Wednesday, September 19, 2012

செப்டம்பர் 15 - 30 வரையிலான பொது ராசிபலன்கள்


செப்டம்பர் 15 - 30 வரையிலான பொது ராசிபலன்கள்:
 
இப் பலன்கள் கோசார ரீதியிலான பொதுப் பலன்களே என்பதனை வாசகர்கள் கவனத்திற் கொள்க.


மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்.
எடுத்த முடிவினில் நிலையாக இருக்கும் மேஷ ராசி வாசகர்களே கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் ஈடேறக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள். அலுவலகத்தில் பிறருடைய தவறுக்கு நீங்கள் தலைகுனிந்த நிலைமை மாறும். மேலதிகாரிகளின் ஆத்ரவும், உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தைப்பட்ட பதவி, இடமாற்றம், ஊதிய உயர்வுகள் தை இன்றி கிட்டக்கூடிய அம்சங்கள் தெரிகிறது. உங்கள் திறமிக்கு ஏற்ற உரிய அங்கீகாரம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை சேரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் சேமிப்பு உயரும். வீடு மனை வாங்கும் நேரத்தில் பத்திரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து வாங்குவது நல்லது. அரசு, அரசுத்துறையினர் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருந்தால் ஆதரவு பெறலாம். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் கிட்டும். முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு இருந்தால் எல்லாமே நன்மையாகும். தொழிலில் சிறப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்க உடல்நலம் சீராக இருக்க உணவுக்கட்டுப்பாடு அவசியம். காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் தெரிந்தால் உடனடி சிகிச்சை அவசியம். முடிந்தவரை சிவஸ்துதிகள் சொல்வது நன்மையைக் கொடுக்கும்.


ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
எதிலும் அடுத்தவருக்கு ஏணியாக இருக்கும் ரிஷப இருக்கும் வாசகர்களே ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் நீங்க எடுக்கக்கூடிய சரியான தீர்மானங்கள் உங்களூடைய எதிர்கால வாழ்க்கைக்கும், திட்டமிடலுக்கும், சந்ததிகளுக்கும் நன்மையைக் கொடுக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்துவந்த அல்லல்கள் நீங்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், முதலாளியின் அனுசரனையும் கிடைக்கும். எதிர்பார்த்த இனங்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலமான லட்சனம் தெரிவதால் மிகுந்த நன்மை பயக்கும். அயல்நாட்டு வாணிகமும் தடைகள் விலகி சீராகும். பயணப்பாதையில் கவனச்சிதறல் கூடாது. பொருளாதார நிலையில் சிக்கல் உருவாக இடமில்லை. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவுகளின் உடல்நலத்திலும் கவனம் தேவை. சௌரியங்களுக்கு குறைவிருக்காது. உங்கள் நற்குண செய்கைகள் வெளிப்பட்டு கௌரவம் மேலோங்கும். கலைத்துறையில் புதிய முயற்சிகளை யோசனை செய்து எடுப்பது நன்மையைத் தரும். விரோதிகள் கை ஓங்கி விடுமோ என பீதி உண்டாக வாய்ப்பில்லை. கஜ லக்ஷிமியை வழிபடுவது நல்லது.


மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்
எதிலும் நிறைவாக செயல்படும் மிதுன ராசி வாசகர்களே இந்த காலகட்டத்தில் நன்மைகளும் தொல்லைகளும் சரிசமமாக அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையில் சரிவு உண்டாகாது. பெரியோர் ஆசி கிடைப்பதிலும் தடை உண்டாகாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைபடாது. திருப்தியான சூழ்நிலை கூட ஏற்பட வாய்ப்புண்டு. பயணம் பயன்கள் தரும். அவசியமின்றி பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். விரோதிகள் விஷயத்தில் எச்சரிக்கையாகவும் உடல்நலனில் அக்கறையும் தொழிலில் ஜாக்கிரதையும் தேவை. கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் திருப்தியான சூழ்நிலை அமையும். ஒரு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு பாதிப்புகள் இருக்காது. பகைவரால் பிரச்சனை உண்டாகாது. தன்னம்பிக்கை ஏற்படும். அவ்வப்போது பணச்சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். தொழிலாளர்களுக்கு விசேஷமான பலன்கள் கிடைக்கும். அரசு விவகாரங்களில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும். மாணவமணிகள் கல்வியில் சிறந்து விளங்குவர். வராகமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.


கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் கடக ராசி வாசகர்களே சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறீர்கள். இருப்பினும் சில சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். எவ்வளவுதான் சூழ்நிலைகள் வந்தாலும் தங்களது தன்னம்பிக்கையால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். வரவுக்கு ஏற்ற செலவினங்களை செய்வது நல்லது. பொதுவில் நன்மைகள் உண்டு. பகைவர் விஷயத்தில் இதுவரை இருந்த நிலைமை மாறி வெற்றிகளை தங்கள் பக்கம் வசமாக்குவீர்கள். பணப்பிரச்சனைகளை சமாளிக்க திட்டமிடல் அவசியமாகிறது. பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். கலைத்துறை சம்பந்தப்படவர்கள் தங்களது வேலைகளில் நேரத்தைக் கடைபிடித்தாலே வெற்றிகள் கிட்டும். இந்த காலகட்டத்தில் தங்களது உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தங்களைத் தேடி வரும். தங்களுக்கு ஆதரவாக உடன் பணிபுரிவோர் இருப்பார்கள். குடும்பநலத்தில் சீரான நிலைமை இருந்து வரும். நற்காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மேன்மை உண்டு. அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வருவது நன்மையைக் கொடுக்கும்.


சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1
எதிலும் முன்னுதாரனமாக இருக்க முயற்சிக்கும் சிம்ம ராசி அனபர்களே விசேஷமான பலன்களை அனுபவிக்க வெண்டிய கிரக சஞ்சாரத்தில் இருக்கிறீர்கள். பொதுவான சுபிட்சமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணத்தொல்லை வராது. பதவி உயர்வு, பணி இடமாற்றம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வந்து சேரும். தொழிலாளர்களுக்கு அனுகூலங்களாக காரியங்கள் நடைபெறும். கணிதத் துறையில் சாதனைகள் புரியலாம். விவசாயிகளுக்கு பாதிப்புகள் வராது. பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது மிகுந்த யோசனை செய்து செய்யவும். அரசு விவகாரங்களில் நன்மையும், அரசியல்வாதிகளுக்கு நற்பெயரும் வந்து சேரும். தகுந்த மேலோரின் ஆலோசனைகளின் படி செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்ப நலம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நலமும் உண்டாகும். தம்பதிகளிடையே இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். ஆலயங்கள் மற்றும் யாத்திரை செல்வது நன்மையைத் தரும். உங்களால் தங்களுடைய இளைய சகோதரத்திற்கு அனுகூலங்கள் கிடைக்கும். தகுந்த ஆலோசனைகளில் ஈடுபட்டு எதிர்காலத்திற்கு உபயோகமளிக்கும் சேமிப்புகளில் ஈடுபடலாம். சிவனை பிரதோஷ காலங்களில் வழிபடுவது நன்மையைத் தரும்.


கன்னி: உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2
எந்த காரியத்திலும் உழைப்பை வெளிப்படுத்த தயங்காத கன்னி ராசி வாசகர்களே கோசாரப்படி நன்மைகளை அனுபவிக்கும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். குறிப்பாக பொருளாதார ரீதியாக அபிவிருத்திகள் உண்டாகும். அதற்குண்டான சில அடிப்படைக் காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். கற்றறிந்த மேலோர் இந்த காலகட்டத்தில் கௌரவிக்கப்படுவார்கள். தகுதி வாய்ந்த பதவிகள் தங்களைத் தேடி வரும். விரும்பத்தகுந்த உத்திரவுகள் வந்து சேரும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வரலாம். தன்னம்பிக்கை வளரும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பநலம் சீராக இருக்கும். தம்பதிகளுக்குள் கருத்தொற்றுமை அகலும். குடும்பத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு மறையும். பெருமளவு சோதனைகள் வந்தாலும் அதை மாற்றும் திறன் உங்களிடம் உண்டு என்பதை உணரத்துவங்குவீர்கள். பகைவரை சமாளிப்பது என்பது சரியாக அமையும். பணத்தட்டுப்பாடுகள் நீங்கும். உடல் நலத்தில் இருந்து வந்த தொய்வுகள் நீங்கும். தைரியம் மிளிரும். நண்பர்களால் ஆதரவுகள் பெருகும். தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த ஒரு நல்ல காரியம் நடக்கும். குல தெய்வ ஆராதனை மேற்கொண்டால் சங்கடங்கள் குறைந்து நன்மைகள் நடக்கத் தொடங்கும்.


                                  துலாம்: சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3
எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே பெரும்பாலான கிரகங்கள் சாதக நிலையில் சஞ்சாரம் இல்லை என்றாலும் ராசியாதிபதி சுக்கிரன் வலுவாக இருக்கிறார். இந்த அமைப்பால் சங்கடங்களுக்கிடையிலும் சில நன்மைகள் உண்டாகி சந்தோஷத்தைக் கொடுக்கும். மனதிடம் ஏற்படும். பொருளாதார நிலையில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வரவுக்கு ஏற்ற செலவினங்களை உங்களால் செய்ய முடியும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. பகைவர்கள் விஷ்யத்தில் விட்டுக் கொடுப்பது நல்லது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்ற காலம் இது. தொழில் செய்வோருக்கு எச்சரிக்கையோடு செயல்பட்டால் தொல்லைகள் விலகும். அரசாங்கத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் வர இடம் அளிக்காதீர்கள். துயர் துடைக்கும் கவசங்களாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உறுதுணை புரிவார்கள். கடுஞ்சொற்களை முற்றிலும் உபயோகப்படுத்தக் கூடாது. ராம நாமம் ஜெபிப்பதும், தெய்வப் பணிகளில் ஈடுபடுவதும் நல்ல காரியங்கள் நடக்க வழி வகுக்கும்.


விருச்சிகம்:  விசாகம் 4, அனுஷம், கேட்டை
எதிலும் நேர்மையுடன் செயல்பட விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே செய்யும் வேலைகளில் சிற்சில தடங்கல்கள் வந்தாலும் அவையெல்லாவற்றையும் தங்களது உழைப்பினால் வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வந்து வந்து மறையும். எனினும் தாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நிலம் வீடு வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இருந்த போதிலும் அது தொடர்பான வழக்குகளில் தேக்கம் ஏற்படலாம். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.  எதிலும் அடக்கமாகப் பேசுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.  திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும் காலமிது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  முருகனை வழிபடுவது நல்லது.


தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1
தெய்வ நம்பிக்கையுடன் போராடும் தனுசு ராசி வாசகர்களே உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பேரக்குழந்தைகளை பெறும் பாக்கியமும் சிலருக்கு கிட்டும். லாபஸ்தானாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பது நல்லது. பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். ஒன்பதுக்குரியவர் பத்தாம்ஸ்தானத்திற்கு வருவதால் நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். தந்தையின் செல்வம் பெருகும். மேலும் யோகம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். அனுமனை கும்பிடுங்கள் நல்லதே நடக்கும்,


மகரம்: உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
அடுத்தவரின் குரலுக்கும் மதிப்பளிக்கும் மகர ராசி வாசகர்களே உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சனிக்கிழமை தோறும் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.


கும்பம்: அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3
எதிலும் முன்னோரின் செயல்பாடுகளை கவனித்து அதன்படி செயல்படும் கும்ப ராசி அன்பர்களே உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். பெருமாளுக்கு விளக்கு போடுவது நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்தலும் நன்மையைத் தரும்.


மீனம்: பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
நட்பினால் காரியத்தை சாதிக்கும் மீன ராசி அன்பர்களே உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். முன்னோர்கள் வழிபாடு மிக முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கான பணிகளை செய்யுங்கள்.


No comments: