குருபலன் - தொடர் 3
துன்பத்தைப் போக்கும் பகவான்
ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் மட்டுமே நல்ல நிலையில் இருந்தால் அவரது கருணையால் அனைத்து துன்பங்களும் அகலும்.

ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலமாக இருந்து அவருடைய திசையோ அல்லது புத்தியோ அல்லது அந்தரமோ நடக்கும் காலத்தில் அந்த ஜாதகருக்கு அறிவு சிறந்த முறையில் வளர்ச்சி பெறும் மேலும் அவர் புகழும் அடைவார். படிக்கும் மாணாக்கர்களுக்கு குரு திசை (அ) புத்தி (அ) அந்தரம் நடக்குமானால் கல்வியில் சாதனை புரிவார்கள் என்பதில் ஐயமில்லை. வகுப்பில் முதல் தர மாணவர்களாகவும், அரிய பல சாதனைகளைப் பெறுபவராகவும் முடியும். ஆசிரியர்கள் மற்றும் குருமார்களின் வாழ்த்துக்களைப் பெற முடியும். அற்புதமான ஆராய்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் குரு அருள் புரிவார்.
பொதுவில் குரு நல்ல நிலையில் இருந்து, இளவயதில் ஒருவருக்கு குரு திசை (அ) புத்தி (அ) அந்தரம் வரப் பெற்றவர்கள் உண்மையிலேயெ வரம் பெற்றவர்கள். அவர்களால் பெற்றோருக்கு நல்ல பெயர் கிடைக்கும். இவர்களால் இவரின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிகளைக் குவிப்பார்கள். துன்பங்கள் மறையும், வாழ்வில் ஒளி வரும்.
குருவின் பார்வை விசேடமானது. குரு திசை (அ) புத்தி (அ) அந்தரமோ நடக்காவிட்டாலும் அவரது பார்வையைப் பெற்ற ஒரு நல்ல கிரகத்தின் திசை (அ) புத்தி (அ) அந்தரம் நடந்தால் அப்போதும் மேற்சொன்ன பலன்கள் ஏற்படும்.

No comments:
Post a Comment