Friday, September 27, 2013

நவராத்திரி - தொடர் 1

சிவனுக்கு ஒரு ராத்திரி, அது சிவராத்திரி. சக்திக்கு ஒன்பது ராத்திரி, அது நவராத்திரி.

சக்தி வழிபாடு (சாக்தம்) பற்றிக் கூறும் நூல்களில் நான்கு நவராத்திரிகள் பற்றி விவரமாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று மட்டும்தான் தற்போது பிரசித்தமாக இருக்கிறது. நான்கு நவராத்திரிகளுமே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று சாக்த நூல்கள் கூறுகின்றது.

நவராத்திரி பூஜை என்பது அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாள் நடக்கும். தசமியில் துர்க்கா பூஜையுடன் நிறைவுறும். 




நான்கு நவராத்திரிகள்:

  • ஆனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களின் ராத்திரிகள் ஆஷாட நவராத்திரி எனப்படும்.
  • புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது
  • தை மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் மகா நவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
  • பங்குனி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் வசந்த நவராத்திரியாகும்.
இந்த நான்கு நவராத்திரிகளுள் ஆனி மற்றும் தை மாதங்களில் கொண்டாடப்படும் நவராத்திகளை மாதப் பெயர்கள் வைத்து அழைப்பதுண்டு. மற்ற இரண்டையும் நாம் தனிப் பெயர் வைத்து கொண்டாடுகிறோம். 

பொதுவாகவே சக்தி வழிபாடு என்பது நமக்கு சக்தியை வழங்குவதாகும். அதிலும் இந்த நான்கு நவராத்திரிகளில் விரதம் இருந்து பூஜைகள் செய்து அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷம். நான்கு நவராத்திரிகளையும் பின்பற்ற முடியாதவர்கள் சாரதா மற்றும் வசந்த நவராத்திரியை பின்பற்ற வேண்டும். 

அக்னி புராணம் சொல்வது என்ன?



புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்கள் எமதர்ம ராஜனின் கோரை பற்கள் என்று சொல்வார்கள். அந்த கோரைப் பற்களில் உயிர்கள் அகப்படாமல் இருக்க இந்த இரண்டு நவராத்திரிகளையும் அனுஷ்டித்து அம்பாளின் அருளைப் பெற வேண்டும்.

வீடுகளிலும் சரி, கோவில்களிலும் சரி புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் இதே வழக்கம்தான்.

இந்த நவராத்திரியில் சக்தி முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும், கடைசி மூன்று தினங்கள் ஸ்ரீசரஸ்வதியாகவும் இருக்கிறாள். 

இந்த நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து பூஜைகள் செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று அம்மனை வழிபடுவது விசேஷ பலன்களை அள்ளித்தரும். 


ஜோதிட ரீதியாக யார் யாரெல்லாம் கட்டாயம் நவராத்திரி விரதம் இருந்தால் நல்லது.....


தொடரும்.....

1 comment:

வரகூரான் நாராயணன் said...

காபி செய்து கொள்கிறேன்.

வரகூரான்.