Saturday, August 25, 2018

செப்டம்பர் 2018 - பகுதி ஒன்று

செப்டம்பர் 2018 - பகுதி ஒன்று

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் - ஆவணி மாதம் 15ம் - தேதி பின்னிரவு (16ம் தேதி முன்னிரவு) - கிருஷ்ணபக்ஷ சஷ்டியும்  - பரணி நக்ஷத்ரமும் - துருவ நாமயோகமும் - தைதுல கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு ரிஷப லக்னத்தில் 2018 செப்டம்பர் மாதம் பிறக்கிறது.


 


செப்டம்பர் மாதம் பிறக்கும் போது மேஷ ராசியில் சந்திரன் - கடக ராசியில் ராகு - சிம்ம ராசியில் சூரியன், புதன் - துலா ராசியில் குரு, சுக்கிரன் - தனுசு ராசியில் சனி - மகர ராசியில் செவ்வாய்(வ), கேது என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
கிரகங்களுடைய நக்ஷத்ர பாதசஞ்சார விபரங்கள்:

லக்னம் - ரோகினி - 2ம் பாதம்
சூரியன் - பூரம் - 1ம் பாதம்
சந்திரன் - பரணி - 3ம் பாதம்
செவ்வாய் - திருவோணம் - 2ம் பாதம்
புதன் - மகம் - 3ம் பாதம்
குரு - விசாகம் - 2ம் பாதம்
சுக்கிரன் - சித்திரை - 3ம் பாதம்
சனி - மூலம் - 1ம் பாதம்
ராகு - பூசம் - 2ம் பாதம்
கேது - உத்திராடம் - 4ம் பாதம்