Saturday, October 30, 2010

எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் பாகம் 2

அனைவருக்கும் வணக்கம்.அந்த இடம் கம்பீரமாக இருந்தது. ரம்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் சைவ மடங்களில் முதன்மையானதும், பாண்டிய நாட்டின் மன்னனுக்கு செங்கோல் எடுத்துக் கொடுத்த பரம்பரையில் வந்ததுமான மடம், பெருங்குளம் செங்கோல் மடம் ஆதினம்.

இந்த இழையை ஆரம்பிப்பதற்கு முன் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு மடாதிபதியையோ அல்லது பெரியவரையோ சந்தித்து இது விஷயமாக கேட்டு எழுத வேண்டும் என்றிருந்தேன். ஆனால் சுடச்சுட செய்தியை போட்டு விட வேண்டும் என்பதனால் அன்று இட்டு விட்டேன்.

சரி தொடரலாம்.

எனது சொந்த ஊர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பழமைவாய்ந்த மடாதிபதி சந்திக்க ஆவலானேன். அவர் மிகவும் பிஸியானவர் என்பதனால் எமது நண்பர் மூலம் அப்பாயின்மெண்ட் வாங்கி கொண்டேன். மேலும் செங்கோல் ஆதினத்தை எளிமையில் அணுகலாம், சந்திக்கலாம்.

கடந்த புதன்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்றேன். சிவப்பழமாகம், மிகவும் வயதானவராகம், அறிவில் முதிர்ந்தவராகவும், சாந்த ஸ்வரூபியாகவும் காட்சியளித்தார் செங்கோல் மடம் ஆதினம். அவர் என்னைப் பார்த்தவுடன் வாருங்கள் ஜோதிடரே எப்படியுள்ளீர்கள்? அமருங்கள் என்று எம்மை அவர் அருகிலேயே அமர வைத்துக் கொண்டார்.


[ திருவாவடுதுறை ஆதின சன்னிதானத்துடன் செங்கோல் ஆதீன சன்னிதானம் - இடப்புறம் இருப்பவர் ]

சொல்லுங்கள் என்றார். சொல்ல ஆரம்பித்தேன், நமது அனுபவங்களை.
மிகவும் பொறுமையாக கேட்டுக் கொண்டார். ரொம்பவும் சாந்தமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார்.

இனி அவரது பேட்டி:

கேள்வி: ஸ்வாமி கோவில் பூஜை முறைகளைப் பற்றி உங்களிடம் சில விளக்கங்கள் கேட்டு பெறலாம் என்று வந்திருக்கிறேன்.
ஸ்வாமி பதில்: கேளுங்கள்.

கேள்வி: ஒரு நாளைக்கு எத்தனை காலம் பூஜை ஒரு கோவிலில் செய்ய வேண்டும்?
ஸ்வாமி பதில்: முறைப்படி பார்த்தோமானால் 6 கால பூஜை செய்ய வேண்டும். ஆனால் இன்று அது 3 காலமாகி, 2 காலமாகி, 1 காலமாகி விட்டது. சில கோவில்களில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டனர். சில கோவில்களை அடைத்தே விட்டனர்.

கேள்வி:
கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
ஸ்வாமி பதில்: கட்டாயமாக இருக்கிறது. பூஜை செய்பவருக்கு திருமணம் ஆகியிருந்தால் நல்லது. அவரே பிராமணராக இருந்தால் 3 வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். அவர் வேதம், ஆகமம், திருமறைகள், சைவ சித்தாந்தம், இதிஹாசங்கள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். முக்கியமாக பூஜை செய்பவருக்கு பக்தி சிரத்தை இருக்க வேண்டும். இந்த பூஜை செய்வதற்கு தாம் என்ன புண்ணியம் செய்தோமோ இந்த பாக்யம் கிடைத்திருக்கிறது என்று இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்வதானால் தொழிலை AFFECTIONனோடு செய்ய வேண்டுமே தவிர PROFESSIONஆக செய்ய கூடாது. (இதற்கு கண்ணப்ப நாயனார் புராணத்தை உதாரணமாக சொன்னார்)

கேள்வி: கோவிலில் புஜை செய்பவருக்கு ஏதாவது யூனிபார்ம் என்று ஏதாவது இருக்கிறதா?

பதில்: அவர் பஞ்சகச்சம் அணிந்திருக்க வேண்டும். அவரவர் ஆச்சாரங்களை அனுஷ்டிக்க வேண்டும். திருவிடங்கள் அணிய வேண்டும்.

கேள்வி: கோவிலில் பூஜை செய்பவர்கள் புரோஹிதம் தொழில் செய்யலாமா?

பதில்: புரோஹிதத்தில் மங்கலம், அமங்கலம் என்று இரு வகைகள் உண்டு. மங்கலம் என்பது சுபகாரியங்கள். அமங்கலம் என்பது அபரக்கிரியைகள். மங்கலம் தொழிலுக்கு செய்பவர்கள் தாராளமாக கோவிலில் பூஜையும் செய்யலாம்.

கேள்வி: கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா?

பதில்: ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று ஒரு வழக்கு உண்டு. ஆதலால் கட்டாயம் கோவிலுக்கு செல்லுதல் வேண்டும்.

கேள்வி: கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் அர்ச்சனை செய்யவேண்டுமா? ஏனென்றால் சில கோவில்களில் அர்ச்சனை மந்திரங்கள் தெரிவதில்லை?

பதில்: பொதுவாக பூஜைகள் இரு வகை உண்டு. ஒன்று ஆத்மார்த்த பூஜை. இன்னோன்று பரார்த்த பூஜை. வீட்டினில் செய்வது ஆத்மார்த்த பூஜை. கோவிலில் செய்வது பரார்த்த பூஜை. ஆத்மார்த்த பூஜைகளுக்கு ஆகமம் என்பது இல்லை. ஆனால் கோவிலில் பூஜை முறைகளுக்கு ஆகமம் என்று ஒன்று உள்ளது. இன்று அதையெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது இல்லை. சரி கோவிலில் இருப்பவருக்கு அர்ச்சனை செய்யத் தெரிவதில்லை என்றால் நமக்கு நாமே அர்ச்சனை செய்தல் கூடாது. அர்ச்சனை செய்வதற்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பழம், சூடன், சாம்பிராணி, பத்திக்கட்டு என கொண்டு செல்லலாம். ஆத்மார்த்த பூஜையில் நமக்கும் நம்து குடும்பத்திற்க்கும் நாமே அர்ச்சனை செய்து கொள்ளலாம்.[ நான் அவரிடம் மக்களுக்கு அர்ச்சனை மந்திரங்கள் கொடுக்க போகிறேன் என்று சொல்லியவுடன் வந்த பதில் இது ]

கேள்வி: தமிழில் அர்ச்சனை செய்யலாமா?

பதில்: பாரம்பரிய மரபுப்படி நமக்கு ஸமஸ்க்ருத வழிபாடு உண்டு. [இதற்கு வேத நாயகன் என்ற தேவாரப் பாடலை சொன்னார்] எனினும் தமிழில் அர்ச்சனை செய்யலாம்.

கேள்வி: கோவிலில் பூஜை செய்பவர் சரிவர இல்லாததால் என்ன செய்யலாம்?

பதில்: நாமே விபூதி குங்குமம் கொண்டு சென்று நமக்கு பூசி கொள்ளலாம். ஆலய நிர்வாகிகளிடம் புகார் செய்யலாம். இல்லையென்றால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளலாம்.

கேள்வி: ஸ்வாமி கோவில்களில் நாளுக்கு நாள் அக்கிரமங்கள் அதிகரித்து கொண்டே வருகிறதே?இது மாறாதா?

பதில்: இதுதான் யுகதர்மம்.

நமக்கு பேட்டியளித்த சன்னிதானத்திற்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்.

எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்?

எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்?

கடந்த 6 வாரங்களாக என் மனதை உறுத்திக் கொண்ட, கொண்டுள்ள விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அனுபவம் கோவிலுக்கு செல்ல நினைப்பவர்களுக்கும், கோவிலில் பூஜை செய்பவர்களுக்கும் ஒரு நல்ல படிப்பினையாக அமையும்.

எது எப்படியோ நான் கோவிலுக்கு செல்ல போவதில்லை.

நாமும் ஜோதிடராக இருக்கிறோம் அனைவருக்கும் ஜோதிட ஆலோசனைகள் வழங்குகிறோம் ஆனால் நாம் கோவிலுக்கு செல்வதில்லை(அடிக்கடி). இதை எனது தாயாரும் பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். கடந்த 6 வாரங்களுக்கு முன் எனது தாயார் "டேய் ராம்! சனிக்கிழமை தோறும் நீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு விட்டு வா! அப்பா சொல்லியிருக்கார்" என்றார். அதிலும் ஏகப்பட்ட நிபந்தனைகள். கோவில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்ற வேண்டும் என்று. தாய் சொல்லை தட்டாத பிள்ளை நான். சரிம்மா என்றேன். அன்று ஆரம்பித்தது என் கிரஹசாரம். முதல் மூன்று வாரங்கள் என்னால் கோவிலுக்கு செல்ல முடியாத பணிச்சுமை.

சம்பவம் - 01:

இடம்: அம்பத்துர்ர் ஒரகடம் - ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்.

4வது வாரமும் வந்தது. முதல் நாளே அதாவது வெள்ளிகிழமையே வெற்றிலை வாங்கி வந்து விட்டேன். மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிலை மாலையை பயபக்தியுடன் கோர்த்து கொண்டு கோவிலுக்கு சென்றேன். அன்று புரட்டாசி சனிக்கிழமை. கோவிலில் நல்ல கூட்டம். கூட்டம் கலையும் வரை காத்திருந்தேன். 8.45க்கு மேல் மாலையை போட்டேன். எங்களது சம்பிரதாயத்தில்(திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள்) பரிகார வெற்றிலைக்கு பாக்கு வைத்து மாலை கட்டுவதில்லை. சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலையன் ஸ்வாமி கோவிலில் கூட இதைத்தான் கடைபிடிப்பதாக கேள்வி. மறு வாரமும் வந்தது இதே போல் கொண்டு சென்றேன். அங்கு பூஜை செய்பவர் எனது மாலையை தொட்டு பார்த்து பாக்கு வைக்கவில்லையா என்றார். நானும் இல்லை பரிகார வெற்றிலைக்கு பாக்கு வைத்து கட்டுவதில்லை என்றேன். உடனடியாக என்னை ஒரு மனிதனென்றும் பாராமல் எனது முகத்தில் அந்த மாலையை விசிறி எறிந்தார். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. எனக்கு மோபம் ஒருபக்கம், சோகம் ஒருபக்கம். இல்லை ஸ்வாமி நான் போன வாரம் தங்கள் கோவிலில் மாலை போட்டேன். நீங்கள் அதை வாங்கி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு போட்டீர்கள் என்றேன். போடா நீ போன வாரம் கோவிலுக்கே வரவில்லை என்றார். எனக்கு மேலும் அந்த இடத்தினில் இருக்க பிடிக்கவில்லை.

சம்பவம் 2:

இடம்: திருத்தணி அருகில் நல்லாட்டூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில்.

அடுத்த வாரம் சரி வேறு கோவிலுக்கு செல்லலாம் என நினைத்து இந்த கோவிலுக்கு வந்தேன். அர்ச்சனை சீட்டு வாங்குங்கள் என்றார் அங்கு பூஜை செய்பவர். வாங்கினேன். அர்ச்சனை செய்யும்போது எனது குடும்பத்தின் பெயர்களை சொல்ல ஆரம்பித்தேன். அவரது முகம் கோண ஆரம்பித்தது. ஒரு அர்ச்சனை சீட்டுக்கு 10 பெயர்தான் என்றார். நான் 8வது நபரின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லையே ஒரு குடும்பத்தில் இவ்வளவு நபர்கள் இருக்க முடியாதே என்றார். நான் கேட்டேன் உங்களுக்கு எப்படி தெரியும் எனது குடும்பத்தை பற்றி என்றேன். எனக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். பொறுமையாக கேட்டு கொண்டு வெளியே வந்தேன்.

மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, சொல்ல வேண்டிய குறிப்புகளை மனதில் பதிய வைத்தேன்.

கோவிலில் பூஜை செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?

மந்திரம் எப்படி சொல்ல வேண்டும்?

அவர் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

என்னவெல்லாம் செய்யலாம்?

போன்ற விஷயங்களை பல சொல்ல போகிறேன்...

இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து பிழைத்துக் கொள்ளலாம்........

Wednesday, October 13, 2010

வியாழ நோக்கம் - விளக்கம்வியாழ நோக்கம் என்றால் என்ன?

நமது நண்பர் ஒருவர் அவரது பெண்ணிற்கு திருமணத்திற்காக ஜாதகம் பார்க்க ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறார். அந்த ஜோதிடர் நமது நண்பரிடம் ”உங்களது பெண்ணிற்கு இன்னும் வியாழ நோக்கம் வரவில்லை. எனவே வியாழ நோக்கம் வந்த பின் தான் திருமணம் நடக்கும். வியாழ நோக்கம் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். எனவே ஒரு வருடம் கழித்து திருமணம் செய்யுங்கள்” என்றிருக்கிறார். உடனடியாக அவர் எனக்கு மெயில் செய்திருந்தார். அவருக்காகவும், எனக்காகவும், நமது நண்பர்களுக்காகவும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

பதில்:

முதலில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவு பெறுவோம். ஜோதிடத்தில் குரு என்றாலும் வியாழன் என்றாலும் ஒன்றுதான்.

கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். எதற்காக வியாழ நோக்கம்? “குரு பார்க்க கோடி நன்மை” என்ற வாசகம் நமக்கு நன்றாக தெரியும். எனவே குரு பார்வை வரும் போது எந்த தடங்கலும் இல்லாமல் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

அது ஏன் ஒருவருடம்?

அதாவது குரு வருடத்திற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். அதனால் அந்த ஜோதிடர் ஒரு வருடம் என சொல்லியிருக்கிறார்.

சரி குரு பார்த்தால் உடனே திருமணம் நடைபெற்று விடுமா? எனது பதில் அப்படி கிடையாது என்பதுதான். என்னுடைய விளக்கம், எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், புரியும். நாம் ராசியை எடுத்துக் கொள்ள மாட்டோம், லக்னத்தைதான் எடுப்போம். நமக்கு லக்னம்தான். சரி அப்படியே கோச்சாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் திருமணம் நடைபெற்று விடுமா? நடக்காது. இதற்காக வியாழகிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலை போடுவது, விளக்கு ஏற்றுவது என பரிகாரங்களும் நிறைய உள்ளன. அது அவரவர் இஷ்டம். என் வரையில் திசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் வீற்றிருக்கும் இடம், கிரஹ பார்வை என நிறைய உள்ளன. அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்ல இயலும். இதில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் இதில் கோச்சாரம் இடம் பெறவில்லையென்று. கோச்சாரம் வெறும் 20% பலன்களைத்தந்தால் அதிகம்.

நமது ஜாதக பலன்கள் எப்படி நடக்கும் என்று தெரியுமா? ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக நான் கருதுவது திசா புத்தி பலன்களைத்தான். மேலும் கோச்சாரப்படி பார்க்கும் போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் திசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும். நல்லது. மேலும் நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான திசை, குரு பார்வை இருந்தாலே, நடந்தாலே திருமணம் நடந்து விடும். கோச்சாரத்தை பார்ப்பதை விட்டு விட்டு அனைவரும் திசாபுக்தி பலன்களை பாருங்கள்.

உதாரணமாக ஸிம்ஹ ராசிக்காரர் ஒருவரை(திருமணமாகாதவர்) எடுத்துக் கொள்வோம். அவருக்கு இப்போது சரியான வியாழ நோக்கம் உள்ளது. ஆனால் அனுகூலமான திசை இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஜாதகம் இல்லாதவர்களுக்கு திசை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு பலன் சொவதும் கடினம்.

சரி இப்போது யார் யாருக்கு குரு பார்வை உள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வியாழனுக்கு 5, 7, 9ம் பார்வைகள் என மூன்று பார்வைகள் உண்டு. வியாழன் இருக்கும் இடம் ஒன்றாம் இடம் என் வைத்துக் கொண்டு Clockwiseஆக எண்ணினால் நமக்கு மேற்கண்ட படம் கிடைக்கும்.

மேற்கண்ட படம் படி

ஆண்கள் - மேஷம், மிதுனம், ஸிம்ஹம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு

பெண்கள் - மேஷம், மிதுனம், ஸிம்ஹம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு உள்ளது.

மேற்கண்ட இராசிக்காரர்களுக்கு திசா புக்தி அனுகூலமாக இருந்தால் நிச்சயம் திருமணம் விரைவில் தங்கு தடையின்றி நடக்கும்.

அனைவருக்கும் எமது ஆசிகள்.

குறிப்பு: யாம் எழுதிய முன்னோர்கள் வழிபாடு - குறிப்புகளுக்கு நிரம்ப கேள்விகள், பாராட்டுகள், விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த கேள்விகளுக்குண்டான பதில்களை சீக்கிரம் பதிவு செய்கிறேன்.

தங்கள் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

Tuesday, October 12, 2010

கணபதி ஹோமம்

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கணபதி ஹோமம்:

மஹாகணபதியின் அருளை பெறுவதற்கு இந்த ஹோமம் செய்யப்படுகிறது. காரியங்கள் தடை இன்றி நடைபெறுவதற்கு, திருமண தடை நீங்குவதற்கு, கிரஹ தோஷம் நீங்குவதற்கு, கிரகப் பிரவேசத்தின் போது, நக்ஷத்ர தோஷம் நீங்குவதற்கும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது.

இந்த கணபதி ஹோமத்தை சாஸ்திரப்படி செய்வதற்கு இன்றைய சூழ்நிலையில் நபர்கள் கிடைக்காத நிலையில் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் கணபதி ஹோமத்தை செய்து தருகிறது.

நமது ஜோதிட நிலையம் கடந்த 400 வருடங்களுக்கும் மேலாக ஜ்யோதிஷம் பார்த்து வருகிறது. 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் கோவிலில் பரம்பரை ஜோதிடர்களாகவும் விளங்கி வருகிறோம்.

நமது மக்கள் பயன்பெறும் வகையில் கணபதி ஹோமத்துடன் கீழ்க்கண்டவையும் நடத்தித் தரப்படும்.

[1] கணபதி ஹோமம்

[2] நவக்ரஹ ஹோமம்

[3] ஸ்ரீ ஸுதர்சன ஹோமம்

[4] ஸ்ரீ ஸூக்த ஹோமம்

[5] தற்காலிக பிரசன்னம்

அனைத்து ஹோமங்களும் சாஸ்த்ர சம்பிரதாய முறையில் நடத்தித் தரப்படும். மேலும் மிகக் குறைந்த செலவில் நடத்தி தருகிறோம்.

தமிழ்நாட்டில் எங்கு என்றாலும் நடத்தி தருகிறோம்.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம்

சென்னை.

போன்: 9884852691

Email: sainavavilas@gmail.com

Sunday, October 10, 2010

கரிநாள் என்றால் என்ன?

கேள்வி: கரிநாள் என்றால் என்ன?

பதில்: தமிழ் வருடத்தில் மாதங்களில் வரும் சில நாட்களை கரிநாட்கள் என்பர்.

கேள்வி: அவற்றின் முக்கியம் என்ன?

பதில்: அதாவது அந்த நாட்களில் நல்லவை அனைத்தையும் ஒதுக்கி வைக்க சொல்கிறார்கள்.

கேள்வி: எந்தெந்த நாட்கள் கரிநாட்கள் என்று அழைக்கப்படுகிறது?

பதில்:

சித்திரை 6, 15 கார்த்திகை முதல் சோமவாரம், 1, 10, 17
வைகாசி 7, 16 ,17 மார்கழி 6, 9, 11
ஆனி 1, 6 தை 1, 2, 3, 11, ,17
ஆடி 9, 10, 20 மாசி 15, 16, 17
ஆவணி 2, 9, 28 பங்குனி 6, 15, 19
ஐப்பசி 6
சிலர் கார்த்திகை முதல் சோமவாரம் நீக்கி ஐப்பசி 22 எனக் கொள்வர்.

மேற்சொன்ன நாட்கள் கரிநாளாகும்.

கேள்வி: கரிநாட்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

என் வரையில் இங்கு தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.

அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு:

இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்

ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்

அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ

டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்

ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே

டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்

முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்

முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.

உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று

வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா

துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்

சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்

பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்

பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு

கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட

கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே

மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.

என்னைப் பொறுத்தவரை கரிநாள் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

அதே போல் திதி சூன்யம், விஷ சூன்யம் என்றெல்லாம் சில நாட்கள் உள்ளன. அந்த நாட்களிலும் நல்லவைகள் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். என் வரையில் அந்த நாட்களிலும் செய்யலாம்.

Thursday, October 7, 2010

நவராத்திரி இலவச சேவை - Navarathri Free Service

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் வழக்கம் போல் நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது. அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை, குழந்தை Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

மெயில் செய்ய வேண்டிய முகவரி: sainavavilas@gmail.com அல்லது ramjothidar@gmail.com.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம், புரட்டாசி சனிக்கிழமை துவாதச ஸகஸ்ரநாம பாராயணம் போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[4] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் 9 நாட்களிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[5] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

முன்னோர்கள் வழிபாடு - 2ம் பாகம்

கேள்வி: தாய் தந்தை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: கண்டிப்பாக தர்ப்பணம் கிடையாது. ஆனால் விரதம் அனுஷ்டிக்கலாம். பெரியவர்களை வணங்கலாம். தாய் தந்தையரை வணங்கலாம். உங்கள் வீட்டில் இறந்த பெரியவர்களை நினைத்து மனமாற வணங்குங்கள். நீங்கள் இந்த பூமிக்கு வர அவர்கள்தான் காரணம். எனவே பெரியவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள்.

வணங்கும் முறை:

வீட்டில் மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி ஒரு 5 நிமிடம் மனமாற இறந்த பெரியவர்களை நினைத்து வணங்குங்கள். தாய்தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். இது போதும்.

கேள்வி: திவசம் கொடுக்க இயலாதவர்கள் அரிசி வாழைக்காய் கொடுக்கலாம் என்று சொல்கிறார்களே...
அப்படிச் செய்யலாமா? அது திவசம் செய்வதற்கு ஈடானதுதானா?

பதில்: அரிசி வாழைக்காய் கொடுத்தாலும் தர்ப்பணம் கட்டாயம் உண்டு.

முடிந்தது.

குறிப்பு: இது தொடர்பான சந்தேகங்களை தனி மடலில் இடுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய வரை பதிலளிக்க முயல்கிறேன்.

எனது மெயில் முகவரி: ramjothidar@gmail.com

Wednesday, October 6, 2010

இன்றைய பஞ்சாங்கம் - 07-10-2010

In Tamil - பஞ்சாங்கம் - 07-10-2010

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

புரட்டாசி மாஸம் 21ம் தியதி; ஆங்கிலம் அக்டோபர் 07 2010

அயணம் : தக்ஷிணாயணம்
ரிது : வருஷ ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி : அமாவாஸ்யை மறுநாள் காலை 01:02 வரை
நக்ஷத்திரம் :

உத்திரம் காலை 08:07 வரை பின் ஹஸ்தம்

யோகம் :

பிராம்மம் யோகம் நாழி 21:07

கரணம் :

சதுஷ்பாதம் கரணம் நாழி 20:22

சூரிய உதயம் :

காலை மணி 6.12

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.14

அஹசு :

நாழிகை 30:04

லக்ன இருப்பு :

கன்னி நாழிகை இருப்பு - 1:43 வரை (காலை மணி 06:41 வரை)

இராகு காலம் :

மதியம் 01:42 முதல் 03:12 வரை

எமகண்டம் :

காலை 06:12 முதல் 07:42 வரை

வியா o o கே
o

இன்றைய கிரஹநிலை

o
o o
ரா o செ சுக் புத சூரி சனி

-------------------------------------------------

In English - Almanac

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Purattaasi Month - Date - 21 - English Date: 07th October 2010

Ayanam : Dhakshinayanam
Rithu : Varusha Rithu
Day : Thursday
Thithi :

Amavaasyai till tomorrow early morning 01:02 Am

Nakshatram :

Uthiram till morning 08:07 Am after Hastham

Yogam :

Braahmam Yogam Till Nazhigai 21:07

Karanam :

Sathushpaatham Till Nazhigai 20:22

Sun Rise :

Morning 06.12

Sun Set :

Evening 06.14

Ahasu :

Nazhigai 30:04

Remainder Lagnam: :

Kanni Balance Nazhigai 01:43 (Till morning 06:41)

Rahu Kaalam :

Afternoon 01:42 to 03:12

Emagandam :

Morning 06:12 to 07:42

Ju o o Kethu
o

Planetery Position

o
o o
Raghu o Mars Ven Mer Sun Sat


-------------------------------------

இன்றைய நாளின் சிறப்பு:-

[1] ஸர்வபித்ரு திதி

[2] மஹாளய அமாவாஸ்யை

----------------------------------------

Tuesday, October 5, 2010

முன்னோர்கள் வழிபாடு - மிக முக்கியம்

கேள்வி: இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. மஹாளய அமாவாஸ்யை நெருங்கி விட்டது. முன்னோர்களை வழிபடும் முறைகளையும், அமாவாஸ்யை முக்கியம் பற்றியும் பார்க்கப் போகிறோம்.

பதில்: முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும் கடைச்சரக்கல்ல. அது புனிதமானது.

எதற்காக நமது கலாசாராத்தில் முன்னோர் வழிபாடு வந்ததென்றால் நான் இந்த பூமிக்கு வர முக்ய காரணம் அவர்கள்தான் அதனால்தான், நமது மதத்தில் முன்னோர் வழிபாடு. சரி விஷயத்திற்கு வருவோம். என்றெல்லாம் வணங்க வேண்டும், யாரெல்லாம் வணங்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

இதை நாம் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

[1] தாய் தந்தை இருவரும் இருப்பவர்கள்

[2] தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் இல்லாதவர்கள்

[3] தாய் வழி தந்தை வழி பாட்டி, தாத்தா இருப்பவர்கள் அல்லது இருவரில் ஒருவர் இருப்பவர்கள்

[4] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம் ஆகாதவர்கள்

[5] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம் ஆனவர்கள்

யார் என்றாலும் இந்த ஐந்திற்குள் அடங்கி விடுவார்கள் என நினைக்கிறேன்.

சரி தொடரலாம்..

தாய் தந்தை இருப்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தனியாக சொல்லப்படும்.

--------------------------------------------------------------------------------------

தாய் தந்தை இறந்தவர்களுக்கு மேற்கொண்டு சில நடைமுறைகளை சொல்ல போகிறேன்.

அதை கவனமுடன் படிப்பதோடு மட்டுமில்லாமல், நடைமுறையிலும் கொண்டு வருவது தங்களுடைய சந்ததிகளுக்கு நன்மை பயக்கும். முதலில் எத்துனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும். தெரியவில்லையென்றால் தெரிந்து கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். தெரிந்தவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நன்று. அவர்கள் இறந்த தேதிக்குண்டான திதி தெரியுமா? (திதி தெரியாதவர்களுக்கு: தங்கள் முன்னோர்கள் இறந்த தேதி கொடுத்தால் திதி கண்டுபிடித்து தரப்படும் - 1900 முதல் 2010 வரை - இலவச சேவை).

இப்போது தங்களுக்கு திதி கிடைத்திருக்கும்.

சரி, முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?

அவர்கள் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி செய்ய வேண்டும்.

தாய் வழி தந்தை வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார் உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: பெண்கள் செய்யலாமா?

பதில்: எனது பதில் தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்

கேள்வி: இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?

பதில்: எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

கேள்வி: வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?

பதில்: வீட்டில் செய்வது நல்லது.

கேள்வி: தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துதான் செய்ய வேண்டுமா?

பதில்: அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளை சொல்லுங்களேன்?

பதில்: முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம். நேற்று கொடுத்த டேபிளை மீண்டும் கொடுக்கிறேன்.

தாயார் இல்லாவிட்டால் தாயார் பெயர் தந்தையார் இல்லாவிட்டால் தந்தை பெயர்
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார் உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

நல்லது. மேற்சொன்னதில் சிலருக்கு 14 பெயர்களும் வரலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நன்மையைத் தரும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நல்லது, தொடருகிறேன்.

தர்ப்பணம் அன்று விரதம்:

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்:

முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி டேபிளில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழி டேபிளில் உள்ளவர்களுக்கு.

