Thursday, September 26, 2013

குருபலம் - தொடர் 1

தனகாரகன் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுபவர் குரு என்ற வியாழ பகவான். தனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரியவர் குரு பகவான். 





குருவைப் பற்றிய விஷயங்கள்:

வியாழக்கிழமை
அந்தணர் இனம்
ஆண்
மஞ்சள் நிறம்
வேதம்
வடகிழக்கு
ஆகாயம்
கொண்டைக்கடலை (மூக்கடலை)
அரசு சமித்து
முல்லைமலர்
கனகபுஷ்பராகம்
பொன் உலோகம்
மஞ்சள் பட்டு

அதிதேவைதைகள்: இந்திரன், பிரம்மா
ராசிகள்: தனுசு, மீனம்
உச்ச வீடு: கடகம்
நீசவீடு: மகரம்
நக்ஷத்ரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
திசை: 16 ஆண்டுகள்

---------------------------------------------------------


குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள். 

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.


அடுத்தது உடல் உறுதி, உள்ளத் தெளிவு:

தொடரும்.......


No comments: