மகரம்:
எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள்.
இதுவரை உங்களது ராசிப்படி பஞ்சமபூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தில் கேதுவும், லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து அருளாட்சி கொடுத்தார்கள். இனி கேது சுகஸ்தான நான்காமிடத்திற்கும், ராகு கர்மஜீவனஸ்தான பாத்தாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள்.
இதுவரை உங்களது ராசிப்படி பஞ்சமபூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தில் கேதுவும், லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து அருளாட்சி கொடுத்தார்கள். இனி கேது சுகஸ்தான நான்காமிடத்திற்கும், ராகு கர்மஜீவனஸ்தான பாத்தாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
கிரகங்களின் பார்வை:
ராகு சுகஸ்தான நான்காம் இடத்தையும், ஆயுள்ஸ்தான எட்டாமிடத்தையும், விரையஸ்தான பன்னிரெண்டாமிடத்தையும் பார்க்கிறார். கேது தனவாக்குக் குடும்ப ஸ்தான இரண்டாமிடத்தையும், ரணருணரோக ஸ்தான ஆறாமிடத்தையும், ஜீவனதொழில் ஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்க்கிறார்.
குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். பரமப்ரை சொத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் விட்டு ஊர்களுக்குச் சென்று குடியேறும் நிலை வரலாம். பணவிஷயத்தில் கவனமுடன் செயலபடவும். பிரிந்து சென்ற சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். பெண்களால் உயர்ந்த காரியம் நடக்கும். கடன் தொல்லை விலகும். உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போகவும். ஏனெனில் அவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் அவர்களிடம் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். கெட்டவர்களின் நடபை முற்றிலுமாக விலகிக் கொள்ளவும். புதியதாக அறிமுகமாகும் பழகும் நண்பர்களிடம் கவனமாக பழகவும். மாணவர்கள், அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வி பயிவோர் சிறப்பான முன்னேற்றம் அடைவர். கல்வியில் மேன்மை உண்டாகும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பினை பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். சாதனைகளைப் படைப்பீர்கள். அடுத்த கல்வி ஆண்டில் விரும்பிய பாடம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சண்டை மற்றும் நடிப்பை சொல்லிக் கொடுப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவீர்கள். பிற மொழிகளில் படங்களைத் தயாரித்தல் மேன்மை காணலாம். பிறரை உடையாலும், உடலாலும் அழகுபடுத்தும் மேக்கப் கலைஞர்கள் நல்ல நிலைமைக்கு வரலாம். அவுட்டோர் வேலைகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். வியாபாரிகள் ஒப்பந்த வேலையாட்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மேலும் ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், பெண்களுக்கு உபயோகமாகும் காஸ்மெட்டிக்ஸ் விற்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு பொன்னான காலமிது. முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்ட வேண்டாம். தொழில் நிமித்தமாக சிலர் வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள்: நல்ல லாபம் காணலாம். கூட்டாளிகளிடம் எந்த விதமான ஒளிவுமறைவும் வேண்டாம். அனாவசியமாக செலவு செய்வதை நிறுத்தாவிட்டால் அவசியத் தேவைகளுக்கு அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படலாம். பயணத்தின்போது மிகவும் எச்சரிகையுடன் நடந்து கொள்ளுதல் அவசியம். பயணம் கிளம்பும்முன் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும். அலைச்சல் காரணமாக உணவு உண்ணக்கூட நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். சிலருக்கு பணி இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் உங்களை வந்து சேரும். பணவிஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் பணத்தட்டுப்பாடும், பிறரால் மனக்கஷ்டமும் வரலாம். தொலைத்த பொருட்கள் உங்களிடம் மீண்டும் கிடைக்கும். உங்களின் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டியதிருக்கும். விவசாயிகள் நெல், கரும்பு, முந்திரி, பருத்தி போன்ற பயிர் வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வேர்க்கடலை, ஆமணக்கு, தேங்காய், சூரியகாந்தி போன்றவற்றில் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே என வருந்த வேண்டாம். பொறுமையுடன் செயல்பட்டு முன்னேறுங்கள். உங்களுக்கான வாசல்கள் திறந்திருக்கிறது என்பதை உணருங்கள். பொறுத்தார் பூமி ஆள்வார்கள் என்பதற்கேற்ப நீங்களும் ஆள்வீர்கள். பெண்கள் அனாவசிய செலவினைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைபாக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் கேட்ட இடத்திற்கு மாற்றல் கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் கண்ட கனவு பலிக்கும். ஆடம்பரப் பொருட்கள் மற்றும் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களைச் சேர்ப்பீர்கள். குலதெய்வத்திற்கு வேண்டியபடி காணிக்கைகளை செலுத்தி விடவும். இறைவனுக்குச் செய்வதில் கணக்குகள் பார்க்காமல் செய்துவிடுவது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும். மே2013க்குப் பின் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் நடக்கத் துவங்கும். உங்கள் பொதுப்பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவர். எந்த காரியம் செய்வதானாலும் மிகவும் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் செயல்படுங்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். சரியான வேளைகளில் உணவு எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் அவ்வப்போது மயக்கம் வரலாம். உடலில் ஒருவித சோர்வு உண்டாகும். அது மனதை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளவும். மனதில் உள்ளதை பிறரிடம் கொட்டி விடுங்கள். அதன்மூலம் உங்களின் மனச்சுமை குறையும்.
பரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் கோவிலில் உள்ள சிவனுக்கும், அம்பாளுக்கும், நெய் விளக்கு போட்டு அர்ச்சனை செய்யுங்கள். ஐயப்பன், சாஸ்தா ஸ்தலங்கள் சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.
லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் | இராசி | பலன்கள் | பரிகாரம் |
மேஷம் | மகரம் | 70/100 | சண்முக கவசம் படிப்பது |
ரிஷபம் | மகரம் | 75/100 | ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது |
மிதுனம் | மகரம் | 65/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது |
கடகம் | மகரம் | 75/100 | ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது |
ஸிம்ஹம் | மகரம் | 65/100 | ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது |
கன்னி | மகரம் | 60/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் |
துலாம் | மகரம் | 65/100 | நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. |
விருச்சிகம் | மகரம் | 70/100 | கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது |
தனுசு | மகரம் | 65/100 | கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு |
மகரம் | மகரம் | 70/100 | குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. |
கும்பம் | மகரம் | 65/100 | ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம். |
மீனம் | மகரம் | 65/100 | தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது |
லக்னமே தெரியாது | மகரம் | 70/100 | கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு |
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் மகரம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மகரம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மகரம் இராசி என்பவர்கள் ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம். [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். |
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:
* | நக்ஷத்திரங்கள் | ||
பலன்கள் | உத்திராடம் 2,3,4 | திருவோணம் | அவிட்டம் 1,2 |
இராசி | மகரம் | மகரம் | மகரம் |
இராசியாதிபதி | சனி | சனி | சனி |
நக்ஷத்திர அதிபதி | சூரியன் | சந்திரன் | செவ்வாய் |
அதிதேவதைகள் | விஸ்வேதேவர் | விஷ்ணு | வஸுக்கள் |
கணம் | மனுஷ்ய கணம் | தேவ கணம் | இராக்ஷஸ கணம் |
நாடி | பார்ஸுவ - இடது | பார்ஸுவ - வலது | மத்ய நாடி |
மிருகம் | பசு | பெண் குரங்கு | பெண் சிங்கம் |
பக்ஷி | வலியன் | காரை | வண்டு |
விருக்ஷம் | பலாமரம் | எருக்கு | வன்னி |
இரஜ்ஜு | வயிறு | கண்ட இரஜ்ஜு | சிரோ |
வேதை நக்ஷத்ரம் | புனர்பூசம் | திருவாதிரை | மிருகசீர்ஷம், சித்திரை |
அதிர்ஷ்டம் தரும் எண்கள் | 1, 4, 5, 7, 9 | 1, 3, 6, 7, 9 | 1, 3, 6, 7, 9 |
அதிர்ஷ்டம் தரும் திசைகள் | கிழக்கு, மேற்கு | கிழக்கு, தெற்கு | கிழக்கு, தெற்கு |
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. |
No comments:
Post a Comment