Sunday, January 28, 2018

பயம் வேண்டாம் உறவுகளே

அடிக்கடி சில பேர் ப்ரஸ்ணம் பார்க்கும் போது கேட்கும் கேள்வி, ”ஐயா எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ யாரேனும் செய்வினை வைத்துள்ளார்களா” என்பது.
- உங்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியோ - பஞ்சமாதிபதியோ - பாக்கியாதிபதியோ வலுத்திருந்தால் யார் செய்வினை வைத்தாலும் செல்லாது.
- உங்கள் ஜாதகத்தின் ஷட்பலத்தில் குரு பலமாக இருந்தால் செய்வினை தோஷம் இல்லை.
- எந்த செய்வினை இருந்தாலும் குல தெய்வத்தையும் - முன்னோர்களையும் வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது.
- குல தெய்வம் - கிராம தெய்வம் - இஷ்ட தெய்வம் - பெற்றோர்கள் - முன்னோர்கள் ஆகியோரை அனுதினமும் வணங்குபவர்களுக்கு எந்த குறைவும் வராது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

சிறப்பு கோரிக்கை - வேண்டுகோள்

அனுஷம் - ரோகினி - திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்த என் அன்பு கண்மணிகளே பிப்ரவரி 16 வரை வண்டி வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் - வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தும் போதும் - மிக மிக மிக கவனம் தேவை.

Saturday, January 27, 2018

ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்

ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்:

- குலதெய்வத்தை இடைவிடாமல் வணங்க வேண்டும்

- முன்னோர்களை தினமும் வணங்க வேண்டும், முக்கியமாக அமாவாசை அன்றாவது



- சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களை தினமும் வலம் வர வேண்டும்

- ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அம்மனை வணங்குவது

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

மீடியாவிற்கு நல்ல தீனி காத்திருக்கிறது

சனி பகவான் பெயர்ச்சியாகி 1 மாதம் 8 நாட்கள் தான் முடிந்திருக்கிறது. அதற்குள்ளேயே தாங்க முடியலன்னா எப்படி? இன்னும் பல விஷயங்கள் - விஷமங்கள் 2020 மார்ச் வரை அரங்கேற காத்திருக்கிறது. 

மீடியாவிற்கு நல்ல தீனி காத்திருக்கிறது.



2020 மார்ச் மாதம் சனி பகவான் மகர ராசிக்கு மாறுகிறார். அதன் பின் தமிழகத்தை - தமிழக மக்களை யார் யார் வஞ்சித்தார்களோ அவர்கள் அனைவருக்கும் சனி பகவான் நீதி வழங்குவார். 

சட்டத்தின் பிடியிலிருந்து யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம் - ஆனால் சனியின் நீதிப் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

அய்யனாரை பிரார்த்திக்கிறேன்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Friday, January 26, 2018

தினபலன்: 26.01.2018

தினபலன்: 26.01.2018

வார ராசி பலன்கள் 25/01/2018 முதல் 31/01/2018 வரை

வார ராசி பலன்கள்  25/01/2018 முதல் 31/01/2018 வரை
தை கிருத்திகை - விசேஷ குறிப்பு
திருமணப் பொருத்தம் - பாப ஸாம்யம்

https://youtu.be/9PIsjVNrwLs




சாய்பாபா கோவில் பூமி பூஜையில் ப்ரஸ்ணம்

நேற்று நடைபெற்ற சாய்பாபா கோவில் பூமி பூஜையில் ப்ரஸ்ணம் பார்த்த போது வந்த லக்னம் - துலாம்.

சர லக்னம்.

லக்னாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில். 

லக்னத்தில் பஞ்சமாதிபதி குரு.



லக்னேசனுடன் பாக்கியாதிபதி புதன் இணைவு.

லக்னத்தை தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் பார்க்கிறார்.

குருவும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். குரு சந்திர யோகம்.

