Tuesday, December 18, 2012

திருப்பாவை - 3ம் பாசுரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்

(விழுப்புரம் மாவட்டம்)  உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

Monday, December 17, 2012

திருப்பாவை - 2ம் பாசுரம் (17.12.2012 அன்று தினமணி நாளிதழில் வெளியாகும் பாசுர விளக்கம்)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உற்ஸவம்

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றுமான ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உறஸ்வம் நடைபெறுகிறது.

Monday, December 10, 2012

கார்த்திகை கடைசி சோமவாரம் - சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

சங்கரனுக்கு சங்காபிஷேகம்
![இன்று கார்த்திகை கடைசி சோமவாரம்]
By - சிவ.அ. விஜய்பெரியசுவாமி


இன்றைய பஞ்சாங்கம் - 10.12.2012

திங்கட்கிழமை

10
Monday, December 10, 2012

ராகு காலம்: 7.30-9.00
எம கண்டம்: 10.30-12.00
நல்ல நேரம்: காலை 9.15-10.15 மாலை 4.45-5.45
இன்றைய ராசிபலன்

மேஷம்:சாந்தம்
ரிஷபம்:போட்டி
மிதுனம்:ஆர்வம்
கடகம்:கவலை
சிம்மம்:தடங்கல்
கன்னி:சலனம்
துலாம்:பகை
விருச்சிகம்:ஆக்கம்
தனுசு:பரிசு
மகரம்:பயம்
கும்பம்:தெளிவு
மீனம்:உதவி
பஞ்சாங்கம்...

நந்தன வருடம் கார்த்திகை 25; அமிர்த யோகம் 43.37க்கு மேல் மரணயோகம். கரணம் 9.00-10.30; சூரிய உதயம் 6.17 விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 1 விநாடி 3; சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
துவாதசி 38.29 (PM 9.41) சுவாதி 43.37 (PM 11.44)
குளிகை: 1.30-3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடாணை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். சுபமுகூர்த்த தினம்.

Saturday, December 8, 2012

நாளைய உழவாரப் பணி

நாளை 9.12.12. அன்று திருச்சக்தி முற்றம் பெரியநாயகி உடனூறை சிவக்கொழுந்தீஸ் ­வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி நடைபெற இருக்கின்றது. தொடர்புக்கு சிவமிகு.ராஜேஷ் ஐயா 9940205930, 8754478855 சிவமிகு.சரவணன் ஐயா 9444304980

சிவன் கோவில்களில் டிசம்பர் 19ல் ஆருத்ரா தரிசனம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.19-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.



சுப்ரபாத சேவை டிக்கெட்: கூடுதலாக விற்க முடிவு


திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் இனிமேல் இணையதளம் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறினார்.



பாண்டமங்கலம் கால பைரவருக்கு சிறப்பு லட்சார்ச்சனை

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள மகா கால பைரவருக்கு வியாழக்கிழமை இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Thursday, December 6, 2012

திருப்பதி திருமலையில் சொர்க்க வாசல் 2 நாள் திறந்திருக்கும்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் 2 நாள்களுக்கு திறந்திருக்கும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தலவிருட்சம் காட்டும் 9 கோபுரங்கள்

திருவண்ணாமலைய்ல் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களையும் ஒருங்கே தரிசிக்க முடியுமா?



முடியும்.  இத்திருகோவிலின் தலவிருட்சம் “மகிழம்”. இந்த கோவிலில் உள்ள மரத்தின் அருகில் நின்று கொண்டு வெளியில் பார்த்தால் கோவிலின் ஒன்பது கோபுரங்களும் தரிசித்து அப்பனம்மையின் அருளைப் பெற முடியும்.


இன்றைய ராசிபலன் - 06.12.2012

இன்றைய நாள் மிக நல்ல நாள் - இன்றைய ராசிபலன் - 06.12.2012

மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பதிமூன்று

மீனம்:

எவரிடமும் முடிந்தவரை சிக்கிக் கொள்ளாமல் விலகிக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே எந்த பிரச்சனைகளையும் சந்திப்பதற்கு முன் மிகுந்த யோசனைகளை செய்து முடிவெடுத்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தைரியவீர்ய மூன்றாமிடத்தில் கேதுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தனவாக்குகுடும்ப ஸ்தான இரண்டாமிடத்திற்கும், ராகு ஆயுள்ஸ்தான எட்டாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

Wednesday, December 5, 2012

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -பாகம் பதிமூன்று

கும்பம்:

அடுத்தவரின் மனதை எளிதில் அறிந்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நிறைகளை எந்த அளவிற்கு காண்பீர்களோ அதே போன்று குறைகளையும் கண்டு கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி சுகஸ்தான நான்காமிடத்தில் கேதுவும், தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தைரியவீரிய ஸ்தான மூன்றாமிடதிற்கும், ராகு பாக்கியஸ்தான ஒன்பதாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் 12

மகரம்:

எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் எதிலும்  தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி பஞ்சமபூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தில் கேதுவும், லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து அருளாட்சி கொடுத்தார்கள். இனி கேது சுகஸ்தான நான்காமிடத்திற்கும், ராகு கர்மஜீவனஸ்தான பாத்தாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

சிவப்பொருள் கண்காட்சி


Monday, December 3, 2012

ராகு கேது பெயர்ச்சி - பாகம் பதினொன்று

ஆண்டவரின் கிருபையால் மிக அருமையாக நடைபெற்றது ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பரிகாரம் மற்றும் ஹோமம்.

படங்களுடன் விரைவில் அப்டேட் செய்கிறோம். மீதியுள்ள பலன்களையும் அப்டேட் செய்கிறோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Saturday, December 1, 2012

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பத்து

தனுசு:

எதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் அங்கிங்கு சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது.

இதுவரை உங்களது ராசிப்படி ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தில் கேதுவும், விரையஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து பலன்கள் கொடுத்தார்கள். இனி கேது பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தான ஐந்தாமிடதிற்கும், ராகு லாபஸ்தான பதினொன்றுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.