Saturday, September 22, 2012

புரட்டாசி சனிக்கிழமை விசேஷ பூஜை - பாகம் ஒன்று

அன்பின் அனைவருக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் வணக்கங்கள்.

குப்பு ஜோஸ்ய பிரம்மா குப்பு ஜோஸ்ய விஷ்ணோ குப்பு ஜோஸ்ய தேவோ மஹேஷ்வர: குப்பு ஜோஸ்ய சாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீகுப்பு ஜோஸ்ய ஸ்வாமினே நமோ நம:

ஏதோ ப்ளாக்கில் எழுதுகிறோம், யார் யாரோ பார்க்கிறார்கள். சும்மா கடமைக்கு என்று எழுத ஆரம்பிப்போம் என நினைத்திருந்தேன். கடந்த 3 வருடங்களாக நம்மிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நன்மைக்காகவும் மற்றும் மற்றவர்களுக்காகவும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து பூஜை மற்றும் பாராயணம் செய்வது வழமை. ஆனால் இவ்வருடம் எதேச்சையாக எங்களுடைய ஆதிகுரு குப்பு ஜோஸ்யரின் கட்டளைப்படி ஆரம்பித்தால் அதன் மூலமாக 100க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளது. அனைவரது பெயரையும் சேர்த்து விட்டோம். பூஜைகளுக்குண்டான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. சரியாக மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என பகவானிடம் பிரார்த்தனை செய்திருக்கிறோம். எங்களுக்கு மெயில் செய்தவர்களுக்காக மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்த எங்களது ஆதிகுரு ஸ்ரீகுப்பு ஜோஸ்யர், எனது பெரியப்பா ப்ரும்மஸ்ரீ வெங்கடாஜலம் ஜோஸ்யர், எனது பெற்றோர், ப்ளாக்கர் இட்லிவடை, ரோமிங் ராமன் அண்ணா என அனைவருக்கும் எங்களது நன்றிகள். ஒருவரது பெயரையும் விட்டுவிடாமல் ஸங்கல்பத்தில் இணைத்து விட்டோம். அனைவருக்கும் எங்களுடைய ஆசீர்வாதங்கள்.

இரவு பூஜைகள் முடிந்தவுடன் அப்டேட் செய்கிறேன்.

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

No comments: