Friday, April 28, 2017

எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்

”எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்?” ஒரு அன்பர் கேட்ட கேள்வி.


தற்போதிருக்கும் சூழ்நிலையில் வாக்கியப்படி சிம்ம ராசியில் ராகு - கும்ப ராசியில் கேது - கன்னி ராசியில் குரு - விருச்சிக ராசியில் சனி என முக்கிய கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள். ஜூலை 27ம் தேதி ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் தமிழக அரசியலில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும். செப்டம்பர் 2ம் அன்று குரு மாற்றம் நிகழ்வதால் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். டிசம்பர் மாதம் நிகழும் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கும்.

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை:
அருளிச் செய்தவர்: எம்முடைய குருநாதர் பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர்அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யக்கூடாதவை:
புதுமனை புகுதல்
அஸ்திவாரம் தோண்டுதல்
கிணறு வெட்டுதல்
கோவில் கும்பாபிஷேகம் செய்தல்
தேவதையை பாலாலயம் செய்தல்
கிரகங்களை கட்டுதல்
மாட்டுக் கொட்டகை அமைத்தல்
மந்திர உபதேசம் வாங்குதல் (ஒருவேளை கிரஹண காலமாய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்)


அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யத் தகுந்தவை:
புதிய வீடு பதிவு செய்தல்
வாடகை வீட்டிற்குச் செல்லுதல்
பத்திரம் தயாரித்தல்
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுதல்
புதிய வியாபார நிறுவனம் தொடங்குதல்
புதிய கல்வி ஆரம்பித்தல்
புதிய வாகனம் வாங்குவது
புதிய வேலையில் சேருவது
மகான்கள் தரிசனம்

பொன்னுருக்கி விடுதல்
ஆக்குப்பிறை போடுதல்
மணவறை போடுதல்
திருமணம்
நிச்சயதார்த்தம்
ஒப்புதல் தாம்பூலம்
பட்டு எடுத்தல்
நகைகள் வாங்குதல்
மாப்பிள்ளை பெண் பார்த்தல்கும்பாபிஷேக பணிகளை செய்தல்
யாகசாலை அமைத்தல்
ஸ்வாமி சிலைகள் வாங்குதல்
ஸ்வாமி சிலைகளை தான்யவாசம் - ஜல வாசம் செய்தல்
தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்த்தல்

சுபநிகழ்ச்சிகளுக்கு முகூர்த்தம் குறித்தல்
ஜாதகம் எழுதுதல்

குலதெய்வ நேர்ச்சைகளை செய்தல்
புண்ணிய நதிகளில் நீராடல்
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்று வருதல்
பித்ரு கர்மாக்களை செய்தல்

எண்ணை ஸ்நானம் செய்தல்

குழந்தையை தொட்டிலில் இடுவது
குழந்தைக்கு பெயர் சூட்டுதல்
காது குத்துதல்


Tuesday, April 4, 2017

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:
நடராஜரின் நக்ஷத்ரமான திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகே எந்த முடிவையும் எடுப்பார்கள். அவ்வப்போது எடுத்த முடிவுகளில் மாற்றமும் இருக்கும். தேவையில்லாத இடங்களில் தேவையற்ற கோபத்தைக் காண்பிப்பவர்கள். சுயமரியாதை அதிகமாக இருப்பவர்கள். அதிக சிரத்தை எடுத்து எந்த காரியத்தையும் செய்பவர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கைக்குப் பிறகு இரண்டாவது வாழ்க்கை தொடங்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது இவர்களுக்கு நன்மை தரும். படிப்பை விட அனுபவ அறிவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு கை மணிக்கட்டில் நாக ரேகை ஓடும். திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக பொதுநலச் சிந்தனை உடையவர்கள். பொதுவில் தந்தை வழி பாட்டனாரின் இயல்பை ஒத்தவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு வரும் ஹேவிளம்பி வருடம் பல பொன்னான வாய்ப்புகளைத் தர காத்திருக்கிறது. வரும் 2017 ஜூலை முதல் 2020 ஜூலை வரை இவர்களுக்கு பொற்காலம். சோம்பலைத் தவிர்த்து உழைப்பில் கவனம் செலுத்தினால் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு இவர்களால் செல்ல முடியும்.

அடிக்கடி ஸ்ரீதுர்க்கை அம்மனை சேவிப்பது - நாகர்களுக்கு அபிஷேகம் செய்வது என்பது நல்ல பரிகாரமாக இருக்கும். மாதா மாதம் திருவாதிரை நக்ஷத்ரம் தோறும் சிவபுராணம் படிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மனதைரியம் ஏற்படுவதற்கு தினமும் ஸ்ரீநரசிம்மரை வணங்குவது நல்லது, 

கட்டாயமாக திங்கள்கிழமையை இவர்கள் தவிர்ப்பது நல்லது.