Thursday, September 26, 2013

குருபலன் - தொடர் 2

உடல் உறுதி, அகத் தெளிவு:

உடலில் உறுதியும் உள்ளத்தில் தெளிவையும் கொடுப்பவர் குரு மட்டுமே.

புனித பணிகளுக்கும் புண்ணியச் செயல்களுக்கும் புனித யாத்திரைக்கும் காரணம் குரு.

சுபிட்சம், சந்தோஷம், மலர்ச்சி, பெருந்தன்மை, மென்மை, திறமை, நேர்மை,  திண்ணம், எடுத்த முடிவில் வைராக்கியம் போன்றவைகளுக்கும் குருவே கர்த்தாவானவர்.

ஒருவர் உறுதிவாய்ந்த ஓர் உன்னதமான அழகான வீட்டை கட்டிக் கொண்டு அதில் தங்கி வாழ வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் குரு பலமாக இருக்கிறார் என்று பொருளாகும்.

குருவால் எல்லா செல்வங்களையும் நம்மால் பெற முடியும். அதிலும் மிக முக்கியமான மக்கட் செல்வத்தை  அளிப்பவர் குரு.

அணிகலன்கள், ஐஸ்வர்யம், சுகவாழ்வு, சுபிட்சம் இவற்றையெல்லாம் வழங்கும் ஆற்ற்ல் கொண்ட குரு பகவானுக்கு ஜாதகத்தில் தக்க இடமுண்டு.

அடுத்து துன்பத்தைப் போக்கும் ஒளி...

தொடரும்....

1 comment:

Anonymous said...

very nice article sir. Please continue writing.