மந்திரம் வேண்டுவோர் - மெயில் செய்தால் அனுப்பித் தரப்படும்.(தேவைப்படுவோருக்கு மட்டும்)

கேள்வி: என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்:

பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர என்றெல்லாம் தர்ப்பணம் செய்தல் வேண்டும் என்று கீழ்க்கண்ட டேபிளில் கொடுத்திருக்கிறேன்.

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும்

12 மாதங்கள் * 1

12 நாட்கள்
ஒவ்வொரு கிரஹணத்தன்றும்

(சூரிய சந்திர கிரஹண காலங்களில்)

4 நாட்கள்*+
ஒவ்வொரு மாத அமாவாஸ்யையின் போதும்

(12 மாதங்கள் * 1)

12 நாட்கள்
மொத்தம் 28 நாட்கள்

*+: சூரிய சந்திர கிரஹணங்களின் தர்ப்பண விதிமுறைகள் தனியாக உள்ளது. அதை கிரஹண காலங்களில் சொல்கிறேன். கிரஹண தேதிகள் பின் அறிவிக்கப்படும்.

இனி இவ்வருடத்திய தர்ப்பண தேதி விபரங்கள்:

தமிழ் மாதம் ஆங்கிலம் கிழமை சிறப்பு
புரட்டாசி - 21 07-10-2010 வியாழன் மஹாளய அமாவாஸ்யை
ஐப்பசி - 01 18-10-2010 திங்கள் மாதப்பிறப்பு
ஐப்பசி - 19 05-11-2010 வெள்ளி அமாவாஸ்யை
கார்த்திகை - 01 17-11-2010 புதன் மாதப்பிறப்பு
கார்த்திகை - 19 05-12-2010 ஞாயிறு அமாவாஸ்யை

தொடரும்....

இன்றைய பஞ்சாங்கம் - 06-10-2010

In Tamil - பஞ்சாங்கம் - 06-10-2010

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

புரட்டாசி மாஸம் 20ம் தியதி; ஆங்கிலம் அக்டோபர் 06 2010

அயணம் : தக்ஷிணாயணம்
ரிது : வருஷ ரிது
கிழமை : புதன்கிழமை
திதி : திரயோதசி அதிகாலை 05:38 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்திரம் :

பூரம் நக்ஷத்ரம் காலை 09:32 வரை பின் உத்திரம்

யோகம் :

சுப்ரம் யோகம் நாழி 28:39

கரணம் :

விஷ்கம்பம் கரணம் நாழி 26:07

சூரிய உதயம் :

காலை மணி 6.12

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.14

அஹசு :

நாழிகை 30:04

லக்ன இருப்பு :

கன்னி நாழிகை இருப்பு - 1:53 வரை (காலை மணி 06:45 வரை)

இராகு காலம் :

மதியம் 12:12 முதல் 01:42 வரை

எமகண்டம் :

காலை 07:42 முதல் 09:12 வரை

வியா o o கே
o

இன்றைய கிரஹநிலை

o
o o
ரா o செ சுக் புத சூரி சனி

-------------------------------------------------

In English - Almanac

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Purattaasi Month - Date - 20 - English Date: 06th October 2010

Ayanam : Dhakshinayanam
Rithu : Varusha Rithu
Day : Wednesday
Thithi :

Thirayodasi Early morning 05:38 after Chathurdasi

Nakshatram :

Pooram Till morning 09:32 after Uthiram

Yogam :

Subhram Yogam Till Nazhigai 28:39

Karanam :

Vishkambam Till Nazhigai 26:07

Sun Rise :

Morning 06.12

Sun Set :

Evening 06.14

Ahasu :

Nazhigai 30:04

Remainder Lagnam: :

Kanni Balance Nazhigai 01:53 (Till morning 06:45)

Rahu Kaalam :

Afternoon 12:12 to 01:42

Emagandam :

Morning 07:42 to 09:12

Ju o o Kethu
o

Planetery Position

o
o o
Raghu o Mars Ven Mer Sun Sat


-------------------------------------

இன்றைய நாளின் சிறப்பு:-

[1] சஸ்திரஹரமஹாளயம்

[2] கேதார விரதம்

[3] மாஸ சிவராத்திரி

----------------------------------------