நவராத்திரி வழிபாட்டு முறை
முதலாம் நாள்:-
அம்பாள்: சாமுண்டி
உருவ அமைப்பு: தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்
குணம்: குரூரம் (நீதியைக் காக்க)
சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி
நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை
பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 - 12; மாலை: 6 - 7.30
பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை
சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7
பாட வேண்டிய ராகம்: காம்போதி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)
திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு - திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
[2] மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
[3] காயத்ரி: ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்
கொலு எதற்கு?
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.
No comments:
Post a Comment