பழநி கோவிலில், தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடக்கிறது. பழநி கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் பல்வேறு வாகனத்தில், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் இரவு, வாண வேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி முதல், நிறுத்தப்பட்டிருந்த, தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment