Friday, December 21, 2018

இன்றைய ராசிபலன் - 21.12.2018




மேஷம்:
இன்று வாகனம் ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இன்று இருக்கும். .
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
ரிஷபம்:
இன்று தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
மிதுனம்:
இன்று வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
கடகம்:
இன்று எல்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம்:
இன்று குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கன்னி:
இன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:
இன்று பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நாள். எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வெற்றி நிச்சயம். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:
இன்று பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்:
இன்று எதிர்காலத்தை நினைத்து பயப்படுவீர்கள். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கும்பம்:
இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மீனம்:
இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
செவ்வாய்
0
சந்திரன் 0
0
இன்றைய கிரகநிலை

நாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை
ராகு
கேது
0
சூரியன்
சனி
புதன்
குரு
புதன்
சுக்கிரன்
0

நாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை


நாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை





செவ்வாய்
0
சந்திரன் 0
0
இன்றைய கிரகநிலை
நாள்: 21.12.2018 - வெள்ளிக்கிழமை
ராகு
கேது
0
சூரியன்
சனி
புதன்
குரு
சுக்கிரன்
0


விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 06
இங்கிலீஷ்: 21 December 2018
வெள்ளிக்கிழமை
சதுர்த்தசி இரவு 2.10 மணி வரை. பின் பௌர்ணமி
ரோகிணி இரவு 1.43 மணி வரை. பின் மிருகசீரிஷம்
சாத்யம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 28.36
அகசு: 28.25
நேத்ரம்: 2
ஜீவன்: 1
தனுசு லகன் இருப்பு: 8.19
சூர்ய உதயம்: 6.30
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
கரிநாள்.
சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்ட திருக்கோலமாய்க் காட்சி.
திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரதோற்சவம்.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் இராப்பத்து உற்சவ ஸேவை.
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுசம்.
கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - மூலம் -2ம் பாதம் - - பகை
சந்திரன் - - ரிஷபம் - - உச்சம்
செவ்வாய் - - பூரட்டாதி -4ம் பாதம் - - பகை
புதன் - - கேட்டை -1ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை -1ம் பாதம் - - பகை
சுக்கிரன் - - சுவாதி -4ம் பாதம் - - ஆட்சி
சனி - - மூலம் 4-ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் -4ம் பாதம் - - பகை
கேது - - உத்திராடம் -2ம் பாதம் - - நட்பு

Weekly Tamil Horoscope From 20/12/2018 to 26/12/2018 | வார ராசி பலன்கள்




Wednesday, December 12, 2018

இன்றைய ராசிபலன் - 12.12.2018

இன்றைய ராசிபலன் - 12.12.2018


நாள்: 12.12.2018 - புதன்கிழமை

நாள்: 12.12.2018 - புதன்கிழமை




0
0
0 0
செவ்வாய் இன்றைய கிரகநிலை
12.12.2018 - புதன்கிழமை
ராகு
சந்திரன்
கேது
0
சனி
சூரியன் புதன்
குரு
சுக்கிரன்
0


விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 26
இங்கிலீஷ்: 12 December 2018
புதன்கிழமை
பஞ்சமி இரவு 9.46 மணி வரை. பின் ஷஷ்டி
திருவோணம் மாலை 4.01 மணி வரை. பின் அவிட்டம்
வ்யாகாதம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 35.03
அகசு: 28.28
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 6.41
சூர்ய உதயம்: 6.24
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
கிரகம் - பாதசாரம் - நிலை
சூரியன் - கேட்டை -3ம் பாதம் - பகை
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - பூரட்டாதி -3ம் பாதம் - பகை
புதன் - அனுஷம் -1ம் பாதம் - நட்பு
குரு - அனுஷம் -4ம் பாதம் - பகை
சுக்கிரன் - சுவாதி -2ம் பாதம் - ஆட்சி
சனி - மூலம் 4-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 1ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -3ம் பாதம் - நட்பு

Thursday, November 8, 2018

Weekly Tamil Horoscope From 08/11/2018 to 14/11/2018

Weekly Tamil Horoscope From 08/11/2018 to 14/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

நவக்ரஹ கற்கள் - ஓர் விளக்கம்


Sunday, November 4, 2018

05.11.2018 - திங்கட்கிழமை

05.11.2018 - திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும்.

குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

நாளை வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள் தந்தாரேஸ் எனப்படும் லக்ஷ்மிக்கான நாளாகும். தந்தாரேஸ் என்றால் தன திரயோதசி என்பதாகும்.

சுக்கிர ஹோரையில் வாங்குவது இன்னும் சிறப்பானதாகும்.

சுக்கிர ஹோரை நேரங்கள்:
காலை 11.00 - 12.00 மணி வரை
மாலை 6.00 - 7.00 மணி வரை


குறிப்பு:
இந்த நேரத்திற்கு ராகு காலம் - எமகண்டம் தோஷம் கிடையாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
EmaiL: ramjothidar@gmail.com

Wednesday, October 31, 2018

01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்


01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்

Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu
குலதெய்வம் - தீபாவளி ஸ்நானம் - கந்த சஷ்டி விரதம் பற்றிய குறிப்புகள்

Sunday, October 21, 2018

பஞ்சாங்கம் - 21.10.2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 04
இங்கிலீஷ்: 21 October 2018
ஞாயிற்றுக்கிழமை
 துவாதசி இரவு 9.16 மணி வரை. பின் த்ரயோதசி
சதயம் காலை 6.21 மணி வரை. பின்  பூரட்டாதி
வ்ருத்தி நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 17.51
அகசு: 29.20
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
துலாம் லக்ன இருப்பு: 7.54
சூர்ய  உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருப்பதி ஸ்ரீமுருகப் பெருமான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்
சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் நன்று
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: மகம்

Thursday, October 18, 2018

புதிய ஆண்டவன்

ஸ்ரீமதே ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகாய நமஹ

 
ஸ்ரீமான் யமுனாச்சார்யார் ஸ்வாமி (ஆண்டவன் திருக்குமாரர் ) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்திற்கு புதிய ஆண்டவனாக நியமிக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை (20th and 21st  October 2018 ) பட்டாபிஷேக வைபவம் ஸ்ரீரங்கம் பெரிய ஆஸ்ரமத்தில் நடைபெற இருக்கிறது. 

