Showing posts with label சம்பவம். Show all posts
Showing posts with label சம்பவம். Show all posts

Sunday, July 27, 2014

டாஸ்மாக் - தாலி

நேற்று இரவு கிட்டத்தட்ட மணி 10.15 இருக்கும்.

இடம்: அம்பத்தூர் - வானகரம் ரோடு

நான் வானகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன்.

எதிரில் ஒரு ஆட்டோ, அதன் பின் 2 வீலரில் ஒரு குடும்பம் (3 வயது குழந்தையுடன்), அதன் பின் விபத்து ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட பல்சர் வாகனத்தில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார்கள்.

பல்சர் எகிறி முன் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மீது மோத, அந்த வாகனம் ஆட்டோவின் மீது விழ ஆட்டோ கவிழ்ந்து விழுந்தது. பல்சர் மற்றும் அந்த இரு சக்கர வாகனங்களும் கிட்டத்தட்ட 20 அடிகள் உரசியே விழுந்தது. அந்த குடும்பத்தை சார்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைக்கு அடி. கணவருக்கு செக் பண்ணினேன், இடது கால் முட்டி விலகியிருந்தது, அவரால் நிற்க முடியவில்லை, மனைவிக்கு இடது பக்கம் உள்ள சேலை முழுவதும் கிழந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. நல்லவேளை குழந்தைக்கு ஏதும் ஆகவில்லை.

உடனடியாக போலீசுக்கும், 108க்கும் போன் செய்து வரவழைத்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு யாரும் வரவில்லை. அதன்பின் கூட்டம் கூடியது. பார்த்தால் ஆட்டோகாரரும், பல்சர் நபரும் நல்ல டாஸ்மாக் குடிமகன்கள்.

டேய் டாஸ்மாக், இன்னும் எத்தனை பேர் தாலிய அறுக்கப்போறீங்களோ?