ஐந்தாமிடத்தை ஐந்திற்குடையவர் சனியும் - குருவும் - தன களத்திராதிபதி செவ்வாயும் இணைந்து பார்க்கிறார்கள்.

லக்னம் - வலு
லக்னாதிபதி - சுக்கிரன் வலு (சூரியன் - கேதுவுடன் இணைந்திருந்தாலும்)
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - வலு
பாக்கியஸ்தானம் - வலு

Wednesday, January 24, 2018

குல தெய்வ ப்ரஸ்ண விளக்கம்

நேற்று பார்த்த குல தெய்வ ப்ரஸ்ண விளக்கம்:

ப்ரஸ்ண லக்னம்: கன்னி

லக்னாதிபதி புதன் மறைவில்லை. 

உபய லக்னம் - பெண் அம்சம்.

ரிஷபம் - கன்னி - மகரம் வந்தால் ஊரின் பிரதான தெய்வம் இல்லை. உப தெய்வம். ப்ரஸ்ண திசையில் தெற்கு. எனவே ஊருக்கு தெற்கு திசையில் கோவில் அமைந்திருக்கிறது.



லக்னத்தை சனி பார்ப்பதால் ப்ரஸ்னம் பார்க்கும் இவர்களுக்கும் கோவிலுக்கும் தற்போது தொடர்பு இல்லை. ஆனால் பஞ்சமாதிபதி சனியுடன் லக்னாதிபதி இணைவு - பாக்கியாதிபதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் மிக வலு. எனவே தேவதையின் சாந்நித்யம் அருமை. 

இவர்கள் அந்த தேவதையை வணங்காவிட்டாலும் தேவதையின் அருள் இந்த குடும்பத்திற்கு இருக்கிறது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Monday, January 22, 2018

ஸ்ரீசாய்பாபா கோவில் பூமி பூஜை

வரும் வியாழக்கிழமை - 25.01.2018 - அன்று காலை 7.00 மணி முதல் ஸ்ரீசாய்பாபா கோவில் பூமி பூஜை

இடம்:
மீனாக்ஷிபுரம்

வழி:
திண்டுக்கல் - வாடிப்பட்டி - மீனாக்ஷிபுரம்
அல்லது
கோடை ரோடு - வாடிப்பட்டி - மீனாக்ஷிபுரம்


காலை 10.30 முதல் 11.00 மணிக்குள் வரும் அனைவரும் தங்களது திருக்கரங்களால் சாய்பாபா கோவிலுக்கு பூமி பூஜையில் கல் வைக்க முடியும். 

முக்கியமாக மதுரை - திண்டுக்கல் - பழனி பகுதியை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள முடியும்.

மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

Friday, January 19, 2018

தை மாதம் தமிழக அரசியலில் மாற்றம்.

சூரியன் - சனி இணைவு - மார்கழி மாதத்தில் தமிழக அரசியலில் சலனம்.

சூரியன் - கேது இணைவு - சந்திர கிரஹணம் - தை மாதம் தமிழக அரசியலில் மாற்றம்.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

காலையில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக ப்ரஸ்ணம்:

காலையில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக ப்ரஸ்ணம்:

உதயாதி லக்னம்: ரிஷபம்

முதலில் லக்னாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் வலு. லக்னத்தை குரு பார்க்கவில்லை என்றாலும் விநாயகருக்குரிய கிரகம் கேது, அவர் பாக்கியஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் இணைவு.



அஷ்டமத்து சனியால் விநாயகருக்கு தோஷம் ஏற்படாது. எனவே லக்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Wednesday, January 17, 2018

கடுமையான பணிச்சுமை

18 , 19 - கும்பாபிஷேகம்
20, 21, 22 - வெளியூர் பயணம்
23 - கோவில் ப்ரஸ்ணம்
24 - கோவில் ப்ரஸ்ணம்
25 - மதுரை சாய்பாபா கோவில் பூமி பூஜை
26, 27 - கோவில் ப்ரஸ்ணம்
28 - கிரஹப்ரவேசம்
29 - பிப்ரவரி 2 - சொந்த ஊர் பயணம், திருச்செந்தூர்

இது இந்த மாத நிகழ்ச்சி நிரல்:

இதனிடையே பத்திரிகைகள் வேலை - mp3 ரெக்கார்டிங் வேலை - ஏற்கனவே இமெயில் அனுப்பியவர்களுக்கு அனுப்பும் வேலை - வீடியோ எடுப்பது போன்ற கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில்தான் பலருக்கும் போனில் பதிலளிக்க வேண்டியுள்ளது. 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

Tuesday, January 16, 2018

இன்றைய கிரக பாதசாரம்: நாள்: 16 ஜனவரி 2018 - செவ்வாய்கிழமை

இன்றைய கிரக பாதசாரம்:
நாள்: 16 ஜனவரி 2018 - செவ்வாய்கிழமை

தினபலன்: 16-01-2018 செவ்வாய்கிழமை


தினபலன்: 16-01-2018
செவ்வாய்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 16 ஜனவரி 2018 - செவ்வாய்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் - 16 ஜனவரி 2018 - செவ்வாய்கிழமை

இன்று - 16.01.2018 - செவ்வாய்கிழமை


Sunday, January 14, 2018

பிதற்றல் - நியூஸ் 7

நியூஸ் 7 தொலைக்காட்சியில் எது தமிழ் புத்தாண்டு என ஒரு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

அத்தனையும் பிதற்றலான வாதம்.

என்னா ஜால்ரா.....

Saturday, January 13, 2018

நாள்: 14 ஜனவரி 2018 - ஞாயிற்றுக்கிழமை


அவலம்

உனது நிலையை அறியாவதவர்களிடம் தொடர்பு வைத்தால் உன் நிலைமை ஒருநாள் அவலத்திற்கு ஆளாகும்.
பெருங்குளம் குப்பு ஜோஸ்யர்.

Friday, January 12, 2018

மிக கவனமாக படிக்க வேண்டிய விஷயம்:

மிக கவனமாக படிக்க வேண்டிய விஷயம்:
சனி பகவானுடைய சஞ்சாரம் தனுசு ராசிக்குள் கடந்த 19ம் தேதி வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழ்ந்தது. ஒரு மாதம் கூட முழுமை பெறவில்லை.

தனுசு ராசி என்பது தெய்வங்களைக் குறிக்கக் கூடிய ராசியாகும். 



உதாரணமாக ஏதேனும் ஒரு கோவிலுக்கு ப்ரஸ்ணம் பார்க்க முற்படும் போது - தனுசு லக்னம் உதயமானால் அந்த கோவிலின் தேவதை நல்ல நிலையில் - சாந்நித்யம் பெற்றிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும். உதய லக்னம் தனுசுவாக இருக்கும் பட்சத்தில் இதை முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கிரகங்கள் - அதன் தன்மைகள் - அதன் இருப்புகள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

கோச்சார ரீதியாக தனுசுவில் சனியின் சஞ்சாரம் இருக்கும் போது கோவில்கள் - அதை சார்ந்த விஷயங்களுக்கு கடும் விவாதம் எழும். 2019 பிப்ரவரி மாதம் கேது பகவான் தனுசுவிற்கு மாறும் போது - சனியுடன் இணையும் போது இந்த விவாதமானது இன்னும் அதிகமாகும். அந்த வேளைகளில் ஆஸ்திகர் - நாஸ்திகர் சண்டை அதிகமாக நடைபெறும். அதன் பின் 2020ல் குரு பகவான் தனுசு ராசிக்கு மாற்றம் பெற்ற பின் படிப்படியாக இது குறையும். 

பல சித்தர்களும் - யோகிகளும் - மகான்களும் - நாயன்மார்களும் - ஆழ்வார்களும் களமாடிய நாட்டில்......


