Saturday, August 31, 2013

கேள்வி - பதில்: கிழக்கு சூலம் - சுபதினம்

மிக முக்கியமான கேள்வி: திரு.மணிமாறன், சென்னை.

கேள்வி:
வரும் செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை அன்று எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. அன்றைய தேதியில் சூலம் கிழக்கு என்று போட்டிருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்தவர் ஒருவர் நிச்சயம் பண்ணப்போகும் மாப்பிள்ளையும் பெண்ணும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார கூடாது, எனவே மேற்கில் பார்த்தோ அல்லது வடக்கில் பார்த்தோ உட்கார வைக்க வேண்டும் என்று கூறுகிறார், இது சரியா?



 

பதில்:
கட்டாயமாக கூடாது. நமது பெரியவர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களில் திசையும் அதை சார்ந்த விஷயங்களும் ஒன்று. எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் நாம் கிழக்கு முகமாக உட்கார்ந்துதான் செய்தல் வேண்டும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. சூரியன் ஒருவரே பிரம்மம். அவர் இல்லையென்றால் இவ்வுலகம் இயங்காது. எனவே தான் கிழக்கு முகத்தை தேர்ந்தெடுத்தார்கள். மேலும் காந்தவியல் ரீதியாகவும் கிழக்கு திசையில் உட்கார்ந்து தியானம் போன்றவற்றை செய்யும் போது பலன்கள் அதிகமாக கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். சூலம் என்பது பயணம் செல்வதற்கு மட்டுமே பார்க்க வேண்டும். அந்த சூலம் பார்ப்பது என்பது தற்போதுள்ள நடைமுறையில் நமக்கு எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதும் தெரியவில்லை. எனவே உங்கள் நிச்சயதார்த்தத்தில் நீங்களும் உங்கள் வருங்கால மனைவியும் கிழக்கு முகமாக உட்கார்ந்தே சாங்கியங்களை செய்வதே உகந்தது.

உங்கள் நிச்சயதார்த்த வைபவம் இனிதே நடைபெற எங்களது ஆசிகள். வாழ்த்துக்கள்.

Thursday, August 29, 2013

செய்தி: குரு பகவானின் கோசார நிலைமை

 நேற்று இரவு 28.08.2013 குரு பகவான் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இருந்து புனர்பூசம் நக்ஷத்ரத்தில் பாதசாரம் பெற்றிருக்கிறார். புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி வரும்.

Tuesday, August 27, 2013

நாளைய பஞ்சாங்கம்: 28.08.2013 - புதன்

நாளைய பஞ்சாங்கம்: 

28.08.2013 - புதன்

விஜய வருஷம்
ஆவணி மாஸம் 12ம் தேதி - ஆகஸ்டு 28 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
புதன்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) அஷ்டமி
நக்ஷத்ரம்: கார்த்திகை மாலை 4.28 வரை பின் ரோகினி
யோகம்: வியாகதம்
கரணம்: பாலவம் கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.07
அஸ்தமனம்: மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 30.36
லக்ன இருப்பு: சிம்மம் காலை மணி 08.12 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மதியம் 12.07 முதல் 1.37 வரை
குளிகை: காலை 10.37 முதல் 12.07 வரை
எமகண்டம்: காலை 7.37 முதல் 9.07 வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: அமிர்தயோகம் மாலை 4.28 வரை பின் சித்தயோகம்
சந்திராஷ்டமம்: சித்திரை, ஸ்வாதி

குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.07 - 10.37, மாலை 4.37 - 6.07
[2] கீழ்நோக்கு நாள்
[3] தேய்பிறை அஷ்டமி விரதம்
[4] கோகுலாஷ்டமி
[5] இன்று புருஷஸூக்தம் பாராயணம் செய்தல் நன்று

----------------------------------------------------------------

கிரக பாதசாரம்:





 


சூரியன் - மகம் 4
சந்திரன் - மேஷம் இரவு 8.55க்கு மேல் ரிஷபம்
செவ்வாய் - பூசம் 1
புதன் - பூரம் 2
குரு(வியாழன்) - திருவாதிரை 4
சுக்ரன் - ஹஸ்தம் 3
சனி - ஸ்வாதி 1
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

Wednesday, August 21, 2013

மிக முக்கியமான கேள்வி: வாஸ்து நாள் சந்தேகம்



கேள்வி: வரும் ஆகஸ்டு 22ம் தேதி வாஸ்து நாள் வருகிறது. ஆனால் யோகம் மரணயோகம் என்று இருக்கிறது. எங்கள் வீட்டிற்கு வாஸ்து நாள் செய்யலாமா? 




பதில்: வரும் ஆகஸ்டு மாதம் 22ம் தேதி காலை மணி 7.23க்கு மேல் 7.59 வரை வீடு, மனை, மடம், ஆலயம், கிணறு - வாஸ்து செய்ய நன்று. சில விஷயங்களை நாங்கள் சொல்லப் போகிறேன். ஒரு குழந்தை பிறந்து வீட்டிற்கு புண்யாஹவாசனம் செய்வதற்கு, வாஸ்து நாள் செய்வதற்கு, ஒருவர் இறந்து அவருக்கு செய்யும் 16ம் நாள் ஈமக்கிரியை போன்றவைக்கு லக்னமோ, ராகு காலமோ, எமகண்டமோ, நக்ஷத்திரமோ, யோகமோ, ஹோரையோ, முக்குண வேளையோ அல்லது பஞ்சகமோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே தாங்கள் தாராளமாக வாஸ்து நாளைச் செய்யலாம்.

வாழ்த்துக்கள்.

Tuesday, August 20, 2013

புதிய முகப்புத்தகம் பக்கம் - ஸ்ரீயந்திரம்

அன்பின் சொந்தங்களே பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.




நமது சொந்தங்களுக்காக முகப்புத்தகத்தில் புதிய பக்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் மந்திரங்கள், யந்திரங்கள் மற்றும் விளக்கங்கள் ஆகியவை இருக்கும்.

அதற்கான சுட்டி இங்கே

சௌரமானம் - சந்திரமானம் வேறுபாடு


    சூரியனை முதன்மையாகக் கொண்டு அவர் ஒரு ராசியில் செல்லும் நாழிகையை கணக்கில் கொண்டு அதை வைத்து கணிதம் செய்வது சூரிய சித்தாந்தம் அலல்து சௌரமான என்பார்கள். இம்முறையையே நமது நாட்டில் பல்வேறு வகையினர் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அம்மாதங்களின் பெயர்களும் வழங்கப்படுகின்றது. எடுத்துக்காட்டு: மேஷ மாஸம் - சூரியன் மேஷத்தில் பயணம் செய்யும் காலம் - சித்திரை


    சந்திரனை முதன்மையாகக் கொண்டு அமாவாசை முதல் நாளின் ஆரம்ப பெயராகக் கொண்டு கணக்கீடு செய்வது சாந்திரமானம் ஆகும் அல்லது சந்திர சித்தாந்தம். பௌர்ணமி சேரும் நக்ஷத்திரத்தை கொண்டே அந்த அந்த மாதங்களுக்குப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றது. எடுத்துக்காட்டு: சைத்ர மாதம் - சந்திரன் சித்திரை மாதத்தில் சூரியனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சித்திரை நக்ஷத்திரத்தில் இருப்பது பௌர்ணமி.

Wednesday, August 14, 2013

இந்தியா - அன்னாளும் இந்நாளும் - வருடபலன்

அனைவருக்கும் வணக்கம்.

நமது நாடு சுதந்திரமடைந்து இன்றுடன் 66 வருடங்கள் நிறைந்து விட்டது. ஆனாலும் எத்துனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் நமது நாடு பீடு நடை போட்டுக் கொண்டுதானிருக்கிறது. 
 
தங்கள் இன்னுயிரை நீத்து நமது நாட்டை ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பிய அனைத்து புண்ணிய ஆத்மாக்களுக்கும் நமஸ்காரங்கள். 
 


