குரு பலன் - தொடர் 4
குரு - அறிவர்களைத் தோற்றுவிக்கும் ஆசான்
கல்வி ஸ்தானத்திற்கும்(4ம் வீடு) குருவுக்கும் தொடர்பு இருந்து அல்லது கல்வி ஸ்தானத்தை குரு பார்த்தாலும், அந்த வீட்டின் அதிபதியுடன் சம்பந்தம்(சேர்க்கை - பார்வை) ஏற்பட்டாலும் மிகச் சிறப்பான பலன்கள் ஏற்படும். குருவுடன் சேர்ந்த அல்லது பார்க்கப்பட்ட நான்காம் வீட்டின் அதிபதியின் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் நலம் சேர்க்கும். இந்த விதி பள்ளி கல்லூரி நாட்களில் வந்தால் மிக நல்லது. அறிவு விருத்தி ஏற்படும்.

நல்ல பலமுள்ள குரு திசை ஒரு மனிதனின் நடுவயதில் வருமானால் நிறைந்த செல்வத்தை அளிக்கும். புத்திர செல்வம் உண்டாகும். வாழ்ழ்கை வசதி அமையும். குறைகள் களையப்படும். புண்ணிய நதி நீராடல், யாத்திரை போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். பொது வாழ்வில் நேர்மையும், தூய்மையும் இருக்கும்.
வயது அதிகமான பிறகு குரு திசை வரும் போது அப்போது ஜாதகருக்கு செல்வம் குறையாமல் இருந்து வரும். பேரன் பேத்திகளுக்கு சுபிட்சம் உண்டாகும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் நிறைந்து காணப்படும்.
பொதுவில் பலமில்லாத குரு திசையில் படிப்பு தடைபடலாம், வறுமை நேரலாம், ஒழுக்கமற்ற காரியங்களில் மனம் அவதானிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஜாதகர் புனிதப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. சான்றோகளை அணுகி அவர்கள் சொல்படி கேட்டு நடத்தல் நன்று. குரு பலமுள்ளவர்கள் சட்ட நிபுணராகலாம். தலைமைப் பதவிகளை அடையலாம். அரசாங்கத்தில் உயர்நிலைக்கு செல்லலாம்.
குரு உங்கள் ஜாதகத்திற்கு யோககாரரா?
தொடரும்...

1 comment:
வணக்கம்,குரு 12ல்(மீனம்) ஆட்சி,ராகு 3ல் குருவின் சாரத்தில்,குருதிசை ராகுபுத்தியில் தொழிலில் கஷ்ட்டத்தை கொடுக்குமா? நன்றி.
Post a Comment