Showing posts with label ஆன்மீகத் தொடர். Show all posts
Showing posts with label ஆன்மீகத் தொடர். Show all posts

Tuesday, December 16, 2014

திருப்பாவை தொடர் - பாகம் 1

திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்
 
 
 
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
 
நன்றி: தினமலர்

Saturday, October 12, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஒன்பதாம் நாள் - தொடர் 10

நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்


திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்        வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
        மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
        இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
         கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  


[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :


[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

Friday, October 11, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை எட்டாம் நாள் - தொடர் 9

நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்


அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி



 




உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்


குணம்    குரூரம் (சத்ருக்களை )


சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
       காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
       சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
       நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :


[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

நவராத்திரி வழிபாட்டு முறை ஏழாம் நாள் - தொடர் 8

நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்




அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி


உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி


நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை 6 – 7.30


மலர்    முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கல்யாணி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பரணி, பூரம், பூராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே


[2] மூல மந்திரம்:  ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :


[3] காயத்ரி:  ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!

Thursday, October 10, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் - தொடர் 7


நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்


அம்பாள் கௌமாரி


உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.


குணம் சௌம்யம்


சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்


நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்


பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் செவ்வரளி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7

பாட வேண்டிய ராகம்
காவடி சிந்து


யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்


திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:


[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :


[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

Wednesday, October 9, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஐந்தாம் நாள் - தொடர் 6

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
 
 
 



அம்பாள்    மகேஷ்வரி


உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்


நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்:   அடானா


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி


திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
    போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :


[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

Tuesday, October 8, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள் - தொடர் 5

நவராத்திரி வழிபாட்டு முறை - நான்காம் நாள்



அம்பாள்    வைஷ்ணவி


உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்


நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
       அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
       நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
       மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :


[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

Sunday, October 6, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள் - தொடர் 4

நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்


அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)


உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.


குணம்:   சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்


நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30


மலர்:    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
    பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :


[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

Saturday, October 5, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள் - தொடர் 3


நவராத்திரி வழிபாட்டு முறை
இரண்டாம் நாள்


அம்பாள்

வராஹி


உருவ அமைப்பு
பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்
குணம்
குரூரம்
சிறப்பு
ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி
நெய்வேத்யம்
தயிர்சாதம், பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர்
முல்லை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்
9
பாட வேண்டிய ராகம்
கல்யாணி
யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்
திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்
திசை புத்தி நடப்பவர்கள்
சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்
லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்
தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்
சொல்ல வேண்டிய பாடல்:
[1]    துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
   பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
   கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
   அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!
[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:
[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

Friday, October 4, 2013

நவராத்திரி தொடர் 2 - நவராத்திரி வழிபாட்டு முறை முதலாம் நாள்

நவராத்திரி வழிபாட்டு முறை

முதலாம் நாள்:-

அம்பாள்: சாமுண்டி

உருவ அமைப்பு:
தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்

குணம்: குரூரம் (நீதியைக் காக்க)

சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி

நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை

பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 - 12; மாலை: 6 - 7.30

பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை

சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7

பாட வேண்டிய ராகம்: காம்போதி

யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)

திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு - திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:
[1]    மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
    காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
    வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
    பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:

[3] காயத்ரி: ஓம்  பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்



கொலு எதற்கு?

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.







Monday, September 30, 2013

நவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 2


நவக்கிரகம் எனப்படுவது:
[1] சூரியன்
[2] சந்திரன்
[3] செவ்வாய்
[4] புதன்
[5] குரு
[6] சுக்கிரன்
[7] சனி
[8] இராகு
[9] கேது

மேற்கண்டவைகளில் முதல் ஏழும் ஸப்த கிரகங்கள் என்று அழைக்க்படுகிறது. பின்னாளில் சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் இராகு கேது ஆகியோர் இணைக்கப்பட்டார்கள். எனவே இவை நவக்கிரகம் ஆயிற்று.

சாயா என்றால் வடமொழியில் நிழல் என்பதாகும். இவ்வாறு அழைக்கபட இன்னோரு முக்கிய காரணம் உண்டு. இந்த கிரகங்களுக்கு என சுய ஆதிபத்தியம் கிடையாது. ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி ஆதிபத்தியத்தை முழுவதுமாக இவர்களே வழங்குவார்கள். இந்த பலன்களை இரட்டிப்பானவை. இவர்கள் நன்மை தீமை ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.

நவக்கிரகங்கள் எப்படி உலா வருகின்றனர்?
நவக்கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஸப்த கிரகங்கள் பிரதட்சினமாகவும்(Clockwise) ராகு கேதுக்கள் அப்பிரதட்சினமாகவும் (Anti-Clockwise) உலா வருகின்றனர்.

ஆலயங்களில் நவக்கிரகம் இருக்க வேண்டிய இடம்?

ஆலயங்களில் பொதுவாக நவக்கிரகமானது வடகிழக்கு மூலையான ஈசானுயத்தில்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சிற்ப சாஸ்திரம், ஆகமங்கள் ஆகியவை தெரிவிக்கின்றன.

பிரதிஷ்டை:

நவக்கிரகங்களைப் பொதுவாக இரண்டு விதமான முறைகளில் பிரதிஷ்டை செய்வார்கள்.

அவை
[1] சிவாகம பிரதிஷ்டை
[2] வைதீகப் பிரதிஷ்டை

நம் நாட்டில் அதிகபட்சமாக சிவாகம பிரதிஷ்டை முறையில்தான் நவக்கிரகங்கள் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றனர்.

இன்றைய ஸ்பெஷல்
நவக்கிரக கோலங்கள் – சூரியன்

சிவாகம பிரதிஷ்டை என்றால் என்ன?



தொடரும்.....

Sunday, September 29, 2013

நவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 1

நவகிரகங்களைப் பற்றி எவ்வளவோ நாம் தெரிந்து வைத்திருந்தாலும் இந்த தொடரில் மிக வித்தியாசமான முறையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

  • நவக்கிரகம் என்பவர்கள் யார்?
  • எப்படி பிரதிஷ்டை செய்வது?
  • சிவாகம பிரதிஷ்டை
  • ஆலயங்களில் நவக்கிரகங்கள்
  • நவக்கிரகங்களின் வரலாறு
  • அறிவியல் பூர்வமாக நவக்கிரகங்கள்
  • நவக்கிரகங்களின் யந்திரம், மந்திரம், மூலிகைகள்
  • கோவில்கள்
  • நமக்கு நாமே பரிகாரம் செய்து கொள்ளும் முறைகள்
போன்ற பல அரிய தகவல்களை நமது சொந்தங்களுக்கு கொடுக்கப் போகிறோம்.

நவக்கிரகம் என்பவர்கள் யார்?



இறைவனின் அந்தரங்கப் பணியாளர்களே இந்த நவக்கிரக தேவதைகள். இறைவன் ஒருவனுக்கு எந்தக் காலத்தில் என்ன செய்ய வேண்டுமோ அந்தக் காலத்தில் அதை அவர்களுக்குத் தப்பாமல் தருவதுடன் இறைவனின் வேலைப் பளுவை முற்றிலும் இல்லாமல் மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வந்தவர்களே நவக்கிரகங்கள்.

இன்றைய ஸ்பெஷல்:

நவக்கிரகங்களின் சூக்ஷ்ம மந்திரங்கள்
சூரியன்: ஓம் ஹ்ரீம் சூர்யாய நம!
சந்திரன்:ஓம் க்லீம் சந்திராய நம!
செவ்வாய்:ஓம் ஹ்ரீம் மங்களாய நம!
புதன்: ஓம் ஐம் ஐம் புதாய நம!!!!
குரு: ஓம் ஸ்ரீம் குருவே நம!
சுக்கிரன்: ஓம் ஸ்ரீம் சுக்ராய நம!
சனி: ஓம் ஸ்ரம் சனீஸ்வராய நம!
ராகு: ஓம் க்லீம் ராகுவே நம!
கேது: ஓம் தும் கேதுவே நம!
 

மேற்சொல்லியிருக்கும் மந்திரங்களால் என்ன பயன்?

தொடரும்......