 

ஆண்டவன் சிஷ்யர்கள் அனைவரும் இந்த பட்டாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு ஆச்சார்யன் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் உதவி:
தாசன்
வேலாமூர் பத்தங்கி கோவிந்தராஜன்

விஜய தசமி - வெள்ளிக்கிழமை

விஜய தசமி - வெள்ளிக்கிழமை
நாள்: 19 அக்டோபர் 2018

ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம்:

லக்ன ரீதியாக:
அதிகாலை 4.30 - 6.00
காலை 6.00 - 7.30
காலை 9.00 - 10.30


ஹோரை ரீதியாக - எமகண்டம், ராகு காலம் பார்க்க தேவையில்லை:
காலை 6.00 - 7.00 - சுக்கிரன் ஹோரை
காலை 7.00 - 8.00 - புதன் ஹோரை
காலை 10.00 - 11.00 - குரு ஹோரை
மதியம் 2.00 - 3.00 - புதன் ஹோரை
மாலை 5.00 - 6.00 - குரு ஹோரை

குழந்தைகளை புதிதாக அக்ஷரப்பியாசத்திற்கு வித்யாரம்பத்திற்கு சேர்க்க:
காலை 9.00 - 10.30 - நல்ல நேரம்
மதியம் 12.00 - 1.30 - நல்ல நேரம்


குறிப்பு:
விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நக்ஷத்ரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.


கொலு குறிப்பு:
பொதுவாக கொலுவை விஜய தசமியன்று கலைப்பார்கள். ஆனால் இவ்வருடம் விஜய தசமி வெள்ளிக்கிழமையாக வருவதால் கலைக்கக் கூடாது. எனவே விஜயதசமி மறுநாள் அதாவது 20.10.2018 சனிக்கிழமையன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.

ஏகாதசி விரமிருப்பவர்கள் மட்டும் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை துவாதசியன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Wednesday, October 17, 2018

அவசர பதிவு

அவசர பதிவு:
நாளை - 18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை ஐப்பசி மாதம் பிறக்கிறது. மாத தர்ப்பணம் செய்பவர்களுக்கான பதிவு இது.

நாளை சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை சேர்ந்து வருவதால் எதை முதலில் செய்வது என்ற குழப்பம் பல பேருக்கு இருக்கிறது.
முதலில் மாத தர்ப்பணம் செய்து விட்டு அதன் பிறகு சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்வது நன்மை தரும்.

காலை 9 மணிக்குள்ளாக தர்ப்பணம் முடித்து விட்டு சரஸ்வது பூஜை செய்வது நல்லது.
எக்காரணத்தைக் கொண்டும் தர்ப்பணம் செய்த பின் குளிக்கக்கூடாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

பஞ்சாங்கம் - 18 அக்டோபர் 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 01
இங்கிலீஷ்: 18 October 2018
வியாழக்கிழமை
நவமி மாலை 3.58 மணி வரை. பின்  தசமி
திருவோணம் இரவு 1.39 மணி வரை. பின் அவிட்டம்
த்ருதி நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 59.53
அகசு: 29.24
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
துலாம் லக்ன இருப்பு: 8.06
சூர்ய  உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
துர்க்கோத்யாபலம்
விஷூ புண்ய காலம்
திருவோண விரதம்
மஹா நவமி
சரஸ்வதி பூஜை
திதி: நவமி
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்




கிரகம் - பாத சாரம் - நிலை

சூரியன் - சித்திரை -3ம் பாதம் -  நீசம்
சந்திரன் - மகரம் - பகை
செவ்வாய் - அவிட்டம் -1ம் பாதம் - உச்சம்
புதன் - விசாகம் -2ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 4ம் பாதம் - பகை
சுக்கிரன் - விசாகம் -1ம் பாதம் - நட்பு
சனி - மூலம் 2-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 1ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -3ம் பாதம் - நட்பு

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:
காலை 7.30 - 9.00
காலை 10.30 - 12.00
மாலை 3.00 - 4.30
மாலை 6.00 - 7.30


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 119542
Email: ramjothidar@gmail.com

வார ராசி பலன்கள் (18/10/2018 முதல் 24/10/2018 வரை) கணித்து, வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வார ராசி பலன்கள் (18/10/2018 முதல் 24/10/2018 வரை) கணித்து, வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சந்திர திசை சங்கட திசையா - விளக்கம்

குறிப்பு: வீடியோவை கடைசி வரை பார்க்கவும்.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

எல்லாம் இறைவன் செயல்

இந்த ஜாதகர் இந்திய அளவில் மிக மிக மிக முக்கியமான நபர். தற்போது பதவியில் இல்லை. தற்போது ஓய்வில் இருக்கிறார். ஆயில்யம் நக்ஷத்ரம் கடக ராசி தனுசு லக்னத்தில் பிறந்த இவருக்கு தற்போது ராகு திசையில் புதன் புத்தி நடக்கிறது. 04 டிசம்பர் 2020ல் ராகு திசையில் கேது புத்தி வரும் போது இவருக்கு மோசமான காலம் ஆரம்பமாகும். அப்போது லக்ன ரீதியாக வாக்கு சனியும் - ராசி ரீதியாக கண்டச் சனியும் - திசா புத்தியில் ராகு திசையில் கேது புத்தியும் நடக்கும். இறைவன் விஷயத்தில் விளையாடிய இவருக்கு இறைவன் விளையாட்டு காட்டும் தருணம். அந்த நேரம் இறைவன் இவருக்கு தண்டனைகளை வழங்குவார்.

 


எல்லாம் இறைவன் செயல்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

Email: ramjothidar@gmail.com

Monday, October 15, 2018

இன்றைய பஞ்சாங்கம் - 16 அக்டோபர் 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 30
இங்கிலீஷ்: 16 October 2018
செவ்வாய்க்கிழமை
ஸப்தமி பகல் 11.58 மணி வரை. பின் அஷ்டமி
 பூராடம் இரவு 8.35 மணி வரை. பின் உத்திராடம்
அதிகண்டம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 58.18
அகசு: 29.26
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 6.13
சூர்ய  உதயம்: 6.05


ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
துர்க்காஷ்டமி
சதாபிஷேக ஸ்நானம்
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

Saturday, October 13, 2018

இன்றைய பஞ்சாங்கம்: அக்டோபர் 14

இன்றைய பஞ்சாங்கம்: அக்டோபர் 14

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 28
இங்கிலீஷ்: 14 October 2018
ஞாயிற்றுக்கிழமை
பஞ்சமி காலை 8.59 மணி வரை. பின் ஷஷ்டி
கேட்டை மாலை 4.19 மணி வரை. பின் மூலம்
சௌபாக்யம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 47.10
அகசு: 29.29
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 6.21
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
இன்று ஸ்ரீமுருகப்பெருமானை வழிபட நன்று.
உபாங்க லலிதா கௌரி விரதம்.
ஷஷ்டி விரதம்
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

Friday, October 12, 2018

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

2011 ஆண்டில் முதல் முதலாக AIRTELல் ஒரு நம்பர் - 9790891864 என்ற எண் வாங்கி பயன்படுத்தி வந்தேன்.

அநேக நண்பர்களிடம் இந்த நம்பர்தான் இருந்து வந்தது.

ஒரு நண்பர் அந்த நம்பரை கேட்டதன் காரணமாக கொடுக்க நேர்ந்தது. அவர் அதை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். தற்போது அந்த நம்பரானது வேறொரு நபரிடம் சிக்கியிருக்கிறது.

நமது நண்பர்கள் அந்த நம்பருக்கு(நபருக்கு) போன் செய்ய வேண்டாம்.

எனது எண்: 78 45 11 95 42

இது மட்டுமே என்னுடைய எண்ணாகும்.

நன்றி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

Wednesday, October 3, 2018

04 October 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 18
இங்கிலீஷ்: 04 October 2018
வியாழக்கிழமை
தசமி  இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி
பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம்
சிவம் நாமயோகம்
வணிஜை கரணம்
அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: -
அகசு: 29.43
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 7.01
சூர்ய  உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
திதி: தசமி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம்


Sunday, September 30, 2018

இங்கிலீஷ்: 30 September 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 14
இங்கிலீஷ்: 30 September 2018
ஞாயிற்றுக்கிழமை
பஞ்சமி காலை 6.36 மணி வரை பின் ஷஷ்டி. ஷஷ்டி மறு நாள் காலை 4.54 மணி வரை. பின் ஸப்தமி
ரோகிணி இரவு 1.41 மணி வரை. பின் மிருகசீரிஷம்
ஸித்தி நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 29.46
அகசு: 29.49
நேத்ரம்: 2
ஜீவன்: 0   
கன்னி லக்ன இருப்பு: 7.15
சூர்ய  உதயம்: 6.05

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

Thursday, September 27, 2018

சந்திராஷ்டமம் பற்றிய குறிப்புகள்

Weekly Tamil Horoscope From27/09/2018 to 03/10/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

வார ராசி பலன்கள் (27/09/2018 முதல் 03/10/2018 வரை) கணித்து, வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சந்திராஷ்டமம் பற்றிய குறிப்புகள் - வீடியோவை கடைசி வரை பார்க்கவும்.


Saturday, September 8, 2018

எமது உயிரினும் மேலான

எமது உயிரினும் மேலான ரோகினி - ஹஸ்தம் - திருவோணம் - பூசம் - பூரம் நக்ஷத்திரங்களில் ஜெனித்த சொந்தங்களே - இன்று முதல் அக்டோபர் 27 வரை வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது - விவாதங்களில் வார்த்தைப் பிரயோகத்திலும் கவனம் அவசியம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
போன்: 7845 11 9542

Tuesday, September 4, 2018

நாளை (05.09.2018)

நாளை (05.09.2018) - புதன்கிழமை - திருவாதிரை நக்ஷத்ரம் - அரசியலில் எதிர்பார்ப்பது நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

Friday, August 31, 2018

செப்டம்பர் மாத ஒரு வரி பலன்கள்


செப்டம்பர் மாத ஒரு வரி பலன்கள்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
+ சுபகாரியங்கள் அதிகம் நடக்கும். தடைகளை தகர்ப்பீர்கள்.
- பண விஷயங்களில் அதிக கவனம் தேவை.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
-----------------------
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
+: மன தைரியம் அதிகரிக்கும்
-: வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
-----------------------
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
+: குடும்பத்தில் மகிழ்ச்சி, அதிக சம்பாத்தியம்
-: வாழ்க்கைதுணை - நண்பர்களிடம் வீண் மனக்கசப்பு
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

-----------------------

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
+: அதிக உழைப்பு - அதிக வருமானம்
-: மூன்றாம் மனிதர்களால் பிரச்சனை
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
-----------------------
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

+: எடுத்த காரியங்களில் வெற்றி
-: உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
-----------------------
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
+: வேலைப்பளு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி
-: வாகனம் பயன்படுத்தும் போது கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

-----------------------

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
+: நீண்ண்ண்ண்ட வருடங்களுக்குப் பிறகு நல்ல திருப்பம்
-: முதலீடுகளில் கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24
-----------------------
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

+: தன்னம்பிக்கை அதிகரிக்கும், 7ம் தேதிக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வேகம் பிறக்கும்
-: சுபச் செலவுகள்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
-----------------------
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

+: பண தன சேர்க்கை
-: அதிக வேளைப்பளு - ஓய்வின்மை
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
-----------------------


மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

+: சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறுதல்
-: அதிக முன்கோபம் வருதல்
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30
-----------------------
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

+: நான்கு கிரக பார்வையால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள்
-: உடல்நிலையில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
-----------------------
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

+: தொழில் உத்தியோகத்தில் மாற்றம்
-: எதிலும் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

துலா ராசியில் பிறந்த எமதருமை சொந்தங்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு:

துலா ராசியில் பிறந்த எமதருமை சொந்தங்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு:

நாளை - செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பொன்னான பலன்களைப் பெற போகிறீர்கள். எந்த விஷயத்திலும் பதற்றத்தை கை விட்டு நிதானத்தை கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்த்துக்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com


பிற்சேர்க்கை:
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்தும்.

Thursday, August 30, 2018

Panchangam: 31 August 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 15
இங்கிலீஷ்: 31 August 2018
வெள்ளிக்கிழமை
பஞ்சமி இரவு 8.10 மணி வரை. பின் ஷஷ்டி
அசுபதி இரவு 7.41 மணி வரை. பின் பரணி
வ்ருத்தி நாமயோகம்
கௌலவம் கரணம்
அமிர்த யோகம்





தியாஜ்ஜியம்: 23.53
அகசு: 30.33
நேத்ரம்: 2
ஜீவன்: 0  
சிம்ம லக்ன இருப்பு: 7.15
சூர்ய  உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்கக்கேடயச் சப்பரத்தில் பவனி
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

கிரக பாதசாரம்
சூரியன் - பூரம் -1ம் பாதம் - ஆட்சி
சந்திரன் - மேஷம் - பகை
செவ்வாய் - திருவோணம் -2ம் பாதம் - உச்சம்
புதன் - மகம் -2ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 2ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - சித்திரை -2ம் பாதம் - நீசம்
சனி - மூலம் 1-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 2ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -4ம் பாதம் - நட்பு


Wednesday, August 29, 2018

Panchangam - 30 August 2018


 
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 14
இங்கிலீஷ்: 30 August 2018
வியாழக்கிழமை
சதுர்த்தி இரவு 8.41 மணி வரை. பின் பஞ்சமி
ரேவதி இரவு 7.29 மணி வரை. பின் அசுபதி
கண்டம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 2.35
அகசு: 30.34
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
சிம்ம லக்ன இருப்பு: 7.19
சூர்ய  உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
மஹா சங்கடஹர சதுர்த்தி
தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு
சுபமுகூர்த்தம்
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்


கிரக பாதசாரம்

சூரியன் - மகம் -4ம் பாதம் - ஆட்சி
சந்திரன் - மேஷம் - பகை
செவ்வாய் - திருவோணம் -2ம் பாதம் - உச்சம்
புதன் - மகம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 2ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - சித்திரை -2ம் பாதம் -   - நீசம்
சனி - மூலம் 1-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 2ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -4ம் பாதம் - நட்பு

திதி நிர்ணயம் - பகுதி மூன்று

திதி நிர்ணயம் - பகுதி மூன்று

29 ஆகஸ்டு 2018 - புதன்கிழமை - சென்னை அயனாம்சத்திற்குரிய வாக்கிய பஞ்சாங்கப்படி -  திதி திருதியை: 36.31 நாழிகை

எப்படி ஒரு நாளுடைய திதியை நிர்ணயம் செய்வது? - வருஷாதி நூல் பிரமாணம்

பஞ்சாங்க தினசுத்தியில் திதி நிர்ணயம் செய்வதே அவசியமானது. ஒரு திதியானது அபரான்ன காலத்திற்கு மேல் வியாபித்திருக்குமானால் அந்த திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

இன்றைய நாளில் திருதியை திதி 36.31 நாழிகை வரை இருக்கும் போது இன்றைய திதி திருதியையா அல்லது சதுர்த்தியா?

திதி நிர்ணயம்படி இன்று திருதியையாக இருக்கும் போது - எப்படி சதுர்த்தியாக இருக்க முடியும்? அப்படியென்றால் இன்றைய நாளை எப்படி சதுர்த்தி என்று அறிவிக்கலாம்? அதையும் நம்பும் சில ஜனங்கள் இன்றைய நாளை சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடியாச்சு. அப்படியென்றால் நாளை சதுர்த்தி 36.24 வரை இருக்கிறதே. நாளைதான் சதுர்த்தி திதி எனவே நாளைதான் சங்கடஹர சதுர்த்தி. நாளைதான் மஹா சங்கடஹர சதுர்த்தி. குழம்ப வேண்டாம்.

குறிப்பு மற்றும் வேண்டுகோள்:
திதி நிர்ணயம் செய்வதிலும் - விசேஷங்கள் நிர்ணயம் செய்வதற்காகவும் பஞ்சாங்க சதஸ் நடக்கிறது. அப்போதெல்லாம் டீவியில் தலை காட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வது போல் இது போன்ற சதஸிலும் கலந்து கொள்வது அவசியம். குறைந்தபட்சம் திதி நிர்ணயம் செய்யவாவது தெரிந்து கொண்டு மக்களை வழி நடத்தவும்.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

திதி நிர்ணயம் - பகுதி இரண்டு

திதி நிர்ணயம் - பகுதி இரண்டு

ஒரு நாளினுடைய வருஷம் - அயனம் - ரிது - மாதம் - பக்ஷம் - திதி - வாரம் - நக்ஷத்ரம் - யோகம் - கரணம் ஆகியவற்றை தவறாக சொல்பவர்கள் ஜோதிடத்திற்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.


- ஜோதிஷ சாஸ்திரம்

திதி நிர்ணயம் - Part one (a)

திதி நிர்ணயம் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிவிக்கும் முன் ஒரு முக்கியமான அறிவிப்பு.

நாளைதான் மஹா சங்கடஹர சதுர்த்தி.

தொடரும்.....

திதி நிர்ணயம் - Part one

திதி நிர்ணயம் எவ்வாறு செய்வது?

தமிழ்நாட்டில் தற்போது இதுதான் ஹாட் டாபிக்.

குறிப்பு:

ஒரு ஜோதிடருக்கு அடிப்படை தகுதி நாள் நிர்ணயம். அதன் பிறகுதான் பலன்கள் - அதனால் ஏற்படும் பெயர், புகழ் Etc....

தொடரும்.

Tuesday, August 28, 2018

நாள்: 29 ஆகஸ்டு 2018 - புதன்கிழமை

நாள்: 29 ஆகஸ்டு 2018 - புதன்கிழமை 





விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 13
இங்கிலீஷ்: 29 August 2018
புதன்கிழமை
திரிதியை  இரவு 8.41 மணி வரை. பின் சதுர்த்தி
உத்திரட்டாதி மாலை 6.47 மணி வரை. பின் ரேவதி
சூலம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்

--------------------

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


--------------------

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
இன்று செடி, கொடி வைக்க நன்று
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
சுபமுகூர்த்தம்
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


--------------------

கிரக பாதசாரம்
சூரியன் - மகம் -4ம் பாதம் - ஆட்சி
சந்திரன் -  மீனம் - நட்பு
செவ்வாய் - திருவோணம் -2ம் பாதம் - உச்சம்
புதன் - மகம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 2ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - சித்திரை -2ம் பாதம் -   - நீசம்
சனி - மூலம் 1-ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 2ம் பாதம் - பகை
கேது - உத்திராடம் -4ம் பாதம் - நட்பு

Saturday, August 25, 2018

செப்டம்பர் 2018 - பகுதி ஒன்று

செப்டம்பர் 2018 - பகுதி ஒன்று

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் - ஆவணி மாதம் 15ம் - தேதி பின்னிரவு (16ம் தேதி முன்னிரவு) - கிருஷ்ணபக்ஷ சஷ்டியும்  - பரணி நக்ஷத்ரமும் - துருவ நாமயோகமும் - தைதுல கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு ரிஷப லக்னத்தில் 2018 செப்டம்பர் மாதம் பிறக்கிறது.


 


செப்டம்பர் மாதம் பிறக்கும் போது மேஷ ராசியில் சந்திரன் - கடக ராசியில் ராகு - சிம்ம ராசியில் சூரியன், புதன் - துலா ராசியில் குரு, சுக்கிரன் - தனுசு ராசியில் சனி - மகர ராசியில் செவ்வாய்(வ), கேது என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
கிரகங்களுடைய நக்ஷத்ர பாதசஞ்சார விபரங்கள்:

லக்னம் - ரோகினி - 2ம் பாதம்
சூரியன் - பூரம் - 1ம் பாதம்
சந்திரன் - பரணி - 3ம் பாதம்
செவ்வாய் - திருவோணம் - 2ம் பாதம்
புதன் - மகம் - 3ம் பாதம்
குரு - விசாகம் - 2ம் பாதம்
சுக்கிரன் - சித்திரை - 3ம் பாதம்
சனி - மூலம் - 1ம் பாதம்
ராகு - பூசம் - 2ம் பாதம்
கேது - உத்திராடம் - 4ம் பாதம்

Thursday, August 23, 2018

தேவையில்லாமல் பயத்தை உருவாக்க வேண்டாம்.

தேவையில்லாமல் பயத்தை உருவாக்க வேண்டாம்.

சமீபத்தில் கேரளத்தில் நிகழ்ந்த பேரிடர் வெள்ளத்தால் அந்த மாநில மக்கள் இழந்தவை ஏராளம் ஏராளம்.


சிலர் அதே போன்று தமிழகத்திலும் வெள்ளம் வரும் - தமிழகம் மிதக்கும் - மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்றெல்லாம் பயமுறுத்து வருவது வேதனைக்குரியது. வானிலை ரீதியாக கிரகங்கள் எதுவும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு எதிராக இல்லை. மழைப்பொழிவு இருக்குமே தவிர பயப்படக்கூடிய அளவில் இருக்காது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Tuesday, August 14, 2018

தற்போது 70.07

வரலாற்றில் முதல் முறையாக அமேரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு.

தற்போது 70.07.

வாழ்க வளமுடன்.

Monday, August 13, 2018

அவ்ளோதான்.

பூரம் - அனைவரையும் ஈர்க்கும், விட்டுக் கொடுத்து போனால் சாதிக்கலாம்
பூரட்டாதி நக்ஷத்ரம் - தானாக இயங்குவது கடினம்
ஸ்வாதி - சலசலப்பு இருக்கும்


அவ்ளோதான்.

பூரம் ஸ்வாதி

சிலர் எதிர்பார்ப்பது போல் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

பூரம் சுலபமாக ஸ்வாதியை சமாளிக்கும்.

😀😀😀

Thursday, August 9, 2018

திருப்புல்லாணி சேதுக்கரை ஸ்நானம்

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ...  திருப்புல்லாணி சேதுக்கரை ஸ்நானம் மற்றும் ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாளை சேவிக்க   செல்பவர்களுக்கு முன்பே தகவல் தந்துவிட்டு சென்றால் பிராமண தளிகை செய்து தருகிறார்கள். 

தொடர்புக்கு   

திருமதி காயத்ரி பாலாஜி 9585198933, 9786650889  

தங்குவதற்கு திருக்குறுங்குடி ஜீயர் மடம் திரு ரெகுபதி ஐயங்கார் (புரோகித்) 9787565303.
 
ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் திரு இரகுவீர் தயாள் அவர்கள் 9443301091.
 
ஸ்ரீகாந்த் அவர்கள் 9786001366. 

வெளியூரில் இருந்து செல்பவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். பகிருங்கள் யாவருக்கும் பயன்படும்.   

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்

Saturday, August 4, 2018

பஞ்சாங்க ஸ்ரவணம்:

பஞ்சாங்க ஸ்ரவணம்:
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தினமும் காலையில் விரிவான பஞ்சாங்கம் - ஆடியோ வடிவில் - விரைவில் .....



  • முழு பஞ்சாங்க விபரங்கள்
  • கிரகங்களுடைய பாதசாரங்கள் - கிரகங்களுடைய நிலை
  • சுப ஹோரைகள்
  • லக்ன விபரங்கள்

மேலும் பல.....

Tuesday, July 31, 2018

31 July 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 15
இங்கிலீஷ்: 31 July 2018
செவ்வாய்க்கிழமை
திரிதியை  காலை 7.26 மணி வரை. பின் சதுர்த்தி
சதயம் காலை 8.37 மணி வரை. பின்  பூரட்டாதி
ஷோபனம் நாமயோகம்
பத்ரை கரணம்
மரண யோகம்


 

தியாஜ்ஜியம்: 23.23
அகசு: 31.11
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
கடக லக்ன இருப்பு: 7.19
சூர்ய  உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
சங்கர ஹர சதுர்த்தி.
சுவாமி மலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: மகம்

கிரகம்    பாத சாரம்    நிலை
சூரியன்    பூசம் -4ம் பாதம்        பகை
சந்திரன்    கும்பம்            பகை
செவ்வாய்    திருவோணம் -3ம் பாதம்    உச்சம்
புதன்    பூசம் -1ம் பாதம்        நட்பு
குரு    விசாகம் - 1ம் பாதம்        நட்பு
சுக்கிரன்    உத்திரம் -1ம் பாதம்        பகை
சனி    மூலம் 2ம் பாதம்        நட்பு
ராகு    பூசம் - 3ம் பாதம்        நட்பு
கேது    திருவோணம் - 1ம் பாதம்    பகை

நம்மிடம் இருக்கும் உயர்ந்த எண்ணங்களே நமது சொத்து.

நம்மிடம் இருக்கும் உயர்ந்த எண்ணங்களே நமது சொத்து.

மற்றவையனைத்தும் அழியக்கூடியது.

 - தைத்திய உபநிஷத்

ஜோதிட ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் லக்னமும் - லக்னாதிபதியும் - லக்னத்தில் இருக்கும் கிரகங்களும் - லக்னத்தைப் பார்க்கும் கிரகங்களும் மிகவும் முக்கியமானதாகும். இதுதான் ஒருவருடைய குணாதிசயங்களை நமக்கு சொல்வது.

இதுவே பிரஸ்ணத்தில் லக்னத்தில் மாந்தி மிகவும் முக்கியம். ப்ரஸ்ண லக்னத்தில் மாந்தி இருந்தால் பார்க்கும் காரியம் தடைபடும்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Phone: +91 7845 11 9542

Sunday, July 29, 2018

நாள்: 30 ஜூலை 2018 - திங்கட்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 14
இங்கிலீஷ்: 30 July 2018
திங்கள்கிழமை
துவிதியை காலை 6.07 மணி வரை. பின் திரிதியை
அவிட்டம் காலை 6.39 மணி வரை. பின் சதயம்
சௌபாக்யம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 20.53
அகசு: 31.12
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
கடக லக்ன இருப்பு: 7.23
சூர்ய  உதயம்: 6.05



ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் - அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி.                                                           
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: ஆயில்யம்

கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -3ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - திருவோணம் -3ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -4ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 06:

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 06:

பொது ராசி பலன்கள்:

சிம்மம்:

பலம்: சுபவிரையம் - தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பலவீனம்: குடும்பத்தினர், குழந்தைகளுடன் கருத்து மோதல்

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23

கன்னி:

பலம்: பணவரவு, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்குதல்
பலவீனம்: தொழிலில் - உத்தியோகத்தில் அதிக சுமை

பரிகாரம்: குலதெய்வத்தினை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

துலாம்:

பலம்: பணவரவு, செயலில் முன்னேற்றம்
பலவீனம்: சிறு சிறு தடைகள்

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

விருச்சிகம்:

பலம்: புதிய வீடு மனை வாங்குதல் - தைரியம் அதிகரித்தல்
பலவீனம்: சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதம், பணம் சார்ந்த விஷயங்களில் கவனம்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

ஆகஸ்ட் ஸ்பெஷல் - பாகம் 07

ஆகஸ்ட் ஸ்பெஷல் - பாகம் 07

பொது ராசி பலன்கள்

தனுசு:

பலம்: வேலைகளில் சுறுசுறுப்பு - குடும்பத்தில் மகிழ்ச்சி
பலவீனம்: பண நெருக்கடி - நேரம் தவறிடுதல்

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

மகரம்:

பலம்: புதிய வீடு மனை பாக்கியம் கிடைத்தல் - தொழிலில் ஏற்றம்
பலவீனம்: செயல்களில் பதற்றம் - ஆரோக்கியத்தில் குறைபாடு

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

கும்பம்:

பலம்: சுபநிகழ்ச்சிகள் இருந்த தொய்வு நீங்குதல் - முயற்சிகளில் வெற்றி
பலவீனம்: வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை - மனம் ஒருமுகப்படாமை

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

மீனம்:

பலம்: குடும்பத்தில் மகிழ்ச்சி - புதிய சொத்துக்கள் சேருதல்
பலவீனம்: எடுக்கும் காரியங்களில் அதிக கவனம் தேவை - குழந்தைகளில் நலனில் அக்கறை தேவை

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

Saturday, July 28, 2018

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 05:

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 05:

பொது ராசி பலன்கள்:

மேஷம்:

பலம்: சுபநிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி
பலவீனம்: தொழிலில் சிறு சிக்கல், உத்தியோகத்தில் பணிச்சுமை

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13


ரிஷபம்:

பலம்: உழைப்பிற்கேற்ற அங்கீகாரம், பணவரவு
பலவீனம்: உடல் ஆரோக்கியத்தில் சிக்கல், பேச்சில் தடுமாற்றம்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16


மிதுனம்:

பலம்: வாக்கு வன்மை அதிகரிக்கும். தனவரவு உண்டு. வீடு மனை வாகன பாக்கியம் கிட்டும்
பலவீனம்: உடற் சோர்வு, மனதில் வீண் பயம்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18


கடகம்:

பலம்: எடுத்த முயற்சிகள் நல்லபடியாக முடியும். சொத்து சேர்க்கை உண்டு.
பலவீனம்: எதிலும் அவசரம், கடன் சுமை அதிகரிப்பு

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

ஆகஸ்ட் ஸ்பெஷல் - பாகம் 03 & பாகம் 04:

அதிர்ஷ்ட தினங்கள்:


சந்திராஷ்டம தினங்கள்:


Friday, July 27, 2018

நாள்: 28 ஜூலை 2018 - சனிக்கிழமை

 நாள்: 28 ஜூலை 2018 - சனிக்கிழமை
 

27 July 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 11
இங்கிலீஷ்: 27 July 2018
வெள்ளிக்கிழமை
பௌர்ணமி இரவு 2.27 மணி வரை. பின் பிரதமை
உத்திராடம் இரவு 1.47 மணி வரை. பின் திருவோணம்
விஷ்கம்பம் நாமயோகம்
பத்ரை கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 4.59
அகசு: 31.15
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
கடக லக்ன இருப்பு: 7.35
சூர்ய  உதயம்: 6.04

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சங்கரன் கோவில் தபசு. ஆடித்தபசு. பௌர்ணமி.

திதி:பௌர்ணமி
சந்திராஷ்டமம்: மிருகசீரீஷம், திருவாதிரை

Wednesday, July 25, 2018

நாள்: 26 ஜூலை 2018 - வியாழக்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 10
இங்கிலீஷ்: 26 July 2018
வியாழக்கிழமை
சதுர்த்தசி இரவு 12.29 மணி வரை. பின் பௌர்ணமி
 பூராடம் இரவு 11.12 மணி வரை. பின் உத்திராடம்
வைத்ருதி நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 3.10
அகசு: 31.16
நேத்ரம்: 2
ஜீவன்: 1  
கடக லக்ன இருப்பு: 7.39
சூர்ய  உதயம்: 6.04



ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரீஷம்

கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -2ம் பாதம் - பகை
சந்திரன் - தனுசு - நட்பு
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -3ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை




Weekly Tamil Horoscope From 26/07/2018 to 01/08/2018 | வார ராசி பலன்கள்

Weekly Tamil Horoscope From 26/07/2018 to 01/08/2018 | வார ராசி பலன்கள்


ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 02

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 02






கிரக மாற்றங்கள்:
ஆகஸ்டு 02 – பகல் 1.32 – சுக்கிரன் – கன்னி
ஆகஸ்டு 17 – மாலை 4.36 – சூரியன் – சிம்ஹம்
ஆகஸ்டு 21 – சனி – வக்ர நிவர்த்தி
ஆகஸ்டு 28 – காலை 11.01 – புதன் – சிம்ஹம்
ஆகஸ்டு 31 – இரவு 12.01 – சுக்கிரன் – துலாம்

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 01

ஆகஸ்டு ஸ்பெஷல் - பாகம் 01

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - தக்ஷிணாயனம் க்ரீஷ்ம ரிது ஆடி மாதம் 15ம் தேதி பின்னிரவு - 16ம் தேதி முன்னிரவு - கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியும் - பூரட்டாதி நக்ஷத்ரமும் - அமிர்தயோகமும் - அதிகண்ட நாமயோகமும் - பவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு மேஷ லக்னத்தில் ஆகஸ்டு மாதம் பிறக்கிறது.



இன்று - 25 ஜூலை 2018 - புதன்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 09
இங்கிலீஷ்: 25 July 2018
புதன்கிழமை
த்ரயோதசி  இரவு 10.38 மணி வரை. பின் சதுர்த்தசி
மூலம் இரவு 8.45 மணி வரை. பின்  பூராடம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்






தியாஜ்ஜியம்: -
அகசு: 31.17
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
கடக லக்ன இருப்பு: 7.43
சூர்ய  உதயம்: 6.04


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் சூர்ணோற்சவம். 
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம்.
திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -2ம் பாதம் - பகை
சந்திரன் - தனுசு - நட்பு
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -2ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -3ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை


Sunday, July 22, 2018

நாள்: 23 ஜூலை 2018 - திங்கட்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 07
இங்கிலீஷ்: 23 July 2018
திங்கள்கிழமை
ஏகாதசி இரவு 7.45 மணி வரை. பின்  துவாதசி
அனுஷம் மாலை 4.40 மணி வரை. பின் கேட்டை
சுப்ரம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்





தியாஜ்ஜியம்: 41.37
அகசு: 31.19
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
கடக லக்ன இருப்பு: 7.50
சூர்ய  உதயம்: 6.03


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -1ம் பாதம் - கடகம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - மகரம் - உச்சம்
புதன் - பூசம் -2ம் பாதம் - கடகம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - துலாம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -2ம் பாதம் - சிம்மம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - தனுசு - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - கடகம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - மகரம் - பகை

22 July 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 06
இங்கிலீஷ்: 22 July 2018
ஞாயிற்றுக்கிழமை
 தசமி  மாலை 6.57 மணி வரை. பின் ஏகாதசி
விசாகம் மாலை 3.15 மணி வரை. பின் அனுஷம்
சுபம் நாமயோகம்
தைதுலம் கரணம்
மரண யோகம்


 




தியாஜ்ஜியம்: 33.37
அகசு: 31.20
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 7.54
சூர்ய  உதயம்: 6.02


ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமீரவு தோளுக்கினியானில் பவனி.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -1ம் பாதம் - பகை
சந்திரன் - விருச்சிகம் - நீசம்
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -2ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -2ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை

Saturday, July 21, 2018

என்றும் தர்மம் துணை நிற்கும்

ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல எந்த மதத்திற்கும் - என்றும் தர்மம் துணை நிற்கும்.


இன்று: 21 ஜூலை 2018 - சனிக்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 05
இங்கிலீஷ்: 21 July 2018
சனிக்கிழமை
நவமி மாலை 6.40 மணி வரை. பின்  தசமி
சுவாதி பகல் 2.21 மணி வரை. பின் விசாகம்
சாத்யம் நாமயோகம்
பாலவம் கரணம்
அமிர்த யோகம்




தியாஜ்ஜியம்: 35.18
அகசு: 31.21
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 7.58
சூர்ய  உதயம்: 6.02

ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

இன்று சம நோக்கு நாள்
திரு ஆடி ஸ்வாதி
உபேந்திர நவமி.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி



கிரக பாதசாரம்
சூரியன் - பூசம் -1ம் பாதம் - பகை
சந்திரன் - துலாம் - பகை
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -3ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பூரம் -2ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை

இன்றைய ஜோதிட ஆன்மீக சிந்தனை:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

இன்று திரு ஆடி ஸ்வாதி. பக்ஷிராஜன் என்று அழைக்கக்கூடிய கருடாழ்வாரின் அவதார தினம். நரஸிம்ஹருக்கு மிக மிக உகந்த தினம்.






ராகு கேது தோஷம் இருப்பவர்கள் அருகிலிருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்குச் சென்று கருடாழ்வாருக்கு நடக்கக்கூடிய திருமஞ்சனத்தில் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.

ஸ்ரீநரசிம்ஹரை வழிபட்டால் கடன் சார்ந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.


Friday, July 13, 2018

வேண்டுகோள்

எந்த புஷ்கரமாக இருந்தாலும் சரி நாம் ஆற்றை மாசுபடுத்தாமல் இருந்தாலே அது புண்ணியம்.

Tuesday, July 3, 2018

இன்று - 03 ஜூலை 2018 - செவ்வாய்கிழமை

இன்று - 03 ஜூலை 2018 - செவ்வாய்கிழமை

விளம்பி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 19
இங்கிலீஷ்: 03 July 2018
செவ்வாய்க்கிழமை
பஞ்சமி இரவு 7.50 மணி வரை. பின் ஷஷ்டி
சதயம் இரவு 1.06 மணி வரை. பின்  பூரட்டாதி
ஆயுஷ்மான் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்

தியாஜ்ஜியம்: 2.29
அகசு: 31.32
நேத்ரம்: 2
ஜீவன்: 0  
மிதுன லக்ன இருப்பு: 6.51
சூர்ய  உதயம்: 5.57

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


இன்று மேல்நோக்கு நாள்
சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் ரதோற்சவம்.
சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

கிரக பாதசாரம்
சூரியன் - திருவாதிரை -4ம் பாதம் - பகை
சந்திரன் - கும்பம் - பகை
செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -3ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - ஆயில்யம் -4ம் பாதம் - பகை
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - நட்பு
கேது - திருவோணம் - 1ம் பாதம் - பகை

Wednesday, June 27, 2018

மீண்டும் தேவ பிரஸ்ணம்

இன்றைய சூழ்நிலையில் அவசர கதியிலேயே அனைத்து விஷயங்களும் நடப்பது உண்மைதான். ஆனால் அதற்காக தெய்வம் சம்பந்தமான விஷயங்களிலும் அவசரம் என்றால் எப்படி?

இன்று சென்னை அம்பத்தூரில் ஒரு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை தென் தமிழகத்தில் ஒரு பிரபலமான கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

 

இன்று 27.06.2018 அன்று கேட்டை நக்ஷத்ரம். வரும் வெள்ளிக்கிழமை பூராடம் நக்ஷத்ரம். எப்படி கும்பாபிஷேகத்தை நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை.

பஞ்சாங்கம் அடிப்படை தெரியாதவர்களெல்லாம் நாள் குறித்தால் இப்படித்தான். ஆகாத நக்ஷத்ரம் 12 என்று வருஷாதி நூல் சொல்கிறது. ஆகம சாஸ்திரத்தில் கும்பாபிஷேக நிர்ணயத்தில் சந்திரனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிற்ப சாஸ்திரத்தில் சிலைக்கு கண் திறப்பதற்கு என்று சில நிபந்தனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாள் எப்படி குறிக்கிறார்கள். செய்யும் தொழிலுக்கு தயவு செய்து துரோகம் செய்யாதீர்கள்.

இதைப் பற்றி பதிவுகள் இட ஆரம்பிக்க இருக்கிறேன்.....

மீண்டும் தேவ பிரஸ்ணம் தொடரில் சந்திப்போம்.....

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

நாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்

நாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்





Thursday, June 21, 2018

Weekly Tamil Horoscope From 21/06/2018 to 27/06/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 21/06/2018 to 27/06/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடக ராசிக்காரர்களுக்கு உணவு கட்டுப்பாடு

குறிப்பு: கடைசி வரை வீடியோவை பார்க்கவும்.


Sunday, June 17, 2018

18 June 2018

விளம்பி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 04
இங்கிலீஷ்: 18 June 2018
திங்கள்கிழமை

இன்று - 17 ஜூன் 2018 - ஞாயிற்றுக்கிழமை

இன்று - 17 ஜூன் 2018 - ஞாயிற்றுக்கிழமை