Friday, March 29, 2013

மயிலாப்பூர் திருக்கல்யாணம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் நிறைவு விழாவாக கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பழநி கோவிலில், தங்க ரத புறப்பாடு இன்று முதல் மீண்டும் நடக்கிறது.

பழநி கோவிலில், தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடக்கிறது. பழநி கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் பல்வேறு வாகனத்தில், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் இரவு, வாண வேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 




விழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி முதல், நிறுத்தப்பட்டிருந்த, தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 26, 2013

பஞ்சகவ்யம் என்றால் என்ன?


பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். பசும்பால் 7 பங்கு, பசுந்தயிர் 3 பங்கு, பசு நெய் 1 பங்கு, கோஜலம் (பசுவின் சிறுநீர்) 1 பங்கு, பசுங்சாணத்தைக் கரைத்து வடிகட்டிய நீர் (கோமய ரஸம்) அரைபங்கு என்னும் ஐந்தையும் கலந்து தர்பைப் புல் ஊறிய நீரில் கலந்து உடனடியாக உட்கொள்ள வேண்டும். வேதம் கற்றவர்கள் கோ சூக்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து பஞ்சகவ்யம் தயாரிப்பார்கள். இதை அருந்தினால் மனித சரீரம் தூய்மை அடைகிறது என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பழங்காலத்தில் ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தினசரி பஞ்சகவ்யம் அருந்திவிட்டுத்தான் கர்பகிரகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்னும் விதி பின்பற்றப்பட்டு வந்தது.

பஞ்சகவ்யம் சாப்பிடுவோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பஞ்சகவ்யத்துக்கு உண்டு. அறிவியல் ரீதியாக இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் பல உள்ளன. கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. இதை பஞ்சகௌவ்யம் என்றும் கூறுவர். ஆபிசாரப்ரயோகம், காத்து, கருப்பு, துர்தேவதை தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சகவ்யம் கொடுத்தால் அவை நீங்கிவிடும்
.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் ஐந்து வெவ்வேறு நிறத்தில் உள்ள ஐந்து பசுக்களிடம் இருந்து கிடைத்த ஐந்து பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Friday, March 15, 2013

Radha Kalyanam on March 17


Radha Kalyanam on March 17

Kartik Fine Arts has arranged for a Radha Kalyana Mahotsavam” by K. Sattanatha Bhavathar and party on March 17, 8 a.m onwards

It is at Bharatiya Vidya Bhavan hall, Mylapore and is open to all.

Call 9094829675 for details.

Thursday, March 14, 2013

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 - 2013

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.

Monday, March 11, 2013

சிவராத்திரி - அப்டேட் நான்கு

அன்பின் சொந்தங்களே,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி அனைத்து கால பூஜைகளும் இனிதே முடிந்து விட்டது. நான்கு காலத்திற்கும் சேர்த்து 12 ஆவர்த்தி ருத்ர ஜெபம் முடிந்து கற்பூரம் ஆரத்தி இனிதே நடைபெற்றது. 
 
நன்றி.
 
குறிப்பு: உடல்நலம் சரியில்லாததால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. வீட்டில்தான் அனைத்து பூஜைகளும்.
 

சிவராத்திரி - அப்டேட் மூன்று

அன்பின் சொந்தங்களே,

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி மூன்றாம் கால பூஜை முடிந்து விட்டது. 5 ஆவர்த்தி ருத்ர ஜெபம் இப்போதுதான் முடிந்து கற்பூரம் ஆரத்தி இனிதே நடைபெற்றது. 

புரட்டாசி சனிக்கிழமை ஸங்கல்பத்திற்கு பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்து விட்டோம். 




இனி எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

எல்லாம் அவன் செயல்.

ஓம் நமசிவாய!!!!

Sunday, March 10, 2013

சிவராத்த்ரி - அப்டேட் இரண்டு

உடல்நலம் முடியாவிட்டாலும் நம்மிடம் ஜோதிடம் பார்ப்பவர்களுக்காகவும், உலக நன்மைக்காகவும், இரண்டாவது கால சிவராத்திரி பூஜை 3 ருத்ர பாராயணத்துடன் இனிதே முடிந்தது. கொஞ்சம் நேரம் ஓய்விற்கு பின் 12.30க்கு அடுத்த பூஜை ஆரம்பிக்கப்படும்.

சிவராத்திரி - அப்டேட் ஒன்று

சிவராத்திரி முதல் கால பூஜைக்கு ஒரு முறை ருத்ர பாராயணம் மட்டுமே செய்ய முடிந்தது. இந்த இரண்டாம் காலத்தில் புரட்டாசி சனிக்கிழமைக்கு பெயர் கொடுத்தவர்களுக்கும் ஸங்கல்பத்தில் சேர்த்து ருத்ர பாராயணம் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.

Tuesday, March 5, 2013

பிரார்த்தனை செய்யுங்களேன்

அன்பின் சொந்தங்களே,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

எங்களுக்கு விபத்து ஏற்பட்டு இன்றோடு 21 நாட்கள் கடந்து விட்டது. ரத்தக்காயங்கள் ஆறிவிட்டன. ஆனாலும் வலது கையில் மணிக்கட்டும் கையும் சேரும் இடத்தில் எலும்பு வளைந்திருப்பதாக பண்டாரவிளை வைத்தியர் சொன்னார். எக்ஸ்ரேவிலும் அதுவே வந்தது. கடந்த வாரம் சாப்பிடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தபோதுதான் சொந்த ஊருக்குச் சென்று பண்டாரவிளை சிங்நாடார் வைத்தியர் பேரன் எங்களது பால்ய தோழரான ரமேஷ் வைத்தியரிடம் சென்று காட்டினோம். வெள்ளிக்கிழமை கட்டு போட்டார். நேற்று முன் முட்டைப்பத்து கட்டு போட்டிருக்கிறார். சாப்பாடு ஸ்பூன் மூலமாகத்தான் சாப்பிட முடிகிறது. இடதுகையால் மட்டுமே தான் தட்டச்சு செய்ய முடிகிறது. திருச்செந்திலதிபனிடமும், எங்களது முன்னோர்களிடமும், பெரியவர்களிடமும் பிரார்த்தனை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து ஜோதிட ஆலோசனைகளையும் கேன்சல் செய்திருக்கிறோம். மேலும் 20 நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம். அன்பின் சொந்தங்களே எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்களேன்.

எங்களது அலைபேசி எண்: 7845119542