Wednesday, August 14, 2013

இந்தியா - அன்னாளும் இந்நாளும் - வருடபலன்

அனைவருக்கும் வணக்கம்.

நமது நாடு சுதந்திரமடைந்து இன்றுடன் 66 வருடங்கள் நிறைந்து விட்டது. ஆனாலும் எத்துனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் நமது நாடு பீடு நடை போட்டுக் கொண்டுதானிருக்கிறது. 
 
தங்கள் இன்னுயிரை நீத்து நமது நாட்டை ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பிய அனைத்து புண்ணிய ஆத்மாக்களுக்கும் நமஸ்காரங்கள். 
 


 
சரி விஷயத்திற்கு வருவோம்.

நமது நாடு சுதந்திரம் அடைந்த நாள்: 15.08.1947; 00.00; இடம்: புது டில்லி
பூசம் நக்ஷத்திரம் - கடக ராசி - ரிஷப லக்னம் - கிருஷ்ண் பக்ஷ தேய்பிறை திரயோதசி - சூரிய திசை புதன் புத்தி 25.04.2014 வரை பின் சூரிய திசை கேது புத்தி. சுகஸ்தானாதிபதி திசை தன பஞ்சமாதிபதி புத்தி.


 
 
நாம் இப்போது சொல்லப் போகும் பலன்கள் நாடி முறையில் (ஓலைச்சுவடி நாடியல்ல). அதாவது ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கோட்சார கிரகங்கள் நாடி வந்து இருப்பதை வைத்து சொல்லப்படும் பலன்கள். எனவே இவ்வருட சுதந்திர தின கோட்சார நிலையை வைத்து பலன் சொல்லப் போகிறோம்.
இதில் நாம் சொல்வது பொது பலன்கள் மட்டுமே. கிரகநிலையை சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாமே!!!!

எப்படி இருக்கும் 15-08-2013 - 15-08-2014?


நாட்டினுடைய அமைப்பு:
நல்ல மழை இருக்கும். இடி மின்னல் கடுமையாக இருக்கும். அடிக்கடி சூரியன் மறைந்து இருட்டும். அதிக அளவில் குளிர் இருக்கும். உஷ்ணமும் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படும். கடல் மட்டத்திற்குள் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும்.

விவசாயம்:
பணப்பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து மக்களுக்கு நன்மை அளிப்பார்கள். நெல் கோதுமை போன்ற தானியங்கள் நிறைவாக இருக்கும். பெரும்பாலான விவசாய சொந்தங்களுக்கு கடன் பிரச்சனை தீரும். மக்களுக்கு தேவையான உணவு தொய்வின்றி கிடைக்கும். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரும் கிடைக்கும்.

அரசு:
மத்திய அரசில் பல விதமான குழப்பங்கள் சம்பவிக்கும். தேர்தல் நடைபெறும் காலம் திசா புத்தி மாறுவதாலும் கேது புத்தி வருவதாலும் மக்கள் ஞானமடைந்து வாக்களிப்பார்கள். கட்சிகளை விட மக்கள் வேட்பாளர்களுக்கு முக்கியம் அளிப்பார்கள். மேலும் சூரிய திசை கேது புத்தி வருவதால் குழப்பான முடிவுகளே வரும். மேலும் பல ஊழல்கள் மக்களிடம் அம்பலமாகும்.

பாதுகாப்பு:
அன்னிய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு அச்சுறுத்தல் வந்த வண்ணம் இருக்கும். ராணுவம் எல்லைகளில் விழ்ப்புடன் இருந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் வைத்திருப்பார்கள். புதிய புதிய தீவிரவாத குழுக்களை ராணுவம் கண்டறிந்து ஒடுக்கும். அதிநவீன ஆயுதங்களை நமது நாடு வாங்கும். காவல்துறையினருக்கு ஓய்வின்றி உழைக்க நேரும். கடல் ஆராய்ச்சி விஷயத்தில் நமது நாட்டிற்கு வெற்றி கிடைக்கும். புதிய புதிய ராக்கெட் அனுப்புவார்கள். அணுமின் நிலையம் அதிகமாக இடி மின்னலுடன் பாதிக்கும். விமானங்கள் பாதிப்புகளுக்கு உண்டாகும். அடிக்கடி கடல் மட்டத்தில் மாற்றங்கள் வருவதும், அச்சுறுத்துவதுமாக இருக்கும்.

பொருளாதாரம்:
நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும். கரும்பு பற்றாக்குறை ஏற்படும். நெல் அரிசி விலை உயரும். மளிகை பொருட்களின் விலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். எண்ணை வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு நீங்கும். இனிப்பு வகைகள் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். பழங்களின் விலையும் கடுமையாக உயரும். சாராயம் விலை உயரும். ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த தொய்வு ஏற்படும். கட்டுமான பொருட்களின் விலை அளவுக்கதிகமாக உயரும். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான குழப்பங்கள் இருக்கும். விலையேற்றம் மக்களை கடுமையாக பிழியும். கம்பளி, பாதரசம், மின்பொருள் இவைகளின் விலை குறையும். வாசனாதி திரவியங்களின் விலையும் குறையும். மக்களுக்கு புதிய நோய் ஒன்று வரும். மருந்துகளின் விலையில் கடுமையான ஏற்றம் இருக்கும். மக்கள் அடிக்கடி உபயோகிக்கும் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். மின்சார பிரச்சனையில் நாடு தவிக்கும்.No comments: