Sunday, September 23, 2012

இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி - அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்

'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை!

Saturday, September 22, 2012

புரட்டாசி சனிக்கிழமை விசேஷ பூஜை - பாகம் இரண்டு

அனைவருக்கும் வணக்கம்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாம் ஏற்பாடு செய்திருந்த புரட்டாசி சனிக்கிழமை முதல் வார - விசேஷ ஸங்கல்ப - விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் மிக நன்றாக நடந்து முடிந்தது.

புரட்டாசி சனிக்கிழமை விசேஷ பூஜை - பாகம் ஒன்று

அன்பின் அனைவருக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் வணக்கங்கள்.

குப்பு ஜோஸ்ய பிரம்மா குப்பு ஜோஸ்ய விஷ்ணோ குப்பு ஜோஸ்ய தேவோ மஹேஷ்வர: குப்பு ஜோஸ்ய சாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீகுப்பு ஜோஸ்ய ஸ்வாமினே நமோ நம:

ஏதோ ப்ளாக்கில் எழுதுகிறோம், யார் யாரோ பார்க்கிறார்கள். சும்மா கடமைக்கு என்று எழுத ஆரம்பிப்போம் என நினைத்திருந்தேன். கடந்த 3 வருடங்களாக நம்மிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நன்மைக்காகவும் மற்றும் மற்றவர்களுக்காகவும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து பூஜை மற்றும் பாராயணம் செய்வது வழமை. ஆனால் இவ்வருடம் எதேச்சையாக எங்களுடைய ஆதிகுரு குப்பு ஜோஸ்யரின் கட்டளைப்படி ஆரம்பித்தால் அதன் மூலமாக 100க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளது. அனைவரது பெயரையும் சேர்த்து விட்டோம். பூஜைகளுக்குண்டான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. சரியாக மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என பகவானிடம் பிரார்த்தனை செய்திருக்கிறோம். எங்களுக்கு மெயில் செய்தவர்களுக்காக மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்த எங்களது ஆதிகுரு ஸ்ரீகுப்பு ஜோஸ்யர், எனது பெரியப்பா ப்ரும்மஸ்ரீ வெங்கடாஜலம் ஜோஸ்யர், எனது பெற்றோர், ப்ளாக்கர் இட்லிவடை, ரோமிங் ராமன் அண்ணா என அனைவருக்கும் எங்களது நன்றிகள். ஒருவரது பெயரையும் விட்டுவிடாமல் ஸங்கல்பத்தில் இணைத்து விட்டோம். அனைவருக்கும் எங்களுடைய ஆசீர்வாதங்கள்.

இரவு பூஜைகள் முடிந்தவுடன் அப்டேட் செய்கிறேன்.

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

Friday, September 21, 2012

Vishnu Sahasranama Parayanam

Greetings to everyone from Perunkulam Sri Navaratna Vilas Jyothisha Nilayam & Blessings to all from the Guru Parampara.

We proposed to conduct the Vishnu Sahasranama Parayanam in all the Saturdays of this Auspicious Purattasi Month.

We request everyone to send their name, gothram, star and rasi for including in the Maha Sankalpams on all the Saturdays pooja. Also you can mention if you have any specific sankalpam like, marriage, work,puthra bagyam etc.



Notes:
[1] This is a completely free service for the Lokakshemam.
[2] One Family may include max 5 stars.
[3] We can send Prasatham[Sri Chakra dollar, Aksathai, Sri Choornam, Red coir which you can be tied in the hands] to you after the last saturday Pooja, you have to pay only for the courier charges.
[4] This is free who attend Sani Transit Homam, Guru Transit Homam which  was perfomed by us earlier
[5] The names will be included in sankalpam in all purattasi Saturdays.
[6] This service is open to all.



You can email the details to the below mentioned ID: ramjothidar@gmail.com

தந்தப் பல்லாக்கு


 

Thursday, September 20, 2012

அட்டமூர்த்தங்கள்

இயற்கையில் இறைவனைக் கண்டது தமிழ் நெறி. திருமுறைகள் இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களுடன் சூரியன், சந்திரன், ஆத்மாவையும் சேர்த்து அட்டமூர்த்தங்கள் ஆகும்.

இந்த அட்டமூர்த்தங்கள் 8 தலங்களில் இருக்கின்றன.

பிருத்வி லிங்கம் - திருவாரூர்
அப்புலிங்கம் - திருவானைக்காவல்
அக்னி லிங்கம் - திருவண்ணாமலை
ஆகாச லிங்கம் - சிதம்பரம்
சந்திர லிங்கம் - மதுரை
வாயுலிங்கம் - காளஹஸ்தி
சூரியலிங்கம் - திருச்சிராப்பள்ளி
ஆத்மலிங்கம் - திருப்பெருந்துறை(கரூர் என்றும் சொல்வதுண்டு)

இட்லிவடையில் எமது விளம்பரம்

Saturday, September 15, 2012

Navarathriyil Nava Durga Pooja

Namaskarams to All,

I am happy to inform you all that my last publication 'Navarathriyil Nava Durga Pooja" will be available in market through the following companies.

1) Giri Trading Agencies ( All Branches)

2) Ganapathy Book Centre - Nanganallur - (Opp to 32 Feet Anjaneyar Temple ). 044-22671943,. 9840939589.

3) Jayalakshmi Indological Book House
       6 (New No 11), Appar Swami Koil Street, Mylapore  Chennai, Tamil nadu 600004
       044 24990539

Also at our Trust Address:
Sathguru Sri Lalithananda Maha Swamigal Brindavanam Trust
8/34, Usha Nagar 1st Street
Ullagaram Chennai - 600 091


I request all our members/devotees to inform their friends and relatives to get this book during this wonderful navarathri and get the abundant blessings of Nava Durga Devi's.

You can give this book as a gift to your beloved during the occasions like birthday,marriage,sashtiabthapoorthy etc., and giving the blessings of nava durga devi's through this gift.

Any queries on the pooja method, you can always get in touch with me over the mail and also i can be reached at my handphone : 9841222143.
 
Kannan Kumaraswamy
 
 
Kannan Kumaraswamy's profile photo
 
srividhyapeetam@gmail.com

அறிவிப்பு

புரட்டாசி சனிக்கிழமை - அர்ச்சனை ஸங்கல்பம் - இலவச சேவை


அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமை(அனைத்து சனிக்கிழமைகளிலும்) தோறும் விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. 



 அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை, குழந்தை Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

மெயில் செய்ய வேண்டிய முகவரி: ramjothidar@gmail.com.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] பிரஸாதம் வேண்டுவோர் புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்குள் கூரியர் சார்ஜ் மட்டும் அனுப்பிவைத்தால் பிரஸாதம் தபாலில் அனுப்பப்படும்.  [ஸ்ரீ சக்ர டாலர், அக்ஷதை, ஸ்ரீ சூர்னம், கையில் கட்டிக் கொள்ள கயிறு]
[4] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[5] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[6] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.