Thursday, November 23, 2017

நாள்: 24.11.2017 - வெள்ளிக்கிழமைசூரிய உதயம் : காலை 6.21
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருவோண விரதம். 
திருவண்ணாமலை அருணாசலநாயகர் சூரியப்பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
ஸ்ரார்த்த திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: புனர்பூசம்

வார ராசி பலன்கள் 23/11/2017 முதல் 29/11/2017 வரை

வார ராசி பலன்கள் 23/11/2017 முதல் 29/11/2017 வரை
https://youtu.be/fqsguIYyf-M

Tuesday, November 14, 2017

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

எந்த விஷயமானாலும் உதாரணமாக ராசிக்கல், தில ஹோமம், மற்ற பரிகார ஹோமங்கள், ஏனைய ஜோதிட பரிகாரங்கள் - எதுவானாலும் நானாக செய்து கொடுக்கிறேன் என சொல்லுவதில்லை. கமிஷன் பெற்றுக் கொள்வதும் இல்லை.

முதலில் நாம் தேவையில்லாமல் பரிகாரங்கள் சொல்லுவதில்லை. அதிகபட்சமாக நாம் சொல்லக்கூடிய பரிகாரம் வீட்டில் தானே செய்யக்கூடியவையாக இருக்கும். முதலில் ஜோதிடர் என்பவர் பரிகாரம் சொல்லக்கூடியவராகத்தான் இருக்க வேண்டுமே தவிர செய்து கொடுப்பவராக இருக்கக் கூடாது.

புரோகிதர் பரம்பரையில் வந்ததால் காம்யார்த ஹோமங்கள் - கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கிறேன்.

அதே போல் கீழ்க்காணும் விஷயங்கள் செய்வதில்லை.


குறிப்பு:
[1] கமிஷன் வாங்கிக் கொண்டு ராசிக்கல் வாங்கி கொடுப்பது இல்லை.

[2] உங்களுக்கு இந்த தோஷம் - அதனால் இந்த பரிகாரம் செய்யுங்கள் -அதை நான் செய்து கொடுக்கிறேன் என சொல்லுவதில்லை.

[3] இதே போல் இவரிடம் சென்று நீங்கள் பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என சொல்லுவதில்லை.

[4] திருக்கடையூரில் திருமணம் செய்து வைப்பதற்கு எனக்கு யாரையும் தெரியாது. அவர்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து வைக்கவும் தெரியாது.

[5] ராமேஸ்வரம் - திருப்புல்லாணியில் தில ஹோமம் செய்து வைப்பதற்கும் - ஸ்நான ஸங்கல்பம் செய்து வைப்பதற்கும் எனக்கு நன்கு தெரிந்த அண்ணன்மார்கள் இருக்கிறார்கள். கேட்டுக் கொண்டால் மட்டும் அவர்களுடைய தொடர்பு எண் கொடுப்பது வழக்கம். அவர்களிடம் அபிமானத்தை தவிர எந்த சன்மானத்தையும் பெற்றுக் கொள்வதில்லை.

[6] திருச்செந்தூர் எமது சொந்த ஊர், ஆனால் இந்நாள் வரை யாருக்காவது அங்கு உதவி தேவைப்பட்டால் எனது பெற்றோரை அனுப்புவேனே தவிர அங்கு யாரையும் Refer செய்வதில்லை.

இன்று 14 நவம்பர் 2017

இன்று 14 நவம்பர் 2017
செவ்வாய்கிழமை
ஏகாதசி பகல் மணி 3.01 வரை. பின் துவாதசி
உத்திரம் நட்சத்திரம் பகல் மணி 3.25 வரை. பின் ஹஸ்தம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவம் கரணம்
நக்ஷத்ரயோகம்: அமிர்த யோகம்For more details: http://bit.ly/1SNUkW1Monday, November 13, 2017

இன்று: 13 நவம்பர் 2017

இன்று: 13 நவம்பர் 2017
கிழமை: திங்கட்கிழமை
இன்றைய ராசிபலன்
இன்றைய பஞ்சாங்கம்

www.kuppuastro.comMonday, October 23, 2017

பொருளாதார மந்தநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்

வரும் நவம்பர் 3ம் தேதி அசுரகுரு சுக்கிரன் செவ்வாயின் சித்திரை நக்ஷத்ர சாரம் பெற்று துலா ராசிக்குள் நுழைகிறார். அதன்பின் தேவகுருவும் அசுரகுருவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த இணைவிற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக ஏறும். கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இரண்டு காலங்களாக பிரித்துப் பார்த்தால் -
வரும் நவம்பர் 2ம் தேதிக்கான காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலை மாறும்.

2018 பிப்ரவரி 14க்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

Perungulam Ramakrishnan Josiyar
+91 89390 41417
ramjothidar@gmail.com

Wednesday, October 18, 2017

முக்கியமான அறிவிப்பு

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சில முக்கியமான விஷயங்களை அன்பின் சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

ஏற்கனவே அறிவித்தபடி மஹா பெரியவாளின் ஆஞ்ஞைப்படியும் - பெருங்குளம் குப்பு ஜோஸ்யரின் ஆசீர்வாதப்படியும் Periyava Matrimony என்று ஒரு Matrimonyக்கான இணையதளம் தொடங்க இருக்கிறோம்.

இது முழுக்க முழுக்க இலவச சேவை. இதில் அனைத்து ஜாதியினரும் வரன்களை தேடிக் கொள்ள முடியும்.

இதனுடைய Facebook Link: https://www.facebook.com/groups/273344172855443/?ref=br_rs

முக்கியமான அறிவிப்பு:
அறிவிப்பு 1:
இதில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் திருமணம் சார்ந்த ஜோதிட பலன் இலவசமாக பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரால் சொல்லப்படும்.

அறிவிப்பு 2:
இதில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் 9 மாதங்கள் அவர்களுடைய நக்ஷத்ரம் வரும் மாதா மாதம், ஏதேனும் ஒரு கோவிலில் சீக்கிரம் திருமணம் கைகூடுவதற்கு அர்ச்சனை செய்து பிரசாதம் தபாலில் அனுப்பப்படும்.

அறிவிப்பு 3:
6 மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் சுயம்வரா பார்வதி - கந்தர்வராஜ ஹோமம் செய்யப்படும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன 3 அறிவிப்புகளுக்கும் கட்டணமில்லை.


விரைவில் periyava.in என்ற இணையதளம் செயல்படத் துவங்கும். அதுவரை உங்களுடைய Profileஐ periyavamatri@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு எனக்கு உறுதுணை அளிக்கும் எம் அன்புத் தோழர்கள் மடிப்பாக்கம் ராகேஷ் அண்ணா Ram Prakash - மடிப்பாக்கம் ரகோத்தமன் மாமா Ragothaman Sundararaman - அம்பத்தூர் கிருஷ்ணகுமார் அண்ணா - குரோம்பேட்டை அஸ்ட்ரோ முரளி அண்ணா - மடிப்பாக்கம் தமிழ்செல்வன் Tamil Selvan - அன்புத் தோழி கிருத்திகா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


மேலும் விபரங்களுக்கு:
Periyava Matrimony & Team
Email: periyavamatri@gmail.com
Mobile: 89390 41417, 8838880294