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Tuesday, January 9, 2018

மேஷம் - சிம்மம் - தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கான எளிய பரிகாரம்

மேஷம் - சிம்மம் - தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கான எளிய பரிகாரம்:

மேஷம் - சிம்மம் - தனுசு ராசிகள் நெருப்பு ராசிகளாகும். நெருப்பு என்பது சூரியனை குறிப்பதாகும். எனவே தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலம் மிகப் பெரிய மாற்றங்களை நாம் சந்திக்க முடியும்.



குறிப்பு:
சூரிய நமஸ்காரம் என்பது யோகா அல்ல. சூரியனை தினமும் வணங்குவது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Monday, January 8, 2018

மருத்துவம் சார்ந்த விஷயங்கள்:

மருத்துவம் சார்ந்த விஷயங்கள்:

நோய் சம்பந்தமான விஷயங்களுக்கு ஆறாம் பாவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரகத்துவத்தை பொறுத்தவரை செவ்வாயை எடுக்க வேண்டும்.

ஆறாமிட அதிபதி - ஆறாமிடத்தில் இருக்கும் கிரகங்கள் - ஆறாமிடத்தைப் பார்க்கும் கிரகங்கள் என அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். 



ஒவ்வொரு கிரகத்திற்கும் நோய்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றுக்கான மருந்தையும் கொடுத்துள்ளனர்.

எமது முன்னோர்கள் தெரிவித்த நோய் சம்பந்தமான விஷயங்கள்:
சூரியன் - சூடு வகை
சந்திரன் - நீர்
செவ்வாய் - இரத்தம்
புதன் - நரம்பு
குரு - பித்தம், வயிறு
சுக்கிரன் - மறைவிடம், உள் உறுப்புகள்
சனி - Joints
ராகு - இயக்கம்
கேது - வயிறு

இதில் நான் கொடுத்திருப்பது பொதுவானவைதான். ஒவ்வொரு கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிகமான காரகத்துவம் இருக்கிறது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

கல்வி சார்ந்த விஷயம்:

கல்வி சார்ந்த விஷயம்:
கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் - நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் - பத்திரிகை, ஜோதிடம், எழுத்துதுறை, பேச்சு என்பது போன்ற விஷயங்களுக்கும் காரகன் புதன்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் என்று சொல்லப்படுவது  நான்காம் பாவமாகும். அதிகமான காரகத்துவங்கள் கொண்டது நான்காம் பாவம். 



கல்விக்கு நான்காம் பாவத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்காம் பாவம் பலமில்லாத போது நாம் காரககிரகமான புதனை எடுத்துக் கொள்ள வேண்டும். 

நான்காம் பாவம் பலமிழந்து போனாலோ - நான்காம் பாவாதிபதி பலமிழந்து போனாலோ - புதன் வலுவாக இருந்தால் - ஜாதகர் கல்வியில் சாதனை புரிவார்.

கல்வி சார்ந்த விஷயங்களில் தடையோ தாமதமோ ஏற்பட்டால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வருவது முக்கியம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

நக்ஷத்ரங்களில் சிறந்தது எது?

நக்ஷத்ரங்களில் சிறந்தது எது? 

நீங்கள் மூல நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமனாருக்கு ஆகாது. ஆயில்ய நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமியாருக்கு ஆகாது.
சித்திரை நக்ஷத்ரமா - சித்திரை அப்பன் தெருவிலே.
பெண் கேட்டை நக்ஷத்ரமா - கட்டிக்கப்போறவன் அண்ணனுக்கு ஆகாது.
பூராடம் நக்ஷத்ரமா - காராடும்.
திருவோணமா - அது ஒரு ஓணமா இருக்கும்.

இது போன்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒரு குழந்தை பிறந்த உடனே நிறைய பேர் சொல்வது. 

27 நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம்தான் - 12 ராசிகளும் நல்ல ராசிகள்தான். எந்த நக்ஷத்ரமும் கெட்ட நக்ஷத்ரமல்ல - எந்த ராசியும் கெட்ட ராசியல்ல.

இது எதையும் நம்ப வேண்டாம். இது என்னுடைய சொந்த கருத்து. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தை சார்ந்தது. 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

ப்ரஸ்ணத்தில் குருவின் பலம்:

ப்ரஸ்ணத்தில் குருவின் பலம்:
எந்த ஒரு ப்ரஸ்ணம் பார்த்தாலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும்.

குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும்,
கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும்,
மறைவுஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் 
என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். 



இதில் சார பலம் மிக முக்கியம். உதாரணமாக கடக லக்னம் வந்து விரையஸ்தானத்தில் புனர்பூச நக்ஷத்ரம் சாரம் ஏற்பட்டால் மிக வலிமை பெறும். தற்போது இந்த ப்ரஸ்ணத்தில் குரு வலிமை இருக்கிறது. 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

பரணி, பூரம், பூராடம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள்

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் - முக்கியமாக பரணி, பூரம், பூராடம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் அடிக்கடி ஸ்ரீசக்ர பூஜை செய்து வருவது நன்மையைத் தரும். இவர்கள் ஸ்ரீசக்கரம் அணிவது நேர்மறை சக்திகளை உருவாக்கும். 




மேலும் சக்திபீடங்கள் - ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த இடங்கள் - பெருமாள் ஆலயங்கள் சென்று வருவதால் அதிகமான நன்மைகளைப் பெற இயலும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845118542
Email: ramjothidar@gmail.com

Sunday, January 7, 2018

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
மிதுனம் - கன்னி - தனுசு - மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகளாகும். இந்த நான்கு ராசிகளின் அதிபதிகள் புதன் - குரு. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாதகாதிபதிகள்.

மெற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்கள்.



எனவே மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் துணை விஷயத்தில் மிக கவனமாக இருத்தல் அவசியம்.

துணை என்பது வாழ்க்கைத்துணை மட்டும் அல்ல, நண்பர்களும்தான். நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பணம் சார்ந்த விஷயங்களில் யாரேனும் ஒருவருக்கு உண்மையாக இருந்தால் நன்மை. முதலீடு செய்யும் போது அதிக ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

வளமுடன் வாழ தை வெள்ளி - ஆடிச் செவ்வாய் வழிபாடு:

வளமுடன் வாழ தை வெள்ளி - ஆடிச் செவ்வாய் வழிபாடு:
உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் தை மாதமும் - தக்ஷிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் சுமங்கலி வழிபாட்டிற்கு மிக முக்கிய மாதங்களாகும்.

இந்த வழிபாட்டிற்கு தை மாதம் வெள்ளிகிழமையையும் - ஆடி மாதம் செவ்வாய்கிழமையையும் எடுத்துக் கொள்வார்கள்.

ஏன்?

தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பார். மகரத்திற்கு ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம் - ரிஷபம் - ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் - அவரின் கிழமை வெள்ளி.



ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். கடகத்திற்கு ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம் - விருச்சிகம் - விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் - அவரின் கிழமை செவ்வாய்.

ரிஷபம் - விருச்சிகம் ஆகிய இரண்டு வீடுகளுமே சந்திரனுக்கு மிக முக்கியமானவை. ரிஷப ராசியில் சந்திரன் உச்சமாகவும் - விருச்சிக ராசியில் சந்திரன் பலமற்றும் காணப்படுவார். சந்திரன் கிரகமானது தன்மையில் பெண்ணைக் குறிக்கக்கூடியது.

எப்படிச் செய்வது?
ஒற்றைப் படை வரும் வகையில் (உதாரணமாக 1, 3, 5, 7, 9) சுமங்கலிகளுக்கு மஞ்சள் - குங்குமம் - வெற்றிலை - பாக்கு - பழம் - ஜாக்கெட் பிட் - தேங்காய் - நம்மால் முடிந்த தக்ஷணை ஆகியவற்றை தை வெள்ளி அல்லது ஆடி செவ்வாய் கிழமைகளில் மாலை வேளையில் கொடுத்து சுமங்கலிகளிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதால் மிக நன்மைகளைப் பெற முடியும்.

இதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது, பேசுவோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

முகூர்த்தம் - பகுதி 1

முகூர்த்தம் - பகுதி 1
ஒரு முகூர்த்தம் என்பது 3 3/4 நாழிகை கொண்டது. மணிக்கணக்கில் 1 1/2 மணி நேரம். எந்த விசேஷமானாலும் பத்திரிகை எழுத இதைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்போது இதை சிலர் பயன்படுத்துவதில்லை.



Saturday, January 6, 2018

மகர ராசிக்காரர்களுக்கு ஓர் செய்தி:

மகர ராசிக்காரர்களுக்கு ஓர் செய்தி:

ஏழரை சனி தொடங்கியிருக்கிறது எனவே வீண் செலவுகள் ஏற்படலாம் என ஒரு பத்திரிகையில் செய்திகளாக போட்டிருக்கிறார்கள்.



எப்படி பலன் எழுதியிருக்கிறார்கள் என தெரியவில்லை. மகர ராசிக்காரர்களுக்கு தனாதிபதியும் ராசிநாதனும் சனி பகவான்தான். எனவே சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக கும்ப ராசியை பார்க்கும் போது மகர ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியில் வந்து சேரும். அதே வேளையில் ராசிநாதன் சனி விரையஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். அவ்வளவுதான்.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

ப்ரஸ்னத்தில் முக்கிய விஷயம்

ப்ரஸ்னத்தில் முக்கிய விஷயம்:
மிதுனம் - சிம்மம் - தனுசு - கும்பம் ஆகிய லக்னங்கள் வந்தால் மிகவும் நல்லது.

இந்த லக்னங்களுக்கு உச்ச நீச தோஷம் கிடையாது. 

மிகப் பெரிய விஷயம் - இந்த நான்கு லக்னங்களும் ஆண் தன்மை கொண்டவை.

மிதுனம், கும்பம் - காற்றையும், சிம்மம், தனுசு -  நெருப்பையும் குறிக்கும்.



சிம்மம், கும்பம் - ஸ்திரம், மிதுனம், தனுசு - சரம் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். 

குல தெய்வ ப்ரஸ்ணத்தில் மிதுன லக்னம் வந்தால் வைணவம் தொடர்பான ஸ்வாமி என்றும் - சிம்மம் வந்தால் சிவன் தொடர்பான ஸ்வாமி என்றும் - தனுசு வந்தால் கோவிலின் ப்ரதான தெய்வம் இல்லாமல் வெளிப்புற தெய்வங்கள் என்றும் - கும்பம் வந்தால் ஊரின் காவல் தெய்வம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

உதாரணம்
மிதுனம் - நாராயணஸ்வாமி, சாளக்கிராமம்
சிம்மம் - பைரவர், முண்டன், சுண்டன், சுடலைமாடஸ்வாமி
தனுசு - கழுநீர் தொட்டியான், முன்னடி சுடலை, சங்கில் கருப்பு
கும்பம் - பத்திரகாளி


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் முக்கியமாக கணித பாடம் எளிமையாக படிப்பதற்கும்

ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் முக்கியமாக கணித பாடம் எளிமையாக படிப்பதற்கும் - தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை பல் துலக்கிய பிறகு சாப்பிட்டால் நல்ல மாற்றம் தெரியும். காபி டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். 



இந்த பரிகாரம் எனது ஆதிகுருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யரால் வேத பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த காலத்தில் சொல்லப்பட்டது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

வேலையில் பிரச்சனைகள் நீங்குவதற்கு எளிய பரிகாரம்:

வேலையில் பிரச்சனைகள் நீங்குவதற்கு எளிய பரிகாரம்:

ஒருவருடைய ஜாதகத்தில் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அவருக்கு கோச்சார ரீதியாக கிரகநிலைகளும் - திசை ரீதியாகவும் சரி இல்லை என பொருள் கொள்ள முடியும். என்ன திசை நடக்கிறதோ அதற்கேற்றார் போல் பரிகாரம் செய்து கொள்ளுதல் அவசியம். கோச்சார ரீதியாகவும் கிரக நிலைகளை அனுசரித்து பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.




உதாரணமாக ரோகினி நக்ஷத்ரம் - ரிஷப ராசிக்காரர் என்பதை எடுத்துக் கொள்வோம். 40 வயது என எடுத்துக் கொள்வோம். அவருக்கு திசா ரீதியாக குரு திசை நடக்கலாம். குரு என்பவர் ராசிக்கு அஷ்டமாதிபதி தற்போது அவருக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. அவருடைய ஜெனன கால ஜாதகத்தில் குரு ரிஷபத்திலோ அல்லது மிதுனத்திலோ இருந்திருக்கலாம்.

தற்போதைய நிலை இந்த ஜாதகருக்கு வேலையில் மிக அதிக பளு ஏற்படும்.

இதற்கு அவர் செய்ய வேண்டியது தினமும் சித்தர்களை வணங்குவது நன்மையைத் தரும். முன்னோர்களை வணங்கி வழிபடுவதும் மிக அதிக நன்மைகளைக் கொடுக்கும்.


ஒவ்வொரு திசைக்கு ஏற்ற பரிகாரங்கள்:
கேது - வினாயகர்
சுக்கிரன் - மஹாலக்ஷ்மி
சூரியன் - சிவன், நரசிம்மர்
சந்திரன் - அம்மன்
செவ்வாய் - முருகன், கிருஷ்ணர், வாராகி
ராகு - துர்க்கை, நாகதேவதை, நாகாத்தம்மன்
குரு - சித்தர்கள், ஜீவசமாதிகள்
சனி - முன்னோர்கள், காவல் தெய்வங்கள், ஐயப்பன்
புதன் - பெருமாள், ஆஞ்சநேயர், வினாயகர், முருகன்


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

Friday, January 5, 2018

கண்கள் சம்பந்தமான பிரச்சனைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன?

கண்கள் சம்பந்தமான பிரச்சனைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன?

ஜோதிடத்தில் கண்களுக்கு உரிய காரக கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்தாலோ அல்லது கெட்டுப் போய் இருந்தாலோ கண்கள் சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்.

உடற்சூட்டினாலும் - அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதினாலும் - துவர்ப்புச் சத்து சாப்பாட்டில் இல்லாமற் போனாலும் கண்களில் பிரச்சனை ஏற்படலாம்.



புதன் - சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பரிகாரம்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும். இந்த பரிகாரம் மிகப் பெரிய மாற்றத்தை நமக்கு தரும்.

அடிக்கடி சிவன் - நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வருவதும் மிகப் பெரிய பரிகாரம்.

கண் பார்வை கூர்மையாவதற்கும் - மிகச் சிறந்த பார்வை சக்தி பெறுவதற்கும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.


பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

ஜோதிட பரிகாரங்களை அணுகுவது எப்படி?

ஜோதிட பரிகாரங்களை அணுகுவது எப்படி?
எந்த சூழ்நிலையிலும் ஏதாவது ஜோதிடர் (நான் உட்பட) பயமுறுத்தும் வகையில் பலன் சொன்னால் உடனடியாக நம்பக்கூடாது. வேறு ஜோதிடரிடமும் சென்று கலந்துரையாட வேண்டும். 

எந்த பலனையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்வது அவசியம். உதாரணமாக மூல நக்ஷத்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு தற்பொது ஜென்ம சனி நடைபெற்று வருகிறது. எந்த விஷயங்களிலும் சிறிது தடை தாமதம் ஏற்படலாம். எனவே எதைச் செய்தாலும் திட்டமிடல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை தளர விடாமை போன்றவையை கடைபிடிக்க வேண்டும்.



7.30 பேருந்துக்கு 7.28க்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போய் பேரூந்தை விட்டு விட ஜென்ம சனி காரணம் கிடையாது. 7.30 பேரூந்துக்கு 7.15க்கு பேரூந்து நிறுத்தத்தில் இருப்பது அவசியம். சோம்பேறித்தனத்தை அறவே சனி பகவானுக்கு பிடிக்காது.

எந்த பெரிய பரிகாரம் செய்தாலும் - வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் கொண்டு வராத வரை நம் வாழ்வில் சிக்கல்கள் இருக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

நில ராசிகள் பற்றிய குறிப்புகள் - எளிய பரிகாரம்:

நில ராசிகள் பற்றிய குறிப்புகள் - எளிய பரிகாரம்:
ரிஷபம் - கன்னி - மகரம் ஆகிய ராசிகள் பஞ்ச பூத தத்துவத்தில் நில ராசிகளில் வரும். இதில் ரிஷபம் ஸ்திர நிலம் என்றும் - கன்னி உபய நிலம் என்றும் - மகரம் சர நிலம் என்றும் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று ராசிகளுக்கும் உள்ள அதிபதிகள் (புதன் - சுக்கிரன் - சனி) ஒரே பிரிவில் வருவார்கள் ஆங்கிலத்தில் Group. சனிதான் இவர்களில் பிரதானமாக இருந்து செயல்படுவார். எதையும் எளிதில் நம்பும் கொண்டவர்களாக இந்த ராசிகளில் பிறந்தவர்கள் இருப்பார்கள். 



இவர்கள் தினமும் ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை வணங்கி வந்தாலே போதுமானது. வேறு பெரிய பரிகாரங்கள் தேவையில்லை.

காவல்தெய்வம்:
பைரவர் - நந்தீஸ்வரர் - கருடன் - ஆஞ்சநேயர் போன்ற சுற்றுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் மற்றும் கிராமங்களில் காவல் தெய்வங்களாக இருக்கும் தெய்வங்கள்.


பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

Thursday, January 4, 2018

வாழ்வை வளமாக்கும் முன்னோர்கள் பரிகாரம்:

வாழ்வை வளமாக்கும் முன்னோர்கள் பரிகாரம்:

எந்த விஷயங்கள் தொடங்கினாலும் நமது முன்னோர்களை வணங்கி ஆரம்பித்தால் காரிய வெற்றி உண்டு. கடவுள் இருக்கிறார் இல்லை என்பது விவாதமாகும் ஆனால் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள்தான் நமக்கு ஆதாரம் என்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே தினமும் காலை எழுந்தவுடன் முன்னோர்களை நினைத்து ஒரு நிமிடம் வேண்டுவது நம் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும்.



முன்னோர்கள் வழிபாடு என்றவுடன் நாம் அமாவாசை வழிபாட்டையோ அல்லது திதி வழிபாட்டையோ அல்லது தர்ப்பணத்தையோ நினைக்கக் கூடாது. முன்னோர்கள் வழிபாடு என்பது நாம் அவர்களை நினைத்து மனமுருக வேண்டுவது. அவ்வளவே. மனமுருக வேண்டுவது என்பதற்கு பிறகுதான் காசி, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் வழிபாடு எல்லாமே. முன்னோர்களை திட்டிக் கொண்டே மேற்சொன்ன க்ஷேத்திரங்களுக்கு சென்றால் எந்த பலனும் கிடைக்காது.

ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். முன்னோர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com