Monday, September 30, 2013

சிவன் செய்திகள் - தொடர் 1

கொடியே தலவிருக்ஷம்

தஞ்சாவூர் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் முல்லைவனநாதர் மூலவராக இருக்கிறார். மூலவர் லிங்கவடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கம் புற்றுமண்ணால் ஆனது. நோய் தீர்க்கும் இந்த தலத்தில் உள்ள  அம்பிகையிடம் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டிக் கொள்கிறார்கள். எல்லா ஆலயங்களுக்கும் தல விருக்ஷம் மரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் முல்லைப்பூக்கொடி தல விருக்ஷமாக உள்ளது.
சந்தாணபாக்யம் குறைவுள்ளவர்கள் இந்த தலம் சென்றால் சந்தாணம் பெறுவது திண்ணம்.நவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 2


நவக்கிரகம் எனப்படுவது:
[1] சூரியன்
[2] சந்திரன்
[3] செவ்வாய்
[4] புதன்
[5] குரு
[6] சுக்கிரன்
[7] சனி
[8] இராகு
[9] கேது

மேற்கண்டவைகளில் முதல் ஏழும் ஸப்த கிரகங்கள் என்று அழைக்க்படுகிறது. பின்னாளில் சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் இராகு கேது ஆகியோர் இணைக்கப்பட்டார்கள். எனவே இவை நவக்கிரகம் ஆயிற்று.

சாயா என்றால் வடமொழியில் நிழல் என்பதாகும். இவ்வாறு அழைக்கபட இன்னோரு முக்கிய காரணம் உண்டு. இந்த கிரகங்களுக்கு என சுய ஆதிபத்தியம் கிடையாது. ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி ஆதிபத்தியத்தை முழுவதுமாக இவர்களே வழங்குவார்கள். இந்த பலன்களை இரட்டிப்பானவை. இவர்கள் நன்மை தீமை ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.

நவக்கிரகங்கள் எப்படி உலா வருகின்றனர்?
நவக்கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஸப்த கிரகங்கள் பிரதட்சினமாகவும்(Clockwise) ராகு கேதுக்கள் அப்பிரதட்சினமாகவும் (Anti-Clockwise) உலா வருகின்றனர்.

ஆலயங்களில் நவக்கிரகம் இருக்க வேண்டிய இடம்?

ஆலயங்களில் பொதுவாக நவக்கிரகமானது வடகிழக்கு மூலையான ஈசானுயத்தில்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சிற்ப சாஸ்திரம், ஆகமங்கள் ஆகியவை தெரிவிக்கின்றன.

பிரதிஷ்டை:

நவக்கிரகங்களைப் பொதுவாக இரண்டு விதமான முறைகளில் பிரதிஷ்டை செய்வார்கள்.

அவை
[1] சிவாகம பிரதிஷ்டை
[2] வைதீகப் பிரதிஷ்டை

நம் நாட்டில் அதிகபட்சமாக சிவாகம பிரதிஷ்டை முறையில்தான் நவக்கிரகங்கள் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றனர்.

இன்றைய ஸ்பெஷல்
நவக்கிரக கோலங்கள் – சூரியன்

சிவாகம பிரதிஷ்டை என்றால் என்ன?தொடரும்.....

நாளைய பஞ்சாங்கம்: 01.10.2013 - செவ்வாய்


நாளைய பஞ்சாங்கம்:

01.10.2013 - செவ்வாய்


விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 15ம் தேதி - அக்டோபர் 01 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
செவ்வாய்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) துவாதசி
நக்ஷத்ரம்: ஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்
யோகம்: சித்தி
கரணம்: கௌலவ கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 2.45 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மாலை 3.03 முத 4.33 வரை
எமகண்டம்: காலை 9.03 முதல் 10.33 வரை
குளிகை: மதியம் 12.03 முதல் 1.33 வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.33 - 9.03; மாலை 4.33 - 6.03
[2] கீழ்நோக்கு நாள்
[3] ஸன்யஸ்த மஹாளயம்
[4] வைஷ்ணவ ஏகாதசி
[5] ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தண மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன ஸேவை
[6] ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
[7] கோவிந்தபுரம் ஸ்ரீபோதாந்திராள் ஆராதனை, ஸ்ரீகோவிந்தபிரிய பாதசத்குரு பரமஹம்ஸர் ஆராதனை

----------------------------------------------------------------


கிரக பாதசாரம்


சூரியன் - ஹஸ்தம் 2
சந்திரன் - ஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 3
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

Sunday, September 29, 2013

நவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 1

நவகிரகங்களைப் பற்றி எவ்வளவோ நாம் தெரிந்து வைத்திருந்தாலும் இந்த தொடரில் மிக வித்தியாசமான முறையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

  • நவக்கிரகம் என்பவர்கள் யார்?
  • எப்படி பிரதிஷ்டை செய்வது?
  • சிவாகம பிரதிஷ்டை
  • ஆலயங்களில் நவக்கிரகங்கள்
  • நவக்கிரகங்களின் வரலாறு
  • அறிவியல் பூர்வமாக நவக்கிரகங்கள்
  • நவக்கிரகங்களின் யந்திரம், மந்திரம், மூலிகைகள்
  • கோவில்கள்
  • நமக்கு நாமே பரிகாரம் செய்து கொள்ளும் முறைகள்
போன்ற பல அரிய தகவல்களை நமது சொந்தங்களுக்கு கொடுக்கப் போகிறோம்.

நவக்கிரகம் என்பவர்கள் யார்?இறைவனின் அந்தரங்கப் பணியாளர்களே இந்த நவக்கிரக தேவதைகள். இறைவன் ஒருவனுக்கு எந்தக் காலத்தில் என்ன செய்ய வேண்டுமோ அந்தக் காலத்தில் அதை அவர்களுக்குத் தப்பாமல் தருவதுடன் இறைவனின் வேலைப் பளுவை முற்றிலும் இல்லாமல் மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வந்தவர்களே நவக்கிரகங்கள்.

இன்றைய ஸ்பெஷல்:

நவக்கிரகங்களின் சூக்ஷ்ம மந்திரங்கள்
சூரியன்: ஓம் ஹ்ரீம் சூர்யாய நம!
சந்திரன்:ஓம் க்லீம் சந்திராய நம!
செவ்வாய்:ஓம் ஹ்ரீம் மங்களாய நம!
புதன்: ஓம் ஐம் ஐம் புதாய நம!!!!
குரு: ஓம் ஸ்ரீம் குருவே நம!
சுக்கிரன்: ஓம் ஸ்ரீம் சுக்ராய நம!
சனி: ஓம் ஸ்ரம் சனீஸ்வராய நம!
ராகு: ஓம் க்லீம் ராகுவே நம!
கேது: ஓம் தும் கேதுவே நம!
 

மேற்சொல்லியிருக்கும் மந்திரங்களால் என்ன பயன்?

தொடரும்......


நாளைய பஞ்சாங்கம்: 30.09.2013 - திங்கள்

நாளைய பஞ்சாங்கம்:

30.09.2013 - திங்கள்


விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 14ம் தேதி - செப்டம்பர் 30 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
திங்கட்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) ஏகாதசி
நக்ஷத்ரம்: பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்
யோகம்: சிவம்
கரணம்: பவ கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.03 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: காலை 7.33 முதல் 9.03 வரை
எமகண்டம்: காலை 10.33 முதல் 12.03
குளிகை: மதியம் 1.33 முதல் 3.03
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 6.03 - 07.33; மாலை 4.33 - 6.03
[2] மேல்நோக்கு நாள்
[3] ஸ்மார்த்த ஏகாதசி
[4] திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஸ்வாமி புறபாடு
[5] கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதியி ஸ்ரீகெருடாழ்வாருக்கு திருமஞ்சன ஸேவை
[6] சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்

----------------------------------------------------------------


கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 1
சந்திரன் - பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 2
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

எந்த படிப்பிற்கு எந்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும்?

சூரியன் - டாக்டர்
சந்திரன் - நீரியல்
செவ்வாய் - டெக்னிக்கல், இஞ்சினியர்
புதன் - கணிதம், நுண்ணறிவு
குரு - சட்டம்
சுக்கிரன் - கலைத்துறை (இயல், இசை, நாடகம்)
சனி - புவி இயல், பஞ்சபூதம் சார்ந்த படிப்பு
ராகு - ஆராய்ச்சி, வெளிநாடு
கேது - இலக்கியம், சமூகம்
குரு பலன் - தொடர் 5

குரு பலன் - தொடர் 5

குரு உங்கள் ஜாதகத்திற்கு யோக காரகரா?
மேஷ லக்னத்திற்கு குரு 9, 12 இடங்களுக்கு உரியவர் ஆகிறார். 9-ம் இடம் பாக்கியஸ்தானம். எனவே யோககாரகர். ரிஷப லக்னத்திற்கு 8,11க்கு உடையவர். ஆதிபத்திய சிறப்பு இல்லை. மிதுன லக்னத்திற்கு 7, 10க்கு அதிபதி. சுபகிரகங்கள் கேந்திர இடங்களில் (4, 7, 10) அதிபதியாக இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மிதுன லக்னகாரர்களுக்கு குரு நன்மை செய்வது அரிது. இருப்பினும் இது பொது விதியே. கடக லக்னத்திற்கு 6, 9க்கு உடையவர் ஆகிறார். 9-ம் அதிபதி யோககாரகர். சிம்ம லக்னத்திற்கு 5, 8ம் இடங்களுக்கு அதிபதி. 5-ம் வீடு ஆதிபத்தியம் யோகத்தைக் கொடுக்கும். கன்னி லக்னத்திற்கு 4, 7ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார் குரு. எனவே மிதுன லக்னத்திற்கு சொன்ன விதியே இதற்கும் பொருந்தும். துலாம் லக்னத்திற்கு பிறந்தவர்களுக்கு குரு லக்னத்திலிருந்து 3, 6 ஆகிய இடங்களுக்கு உரியவராகிறார் எனவே யோகம் கொடுப்பது அரிது. விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 5ம் வீடுகளுக்கு அதிபதியாவதால் நன்மைகளைக் கொடுப்பார். தனுசு, மீனம் லக்னங்களுக்கு இவரே அதிபதியாகவும் விளங்குவதால் கேந்திரம் பெற்றிருந்தால் மட்டும் யோகத்தைக் கொடுப்பதில் தாமதமாகலாம். மகர லக்னத்தில் உதித்தவர்களுக்கு யோகத்தைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். கும்ப லக்னத்தில் ஜெனித்தவர்களுக்கு தனகாரகன் என்ற முறையில் நன்மைகளைச் செய்வார்.


முற்றும்.

குரு பலன் - தொடர் 4

குரு பலன் - தொடர் 4

குரு - அறிவர்களைத் தோற்றுவிக்கும் ஆசான்

கல்வி ஸ்தானத்திற்கும்(4ம் வீடு) குருவுக்கும் தொடர்பு இருந்து அல்லது கல்வி ஸ்தானத்தை குரு பார்த்தாலும், அந்த வீட்டின் அதிபதியுடன் சம்பந்தம்(சேர்க்கை - பார்வை) ஏற்பட்டாலும் மிகச் சிறப்பான பலன்கள் ஏற்படும். குருவுடன் சேர்ந்த அல்லது பார்க்கப்பட்ட நான்காம் வீட்டின் அதிபதியின் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் நலம் சேர்க்கும். இந்த விதி பள்ளி கல்லூரி நாட்களில் வந்தால் மிக நல்லது. அறிவு விருத்தி ஏற்படும். 
 
 

 
நல்ல பலமுள்ள குரு திசை ஒரு மனிதனின் நடுவயதில் வருமானால் நிறைந்த செல்வத்தை அளிக்கும். புத்திர செல்வம் உண்டாகும். வாழ்ழ்கை வசதி அமையும். குறைகள் களையப்படும். புண்ணிய நதி நீராடல், யாத்திரை போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். பொது வாழ்வில் நேர்மையும், தூய்மையும் இருக்கும்.

வயது அதிகமான பிறகு குரு திசை வரும் போது அப்போது ஜாதகருக்கு செல்வம் குறையாமல் இருந்து வரும். பேரன் பேத்திகளுக்கு சுபிட்சம் உண்டாகும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் நிறைந்து காணப்படும்.

பொதுவில் பலமில்லாத குரு திசையில் படிப்பு தடைபடலாம், வறுமை நேரலாம், ஒழுக்கமற்ற காரியங்களில் மனம் அவதானிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஜாதகர் புனிதப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. சான்றோகளை அணுகி அவர்கள் சொல்படி கேட்டு நடத்தல் நன்று. குரு பலமுள்ளவர்கள் சட்ட நிபுணராகலாம். தலைமைப் பதவிகளை அடையலாம். அரசாங்கத்தில் உயர்நிலைக்கு செல்லலாம்.

குரு உங்கள் ஜாதகத்திற்கு யோககாரரா?

தொடரும்...

இந்த வாரம் இப்படித்தான் - 29-09-2013 முதல் 05-10-2013 வரை
திதி நக்ஷத்ர குறிப்புகள்:
ஆங்கில தேதி
தமிழ் தேதி
கிழமை
திதி
நக்ஷத்ரம்
29-09-2013
புரட் – 13
ஞாயிறு
தசமி
புனர்பூசம் காலை 9.06 வரை பின் பூசம்
30-09-2013
14
திங்கள்
ஏகாதசி
பூசம் காலை 11.28 வரை பின் ஆயில்யம்
01-10-2013
15
செவ்வாய்
துவாதசி
ஆயில்யம் மதியம் 1.32 வரை பின் மகம்
02-10-2013
16
புதன்
திரயோதசி
மகம் மதியம் 3.12 வரை பின் பூரம்
03-10-2013
17
வியாழன்
சதுர்த்தசி
பூரம் மாலை 4.26 வரை பின் உத்திரம்
04-10-2013
18
வெள்ளி
அமாவாசை
உத்திரம் மாலை 5.08 வரி பின் ஹஸ்தம்
05-10-2013
19
சனி
பிரதமை
ஹஸ்தம் மாலை 5.21 வரை பின் சித்திரை

இந்த வார விசேஷங்கள்
ஆங்கில தேதி
விசேஷம்
29-09-2013
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன ஸேவை, இன்று சூரிய வழிபாடு செய்வது சிறப்பு. சிவன் ஆலயம் சென்று வருதல் நன்று, வடலூர் மாதபூசம்
30-09-2013
ஸ்மார்த்த ஏகாதசி, திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஸ்வாமி புறபாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதியி ஸ்ரீகெருடாழ்வாருக்கு திருமஞ்சன ஸேவை, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்
01-10-2013
ஸன்யஸ்த மஹாளயம், வைஷ்ணவ ஏகாதசி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தண மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன ஸேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், கோவிந்தபுரம் ஸ்ரீபோதாந்திராள் ஆராதனை, ஸ்ரீகோவிந்தபிரிய பாதசத்குரு பரமஹம்ஸர் ஆராதனை
02-10-2013
கரிநாள், திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், பிரதோஷம், துவாபரயுகாதி
03-10-2013
சஸ்த்திரதஹத பிதுர் மஹாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு, திருப்பதி ஸ்ரீஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, அருள்நந்தி சிவாச்சாரியார் குரு பூஜை, மாத சிவராத்திரி
04-10-2013
மஹாளய அமாவாசை, மாஹா கௌரி விரதம், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் விபீஷணருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாட வீதிஉலா
05-10-2013
வள்ளலார் பிறந்த தினம், நவராத்திரி ஆரம்பம், தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் உற்சவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னதிருவண்ணாமலையில் ஸ்ரீஸ்ரீனிவஸப் பெருமாள் கெருட வாகனத்தில் உலா, பிண்டபித்ரு

இந்த வாரம் யார் யாருக்கு சந்திராஷ்டமம்:
ஆங்கில தேதி
நக்ஷத்ரம்
29-09-2013
பூராடம்
30-09-2013
பூராடம், உத்திராடம்
01-10-2013
உத்திராடம், திருவோணம்
02-10-2013
திருவோணம், அவிட்டம்
03-10-2013
அவிட்டம், சதயம்
04-10-2013
சதயம், பூரட்டாதி
05-10-2013
பூரட்டாதி, உத்திரட்டாதி

குறிப்பு: சந்திராஷ்டமம் என்பது ராசிக்கும் பார்க்காமல் லக்ன பாதசாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேணுமாய் கேட்டு கொள்கிறோம். உதாரணமாக ஒருவர் மகர லக்னத்தில் ஜெனித்து அவருடைய லக்ன பாதசாரம் திருவோணமாய் இருக்கும் பக்ஷத்தில் அவருக்கு அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளையும் சந்திராஷ்டமமாய் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

0
கேது
0
குரு
0
இந்த வார
ராசிநிலை
03-10-2013 – விருச்சிக – சுக்கி
செவ்
0
0
0
0
சனி    ராகு 
சுக்கிரன்   புதன்
சூரியன்


27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பொது ராசி பலன்கள்:
(இங்கு குறிப்பிட்டு இருப்பது பொதுவானதே, தங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்து இது மாறும்)

அஸ்வினி:

மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு,  உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பரணி:

வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது  நன்மை தரும்.  திருமண முயற்சிகள் கைகூடும்.


கார்த்திகை:

தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் குருவினால்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

ரோகினி:

கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள்  அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும்  போதும் கவனம் தேவை.

மிருகசீரிடம்:

தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில்  நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகளும் தீரும்.

திருவாதிரை:

வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற  சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை  எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.


புனர்பூசம்:

ராசியில் இருக்கும் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீக  சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பூசம்:

திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது  நல்லது.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளை செய்வார்.

ஆயில்யம்:

வெளிநாடு செல்வதில்  எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே  அடிக்கடி  வாக்குவாதங்கள்  உண்டாகலாம்.

மகம்:

கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் இந்த வாரம் எதிலும் மிகவும்  கவனமாகசெயல்படுவது  நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

பூரம்:

நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள்.  இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள்  பெருகும்,  சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும்.

உத்திரம்:

வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

ஹஸ்தம்:

வேலைபளு வீண்அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த  இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

சித்திரை:

உங்கள் வார்த்தைக்கு  மற்றவர்களிடம்  மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.  உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை  உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும்.

ஸ்வாதி:

வாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க  எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள். இருப்பினும் வேலை விஷயத்தில் எதிலும் மிகவும் கவனம் தேவை. எதிலும்  முன்னெச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது.

விசாகம்:

இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில்  செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.  ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர்  மனஸ்தாபம் உண்டாகலாம்.

அனுஷம்:

எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி  உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.   பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். தனஸ்தானாதிபதியின் சஞ்சாரம் பணவரத்தை அதிகரிக்கும்.

கேட்டை:

முன்னேற்றங்களை  தரும். முயற்சிகள் சாதகமானபலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்  போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும்  மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மூலம்:

வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம்.  காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம்.  குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும்.


பூராடம்:

குடும்ப வாழ்க்கையில்  சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம்,  இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். குருபார்வையின் பலன் கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல்தவித்த இரவுகள் மாறி நிம்மதியான  தூக்கம் வரும்.

உத்திராடம்:

மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சனியின் 3ம் பார்வை பேச்சில் கோபத்தையும், குடும்பத்தில் சிறு குழப்பங்களையும்  ஏற்படுத்தி வருவார்.  மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம்  உண்டாகும்.

திருவோணம்:

எதிரிகள்  தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.  இந்த வாரம் பெண்களுக்கு பல நன்மைகளை தரும் வாரமாக இருக்கும்.

அவிட்டம்:

மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும்.  ஆடை  ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். பிற்பகுதியில் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

சதயம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான  பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண்விவாதம்  ஏற்படலாம் கவனம் தேவை.

பூரட்டாதி:
குருவின் சுகஸ்தான இருப்பால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும். மனதில்  இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண்  அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவற்றை கொடுத்துவரும்.

உத்திரட்டாதி:

மனக்கஷ்டம்  குறையும். ஆனால் செலவு  அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல்  வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரேவதி:

வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம்  மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

--------------------------------------------------------------------

எண் கணிதப்படி யார்யாருக்கு எந்த எண்கள் அனுகூலமானவை, எந்த கிழமைகள் அனுகூலமாக இருக்கும்? (இங்கு குறிப்பிட்டு இருப்பது பொதுவானதே, தங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்து இது மாறும்)

உங்கள் பெயர் எண்ணைக் கீழ்க்கண்ட எழுத்துக்களுக்குரிய எண்ணைக் கொண்டு கணக்கு செய்து கொள்ளவும். மேலும் இனிஷியலும் அவசியம்.

A I J Q Y    1
B K R    2
C G L S    3
D M T    4
E H N X    5
U V W    6
O Z     7
F P     8

உதாரணத்திற்கு  S.ASHOK என்பவர்க்குரிய எண்ணை எப்படி கணக்கு செய்வது.

S    A    S    H    O    K
3    1    3    5    7    2

இவருக்குரிய எண் 21 - 2 + 1 = 3

இனி பலன்களைப் பார்க்கலாம்:

பெயர் எண்: 01 - நாயகர் சூரியன்
ஞாயிறு, புதன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.
1, 3 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 02 - நாயகர் சந்திரன்
திங்கள், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 03 - நாயகர் குரு
ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.
1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 04 - நாயகர் ராகு
ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.
1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 05 - நாயகர் புதன்
வெள்ளி, புதன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.
3, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.


பெயர் எண்: 06 - நாயகர் சுக்கிரன்:
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
3, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 07 - நாயகர் கேது:
செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
1, 3, 5, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 08 - நாயகர் சனி:
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பானவை.
2, 5, 6, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெயர் எண்: 09 - நாயகர் செவ்வாய்:
ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சிறப்பானவை.
1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.