Wednesday, June 27, 2018

மீண்டும் தேவ பிரஸ்ணம்

இன்றைய சூழ்நிலையில் அவசர கதியிலேயே அனைத்து விஷயங்களும் நடப்பது உண்மைதான். ஆனால் அதற்காக தெய்வம் சம்பந்தமான விஷயங்களிலும் அவசரம் என்றால் எப்படி?

இன்று சென்னை அம்பத்தூரில் ஒரு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை தென் தமிழகத்தில் ஒரு பிரபலமான கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

 

இன்று 27.06.2018 அன்று கேட்டை நக்ஷத்ரம். வரும் வெள்ளிக்கிழமை பூராடம் நக்ஷத்ரம். எப்படி கும்பாபிஷேகத்தை நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை.

பஞ்சாங்கம் அடிப்படை தெரியாதவர்களெல்லாம் நாள் குறித்தால் இப்படித்தான். ஆகாத நக்ஷத்ரம் 12 என்று வருஷாதி நூல் சொல்கிறது. ஆகம சாஸ்திரத்தில் கும்பாபிஷேக நிர்ணயத்தில் சந்திரனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிற்ப சாஸ்திரத்தில் சிலைக்கு கண் திறப்பதற்கு என்று சில நிபந்தனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாள் எப்படி குறிக்கிறார்கள். செய்யும் தொழிலுக்கு தயவு செய்து துரோகம் செய்யாதீர்கள்.

இதைப் பற்றி பதிவுகள் இட ஆரம்பிக்க இருக்கிறேன்.....

மீண்டும் தேவ பிரஸ்ணம் தொடரில் சந்திப்போம்.....

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: