நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்
அம்பாள் ஸ்ரீமகாலக்ஷ்மி
உருவ அமைப்பு கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.
குணம் சௌம்யம்
சிறப்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி
நெய்வேத்யம் பால் சாதம், பால் பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6 – 7.30
மலர் முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம் கல்யாணி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் பரணி, பூரம், பூராடம்
திசை புத்தி நடப்பவர்கள் சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்
விசேஷம் சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
[2] மூல மந்திரம்: ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :
[3] காயத்ரி: ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!
No comments:
Post a Comment