 
சரி விஷயத்திற்கு வருவோம்.

நமது நாடு சுதந்திரம் அடைந்த நாள்: 15.08.1947; 00.00; இடம்: புது டில்லி
பூசம் நக்ஷத்திரம் - கடக ராசி - ரிஷப லக்னம் - கிருஷ்ண் பக்ஷ தேய்பிறை திரயோதசி - சூரிய திசை புதன் புத்தி 25.04.2014 வரை பின் சூரிய திசை கேது புத்தி. சுகஸ்தானாதிபதி திசை தன பஞ்சமாதிபதி புத்தி.


 
 
நாம் இப்போது சொல்லப் போகும் பலன்கள் நாடி முறையில் (ஓலைச்சுவடி நாடியல்ல). அதாவது ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கோட்சார கிரகங்கள் நாடி வந்து இருப்பதை வைத்து சொல்லப்படும் பலன்கள். எனவே இவ்வருட சுதந்திர தின கோட்சார நிலையை வைத்து பலன் சொல்லப் போகிறோம்.




இதில் நாம் சொல்வது பொது பலன்கள் மட்டுமே. கிரகநிலையை சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாமே!!!!

எப்படி இருக்கும் 15-08-2013 - 15-08-2014?


நாட்டினுடைய அமைப்பு:
நல்ல மழை இருக்கும். இடி மின்னல் கடுமையாக இருக்கும். அடிக்கடி சூரியன் மறைந்து இருட்டும். அதிக அளவில் குளிர் இருக்கும். உஷ்ணமும் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படும். கடல் மட்டத்திற்குள் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும்.

விவசாயம்:
பணப்பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து மக்களுக்கு நன்மை அளிப்பார்கள். நெல் கோதுமை போன்ற தானியங்கள் நிறைவாக இருக்கும். பெரும்பாலான விவசாய சொந்தங்களுக்கு கடன் பிரச்சனை தீரும். மக்களுக்கு தேவையான உணவு தொய்வின்றி கிடைக்கும். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரும் கிடைக்கும்.

அரசு:
மத்திய அரசில் பல விதமான குழப்பங்கள் சம்பவிக்கும். தேர்தல் நடைபெறும் காலம் திசா புத்தி மாறுவதாலும் கேது புத்தி வருவதாலும் மக்கள் ஞானமடைந்து வாக்களிப்பார்கள். கட்சிகளை விட மக்கள் வேட்பாளர்களுக்கு முக்கியம் அளிப்பார்கள். மேலும் சூரிய திசை கேது புத்தி வருவதால் குழப்பான முடிவுகளே வரும். மேலும் பல ஊழல்கள் மக்களிடம் அம்பலமாகும்.

பாதுகாப்பு:
அன்னிய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு அச்சுறுத்தல் வந்த வண்ணம் இருக்கும். ராணுவம் எல்லைகளில் விழ்ப்புடன் இருந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் வைத்திருப்பார்கள். புதிய புதிய தீவிரவாத குழுக்களை ராணுவம் கண்டறிந்து ஒடுக்கும். அதிநவீன ஆயுதங்களை நமது நாடு வாங்கும். காவல்துறையினருக்கு ஓய்வின்றி உழைக்க நேரும். கடல் ஆராய்ச்சி விஷயத்தில் நமது நாட்டிற்கு வெற்றி கிடைக்கும். புதிய புதிய ராக்கெட் அனுப்புவார்கள். அணுமின் நிலையம் அதிகமாக இடி மின்னலுடன் பாதிக்கும். விமானங்கள் பாதிப்புகளுக்கு உண்டாகும். அடிக்கடி கடல் மட்டத்தில் மாற்றங்கள் வருவதும், அச்சுறுத்துவதுமாக இருக்கும்.

பொருளாதாரம்:
நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும். கரும்பு பற்றாக்குறை ஏற்படும். நெல் அரிசி விலை உயரும். மளிகை பொருட்களின் விலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். எண்ணை வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு நீங்கும். இனிப்பு வகைகள் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். பழங்களின் விலையும் கடுமையாக உயரும். சாராயம் விலை உயரும். ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த தொய்வு ஏற்படும். கட்டுமான பொருட்களின் விலை அளவுக்கதிகமாக உயரும். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான குழப்பங்கள் இருக்கும். விலையேற்றம் மக்களை கடுமையாக பிழியும். கம்பளி, பாதரசம், மின்பொருள் இவைகளின் விலை குறையும். வாசனாதி திரவியங்களின் விலையும் குறையும். மக்களுக்கு புதிய நோய் ஒன்று வரும். மருந்துகளின் விலையில் கடுமையான ஏற்றம் இருக்கும். மக்கள் அடிக்கடி உபயோகிக்கும் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். மின்சார பிரச்சனையில் நாடு தவிக்கும்.



Saturday, August 10, 2013

மொசில்லா பயர்பாக்ஸ் தமிழ் வெளியிட்டு விழா

மொசில்லா பயர்பாக்ஸ் தமிழ் வெளியிட்டு விழா




அண்மையில் மொசில்லா பயர்பாக்ஸ் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு அதிகாரபூர்வ பதிப்பாக வெளிவந்துள்ளது. இதை கொண்டாடும் பொருட்டு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (FSFTN) மற்றும் மொசில்லா தமிழ் குழு ஆகியன இணைந்து வெளியிட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழா சென்னை மைலாபூரில் உள்ள சிவகாமி பெட்டாச்சி அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாய் கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
--
நன்றி,
அருண் பிரகாஷ்
Arun Prakash - arun@fsftn.org
ஒருங்கிணைப்பாளர் / மொசில்லா தமிழ்
__________________________________________

Thursday, August 8, 2013

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி - சிறப்பு பூஜை யாகம்

நிகழும் மங்களகரமான 1188ம் ஆண்டு  ஆவணி மாதம் 24ம் தியதி (09-09-2013) திங்கட்கிழமையும் சுக்ல சதுர்த்தியும் சித்திரை நக்ஷத்ரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி சிறப்பு மஹா யாகம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம்.

திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க, குபேர சம்பத்து பெற, நல்ல கல்வி கிடைக்க, ஆரோக்கியத்தியத்துடன் வாழ, தடைகள் நீங்க, வீடு பேறு கிடைத்திட. குடும்பத்தில் அமைதி நிலவ  கலந்து கொள்ளுங்கள்.  


ஹோமம்  09-09-2013 அன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் முகவரியை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


பூஜை மற்றும் ஹோமம் நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்

முகவரி
மொபைல் நம்பர்

தொடர்புக்கு: 7845119542
நன்றி.

குறிப்பு:
[1] அன்பர்கள் முடிந்த வரை தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த செய்தியை சொல்லி இணைய சொல்லவும்.
[2] இது முற்றிலும் இலவச சேவை.
[3] ஒரு குடும்பத்திற்கு எத்தனை பெயர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
[4] பிரஸாதம் தபாலில் அனுப்பப்படும்.
[5] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் அனைத்திற்கும் பூஜை செய்யப்படும்.
[6] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

Wednesday, August 7, 2013

நலமுடன் இருக்கிறோம்

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 5 நாட்களாக பயணம். வெள்ளிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி. சனிக்கிழமை முதல் செவ்வாய் வரை சேர நாட்டு பயணம். சோட்டாணிக்கரை, கூத்தாட்டுக்குளம், நெல்லிக்கரா, திருச்சூர், பாலக்காடு என கடுமையான பயணம்.

சேர நாட்டில் மிகக் கடுமையான மழை மற்றும் வெள்ளம்.

அனைத்து நீர்நிலைகளிலும் அளவுக்கதிகமான தண்ணீர்.

நாங்கள் சென்றிருந்த 4 நாட்களும் மழைதான்.

நாங்கள் சென்றிருந்த போது அலைபேசி பழுதாகிவிட்டது. அதனால் கடந்த 4 நாட்களாக யாரிடமும் பேச இயலவில்லை.


இன்றுதான் வர முடிந்தது.