Saturday, September 22, 2012

புரட்டாசி சனிக்கிழமை விசேஷ பூஜை - பாகம் இரண்டு

அனைவருக்கும் வணக்கம்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாம் ஏற்பாடு செய்திருந்த புரட்டாசி சனிக்கிழமை முதல் வார - விசேஷ ஸங்கல்ப - விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் மிக நன்றாக நடந்து முடிந்தது.


இதை முழுவதுமாக எங்களுக்கு நடத்திக் கொடுத்த பகவானுக்கும், எங்களுடைய முன்னோர்களுக்கும், இதில் கலந்து கொண்டு ஆசீர்வதித்த பெரியவர்களுக்கும், எங்களையும் மதித்து இந்த அர்ச்சனையில் கலந்து கொண்ட அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களது தாழ்மையான வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறோம். 

கிட்டத்தட்ட ஒரு வார காலமாகவே இதற்கான பணிகளைச் செய்திருந்தோம். ஆனாலும் கடைசி நேரம் வரை எங்களுக்கு பணி இருந்து வந்தது. நாம் எவ்வளவோ சொல்லியிருந்தும் சனிக்கிழமை மாலை வரையிலும் கூட ஸங்கல்பத்திற்கு பெயர் கொடுத்தபடி இருந்தனர் சிலர். ஸங்கல்பத்தில் கலந்து கொண்ட பலர் எங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக நன்மைக்காகவும், தண்ணீர் பிரச்சனை தீரவும், மின் வெட்டு குறையவும் பிரார்த்தனை செய்திருந்தனர். பலருக்கும் பல பிரச்சனைகள் குறையவும், வேண்டுதல்களாக அனுப்பியிருந்தனர் என்பது விசேஷம். (சிற்சிலர் எங்களிடம் ஜாதகம் பார்க்காதவர்களும் அர்ச்சனைக்கு பெயர்களை அனுப்பியிருந்தனர். அவர்கள் எனக்கு உங்களது பிறந்த தேதி விபராதிகளை அனுப்பி வைக்கவும்.) அத்துனை பேரின் பெயர்களையும் படித்து முடித்து ஸங்கல்பம் முடியவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி விட்டது.

முதலில் புண்யாஹவஜனம் செய்யப்பட்டது. அதன்பின் ஸங்கல்பம், ஆவாஹனம், அஷ்டோத்திர நாமாவளி அர்ச்சனை, பின் ஸகஸ்ரநாம பாராயணம்3 முறை, ஆரத்தி, பிரஸாதம் வழங்கல் என்ற முறைகளில் செய்யப்பட்டது. மஹா பிரஸாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. பாராயணத்திற்கு அம்பத்தூரில் உள்ள விஷ்ணு ஸகஸ்ரநாம மண்டலியில் இருந்து 4 ஸ்வாமிகள் வந்திருந்து விசேஷித்தார்கள். பணத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் இன்னும் பூமியில் இருப்பதனால்தானோ என்னவோ மழை பொழிகிறது. மிகுந்த அன்னியோன்னியத்துடன் பாராயணம் நடந்தது, எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே எங்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகவே இந்த அர்ச்சனையை நாங்கள் பார்க்கிறோம். 


பூஜை ஆரம்பிப்பதற்கு முன் எடுத்தது.

பூஜை ஆரம்பிப்பதற்கு முன் திருவிளக்கு ஏற்றப்படுகிறது.

ஆவாஹனத்திற்கு நைவேத்தியமாக வெற்றிலை பாக்கு பழம்



 ஸங்கல்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் எடுத்து பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரால் வாசிக்கப்படுகிறது.



 மிகுந்த மன அமைதியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது.




வந்து கலந்து கொண்டு சிறப்பித்த பெரியோர்கள் ஸகஸ்ரநாம பாராயணம் முடிந்தவுடன் மேலும் பல ஸ்லோகங்களும்  பாராயணம் செய்தனர். அது விஷயமாக அவர்களுக்குள் விவாதிக்கின்றனர்.



 
நமது ஸங்கல்பத்தில் கலந்து கொண்டவர்கள் நலமாகவும் அனைத்து விதமான சுகங்களைப் பெறவும் ஸ்வஸ்திகா மந்திரம் சொல்லி ஆசீர்வாதம் செய்யப்படுகிறது. விசேஷமாக நமது பூஜையில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்த ஆதம்பாக்கம் S.G.நாராயணன் தம்பதியினர்(இடது ஓரம்).



தீர்த்தப்பிரஸாதம் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரால் சாதிக்கப்படுகிறது.


மஹாநைவேத்தியம் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.


ஸங்கல்பத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பாக பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரிடத்தில் பிரஸாதம் ஆசீர்வாத மந்திரம் சொல்லி அளிக்கப்படுகிறது.


குறிப்பு: எனது முகவரி மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவை உங்களது மெயிலுக்கு உங்களுடைய ஐடியுடன்  திங்களன்று வந்து சேரும்.





2 comments:

Anonymous said...

Dear Sir,
Photos are not visible in the posting

-Subbu

Perungulam Ramakrishnan Josiyar said...

அன்பின் சுப்பு எனக்குத் தெரிகிறதே ஒருவேளை உங்களது இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்குமோ? கவனிக்கவும்.