Sunday, September 29, 2013

குரு பலன் - தொடர் 5

குரு பலன் - தொடர் 5

குரு உங்கள் ஜாதகத்திற்கு யோக காரகரா?




மேஷ லக்னத்திற்கு குரு 9, 12 இடங்களுக்கு உரியவர் ஆகிறார். 9-ம் இடம் பாக்கியஸ்தானம். எனவே யோககாரகர். ரிஷப லக்னத்திற்கு 8,11க்கு உடையவர். ஆதிபத்திய சிறப்பு இல்லை. மிதுன லக்னத்திற்கு 7, 10க்கு அதிபதி. சுபகிரகங்கள் கேந்திர இடங்களில் (4, 7, 10) அதிபதியாக இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மிதுன லக்னகாரர்களுக்கு குரு நன்மை செய்வது அரிது. இருப்பினும் இது பொது விதியே. கடக லக்னத்திற்கு 6, 9க்கு உடையவர் ஆகிறார். 9-ம் அதிபதி யோககாரகர். சிம்ம லக்னத்திற்கு 5, 8ம் இடங்களுக்கு அதிபதி. 5-ம் வீடு ஆதிபத்தியம் யோகத்தைக் கொடுக்கும். கன்னி லக்னத்திற்கு 4, 7ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார் குரு. எனவே மிதுன லக்னத்திற்கு சொன்ன விதியே இதற்கும் பொருந்தும். துலாம் லக்னத்திற்கு பிறந்தவர்களுக்கு குரு லக்னத்திலிருந்து 3, 6 ஆகிய இடங்களுக்கு உரியவராகிறார் எனவே யோகம் கொடுப்பது அரிது. விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 5ம் வீடுகளுக்கு அதிபதியாவதால் நன்மைகளைக் கொடுப்பார். தனுசு, மீனம் லக்னங்களுக்கு இவரே அதிபதியாகவும் விளங்குவதால் கேந்திரம் பெற்றிருந்தால் மட்டும் யோகத்தைக் கொடுப்பதில் தாமதமாகலாம். மகர லக்னத்தில் உதித்தவர்களுக்கு யோகத்தைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். கும்ப லக்னத்தில் ஜெனித்தவர்களுக்கு தனகாரகன் என்ற முறையில் நன்மைகளைச் செய்வார்.


முற்றும்.

No comments: