Saturday, December 1, 2012

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பத்து

தனுசு:

எதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் அங்கிங்கு சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது.

இதுவரை உங்களது ராசிப்படி ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தில் கேதுவும், விரையஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து பலன்கள் கொடுத்தார்கள். இனி கேது பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தான ஐந்தாமிடதிற்கும், ராகு லாபஸ்தான பதினொன்றுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
கிரகங்களின் பார்வை:
ராகு ராசியையும், பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தான ஐந்தாமிடத்தையும், பாக்கியஸ்தானமான  ஒன்பதாம் இடத்தையும் பார்க்கிறார். கேது தைரிய வீரியஸ்தானமான மூன்றாமிடத்தையும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும், லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

நீங்கள் பட்ட கடன், பிறர் உங்களுக்கு பட்ட கடன் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். வாழ்க்கைத்துணை பெயரில் சிலர் வீடு வாங்குவீர்கள். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். 2013 மே மாதத்திற்குப் பின் தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். இந்த நேரங்களில் வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. எனவே மிக மிக கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். மேலாண்மை மற்றும் ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தங்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். காதல், தீயோர் நட்பு மற்றும் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி நின்று கொள்ளுங்கள். கலைஞர்கள், விளம்பரம், ஒப்பனை, ஒலி, ஒளி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எடிட்டிங்  போன்ற துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். பிறமொழி  படங்களில் பணிபுரிய சந்தர்ப்பம் கூடி வந்தால் அந்த வய்ப்பினை நழுவ விட்டு விடாதீர்கள். புகழ் மற்றும் விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரிகள் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். பதிப்பகம், புத்தக் நிலையம், பெயிண்ட் விற்பனையாளர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை வரும் மே 2013 வரை தாங்கிக் கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். அத்ன்மூலம் வேலைபளுவும் அதிகமாகும். அதற்காக வருத்தம் கொள்ளாதீர்கள் . உங்களின் வேலைப்பளு அடுத்த 6 மாதத்திற்குப் பின் குறையும். விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. கேழ்வரகு மற்றும் எண்ணெய் வித்துக்கள் மூலம் நல்ல வளம் காணலாம். நிலத்தை சரியான முறையில் பழுது பார்க்கலாம். விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கலாம். கூலி வேலை செய்பவர்கள் குறைந்த முதலீட்டில் சுயதொழில் செய்வதற்குண்டான ஏற்பாடுகளை தொடங்கலாம். பரம்பரை சொத்துக்களில் வில்லங்கம் மற்றும் பிரச்சனைகள் அதிகமாகும். பரம்பரை சொத்துக்காக வழக்கு போடுவதில் ஆலோசனைகளை மேற்கொள்ளுங்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தினர் உங்களிடம் அன்புடன் பழகுவார்கள். நீங்கள் வீணான வாக்குவாதத்தால் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக அயர்வு கொடுக்கும் வேலைகளில் ஈடுபடகூடாது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவாகரத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும். உங்களால் குடும்பத்திற்கு சந்தோஷம் ஏற்படும். அர்சியலில் உள்ளவர்களுக்கு அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். பணம் வந்து குவியும். எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையைத் தரும்.  பிற கட்சிகளில் உள்ளவர்களை இகழ்ந்தும் கேலியும் செய்யக்கூடாது. அதனால் வீணான வழக்குகள் உங்கள் மேல் வரலாம். உடல்நலத்தைப் பொறுத்தவரை நரம்பு சமப்ந்தமான நோய்கள் தாக்கலாம். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டாம். பெற்றோரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். தோல் மற்றும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம்.


பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் கோவிலில் உள்ள குருவுக்கு நெய் விளக்கு போட்டு அபிஷேகம், அர்ச்சனை, கொண்டைக்கடலை மாலை அணிவித்து பூஜை செய்யுங்கள். குருமார்களின் ஸ்தலங்கள் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ”குருர் பிரம்மா” என ஆரம்பிக்கும் குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். மேலும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் தனுசு 60/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் தனுசு 70/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் தனுசு 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் தனுசு 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் தனுசு 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி சொல்வது
கன்னி தனுசு 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் தனுசு 55/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் தனுசு 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுசு தனுசு 65/100 ”குருர் பிரம்மா” என ஆரம்பிக்கும் குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். மேலும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.
மகரம் தனுசு 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் தனுசு 65/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் தனுசு 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது தனுசு 65/100 ”குருர் பிரம்மா” என ஆரம்பிக்கும் குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். மேலும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.
குறிப்பு:
[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் தனுசு இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் தனுசு இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் தனுசு இராசி என்பவர்கள் ”குருர் பிரம்மா” என ஆரம்பிக்கும் குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். மேலும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.
[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மூலம் பூராடம் உத்திராடம் 1ம் பாதம்
இராசி தனுசு தனுசு தனுசு
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் நிருதி ஜலதேவதை விஸ்வேதேவர்
கணம் இராக்ஷஸ் கணம் மனுஷ்ய கணம் மனுஷ்ய கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் நாய் ஆண் குரங்கு பசு
பக்ஷி செம்பரத்தி கௌதாரி வலியன்
விருக்ஷம் மராமரம் வஞ்சிமரம் பலாமரம்
இரஜ்ஜு பாதம் தொடை வயிறு
வேதை நக்ஷத்ரம் ஆயில்யம் பூசம் புனர்பூசம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

No comments: